PDA

View Full Version : தொடர்-5 : எம்.எஸ். பவர்பாயின்ட் (Powerpoint)..



மஸாகி
23-06-2008, 07:48 AM
(இந்த தொடரினை அச்சிட விரும்புபவர்கள் - கிடையான (Horizontal) நிலத் தோற்றத்தில் (Landscape) அச்சிட்டால் அனைத்து தகவல்களையும் முழுமையாகப் பெறலாம்.)

இறைவனின் நாமத்தால்..

எனது அன்பு மாணவர்களை மீண்டும் இத் தொடரின் மூலம், மிக நீண்ட நாட்களின் பின்னர் (சுமார் 2 வருடங்கள்) சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி.

கடந்த நாட்களில், அவ்வப்போது மன்றம் வந்து போனாலும் - வேலைப்பழு காரணமாகவும், குடும்ப பொறுப்பு காரணமாகவும் தொடர்ச்சியாக என்னால், இந்த தொடரை தரமுடியாமல் போனமைக்காக வருந்துகின்றேன்.

இருந்தபோதிலும், இத் தொடரை தொடரும்படி அடிக்கடி என் அன்பு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்ததாலும், தனிப்பட்ட ரீதியில் செய்தியனுப்பி - அறிஞர் போன்ற என் இனிய நண்பர்கள் என்னை உற்சாகப்படுத்தியதாலும் இத் தொடரை தொடர்ச்சியாக மீண்டும் உங்கள் முன் சமர்ப்பிக்க முடிவெடுத்து மறுபடியும் களமிறங்குகின்றேன்.

இத் தொடரை புதிதாகப் பார்வையிடும் அன்பு நண்பர்களை, இதற்கு முன்னர் நானெழுதிய எம்.எஸ்.பவர்பாயின்ட் (PowerPoint) Xp - ஒரு புதிய ஆரம்பம்.. 1, 2, 3, 4 ஆவது தொடர்களையும் வாசித்துவிட்டு இப்பகுதிக்கு வருமாறு அன்பாய் வேண்டுகின்றேன்.

அன்பு நண்பர் அருள் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, இந்த தொடரின் இறுதியில் - கணனிசார் கலைச் சொற்களுக்கான - தமிழ் மயமாக்க சொற்கள் தவிர்த்து முழுமையான தொடரையும் கடவுளின் உதவியோடு பதிக்கவுள்ளேன்.

அத்துடன், இறைவன் நாடினால் - எம்.எஸ்.பவர்பாயின்ட் (PowerPoint) - 2007 யில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பயன்பாட்டு முறை தொடர்பான ஒரு அறிமுக கண்ணோட்டத்தையும் இத் தொடரின் இறுதியில் வழங்க இருக்கின்றேன் என்பதையும் அன்பு மாணவர்களுக்கு மிக மகிழச்சியுடன் அறியத் தருகின்றேன்.

உங்கள் உற்சாக வார்த்தைகள்
என் உணர்வுகளை மாத்திரமல்ல
இந்த உலகத்தையே
உங்கள் வசப்படுத்தும்..
நன்றிகள்..

இனி தொடருக்குள் நுழையலாமா..?

இதுவரை, பவர்பாயின்ட் முகப்புத் தோற்றத்தில் காணப்படும் பல முக்கிய விடயங்களையும், திட்டமிடல் (Planning) மற்றும் வடிவமைத்தல் (Designing) தொடர்பான சில நுணுக்கங்களையும் ஆராய்ந்தோம்.

கடந்த கடைசித் தொடரில், வடிவமைத்தல் தொடர்பான மேலதிக விளக்கங்கள் மற்றும் உதாரண நிகழ்த்து வரைகலைகளுடன் [(Presentation Graphics) - உங்களை சந்திப்பதாகக் கூறியிருந்தேன் அல்லவா..?

ஆம்..

இந்த தொடரில், வடிவமைப்புடன் தொடர்புடைய சிறிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். உதாரணமாக, கணினிகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றுக்காக - புதிதாக வெளிவந்திருக்கும் 3 மடிக்கணினிகளை (Laptop) அறிமுகம் செய்யும் வகையில் ஒரு நிகழ்த்துக்காட்சி (Presentation) தயாரிக்கவேண்டி இருக்கின்றது என வைத்துக் கொள்வோம்.

அதனைப் பின்வரும் படிமுறைகளில் இலகுவாக வடிவமைக்கலாம்.

http://www.geocities.com/mazaagy/001.jpg

1. முதலில் திட்டமிடுவோம்..

..... எமது நிகழ்த்துக்காட்சியில் (Presentation) 5 படவில்லைகளை (Slides) மொத்தமாக அமைக்க வேண்டும்.

..... முதல் படவில்லை (First Slide) யில், நாம் அறிமுகம் செய்ய இருக்கும் 3 மடிக்கணினிகளை (Laptop) யும் ஒரே பார்வையில் இடம்பெறச் செய்வோம்.

..... இனி, அடுத்துவரும் 3 படவில்லை (Next Slide) களில், ஒவ்வொரு மடிக்கணினி (Laptop) ஆக தனித்தனியே - விபரங்களை கொடுத்து அதன் விற்பனை விலையினையும் கொடுக்கலாம்.

(இவ்வாறு தனித்தனியே படவில்லை (Slide) களை உருவாக்கினால், பின்னர் இணைப்புக் கொடுக்க (Linking) இலகுவாக இருக்கும்)

..... இறுதியாக உள்ள 5 ஆவது படவில்லை (Last Slide) யில், குறிப்பிட்ட கணனியினைக் கொள்வனவு செய்ய - நாடவேண்டிய தொடர்பு விபரங்களைக் கொடுக்கலாம்.

2. இரண்டாவதாக வடிவமைப்போம்..

..... இப்பொழுது, திட்டமிட்டபடி செருகு பட்டியலில் (Insert Menu) உள்ள - புதிய படவில்லை (New Slide) என்ற கட்டளை மூலமாக, அல்லது ஊவசட 10 ஆ என்ற இலகுவிசை Ctrl + M மூலமாக 5 படவில்லைகளைப் போடுவோம்.

..... பின்னர், அதே செருகு பட்டியலில் (Insert Menu) உள்ள - படம் (Picture) என்ற உப பட்டியலுக்குள் (Sub Menu) சென்று, கோப்பிலிருந்து (From File) என்பதை சொடுக்கி – தேவையான படங்களை (உதாரணமாக : மடிக்கணினிகள்), எமது முதலாவது படவில்லையில் (First Slide) போட்டுக் கொள்வோம்.

..... அதனைத் தொடர்ந்து - நிறுவனத்தின் பெயர் (உ-ம் : Professional Dealers)என்பதை சொற்கலை (word Art) யிலும், மேலதிக விளக்கக் குறிப்பை (உ-ம் : Latest & Best) வாசகப் பெட்டியிலும் (Text Box) எழுதிக் கொள்வோம்.

..... அதேபோல், குறிப்பிட்ட படவில்லை (Slide) யின் மீது வலது சொடுக்கு (Right Click) செய்வதன் மூலமாகப் பெற்றுக் கொள்ளப்படும் உப பட்டியலில் (Sub Menu) இருந்தோ, அல்லது வடிவமைப்புப் பட்டியலில் (Format Menu) இருந்தோ, படவில்லை வடிவங்கள் (Slide Design) என்பதைச் சொடுக்குங்கள்.

..... அப்போது கொள்பணி சாளர அடுக்கில் (Task Pane) தோன்றும் பிண்ணனிக் காட்சிகளைக் கொண்ட படவில்லை வடிவங்கள் (Slide Design) களைப் பயன்படுத்தி, எமது படவில்லை (Slide) யினை அழகாக மெருகேற்றிக் கொள்ள முடியும்.

http://www.geocities.com/mazaagy/002.jpg

..... அவ்வாறு போட்டுக் கொள்ளப்படும் பிண்ணனிக் காட்சியானது, எல்லாப் படவில்லைகளுக்கும் (All Slides) ஒரே மாதிரி வழங்கப்பட வேண்டுமாயின் மேலே காட்டப்பட்டவாறு குறிப்பிட்ட பிண்ணனிக் காட்சியின் மீது - வலது சொடுக்கு சொடுக்கி, எல்லாப் படவில்லைகளுக்கும் பிரயோகிக்கவும் (Apply to All Slides) என்பதைக் கொடுக்க வேண்டும்.

..... இனி, இரண்டாவது படவில்லையினைத் தெரிவு செய்து - குறிப்பிட்ட ஏதாவதோர் மடிக்கணினியின் படத்தைப் போட்டுவிட்டு, வாசகப் பெட்டியைப் பயன்படுத்தி (Text Box) அந்த மடிக்கணினியின் விபரங்களை அருகில் கொடுங்கள்.

..... மேலும் அழகூட்ட விரும்பினால் - அம் மடிக்கணினியின் பின்னால், செவ்வகம் போன்ற ஒரு தன்வடிவத்தைப் (Auto Shape) போட்டு, அதனை சரிந்தவாறு இருக்கும்படி திருப்பி (Rotate) வைக்கலாம்.

..... இவ்வாறு தன்வடிவத்தைப் (Auto Shape) போடும்போது, நாம் போட்டுள்ள படத்தை (உ-ம்: மடிக்கணினி) மறைக்கும்படி அந்த தன்வடிவம் (Auto Shape) காணப்பட்டால், அதனைப் பின்னால் கொண்டு செல்ல - வரைதல் கருவிப்பட்டையில் (Drawing Tool Bar) உள்ள வரை (Draw) என்பதை சொடுக்கி, அங்குள்ள கட்டளை (Order) என்பதன் மூலம் - முன் பின் நகர்த்த முடியும்.

..... மேலும் ஒரு வாசகப் பெட்டியைப் (Text Box) கீழே போட்டு - குறிப்பிட்ட மடிக்கணினியின் விலையினை அதற்குள் வழங்கலாம். அவ்வாறு வழங்கும்போது, அவ்வாசகப் பெட்டியினை (Text Box) ஏதாவது ஒரு நிறத்தினால் நிரப்பியும் அழகுபடுத்த முடியும்.

..... இவ்வாறு, 3ஆம், 4ஆம் படவில்லைகளையும் (Slides) ஏனைய மடிக்கணினி படங்களைப் பயன்படுத்தி வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

http://www.geocities.com/mazaagy/003.jpg

..... இனி, இறுதியாக உள்ள படவில்லையில் (Last Slide) குறிப்பிட்ட நிறுவனத்தின் தொடர்பு விபரங்களை மேலுள்ள படத்தில் காட்டியவாறு அழகிய முறையில் வடிவமைத்து முடிவுக்கு கொண்டுவரலாம்.

இதுபோன்ற நிறைய நிகழ்த்து வரைகலைகளை (Presentation Graphics) நீங்களும் சுயமாக வடிவமைத்துப் பழகுங்கள்.

இறைவன் நாடினால், எமது அடுத்த தொடரில் இணைப்புக் கொடுத்தல் (Linking) சம்பந்தமாக பார்ப்போம்.

அதுவரை உங்களிடமிருந்து விடைபெறும் நான்,

நட்புக்கு - மஸாகி
23.06.2008

அறிஞர்
24-06-2008, 01:04 PM
மீண்டும் தங்கள் பாடத்தை தொடர்வதற்கு நன்றி மஸாகி......

பவர்பாயிண்ட் மூலம் பிரசன்டேஷன் கொடுக்கும் பலருக்கு... இது உதவியாக இருக்கும்..
-------
தங்களின் கையெழுத்து சிறப்பாக இருக்கிறது

சிவா.ஜி
24-06-2008, 01:29 PM
மிக மிக அருமை மஸாகி அவர்களே. சாதாரண கணிணி வகுப்புக்கும் எக்கச்சக்கமாய் காசு வாங்கும் இந்த வியாபார உலகில், இலவசமாக நம் மன்ற உறவுகளுக்கு இவ்வளவு அருமையாக எளிமையாக, வெகு நேர்த்தியாக கற்றுக்கொடுக்கும் ஆசானுக்கு அன்பார்ந்த நன்றிகள்.

மஸாகி
25-06-2008, 07:00 AM
ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கின்ற வரவேற்புக்களே,
அவனை இன்னும் நன்றாக எழுத தூண்டுகின்றது..
அதற்கு, நானும் விதிவிலக்கல்ல..

சோம்பிக் கிடந்த என் உணர்வலைகளை,
மீண்டும் தட்டியெழுப்பிய பெருமை - அறிஞர் அவர்களையே சாரும்.

எம் மன்றத்திற்காக என்னால் முடிந்தளவு பயனுள்ள விடயங்களை,
எழுத என்னைத் தூண்டிக் கொண்டிருக்கும்
சிவா.ஜி போன்ற அன்பு நண்பர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்..

நட்புக்கு - மஸாகி
25.06.2008

நூர்
21-03-2009, 06:33 PM
பகிர்வுக்கு நன்றி.அடுத்த அத்தியாயம் எப்பொழுது...