PDA

View Full Version : என் பொழுதுகள் சாய்வதில்லை



ஆதி
24-06-2008, 05:27 AM
சாம்பலில் இருந்து
விழுந்தது எனக்கான
விதை..

என் கருவறை
கல்லறையாலானது..

அந்திமத்தில் இருந்து
நிகழ்ந்தது என் பிரசவம்..

மாயனக்கூண்டில் இருந்து
விடுதலை கொண்டது
என் சிறகுகள்..

மரணச் செடியிலிருந்து பூத்த
மலர் நான்..

இளசு
24-06-2008, 06:12 AM
கூட்டுப்புழுவின் முடிவு
வண்ணத்துப்பூச்சியின் தொடக்கம்..

சருகுகளின் மரணம்
மண்ணுரத்தின் ஜனனம்..

வாழ்க்கைச் சக்கரம் நிற்பதில்லை!

வாழ்த்துகள் ஆதி!

ஆதவா
24-06-2008, 06:36 AM
சாம்பலில் இருந்து
விழுந்தது எனக்கான
விதை..

என் கருவறை
கல்லறையாலானது..

அந்திமத்தில் இருந்து
நிகழ்ந்தது என் பிரசவம்..

மாயனக்கூண்டில் இருந்து
விடுதலை கொண்டது
என் சிறகுகள்..

மரணச் செடியிலிருந்து பூத்த
மலர் நான்..

புரிவதற்குக் கொஞ்சம் கடினம்தான்..
சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறேன்,,

சிவா.ஜி
24-06-2008, 06:36 AM
ஒரு முடிவு அடுத்த தொடக்கம்..இந்தியாவில் சாயும் பொழூது இன்னொரு நாட்டில் புலரும்....

ஆர்ப்பாட்டமில்லாத அழகிய கவிதை. பாராட்டுகள் ஆதி.

ஆதி
24-06-2008, 07:37 AM
புரிவதற்குக் கொஞ்சம் கடினம்தான்..
சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறேன்,,

சிவா அண்ணன் கருவைப்பிடித்துவிட்டார்..

இது சூரியன் பேசுவது போல ஒரு கவிதை..

கலைவேந்தன்
24-06-2008, 08:08 AM
புனரபி ஜனனம் புனரபி மரணம் இந்த வாழ்க்கைத்தத்துவத்தை புதுமையாய் வழங்கிய ஆதியைப்பாராட்டுகிறேன்!