PDA

View Full Version : இணையக் கடலில் எடுத்த இனிய முத்துகள்..!



ராஜா
23-06-2008, 01:05 PM
அன்பு நண்பர்களே.. !

கவிதையைப் பற்றி அரிச்சுவடிகூட அறியாத நான் இங்கு ஒரு தொடர் திரி துவக்கக் காரணமே கவிதைகள் மற்றும் கவிஞர்கள் மேல் வைத்திருக்கும் பிரமிப்புதான்..!

எந்த பொருளையும் கவிதையென்னும் மூன்றாவது கண் கொண்டு பார்க்கும் இலக்கிய பிரம்மாக்கள் கவிஞர்கள்..

இணையக் கடலில் நான் கண்டெடுத்த இணையிலா கவிதை முத்துகளை உங்கள் பார்வைக்காக சரம் தொடுத்து வைக்க என்னை அனுமதிப்பீர்களா நண்பர்களே..?


முதன்முதலில் சமகாலக் கவிஞர் அறிவுமதியின் படைப்பான சில ஹை கூ க்கள்..


கடல் : தமிழம். நெட்

சிப்பி : அறிவுமதியின் கடைசி மழைத்துளி கவிதை நூல்.

_________________________________________________________________________________


1) மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.
__________________________________

2) நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.
__________________________________

3) பிணப் பா¢சோதனை
அய்யர் குடலிலும்
மலம்.
__________________________________

4) தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின சாதி.
__________________________________

5) பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக ஒரே ஆறு.
___________________________________

6) குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில் நசுங்கியது
புல்லாங்குழல்.
____________________________________

7) ஒரே தலையணை
வெண்சுருட்டுப் புகைக்குள் திணறும்
மல்லிகை மணம்.
_____________________________________

8) எவன் நிலம்
எவன் நாடு
இலவசமனைப் பட்டா.
_____________________________________


பாராட்டுகள் படைப்பாளிக்கும், கண்டனங்கள் எனக்கும் சேரட்டும்.

கவிதைகள் தொடரும்.. நீங்கள் அனுமதித்தால்......!

இதயம்
23-06-2008, 01:20 PM
ஆஹா... மனிதகுல சமநீதியை சொல்லும் அ(றிவுமதி)ருமையான வரிகள்...!
முத்துக்கள் என்று சொல்லி வைரங்களை கொடுத்துவிட்டு கண்டனங்களை எதிர்பார்க்கும் உங்களுக்கு என்ன தண்டனை தரலாம்...?

மிக்க நன்றி அண்ணா..!!

சிவா.ஜி
23-06-2008, 01:37 PM
ராஜா சார்....உண்மையிலேயே இவை அருமையான முத்துக்கள்தான். எங்களுக்காக முக்குளித்து கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி.

மன்மதன்
23-06-2008, 03:23 PM
அனைத்தும் முத்தான தேர்வுகள்தான்...

தொடர்ந்து கொடுங்க ராஜாண்ணே..

பூமகள்
23-06-2008, 03:34 PM
சூப்பர் கவிதைகள்..!! :)
தொடுத்து தந்த ராஜா அண்ணாவுக்கு ஒரு ஜே..!! இல்ல இல்ல வாழ்கன்னே சொல்லிடறேன்..!! (இப்ப இருக்கும் அரசியல் சூழலில் ஜேன்னு கூட சொல்ல முடியாதுப்பா..!! :icon_ush:)

இளசு
23-06-2008, 06:12 PM
கவிஞர் அறிவுமதியின் அத்தனை குறும்பாக்களும் -
சமூகப் புரைபுண்ணை அகழும் அரிவாட்கள்..

முக்குளி ராஜாவுக்கு ஜே!

ராஜா
24-06-2008, 03:56 AM
ஊக்குவிப்புக்கு நன்றி தோழர்களே..!

உதட்டில் புன்னகையும், உள்ளத்தில் புண்ணையும் தேக்கி வைத்திருக்கும் ஒரு வரவேற்பாளினி சொல்வதாக அமைந்த கவிதை இதோ..

(எழுத்தாளர் சுஜாதாவுக்கு(ம்) பிடித்த கவிதையாம் இது..!)

கடல் : கவிதைச்சாலை வலைப்பூ.

சிப்பி : சேவியர்.


வரவேற்பாளர்


ஆடைகளில் சுருக்கம் விழாமல்,
உதடுகளின் சாயம்
உருகி வழியாமல்,
அலங்காரப் பதுமையாய்
வரவேற்பறையில் நான்.

தொலைபேசிச் சத்தம்
கேட்டுக் கேட்டு என்
காது மடல்கள் ஊமையாகிவிட்டன

போலியாய் சிரிப்பதற்காகவே
எனக்கு
ஊதிய உயர்வு
அவ்வப்போது வருகிறது.

கண்களில் கொஞ்சம்
காமம் கலந்தே
பாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன.
மீதி கண்கள்
அவசர யுகத்தின் பிரதிநிதிகள்
கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்.

என் குரலுக்குள்
குயில் இருக்கிறதாம் !
எனக்கு இருப்பவை தோகைகளாம் !
வர்ணனை வார்த்தைகளிலும்
புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்
கட்டாயக் கட்டுகளில் நான்.

எனது சின்ன வயது மகள்
மாலையில் மறக்காமல்
மல்லிகை வாங்கி வரச் சொன்னாள்.

பூக்களின் வாசனைகளுக்கிடையே
என்
சராசரி வாழ்க்கையின் எதார்த்தம்
நாசி யை எட்டும் போது
முந்திக் கொண்டு தட்டுகிறது
மீண்டும் அந்த தொலைபேசி.

விரைவாய் மதிய உணவு முடித்து
கிடைக்கும் இடைவேளையில்
சிறிதே இளைப்பாறி
மீண்டும் உதடுகளில் புன்னகை நட்டு
முன்னறை வாசலில் தஞ்சம்.

அமிலச் சாலையில் கழுவப்பட்டு
மொத்த மனசும்
சாயம் போனதாய்த் தோன்றும்,
ஒவ்வொரு
மாலைப் பொழுதுகளிலும்.

சிரித்து வாழவேண்டும் என்று
கவிஞன் சொன்னது என்னிடம் தானோ ?
சிந்தனைகள் விட்டு விட்டு
வட்டமிட
கவலையாய் இருக்கிறது இப்போது.

மூன்று மணிக்கு பேசுகிறேன்
காலையில் கண்வலியுடன்
கணவன் சொன்னான்.
கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்
பயணத்தைத் தொடர,
இதுவரை ஒலித்த தொலைபேசி
இப்போது மட்டும் ஊமையாய் !
0

சிவா.ஜி
24-06-2008, 04:23 AM
ஒவ்வொரு வரியிலும், தன் வேதனையை, வலியோடு சொல்லும் அருமையான கவிதை. இந்த முத்துச்சரம் கழுத்திலிடாமலேயே நெஞ்சைத் தொட்டது. நன்றி ராஜா சார்.

இளசு
24-06-2008, 05:55 AM
பொருளாதார நிர்ப்பந்தம்..முகத்தில்
புன்னகைப் பூச்சு நிரந்தரம்..

மன்றத்தில் இதே வரவேற்பாளர் நிலை பற்றிய கவிதை வாசித்ததாய் நினைவு..

தொடருங்கள் ராஜா.. நன்றி!

பூமகள்
24-06-2008, 06:03 AM
அசத்தல் கவிதை..!!
மனம் வரவேற்பாளினியானது ஒரு கணம்..!
நன்றிகள் ராஜா அண்ணா. :)

மன்றத்தில் இதே வரவேற்பாளர் நிலை பற்றிய கவிதை வாசித்ததாய் நினைவு..
நானும் எழுதியிருக்கிறேன் பெரியண்ணா..!
இதோ..!
அவசரம்...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=271587#post271587)

இளசு
24-06-2008, 06:08 AM
இதேதான் பூ..

இன்றைய காலை அவசரத்தில் அந்த நல்ல கவிதை சட்டென முழுநினைவுக்குள் வரவில்லை..

பாமகள் வடித்த சித்திரமும் -ஒரு வாழ்வியல் படிம முத்துதான்..

அசத்திட்டடா செல்லம்!

ஆதவா
24-06-2008, 06:13 AM
பொருளாதார நிர்ப்பந்தம்..முகத்தில்
புன்னகைப் பூச்சு நிரந்தரம்..

மன்றத்தில் இதே வரவேற்பாளர் நிலை பற்றிய கவிதை வாசித்ததாய் நினைவு..

தொடருங்கள் ராஜா.. நன்றி!

சம்பந்தமில்லாத ஒருவரிடம்
தகாத வார்த்தைகளை
வரமாகப் பெற்றுக் கொள்ளத்
தருகிறார்கள் சம்பளம்
- ரிஷப்ஷனிஸ்ட்


அண்ணே! நல்லா இருக்காண்ணே!!

இளசு
24-06-2008, 06:18 AM
சம்பந்தமில்லாத ஒருவரிடம்
தகாத வார்த்தைகளை
வரமாகப் பெற்றுக் கொள்ளத்
தருகிறார்கள் சம்பளம்
- ரிஷப்ஷனிஸ்ட்


பெற்றுக்கொள்ளவும் சேர்த்து...

''இன்ஸ்டண்ட் '' கவிதை - நல்லாயிருக்கு ஆதவா!

எங்கும் ஆக்கமாய் உன் உலாவல் கண்டு ஆனந்தம் அண்ணனுக்கு!

பூமகள்
24-06-2008, 06:27 AM
இதேதான் பூ..
இன்றைய காலை அவசரத்தில் அந்த நல்ல கவிதை சட்டென முழுநினைவுக்குள் வரவில்லை..
பாமகள் வடித்த சித்திரமும் -ஒரு வாழ்வியல் படிம முத்துதான்..
அசத்திட்டடா செல்லம்!
ஆஹா...:sprachlos020: என் கவிதையினைத்தான் நினைவு கூர்ந்தீர்களா பெரியண்ணா..?? :eek::eek:
நான் வேறு ஒரு பெரிய கவிஞரின் கவிதையைச் சொல்ல வருகிறீர்களென நினைத்தேன்.. :icon_ush: இந்த சின்ன :icon_rollout: மொட்டின் கவிதையை நினைவூட்டி சுட்டியமைக்கு மிகுந்த நன்றிகள் பெரியண்ணா. :)

இளசு
24-06-2008, 06:32 AM
உன் ''அவசரம் '' கவிதையைத்தான் ஈடாய் நினைத்தேன் பூ..

இணையக்கடலில் ராஜா அண்ணல் தேடித்தரும் முத்துகளுக்கு
ஈடானவையே நம் சொந்தங்கள் இங்கே இயற்றும் படைப்புகளும்..

இதை மிக மகிழ்ச்சியாய் உரக்கவே சொல்வேன்..
எடுத்துக்காட்டாய் - ''அவசரம்'' கவிதை !

பூமகள்
24-06-2008, 06:38 AM
நிச்சயமாக பெரியண்ணா..!

நம் மன்றம் தந்த மாணிக்க படைப்பாளிகள் அதிகம்..! இதை மறுக்கவோ மறைக்கவோ எவரால் முடியும்??

மல்லிகை மலரை எதில் அடைத்தாலும் சுகந்த மணம் வராமல் தடுக்க முடியுமா என்ன??!!

அப்படியான பொக்கிசங்கள் இங்கே ஏராளம் இருக்கவே செய்கின்றன..

உதாரணமாக.. பல திஸ்கி காலப் பதிவுகளைச் சொல்வேன் அண்ணா...!!
அவற்றை எல்லாம் படிக்கையில் மலைப்பாக இருக்கிறது... அந்த நல் வைரங்களை.. விழி விரிய படித்துக்கொண்டிருக்கிறேன்..!

அவர்களின் கவிதைகளின் அருகில் என் எழுத்துகளை வைத்து நானும் அழகாக காட்சியளிக்க முயல்கிறேன்..!!

நான் கற்கும் மழலை..!! தங்களைப் போன்ற ஆன்றோர்களிடம் கற்கவே வந்திருக்கிறேன்.

ராஜா
25-06-2008, 04:40 AM
கடல் : ஆர்க்குட் பெருங்கடல்.

சிப்பி :ஷ்வேதா.


1.காத்திருக்கையிலே...

மின்சாரம் திடீரென அறுபட
எலெக்ட்ரானிக் சாதனங்களின்
மௌனம் தாளாமல்
வெளிவருகையில் தான்
தெரிந்தது,
பால் நிலவின் அழகு....

பேருந்துக்கான
காத்திருப்பின் போது,
பரவசப்படுத்தியபடி
பறந்து சென்ற
இணை பறவைகளும்
கடந்து சென்ற
வண்ணதது பூச்சியும்
ஆயுசுக்கும்
நினைவிலிருக்கும்.....

எரிச்சலான
சிக்னல் காத்திருப்பில்
பரிசாக கிடைத்தது
கிரெச்'சுக்கு அழைத்து செல்லப்பட்ட
பிள்ளையின் சிரிப்பு....

ஓடலும்
தேடலுமாய்
நகரும் நாட்களில்
இப்படி எதற்கேணும்
காத்திருக்கையில் தான்
ரசிக்க முடிகிறது
வாழ்க்கையை..
__________________________________________________________

2. வேலைக்குப் போகும் பெண்கள்

அவசர குளியல்...
தண்ணீர் லாரி போர்க்களத்தில்
குட யுத்தம்....
அடுக்களை அக்னி ப்ரவேசம்
தொலைந்துபோன சீப்புக்காக
கணவனின் குரல்....
மகளை குளிக்க வைத்து
உணவூட்டி....
பள்ளி பேருந்தில் ஏற்றி
திரும்புகையில்
கண்களில் படும் குடிக்க மறந்த ஏடு படிந்த காபி!
தலைவாரி முகம் திருத்தி
கடிகார முட்களின் துரத்தலில்
உணவை மெல்லாமல் விழுங்குகையில்
நினைவில் வரும்
வார் அறுந்த கைப்பை!
புது கைப்பைக்கான
ரூபாயை
ஐந்து பக்க அறிவுரையோடு
கணவன் தருகையில்....
மனசுக்குள் வந்து போகும்
முந்தினம் நான் தந்த
சம்பள கவர்!
இருப்பினும்
'வேலைக்குப் போகும் பெண்கள்
கொடுத்து வைத்தவர்கள்' எனும்
தோழியின் கூற்றுக்கு பதிலாய்
எப்போதும் இதழ்களில் வந்தமர்கிறது
ஆயத்தப் புன்னகை ஒன்று!

சிவா.ஜி
25-06-2008, 04:44 AM
ஆஹா அடுத்த முத்து...! அழகாக வார்த்தைகள் கோர்க்கப்பட்ட மெல்லுணர்வுகளை தட்டியெழுப்பும் முத்து. வாசிக்கக் கொடுத்த முக்குளிப்பாளருக்கு நன்றி.

மஸாகி
25-06-2008, 07:41 AM
நிச்சயமாக பெரியண்ணா..!

நம் மன்றம் தந்த மாணிக்க படைப்பாளிகள் அதிகம்..! இதை மறுக்கவோ மறைக்கவோ எவரால் முடியும்??

மல்லிகை மலரை எதில் அடைத்தாலும் சுகந்த மணம் வராமல் தடுக்க முடியுமா என்ன??!!

அப்படியான பொக்கிசங்கள் இங்கே ஏராளம் இருக்கவே செய்கின்றன..

உதாரணமாக.. பல திஸ்கி காலப் பதிவுகளைச் சொல்வேன் அண்ணா...!!
அவற்றை எல்லாம் படிக்கையில் மலைப்பாக இருக்கிறது... அந்த நல் வைரங்களை.. விழி விரிய படித்துக்கொண்டிருக்கிறேன்..!

அவர்களின் கவிதைகளின் அருகில் என் எழுத்துகளை வைத்து நானும் அழகாக காட்சியளிக்க முயல்கிறேன்..!!

நான் கற்கும் மழலை..!! தங்களைப் போன்ற ஆன்றோர்களிடம் கற்கவே வந்திருக்கிறேன்.


உங்கள்
எழுத்துக்கள்
அழகாக இருக்கின்றன..

தொடர்ந்தும் மன்றத்தை மணம் வீச செய்யுங்கள்..
வாழ்த்துக்கள்..

நட்புக்கு - மஸாகி
25.06.2008

poornima
25-06-2008, 07:45 AM
நல்ல கவிதைகள்.. தேடிச் சேகரித்த முத்துக்கள் அல்லவா.. அதுதான் அருமையாக இருக்கின்றன.. பாராட்டுக்கள்

ராஜா
26-06-2008, 03:53 AM
இன்றும் சில குறுங்கவிதைகளை முதலில் பார்ப்போம்..

கடல் : வார்ப்பு.காம்.

சிப்பி : நவின் இர்வைன், கலிபோர்னியா

வண்டுக்
காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்….

பனித்துளிகள்
______________________________


அழுதவானம்
எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….

நீரோடை
______________________________


இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....

இலங்கை
______________________________

சொந்தமண்ணிலிருந்து
துரத்தப்பட்ட அகதி
துடுப்பற்ற பரிசல்

பிறைநிலா
______________________________


ஒரு சோக ராகம்..

இசைப்பது : விசித்ரா.



பிணந்தின்னிப் பறவைகள்
______________________________

இப்போதெல்லாம் எங்கள் வானத்தில்
பிணந்தின்னிப் பறவைகள்

எம்முடல்களைத் தின்று
வாழிடங்களை
மரண ஓலங்களால் நிரப்புகிறது.

கொடுமைகளுக்கிடையே
குறுக்கீடு நிகழ்த்திட யாருமில்லை

உணர்வுகள் உடைந்து
எதிர்காலமே தொலைந்தவர்களாய் நாம்

எவருடைய உதட்டிலும் புன்னகையில்லை

நாற்காலி மனிதர்கள்
பிணந்தின்னிப் பறவைகளால் மேலும்
எங்கள் வானத்தை நிரப்புகிறார்கள்.

இளசு
26-06-2008, 06:52 AM
தொடரும் முத்துக்குவியலுக்கு நன்றி ராஜா

காத்திருக்கையிலே வாசிக்கையில் யவனிகாவின் '' ஈர விறகாய் மனம்'' நினைவுக்கு வந்தது -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14530

பிணந்தின்னிப்பறவைகள்..
ஹெலிகாப்டர்/போர் விமானங்கள்தானே?
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16066

ராஜா
26-06-2008, 07:12 AM
நண்பர் இளசுவின் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது..!

மன்றம் முழுவதையும் மனதில் ஏந்தியிருக்கும் மாமனிதர்..!

இளசு
26-06-2008, 07:18 AM
அன்பு ராஜா

இந்தப் பாராட்டு இவ்வகைப் படைப்புகளை நம் மன்றத்தில் இட்டவர்களைத்தான் சாரும்...

ராஜா
27-06-2008, 12:46 PM
கடல் : தமிழோவியம்.காம்.

சிப்பி : கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.


மனிதரின் புறக்கணிப்பு
அநாதைப் பிணம்
சுற்றமாய் எறும்புகள்!
___________________________

புத்தர் பிறந்த நாடு
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
போதிமரம்!
___________________________

படித்த மேதைதான்
கைநாட்டு அவசியம்
பத்திரப் பதிவகம்!
___________________________

சாமிவந்து ஆடுகின்றனர்
திரையரங்குகளில்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு!
___________________________

இவர்போல் உழைப்பவர் யார்?
இந்தியருக்குப் புகழ்மாலை!
வெளிநாட்டில்!
___________________________

ஆட்சி மாற்றம்
கட்சி மாறும்
காவல்துறை!
___________________________

வானத்திலும் தகறாறு
நேரில் சந்திப்பதில்லை
சூரியன் சந்திரன்!
___________________________

ஒருமாத உழைப்பு
குடிக்கவா?சூதாடவா?
சம்பள நாள் சங்கடம்!
___________________________

ராஜா
28-06-2008, 07:31 AM
இன்று...

என்னை மிகவும் கவர்ந்த ஒரு கவிதை.. கவிப்பேரரசுவுக்கு மட்டுமே இப்படிச் சிந்திப்பது சாத்தியம்..!


வைரமுத்து ஏற்றிய மெழுகுவத்தி

தனக்காக அல்ல...
தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே
அந்தத் தாய் அழுகிறாள்
மேனியில் தீ விழுந்து
நரம்புதான் எரியும்...
இங்கோ நரம்பிலே தீ விழுந்து
மேனி எரிகிறது

மரணத்தை வரங்கேட்டா
அந்த உச்சித்தவம் நடக்கிறது?

அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே

விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம் முளைத்தது?

நெருப்புப் பாசனம்
அங்கு நீர்ப்பயிர் வளர்க்கிறது

மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத் தீ நாக்கு
எத்தனை அழகாய் உச்சரிக்கின்றது?

எந்த துயரத்தை எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது இந்தப் பேனா?

கண்டு சொல்லுங்கள்
கண்ணெதிரே நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?

எப்பொழுதுமே
இதற்குத் தேய்பிறையென்றால்
இது என்ன சபிக்கப்பட்ட நிலவா?

இந்தத்
தீக்குளிப்பின் முடிவில்
மரணத்தின் கற்பு ருசுவாகிறது

இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள் முட்டி மூழ்கும்

அங்கே வடிவது கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?
ஓ கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?

இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகுதான்
உயிர் வருகிறது

மனிதனைப் போலவே
இந்த அஃறிணையும்
நான் அதிகம் நேசிப்பேன்

எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்

என் இரத்த நெய்யில்
இது நம்பிக்கைச் சுடரேற்றும்

வாருங்கள் மனிதர்களே
மரணத்திற்கும் சேர்த்து நாம்
மெளன அஞ்சலி செலுத்துவோம்

அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.

சிவா.ஜி
28-06-2008, 10:43 AM
அசத்தல் வரிகள். ராஜா சாருக்கு பிடித்திருப்பதில் ஆச்சர்யமில்லை. இணையக்கடலில் தேடித்தேடி இப்படிப்பட்ட முத்துக்களை கொண்டுவந்து எங்கள் பார்வைக்கு வைக்கும் உங்களுக்கு மனம்நிறைந்த நன்றி.

திரும்பத்திரும்ப வாசித்து ரசித்தேன். அற்புதம்.

arun
30-06-2008, 12:48 AM
கவிதைகள் அனைத்தும் முத்து குவியல்கள் தான் தொகுத்து அளித்தமைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் ...

ராஜா
30-06-2008, 05:17 AM
மரபுக் கவிதை பற்றி பசுபதி என்பார் 'மையம்' களத்தில் இட்டிருக்கும் பதிவு இது.இதபற்றி மன்ற*க்கவிஞர்களின் மதிப்புமிகு கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
_________________________________________________________________

கவிதை இயற்ற யாரும் கற்றுக் கொடுக்க முடியாது! உணர்ச்சியும், கற்பனையும் ஒருங்கிணைந்து மனத்தில் எழும்பும் எண்ணமே நல்ல கவிதைக்குக் கருப்பொருள். ஆனால், கவியுள்ளம் படைத்தவருக்கு, ஓசை நயம் மிளிர, ஒரு நல்ல வடிவில் கவிதையை அமைக்கக் கற்றுக்கொடுக்கலாம். அதுவே யாப்பிலக்கணத்தின் பணி. பழமிலக்கியங்களை ரசிக்கவும் யாப்பிலக்கண அறிவு தேவை. தற்காலத் திரை இசைப் பாடல்களிலும், பல புதுக் கவிதைகளிலும் யாப்பின் மரபணுக்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஓசை, இசை அடிப்படையில் அமைந்த யாப்பிலக்கணம் தமிழ் முன்னோர் கண்டுபிடித்த ஒரு அறிவியல் பொக்கிடம். பாரி மகளிர் முதல் பாரதி வரை யாவருக்கும் உதவிய அந்தச் செய்யுள் இலக்கணம் நமக்கும் உதவும்.


திறமையுடன் வானில் திரியத் துடிக்கும்
பறவைக்குத் தன்சிறகேன் பாரம்? -- செறிவுடனே
தொய்விலா ஓசையுடன் சொல்லுலகின் மேல்பறக்கச்
செய்யுளுக்கு யாப்பே சிறகு.

பறவைகள் வேறுபடும் பாய்ச்சலில்; கோல
இறகுகள் வண்ணம் இறைக்கும் ! -- சிறப்புடனே
ஒய்யாரம் தந்துபல ஓசை உணர்த்திடச்
செய்யுளுக்கு யாப்பே சிறகு.

பாப்புனையும் யுக்தி பலவற்றை உள்ளடக்கும்
யாப்போர் மரபணு ஆகுமன்றோ? -- மூப்பிலா
வையமாம் தென்னிசை வானில் உயர்ந்திடச்
செய்யுளுக்கு யாப்பே சிறகு.

ராஜா
01-07-2008, 04:13 AM
நன்றி நண்பர்களே..!

ராஜா
01-07-2008, 04:25 AM
இன்று மீண்டும் கவியரசையே அழைப்போம்.. அவரது படைப்புகளில் மிகச் சிறந்த பத்து கவிதைகள் என்று நம்மால் ஒருவேளை தேர்வு செய்யமுடியுமானால், கீழ்வரும் படைப்பும் ஒன்றாக இருக்கும்.

தனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களைக்கூட சுவையான கவியாக்கும் வைரமுத்துவின் ஆளுமை கண்டு புருவம் உயர்த்தாதோர் யாருமிருக்கவியலாது. இதோ அந்தக் கவிதை.

கடல் : தமிழுக்கு நிறம் உண்டு

சிப்பி : கவிப்பேரரசு.

(இரட்டை நாக்கு) உலகம்.

உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்
தன்னம்பிக்கை தளரவிடாதே
இரட்டைப்பேச்சு பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது

இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமே லழகரை வரச்சொல் என்றது

குறுந்தொகை கம்பன் கொட்டி முழங்கினேன்
குண்டுச்சட்டியில் குதிரை என்றது
எலியட் நெருடா எல்லம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி வ்ழியுது என்றது
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது

மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்
படித்த திமிர் பணிவில்லை என்றது
மூத்தவர் வந்தந்தும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல 'காக்கா' என்றது

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது
விரல்நகத் தளவு வீமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் வீழ்ந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக் காரன் தள்ளிநில் என்றது

பகையை கண்டு பைய நகர்ந்தேன்
பயந்துவிட்டான் பாவம் என்றது
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கிவிட்டதா மிருகம் என்றது

பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது

கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியா கஞ்சன் என்றது
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது

மங்கைய ரிடையே மெளனம் காத்தேன்
கவிஞன் என்ற கர்வம் என்றது
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்
கண்களைக் கவனி காமம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக்கண்டேன்
குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது

திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
ஐயோ புகழுக் கலைகிறான் என்றது
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது

அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உனது செவிகள் மூடுதல் சுலபம்

பூமகள்
01-07-2008, 05:47 AM
உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உனது செவிகள் மூடுதல் சுலபம்
அருமை அருமை..!! :icon_b::icon_b:
கவிப்பேரரசின் தீவிர ரசிகையான எனக்கு... அவரின் கவிதைகளை மறுபடியும் சுவைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தியமைக்கு நன்றிகள் ராஜா அண்ணா..!!

தொடருங்கள் உங்களின் முத்துக் குளியலை...!!:icon_rollout::icon_b:

இளசு
01-07-2008, 06:09 AM
விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம் முளைத்தது?

இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள் முட்டி மூழ்கும்

உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது

ஒரு காட்சி..
அதையொட்டி எத்தனை எத்தனை சிந்தனைகள்..
சில இயல்பாய் பல முரணாய்..
கவிஞர்களின் மனக்கோணங்கள் பலப்பல..
நம் நாகரா அவர்கள் குளத்து நீர் அலைக்காட்சி சொன்னதும் இவ்வகையே..




[I]கவிதை இயற்ற யாரும் கற்றுக் கொடுக்க முடியாது! உணர்ச்சியும், கற்பனையும் ஒருங்கிணைந்து மனத்தில் எழும்பும் எண்ணமே நல்ல கவிதைக்குக் கருப்பொருள். ஆனால், கவியுள்ளம் படைத்தவருக்கு, ஓசை நயம் மிளிர, ஒரு நல்ல வடிவில் கவிதையை அமைக்கக் கற்றுக்கொடுக்கலாம். அதுவே யாப்பிலக்கணத்தின் பணி.

பழமிலக்கியங்களை ரசிக்கவும் யாப்பிலக்கண அறிவு தேவை. தற்காலத் திரை இசைப் பாடல்களிலும், பல புதுக் கவிதைகளிலும் யாப்பின் மரபணுக்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஓசை, இசை அடிப்படையில் அமைந்த யாப்பிலக்கணம் தமிழ் முன்னோர் கண்டுபிடித்த ஒரு அறிவியல் பொக்கிடம். பாரி மகளிர் முதல் பாரதி வரை யாவருக்கும் உதவிய அந்தச் செய்யுள் இலக்கணம் நமக்கும் உதவும்.



கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.(கவிதா,ஷீ,ஆதவா போன்றவர்கள் இங்கே கவிதை, யாப்பு சொல்லிக்கொடுக்க நமக்காய் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி)

ஆனாலும் யாப்பிலக்கணம் முயன்றும் வராமல் தோற்றவர்கள்
மனம் தளராமல் உள்ளே வர புதுக்கவிதை என்ற இட ஒதுக்கீட்டுப் பாதை
இல்லை என்றால் தமிழ்க்கல்லூரி இன்று ஏறக்குறைய காலியாகி இருக்கும்..




அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு



கோவேறுக்கழுதை மேல் ஏறிய
கிழவனும் மகனும் கதை!

மீன் விற்க விளம்பரம் எழுதியவன் கதை!

காய்த்த மரத்தில் விழுந்த கற்களின் கதை!

வைரமுத்துவின் இக்கவிதை - பட்டுக்கோட்டையார், கவியரசர் பாணியில்
பட்டை கிளப்புகிறது..


--------------------------------

''முத்துக்கள் மூன்று''-க்கும் சேர்த்து மொத்த நன்றி...
மன்றத் தூத்துக்குடியாருக்கு!

ராஜா
01-07-2008, 04:50 PM
இணையத்தில் நான் பார்த்தவரையிலும், மக்கள் கடவுச்சொல்லுக்கு அடுத்தபடியாக கவிதைகளைதான் அதிகம் பதிகிறார்களோ என்று படுகிறது.

அத்தனையிலும், என் அறிவுக்கு எட்டியவரை சிறந்தவற்றை தெரிவு செய்வது சற்று கடினமான பணியே. என்றாலும், சில கவிதைகள் அதிசயிக்கத்தக்கவகையில் அமைந்து, நம்மை உற்சாகப்படுத்தவே செய்கின்றன.

இன்றைய ( 02/07/08 ) கவிதையில், கவிதாயினியின் பார்வை நம்மை சற்றே அதிர்வடைய வைக்கிறது. மரணத்தை அரவணைக்கும் தருவாயிலும் மானம் பற்றி சிந்திக்கும் அந்த மாதர்குல மாணிக்கங்களின் மனோநிலை, உருக வைக்கிறது.

நீங்களே அந்தக் கவிதையைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்..

கடல் : அணங்கு சிற்றிதழ்.

சிப்பி : மாலதி மைத்ரி.

தீப்பற்றி எரியும் நிர்வாணம்.

நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ
தற்கொலைக்கு முனையும் பெண்கள்
முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை
மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர்
சொந்த உறவுகளால் தற்கொலைபோல்
கொல்லப்படும் பெண்கள்
இதில் விதிவிலக்கு

மரணத்திற்குப் பின்னான
தங்கள் நிர்வாணத்தை நினைத்து
அஞ்சும் அவர்களை
ஆடை ஒருபோதும் காப்பதில்லை
ஏனைய உறவுகளைப் போலவே
அவையும் துரோகம் இழைக்கின்றன

பிரேதப் பரிதோசனை வளாகத்தில்
சூன்யத்தை வெறித்தபடி கிடக்கிறது
மாண்ட பெண்ணின் சடலம்
காட்சிப்பொருளாய் கடை விரியும்
அழகியப் பெண்ணின் நிர்வாணம்
வக்கிரத்தின் விஷக் கொடி
சுவரெங்கும் படர்கிறது
கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்
சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை

தன் உடலுக்குத் தானே எரியூட்டி
மாளும் பெண் நெஞ்சுரத்துடன்
நிர்வாணத்துக்கும் வக்கிரத்துக்கும்
சேர்த்தே எரியூட்டுகிறாள்

இளசு
01-07-2008, 05:32 PM
நெருடலான அழுகிய நிஜத்தை உரக்கச்சொன்ன கவிதை..

ஆனாலும் எவ்விதத்திலும் தற்கொலைகளை நியாயப்படுத்தும் தொனியை
தவிர்க்க வேண்டும் என எண்ணுகிறேன்..

கடவுச்சொல், கவிதை கணக்கு - நச்!

தொடருங்கள் ராஜா..

ராஜா
02-07-2008, 05:27 AM
நன்றி நண்பரே..!

ராஜா
02-07-2008, 05:13 PM
இன்றைய கவிதையாக மலர்வது, பாம்பாட்டி சித்தன் படைப்பு.

அவரது கவிதைகள் சிற்றிதழ் உலகில் சித்தனுக்கென்று சிறு ரசிகர் வட்டத்தையும், தனக்கென்று ஒரு அடையாளத்தையும் கொண்டிருப்பவை.

புதிராகவே கவிதையை கட்டியெழுப்பிச் செல்பவர் சரேலென்று கடைசி இருவரிகளில் எல்லோரது சந்தேகங்களுக்கும் ஒரே "உருவும் சுருக்கில்" விடை அளிப்பார்.

கீழ்வரும் கவிதையில் அந்த உத்தியை அனுபவித்துப் பாருங்கள்.. உங்களுக்கே புரியும்..!

கடல் : குதிரைவீரன் பயணம் * சிற்றிதழ்.

சிப்பி : பாம்பாட்டி சித்தன்.

பிள்ளை விளையாட்டு.

ஏழ்கடலும் மலையும் சஞ்சரித்து தேடாது
பச்சையை தரித்து
பவழவாய் இமைக்கும் கண்ணோடு
தன்னெதிரே அலையும்
கிளிசுமந்த மாந்த்ரீகன் உயிர்பற்ற
குட்டி இளவரசி
நிற்கத்தடுமாறி மடமண்டியிட்டு
சப்பாணி போல் கால்தசை தேய
தரைதொடும் மலராய் சிறுகையூன்றி
விரியும் சிறகாய் காற்றில் மறுகை விரைய
தவழ்பவள் கைகளில் பிடிபடும் விந்தை உயிரை
தரைமேல் அடித்து கசக்கி அழுத்த
கொக்கியன்ன அலகு பிளந்து
மென்பஞ்சு நாவினை துருத்தி
கட்டளை மொழியில் பிதற்றும் கிள்ளை
வலிகண்ட பறவையாய் மாந்த்ரீகன் துடிக்க
விரிந்த விழிகளோடு கெக்கலிக்கும் இளவரசி
மீண்டும் அழுந்த மறுபடி துடிக்க
சங்கிலி கண்ணியாய் உயிர்சுருள் அதிர்ந்தடங்க
பால்பற்கள் தெரிய பலமாகச் சிரிக்கிறாள்
ஆனந்த பூவுதிரும் புன்னகையோடு
குட்டி இளவரசியை குளிப்பாட்ட
செந்தூக்காய் தாய்கொண்டு செல்கிறாள்
மூக்குப்பொடிக்கான நமைச்சலில்
கிழட்டு மாந்த்ரீகன் உயிர்த்தெழுந்து
மாடிப்படிகளில் மறைய
உளறியபடி உலா வருகிறது
பேட்டரியில் இயங்கும் பொம்மைக்கிளி.

இளசு
02-07-2008, 06:55 PM
குழந்தைகள் உலகமே அலாதி..

முத்துக்கு நன்றி ராஜா அவர்களே!

ராஜா
03-07-2008, 07:03 AM
தாங்கள் ஒரு மருத்துவர் என்றாலும்கூட... தொடர்ந்த நல்லாதரவுக்கு நன்றி நண்பரே..!

shibly591
03-07-2008, 07:54 AM
எனக்கும் இந்தக்கவிதையை ரொம்ப பிடிக்கும்...இன்னொன்று அவரது இலையில் தங்கிய துளிகள் கவிதை...அற்புதமோ அற்புதம்.

ராஜா
03-07-2008, 05:34 PM
இன்றைய கவிதை..

கடல் : சஞ்சாரம் சிற்றிதழ்.

சிப்பி : ச. பிரியா.

யானையின் தும்பிக்கை
லாவகத்துடன்
கபளீகரம் நிகழ்த்தும்
பொக்லைன் இயந்திரத்தின் இரைச்சல்
பீறிட்டழும் மரங்களின் மரணஓலம்
வேர் நரம்புகளை
பிடுங்கியெறிந்து
நிரத்திய மண்பரப்பு
ஆலை கட்டிடங்களுக்கு அடியில்
பறவைகளின் கிறீச்சிடல்கள்
தொலைந்து போனதொரு வெளியில்
பரவியிருக்கிறது
சைரனின் சங்கொலி அலறல்
சாயக் கழிவு
கலந்த குளத்துநீரில்
நமக்கான சூரியனின் பிம்பம்
மங்கிய ஓளிர்தலில்
இன்னமும்
என் அறையில்
பசுமையும் நீர்செழிப்புமான
பச்சை நிறக்காடுகளை
ஒளிபரப்பிக் கொண்டேதானிருக்கின்றன
டிஸ்கவ்ரியும்
நேஷ்னல் ஜியோக்ரபிக் சேனலும்.

இளசு
03-07-2008, 06:20 PM
சூழல் மாசு, இயற்கை அழிப்பை மிக அழகாய்ச் சொல்லும் கவிதை..

யானையின் தும்பிக்கை - உவமை புதிது..

இங்கே தந்தமைக்கு நன்றி ராஜா அவர்களே!

ராஜா
04-07-2008, 01:47 PM
நன்றி நண்பரே..!

ராஜா
04-07-2008, 05:23 PM
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள்.

1) நீரில் மிதந்த நிலவை
இரவெல்லாம் துவளாது
கரையேற்றிய அலைகளுக்கு
பரிதியை பரிசாய் தந்தது
விடியல்

2) பேருந்துப் பயணத்தில்
சாளரக்கண்ணாடி
இடையிலிருந்தும்
எதிர்வரும் முட்செடிக்கு
முகத்தை விலக்கும்
பழகிய மூளை

3) காட்டை அழித்ததை
காகிதங்களில் எழுதுகிறேன்.

4) ஆளற்றபோதும்
பார்வை சென்று படியும்
பெண்கள் படித்துறை.

5) நீர்கலைத்து
நிலவை நிரப்பிக்கொள்கிறது
குடம்

6) காலை பொழுதை கையகப்படுத்தாவிடில்
மறுநாளுக்குள் நழுவிக்கொள்கிறது
நாள்.

இளசு
04-07-2008, 05:29 PM
ஒவ்வொன்றும் அழகிய காட்சிப்பா!

பழகிய வண்டிமாடாய் மனம் செய்யும் செயல்கள்...!


கடைசிப் பா சொல்லுவது 100% உண்மை!
காலையில் குளித்து ஒரு பணிக்காக வெளிக்கிளம்பாவிடில்..
விடியாது அன்று முழுதும்!

-------------------

தொடருக்கு நன்றி ராஜா அவர்களே!

செழியன்
04-07-2008, 08:08 PM
சிதறிக்கிடக்கும் முத்துக்களை மாலையாக தொகுத்துதரும் அண்ணனுக்கு நன்றிகள்

ராஜா
05-07-2008, 01:17 PM
நன்றி சுவைஞர்களே..!

"பொத்தனூர்"பிரபு
06-07-2008, 04:56 PM
இன்று மீண்டும் கவியரசையே அழைப்போம்.. அவரது படைப்புகளில் மிகச் சிறந்த பத்து கவிதைகள் என்று நம்மால் ஒருவேளை தேர்வு செய்யமுடியுமானால், கீழ்வரும் படைப்பும் ஒன்றாக இருக்கும்.

தனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களைக்கூட சுவையான கவியாக்கும் வைரமுத்துவின் ஆளுமை கண்டு புருவம் உயர்த்தாதோர் யாருமிருக்கவியலாது. இதோ அந்தக் கவிதை.

கடல் : தமிழுக்கு நிறம் உண்டு

சிப்பி : கவிப்பேரரசு.

(இரட்டை நாக்கு) உலகம்.

உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்
தன்னம்பிக்கை தளரவிடாதே
இரட்டைப்பேச்சு பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது

இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமே லழகரை வரச்சொல் என்றது

குறுந்தொகை கம்பன் கொட்டி முழங்கினேன்
குண்டுச்சட்டியில் குதிரை என்றது
எலியட் நெருடா எல்லம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி வ்ழியுது என்றது
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது

மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்
படித்த திமிர் பணிவில்லை என்றது
மூத்தவர் வந்தந்தும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல 'காக்கா' என்றது

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது
விரல்நகத் தளவு வீமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் வீழ்ந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக் காரன் தள்ளிநில் என்றது

பகையை கண்டு பைய நகர்ந்தேன்
பயந்துவிட்டான் பாவம் என்றது
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கிவிட்டதா மிருகம் என்றது

பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது

கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியா கஞ்சன் என்றது
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது

மங்கைய ரிடையே மெளனம் காத்தேன்
கவிஞன் என்ற கர்வம் என்றது
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்
கண்களைக் கவனி காமம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக்கண்டேன்
குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது

திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
ஐயோ புகழுக் கலைகிறான் என்றது
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது

அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உனது செவிகள் மூடுதல் சுலபம்

நன்றி ஐயா
கவிதையே பாடலாக என்று வைரமுத்துவின் வரிகளை இசையோடு கொடுக்கப்பட்ட சிடியில் இதை கேட்டிருக்கிறேன்

ராஜா
06-07-2008, 05:23 PM
நன்றி பிரபு..!

ராஜா
06-07-2008, 05:32 PM
கடல் : குதிரைவீரன் பயணம் சிற்றிதழ்.

சிப்பி : கவிஞர் பாதசாரி.

சிகிச்சை

சார் கேள்விப்பட்டீங்களா
குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை
அவர்களுக்குத் தெரியாமலேயே
அதிலிருந்து விடுவிக்கிறாராம்
பிரபல கேரள ஜோதிடர்

சார் கேள்விப்பட்டீங்களா
காமத்திற்கு அடிமையானவர்களை
அவர்களுக்குத் தெரியாமலேயே
அதிலிருந்து விடுவிக்கிறாராம்
பிரபல பாலியல் மனநல மருத்துவர்

சார் கேள்விப்பட்டீங்களா
வறுமைக்கு அடிமையானவர்களை
அவர்களுக்குத் தெரியாமலேயே
அதிலிருந்து விடுவிக்கிறாராம்
பிரபல அரசியல் பொருளாதார மேதை

சார் கேள்விப்பட்டீங்களா
மனிதனால் தாங்க முடியாத
துக்கம் என்று எதுவுமில்லையாம்
அவர்களுக்குத் தெரியாமலேயே
அதிலிருந்து விடுவிக்கிறாராம்
நவீன எழுத்துக் கலைஞர்

சார் கேள்விப்பட்டா சொல்லுங்க
எனக்கு அடிமையான என்னை
அதிலிருந்து எனக்கே தெரியாமல்
விடுவிக்கும் அவரை..

ராஜா
07-07-2008, 04:26 PM
கடல் : சேவி வலைப்பூ.

சிப்பி : ஆகாரம் கவிதைகள்.

காதலிப்போர் கவனத்துக்கு


காதல் தோற்றுப் போனால்
தாடி வளர்ப்பதை
வழக்கமாக்காதீர்,
தாடி முளைக்காத சில
நண்பர்களும் காதலித்துக் கொண்டிருக்கக்
கூடும்.

காதலி என்று
நீங்கள் சொல்லிக் கொள்பவர்
வேறு யாருடனோ
காஃபி குடிப்பதைக் காண்கையில்
சுடச் சுடக் கவிதை
எழுதி அழுது விடாதீர்கள்
அல்லது
குறைந்த பட்சம்
எழுதியதை யாருக்கும் காட்டாதீர்கள்.

காதல்
ஒரு முறைதான் வருமென்று
ஒவ்வொரு முறையும்
சொல்லித் திரியாதீர்கள்,
உங்கள் காதலி
ஏற்கனவே காதலித்திருக்கக் கூடும்.

உன் பெயரைத்தான்
என் மழலைக்குப் போடுவேன்
என
அடம்பிடித்து புலம்பாதீர்கள்,
மனைவி ஏதேனும்
பெயர் சொல்லி அடம்பிடித்தால்
சந்தேகத் தீ வளர்க்காதீர்கள்.

நினைவாக என்று
கிழிந்த கைக்குட்டை
அழுக்கு துப்பட்டா
சேமித்து வைக்காதீர்கள்,
ராத்திரி உளறல்
உண்மை உரைக்கக் கூடும்

இரவும் பகலும்
மொட்டை மாடி வெறித்து
வருடங்கள் ஓடியபின்
எந்த ரமேஷ் ?
என்று காதலி கேட்டால்
ராங் நம்பரோ என்று சந்தேகிக்காதீர்கள்.

காதல் பூவென்று
கவிதை எழுதியதை நினையுங்கள்.
கிள்ளிப் போட்டபின்
வாடிப்போவதே
வாடிக்கை எனும் நிஜமுணருங்கள்.

(தீவிரக் காதலில் சிக்கிக் கொண்டிருப்பவர்களின் சாபம் என்னைச் சந்திக்காதிருக்கக் கடவது ! )

இளசு
08-07-2008, 07:00 AM
[CENTER][B][COLOR="Red"] கவிஞர் பாதசாரி

எனக்கு அடிமையான என்னை
அதிலிருந்து எனக்கே தெரியாமல்
விடுவிக்கும் அவரை..


விட்டு விடுதலையாக வேண்டும் - ஒரு
சிட்டுக் குருவியைப் போல்..
என்கிறாரா பாதசாரி?

வானம் பார்த்த விழிகள்..
புதைசேற்றில் பாதங்கள்..
படபடக்கும் சிறகுகள்..

---------------------------------------------------




ஆகாரம் கவிதைகள்


.
கிள்ளிப் போட்டபின்
வாடிப்போவதே
வாடிக்கை

காதலை எந்தப்பக்கம் இருந்து பார்த்தும் கவிதை வடிக்கலாம்!

ஆ..காரம் என பச்சை மிளகாய் கடித்த ஆ(ங்)காரப் பக்கம் இது!

நிஜத்துக்குத்தான் எத்தனை முகங்கள்!

--------------------------------

தொடர் முத்துக்குளியலுக்கு நன்றி ராஜா அவர்களே!

ராஜா
08-07-2008, 06:00 PM
கடல் : கனவு சிற்றிதழ்.

சிப்பி : ம.அருணாதேவி.

தகவல் உலகம்

சினிமா, தொலைக்காட்சி
பத்திரிக்கைகள்
இண்டர்னெட், பிராடு பேண்ட்
வெளியில் தகவல்கள்
கொட்டிக் கிடக்கின்றன
படிக்க, அள்ள நேரமில்லை
ஆனால்வீட்டில்
25 வருடத் தாம்பத்திற்குப் பிறகும்
அம்மாவுக்கு அப்பாவுக்கு
என்ன வர்ண சட்டை பிடிக்கும்
என்பது தெரியவில்லை
அப்பாவுக்கு அம்மாவின் அபூர்வ முத்தம்
பிடிக்காததற்கு காரணம் தெரியவில்லை
பிறந்த நாளிலோ, திருமண நாளிலோ
வாழ்த்து சொல்லத் தெரியவில்லை
வெளியில் இருப்பவர்களின்
சட்டை வர்ணம்
பிறந்த தேதி, திருமண நாள்
இதெல்லாம் அத்துப்படி
சினிமா நடிகர்கள், நடிகைகள்,
அரசியல்வாதிகள் உட்பட
இது தகவல் உலகம்

mgandhi
08-07-2008, 06:02 PM
நல்ல கவி நன்றி ராஜா

அமரன்
15-08-2008, 08:52 PM
இணையக் கடலில் ஆர்ப்பரிக்கும் ஆக்க அலைகளுக்கு நடுவிலும் முக்குளித்து முத்துக்களை எடுத்து மாலையாகத் தொடுத்த உழைப்பை சொட்டுகிறது இழை. நன்றியுடன் தொடரவும் வேண்டுகிறேன்.

arun
20-08-2008, 07:23 PM
முத்து குவியல்களின் தொகுப்பு சூப்பர் தொடருங்கள்

அய்யா
09-12-2008, 07:05 AM
நல்ல திரி இது. தூங்கலாமா?
தொடருங்கள் ஏ.ஆர்.ஆர்.அய்யா.

ராஜா
09-12-2008, 07:13 AM
நல்ல கவி நன்றி ராஜா


இணையக் கடலில் ஆர்ப்பரிக்கும் ஆக்க அலைகளுக்கு நடுவிலும் முக்குளித்து முத்துக்களை எடுத்து மாலையாகத் தொடுத்த உழைப்பை சொட்டுகிறது இழை. நன்றியுடன் தொடரவும் வேண்டுகிறேன்.


முத்து குவியல்களின் தொகுப்பு சூப்பர் தொடருங்கள்


நல்ல திரி இது. தூங்கலாமா?
தொடருங்கள் ஏ.ஆர்.ஆர்.அய்யா.

நன்றி நண்பர்களே..!

விரைவில் தொடர்கிறேன்.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..!!

ராஜா
09-12-2008, 07:23 AM
கல்கி இதழில் நிலாரசிகன் கவிதை..

குழந்தைகளின் உலகம்

1. கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

2. அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.


3. மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

coolanu
26-03-2009, 05:21 PM
அறிவுமதி அறைவதில் ஆரம்பித்து, தகவல் உலகம் உணர்த்தல் வரை அனைத்து கவிதைகளுமே அருமை. அறிய தொகுப்பை அள்ளித் தந்த நண்பருக்கு நன்றி.

தொடருங்கள்