PDA

View Full Version : தலைப்பில்லா கவிதை 4



ஆதவா
23-06-2008, 03:37 PM
காலை ஸ்வரம் கேட்காத
எழுச்சி,
அதிகாரம் இல்லாமல்
வீட்டை நெருக்கும்
சூன்யம்
பிறிதொருநாள் எழுதிவைக்கும்
பிரிவென்ற கவிதை.

அழுது முடித்த மூன்றாம்மாதத்தில்
பெற்றவன் திருமணம் பார்க்கும் வாய்ப்பு
என் தாய்க்கு ஒரு மாற்று.

பச்சிளம் குழந்தையை மீறும்
மென்மை அவளிடம்..
சொல்ல வார்த்தை இல்லை
உண்மை அவளிடம்..

இன்று
அபஸ்வரம் இல்லாத காலை
அதிகார நெருக்கடியைக் குடித்த காலை
பிறிதொருநாள் எழுதிவைக்கும்
பரிவென்ற கவிதை.

ஆயின்
என்றேனும் ஒருநாள்
அம்மாவின் நினைவு வரலாம்
அழுது முடித்த பின் தோன்றும்

"அழாமல் இருந்திருக்கலாம்..."

- ஆதவன்.

இளசு
23-06-2008, 06:30 PM
மாற்றாந்தாய் வந்தவரை வெளிச்சம்
அதன்பின் இருண்மையில் முடங்கிவிட்டேன் ஆதவா..
தருவாயா விளக்கம்?

மதுரகன்
24-06-2008, 05:18 AM
அற்புதம் ஆதவா..

அழுது முடித்தபின் தோன்றும் அழாமல் இருந்திருக்கலாமே..உணர்வுகளைக் கரைத்து தெளித்திருக்கிறாய்..

ஆதவா
24-06-2008, 06:20 AM
மாற்றாந்தாய் வந்தவரை வெளிச்சம்
அதன்பின் இருண்மையில் முடங்கிவிட்டேன் ஆதவா..
தருவாயா விளக்கம்?

மாற்றாந்தாய்
தாயானால்
பெற்ற தாயின் நினைவெதற்கு?

இதைத்தான் சொல்ல வந்தேன் அண்ணா!!

இளசு
24-06-2008, 06:22 AM
நன்றி ஆதவா..

இப்போது விளங்கியது..

பூமகள்
24-06-2008, 06:30 AM
மாற்றாந்தாயின் கவிதைகளில் இது தனிமுத்து..
என் நெஞ்சம் கொள்ளை கொண்ட பதிவு ஆதவா..!!

மனம் நெகிழ்கிறது..!!
மாற்றான் தாய் பற்றிய புரட்டுகள் மலிய வேண்டும்..!
இவ்வகை தாய்கள் வலி புரிய வேண்டும்..!

அழகான படைப்புக்கு எனது இ-பணம் 1000 பரிசு.
மனமார்ந்த பாராட்டுகள் அன்புத் தம்பி ஆதவா..!! :)

kavitha
27-06-2008, 08:22 AM
பச்சிளம் குழந்தையை மீறும்
மென்மை அவளிடம்..
சொல்ல வார்த்தை இல்லை
உண்மை அவளிடம்..

பிரிவென்ற கவிதை Vs பரிவென்ற கவிதை = பிரிவை வென்ற பரிவுக்கவிதை.

தந்தையின்றி வளர்த்த அன்னையர் பலருண்டு. அன்னையின்றி வளர்த்த தந்தையர் சிலருண்டு. மாற்று அன்னையையும், தந்தையையும் ஏற்கும் பிள்ளை மனம் எதற்குண்டு? மாற்றும் அன்பு அதற்கு இச்சக்தி உண்டு.
உணரவைத்த கவிதை. பாராட்டுகள் ஆதவா.
(இ-பணம்..... என் அக்கவுண்ட தேத்திட்டு தரேன்பா :))

ஆதவா
29-06-2008, 06:00 AM
பிரிவென்ற கவிதை Vs பரிவென்ற கவிதை = பிரிவை வென்ற பரிவுக்கவிதை.

தந்தையின்றி வளர்த்த அன்னையர் பலருண்டு. அன்னையின்றி வளர்த்த தந்தையர் சிலருண்டு. மாற்று அன்னையையும், தந்தையையும் ஏற்கும் பிள்ளை மனம் எதற்குண்டு? மாற்றும் அன்பு அதற்கு இச்சக்தி உண்டு.
உணரவைத்த கவிதை. பாராட்டுகள் ஆதவா.
(இ-பணம்..... என் அக்கவுண்ட தேத்திட்டு தரேன்பா :))

மிக்க நன்றி அக்கா... உங்கள் விமர்சனம் பல விசயங்களை யோசிக்கவும் செய்கிறது....