PDA

View Full Version : விரல் தொடா வீணையின் புலம்பல்



ஆதி
24-06-2008, 06:48 AM
பழகினாய் இளகினாய்
மெல்ல இணங்க வைத்தாய்
இசைத்தப்பின்
விலகினாயே!

பி.கு: காதலனால் ஏமாற்றம் கொண்ட பெண்ணுக்கும் பொருத்தும்

ஆதவா
24-06-2008, 06:51 AM
பழகினாய் இளகினாய்
மெல்ல இணங்க வைத்தாய்
இசைத்தப்பின்
விலகினாயே!

இசைத்த பிழை
ராக ரணம்
அறுந்தது கம்பி..

பென்ஸ்
25-06-2008, 12:03 AM
பழகினாய் இளகினாய்
மெல்ல இணங்க வைத்தாய்
இசைத்தப்பின்
விலகினாயே!

பி.கு: காதலனால் ஏமாற்றம் கொண்ட பெண்ணுக்கும் பொருத்தும்
குறிப்பை கண்டவுடன் நினைவில் வந்த கவிதை.....
(ப்ரியன்.. நீங்களும்தான்...)


குறிப்பு
**********

கவிதை ஒன்றின்
ஓரமாய் குறிப்பெழுதி வைத்தேன்!
குறிப்பை ஆளாளுக்கு
அலசிப் போனார்கள்!
யாருமே கண்டுகொள்ளாமல்
அனாதையாய் கிடந்தது
கவிதை!

- ப்ரியன்.

உங்கள் கவிதையோடு ஒத்து போகமுடியவில்லை ஆதி...

வீணையை, பழக, மீட்ட அதன் மீது காதல் வேண்டும்,
அதை கற்ற கொள்ள dedication வேண்டும்...
அது இல்லாமல் அதை மீட்ட முடியாது...
அப்படி உள்ள யவரும் வீணையை விட்டு சென்றதில்லையே...

ஆனால் பஸ்ஸில் பயணிக்கும் பெண்ணின் இடுப்பை கிள்ளி செல்லும் கேவலமானவன் போல்,
வீணையை சுரண்டி பார்த்தவன்ன் எல்லாம் சொந்தம் கொண்டாடலாமா..????

இளசு
26-06-2008, 06:28 PM
மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது..
மாறாதிருக்கும் மனம் எங்கே?
தொடக்கம்போல முடிவென்றால்
திருப்பமின்றி திகட்டும் வாழ்வு..

பாராட்டுகள் ஆதி..

கலைவேந்தன்
26-06-2008, 07:01 PM
பொருந்தாத புலம்பல் எனினும் குறுங்கவி முயற்சி பாராட்டத்தக்கதே!

ஓவியன்
29-06-2008, 11:50 AM
தொடும் விரலெல்லாம்
இசைக்க முடியாது வீணையை..
தக்கவர் வந்து தொடும் வரை
காத்திருக்குமாம் வீணை...!!

அஃதே
தக்க வீணை கிடைக்கும் வரை
தேடிக் கொண்டிக்கும்
கலைஞனின் விரல்களும்...!! :)