PDA

View Full Version : ஈரம்



தாமரை
23-06-2008, 09:38 AM
மழை நனைந்து
நீ துவட்டிய பின்னால்
காய்ந்த ஈரம்
இப்பொழுது
உன் நெஞ்சின் மேலும்.
என் நெஞ்சிற்குள்ளும்

ஆதவா
23-06-2008, 11:01 AM
மழை நனைந்து
நீ துவட்டிய பின்னால்
காய்ந்த ஈரம்
இப்பொழுது
உன் நெஞ்சின் மேலும்.
என் நெஞ்சிற்குள்ளும்

காய்ந்தபின் எப்படி ஈரம் இருக்கும்? :confused:

தாமரை
23-06-2008, 11:05 AM
ஈரம் காய்வதில்லை,,

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஷிஃப்ட் ஆகுது..

மண்டை காய்ந்தது,. அவள் முந்தானை நனைந்தது..

ஈரம் இப்படிச் ஷிஃப்ட் ஆவதைப் பற்றி மன்றத்தில எங்கோ ஒரு மூலையில் ஒரு தொடர் கவிதை பாதியில் முடியாமல் இருக்கு ஆதவா.. முடிந்தால் தோண்டி எடுங்கள்..!!!

ஆதி
23-06-2008, 11:06 AM
காய்ந்தபின் எப்படி ஈரம் இருக்கும்? :confused:

ஆதவா,

துவட்டிய பிறகு தலையீரம் காய்ந்திருக்கும்,
துவட்டிய ஈரம் மனசில் ஒட்டிருக்கும் என்று நினைக்கிறேன்..

இல்ல இந்த கவிதைக்கு வேறேதேனும் பொருளுள்ளதானு தெரியல..
அண்ணன் தான் விளக்கனும்..

கண்மணி
23-06-2008, 11:16 AM
ஈரம்
இடம்மாறியது

இருங்க நான் தேடித்தர்ரேன்

இளசு
23-06-2008, 06:34 PM
சில சின்ன செயல்கள், சொற்கள்
பெரிய பரிவூற்றுகளை பீச்சவைக்கும்..

அதில் ஒன்று இத்தலை துவட்டல்..

பெண்மைக்கென உள்ள பிரத்தியேகப் பொக்கிஷத்தில்
இதுபோன்றவை நிறைய உள்ளன..

அளிப்பதில் அவர்களும் பெறுவதில் ஆண்களும்
சரிநிகர் சுகம் பெறும் இயற்கை வரம் இது..


பாராட்டுகள் தாமரை!

நம்பிகோபாலன்
23-06-2008, 07:11 PM
" பெண்ணே நீ துவட்டு
நான் நினைவேன்..... " நான் புரிந்துகொண்டது சரியா தாமரை .

அறிஞர்
23-06-2008, 09:15 PM
இடம் மாறும் ஈரம்
ஏற்படுத்தும்... சலனங்கள் தான் எத்தனை..

அருமை... தாமரை..

பென்ஸ்
24-06-2008, 02:32 AM
காய்ந்தபின் எப்படி ஈரம் இருக்கும்? :confused:

இதுக்குதான் பண்பட்டவர் பகுதியில் பதிக்கனும்ன்னு சொல்லுறது....:D:D

ஹி ஹி... ஒரு குறுங்கவிதையை திறந்து வாசித்து.. வாசித்து... ரசித்து, ரசித்து....

சரி பாக்கலாம்... குட் நைட்...

பூமகள்
24-06-2008, 11:02 AM
புரிவதில் தாமதம்..
குறும்புன்னகை இதழோரம்..!!

பாராட்டுகள் தாமரை அண்ணா..!! :)

ஓவியன்
19-08-2008, 06:55 AM
மழை நனைந்து
நீ துவட்டிய பின்னால்
காய்ந்த ஈரம்
இப்பொழுது
உன் நெஞ்சின் மேலும்.
என் நெஞ்சிற்குள்ளும்

அங்கு நனைந்தால்
இங்கு குளிர்வதும்
இங்கு நனைந்தால்
அங்கு குளிர்வதும்
காதலில் சகஜம் தானே..!!

கண்மணி
07-12-2008, 02:46 PM
ஈரம்
இடம்மாறியது

இருங்க நான் தேடித்தர்ரேன்


இன்னிக்குத்தான் கண்ணில பட்டது

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13552

ஆதி
09-12-2008, 07:11 AM
இன்னிக்குத்தான் கண்ணில பட்டது

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13552

காய்ந்த ஈரம் காற்றில் கலந்திருக்கும்...

ஈரம் இறப்பதில்லை.. இடம் பெயர்கிறது.. தெளிந்தேன் அக்கா.. தெளிவித்தமைக்கு நன்றிகள்..