PDA

View Full Version : 17 மாணவிகள் - கர்ப்பம்அறிஞர்
23-06-2008, 03:08 AM
அமெரிக்க கலாச்சாரம்... அழிவுக்கு சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த செய்தி.....
------------------------
ஒரே நேரத்தில் குழந்தை பெற திட்டமிட்டு பள்ளி மாணவிகள் 17 பேர் கர்ப்பம்

நியுயார்க், ஜூன் 23: அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் ஒரே நேரத்தில் 17 மாணவிகள் கர்ப்பம் அடைந்தனர். இதனால், பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து விசாரித்த போது, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டு தோழிகள் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கிளவ்செஸ்டர் நகரில் உள்ள சிறிய மருத்துவமனையில் மாணவர்கள் சிகிச்சை பெறுவது வழக்கம். அவ்வப்போது சில மாணவிகள், கர்ப்பமாக இருக்கிறோமா என்று சோதனை செய்யுங்கள் என டாக்டரிடம் கேட்பார்கள். டாக்டர்களும் அந்த சோதனையை செய்வார்கள்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்படி கர்ப்ப சோதனைக்கு வரும் மாணவிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது.
வழக்கமாக, கர்ப்பம் என்று தெரிந்தால் பள்ளி மாணவிகள் இடிந்துபோவார்கள். அவசரப்பட்டு செய்த தவறால் இப்படி ஆகிவிட்டதே. கருவை கலைக்க முடியுமா என்று டாக்டர்களிடம் ஆலோசனை கேட்பார்கள்.
ஆனால், இந்தமுறை வந்த மாணவிகள், கர்ப்பம் இல்லை என்று முடிவு வந்தால் வருத்தப்படுவதும், கர்ப்பம் என்று தெரிந்தால் மகிழ்ச்சியுடன் செல்வது டாக்டர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மாணவிகளில் 17 பேர் கர்ப்பம் அடைந்திருப்பது சோதனையில் தெரியவந்தது. கர்ப்பமடைந்த மாணவிகள் எல்லோரும் 16 வயதுக்கும் குறைவானவர்கள்.
அந்த மாணவிகளிடம் பள்ளி முதல்வர் ஜோசப் சலீவன் விசாரணை நடத்தியபோது, அவர்கள் அனைவரும் தோழிகள் என்பதும், ஒரே நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டு அவர்கள் கர்ப்பம் அடைந்ததும் தெரிந்தது.
மேலும், குழந்தைகள் ஒரே இடத்தில் வைத்து வளர்க்கவும் அவர்கள் ஒப்பந்தம் செய்திருந்தனர். இதற்காக கண்ணில்பட்ட ஆண்களையெல்லாம் மடக்கி படுக்கைக்கு அழைத்துள்ளனர்.
விசாரணையில் ஒரு மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமானவர் 24 வயது நாடோடி ஆசாமி. வீடு, வாசல், வேலை இல்லாத அந்த ஆசாமியை காதல் வலையில் மாணவி வீழ்த்தி உள்ளார். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேகத்தில் இப்படி செய்ததாக அவர் கூறி உள்ளார்.
மாணவிகளின் இந்த செயல் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் பெற்றோரின் அன்பு கிடைக்காத நிலையில் மாணவிகள் இப்படிச் செய்துள்ளதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.
------------
நன்றி -தினகரன்.

SathyaThirunavukkarasu
23-06-2008, 03:15 AM
அமெரிக்காவின் கலாச்சாரத்திற்கு இது ஒன்றும் புதிய விஷயமல்ல, இது போன்ற கலாச்சாரம் நம் நாட்டில் பரவாமல் இருக்கவேண்டும் இதுவே நம் பிரார்த்தனையாகும்

ஓவியன்
23-06-2008, 03:36 AM
இன்றைய இளம் பருவத்தினரிடை, எதையும் வித்தியாசமாக செய்து பார்க்கும் எண்ணம் காணப்படுவது வரவேற்கக் கூடியதே...

ஆனால் அதற்காக இப்படியா.....??? :eek:

சிவா.ஜி
23-06-2008, 04:36 AM
தாய்மை என்ற புனிதத்தையே எள்ளி நகையாடுவதைப் போல இருக்கிறது இந்த மாணவிகளின் செயல். வருத்தமாக இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரத்தை உடனுக்குடன் இறக்குமதி செய்யும் நம் மாநகர இளைய சமுதாயம் இதையும் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஆதவா
23-06-2008, 04:36 AM
ம்.... நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ?

தீபன்
23-06-2008, 05:01 AM
மன்ற நண்பர்கள், மாணவிகள் அடிக்கடி சென்று கருக்கலைப்பதை பற்றி கவலைப்படாமல் குழந்தை பெற எடுத்த முடிவை பற்றி கவலைப்படுவது விசித்திரமாக இருக்கிறது...!

கருக்கலைப்பதை சாதாரணமாகவும் இப்போது நடந்துள்ள சம்பவத்தைத்தான் பாரிய கலாச்சார மாறுதலாயும் நோக்குவது வேடிக்கை!

வயதுக்கு மீறிய காம இச்சைக்கு ஆட்பட்டு அதற்காக சில கொலைகளையும் (கருக்கலைப்பைத்தான் சொல்றேங்க..) செய்து வந்தவர்கள் இப்போ அதிலிருந்து ஒருபடி முன்னேறி கொலைகளை மட்டுமாவது நிறுத்தியுள்ளது வரவேற்கத்தகதுதானே...

(மன்றத்து உறவுகள் பல வாளுகள் பொல்லுகளுடன் வருவதுபோல் தெரிகிறதே...)

ஆதவா
23-06-2008, 05:03 AM
மன்ற நண்பர்கள், மாணவிகள் அடிக்கடி சென்று கருக்கலைப்பதை பற்றி கவலைப்படாமல் குழந்தை பெற எடுத்த முடிவை பற்றி கவலைப்படுவது விசித்திரமாக இருக்கிறது...!

கருக்கலைப்பதை சாதாரணமாகவும் இப்போது நடந்துள்ள சம்பவத்தைத்தான் பாரிய கலாச்சார மாறுதலாயும் நோக்குவது வேடிக்கை!

வயதுக்கு மீறிய காம இச்சைக்கு ஆட்பட்டு அதற்காக சில கொலைகளையும் (கருக்கலைப்பைத்தான் சொல்றேங்க..) செய்து வந்தவர்கள் இப்போ அதிலிருந்து ஒருபடி முன்னேறி கொலைகளை மட்டுமாவது நிறுத்தியுள்ளது வரவேற்கத்தகதுதானே...

(மன்றத்து உறவுகள் பல வாளுகள் பொல்லுகளுடன் வருவதுபோல் தெரிகிறதே...)

அப்படீன்னா, அவங்க செஞ்சது சரின்னு சொல்றீங்களா?

அனுராகவன்
23-06-2008, 05:05 AM
கணேடேன் செதியே!!
என்ன சொல்வது தெரியல..

தீபன்
23-06-2008, 05:11 AM
அப்படீன்னா, அவங்க செஞ்சது சரின்னு சொல்றீங்களா?


சரின்னு சொல்லல.... தப்புக்கள குறச்சிட்டு வாறாங்கன்னு சொல்றன்....

(ஆகா... கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்க...)

கலைவேந்தன்
23-06-2008, 05:17 AM
ம்.... நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ?

ம்ம்ம்.... பிரசவம் நடக்கும்....! (கேள்வியைப்பாருங்கய்யா! :D )

கலைவேந்தன்
23-06-2008, 05:21 AM
நவீன காலத்தில் எதற்கும் வியக்கக்கூடாதுங்கானும்! கலிகாலங்கானும் இது! இதுக்கே ஆச்சரியப்பட்டு வாயைப்பொளந்தா எப்படி?

ராஜா
23-06-2008, 05:38 AM
கர்ப்ப"மாணவர்களுக்கு" காரண"மாணவர்கள்" யாரேனும் உண்டா..?

aren
23-06-2008, 05:41 AM
அறிஞரே, இது உங்க ஊர் போலிருக்கே!!!!

எல்லாம் நல்லா இருந்தா சரிதான்!!!

இதயம்
23-06-2008, 06:57 AM
அமெரிக்காவுக்கு எந்த இழிவுகளும் புதிதல்ல. திருமணத்திற்கு முன் உடலுறவு, குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை, ஓரினப்புணர்ச்சி உள்ளிட்ட எல்லா இழிவுகளுக்கும் முன்னோடி அமெரிக்கா..!! என் கவலை வேறுவிதமானது. இந்நிலை நம் தேசத்தில் வரும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பதை உறுதிபடுத்த பல உதாரணங்களை கொடுக்க முடியும். கட்டுப்பாடான கலாச்சாரம் என்று பெயரெடுத்த இந்தியாவில் அந்நிய கலாச்சாரத்தின் மேல் கொண்ட மோகத்தால் சீரழிவுகள் பெருகிக்கொண்டே வருகிறது.

மது என்பது கௌரவத்தின் அடையாளம், மங்கை என்பவள் போகப்பொருள், காதல் என்பது பொழுது போக்கு, திருமணம் என்பது வெறும் சம்பிரதாயம் என்று அனைத்தும் தன் சுய தன்மையை இழந்து வருவதால் சமூகத்திற்குள் உட்குழப்பம் நீளுகிறது. இதில் சம்பந்தப்பட்ட ஒன்று தான் மாணவிகளின் கருவுறலும். வெளியே தெரிந்தால் தான் எதுவும் உண்மையா..? நம் தேசத்தில் எத்தனையோ பேர் படிக்கும் போதும், திருமணத்திற்கு முன்பும் பெண்கள் கருவுற்று, அவை வெளியே தெரியாமல் அழிக்கப்படுகின்றன.

காதல் என்ற பெயரில் கழிசடைகளாக ஆட்டம் போடுவது, கல்யாணத்திற்கு அம்மா, அப்பா பார்த்து வைக்கும் அப்பாவியை மணப்பது பெருகி வருகிறது. அமெரிக்காவில் நடப்பவற்றில் நிறைய வெளிப்படுகிறது. நம் நாட்டில் நிறைய மறைக்கப்படுகிறது. வித்தியாசம் அவ்வளவே..!! இப்படி ஒரு இழிவு நிலை முழுதும் மாறும் வரை இந்தியா கலாச்சாரத்தில் சிறந்த நாடு என்று தம்பட்டம் அடிப்பதை நிறுத்திக்கொண்டு, இதை தடுக்க நம்மால் முடிந்த முயற்சியில் ஈடுபடவேண்டியது தான் இப்போதைய நம் தேவை..!!

தங்கவேல்
23-06-2008, 07:04 AM
இதென்ன சப்பை மேட்டர். நமக்கிட்டே அதுக்கும் மேலேயே இருக்கு.

பூமகள்
23-06-2008, 08:26 AM
தாந்தோன்றித்தனத்தின் உச்சம்...!
தறிகெட்டு அலையும் இளைய சமூகம் என்று திருந்துமோ??:sauer028::sauer028:

அமேசான் காட்டில் கொஞ்ச நாள் முன்பு சன் நியூஸ் தொலைக்காட்சியில் நாகரிக வாசமே அறியாத காட்டுவாசிகளைக் காட்டினார்கள்... விண்ணிலிருந்து படமெடுக்க.. வானூர்தி பார்த்து அம்பு எய்தார்களாம்.. அவர்களே பரவாயில்லை போல இருக்கே...!:mad::fragend005:

மிகவும் வருத்தமான செய்தி...!!:mad::mad:

அக்னி
23-06-2008, 08:59 AM
இதென்ன சப்பை மேட்டர். நமக்கிட்டே அதுக்கும் மேலேயே இருக்கு.
அதெப்படி தங்கவேல்...
மற்றவர்களுக்குச் சீரியசாகத் தெரிவன எல்லாம் உங்களுக்கு மட்டும் சப்பையாகத் தெரிகின்றன...???
இந்த நிகழ்வு, நம் சமுதாயத்திற்குள் நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்வீர்களா..?
நம் சமுதாயம் என்றால் நாமும்தான் அடங்குகின்றோம்.

காதலித்து சந்தர்ப்பங்களால் ஏற்பட்ட கர்ப்பமோ,
அல்லது, வன்புணர்வு, வஞ்சகங்கள் மூலமாக ஏற்படக்கூடிய கர்ப்பமோ,
அல்ல இந்தப் பிரச்சினை.
தமது உரிய பருவத்தை அடையும் முன்னர், ஒரு குருட்டு இலட்சியத்திற்காக, ஒரு இளமைத் துடிப்பில் நிகழ்ந்த நிகழ்வு இது.

இது, நமது சமுதாயத்திற்குள் என்றல்ல, எங்குமே மீண்டும் நிகழக்கூடாது என்றே நமது சிந்தனை இருக்க வேண்டும்.

நம்மைத் தீண்டாத வரையில் அரவத்தையும் ரசிக்கலாம்...
தீண்டினால், ரசிப்பீர்களா... அலட்சியப்படுத்துவீர்களா...

செல்வா
23-06-2008, 09:08 AM
அதெப்படி தங்கவேல்...
மற்றவர்களுக்குச் சீரியசாகத் தெரிவன எல்லாம் உங்களுக்கு மட்டும் சப்பையாகத் தெரிகின்றன...???

அக்னி சற்று கண்திறந்து ஒரு மாத காலத்திற்கு அனைத்து தமிழ் செய்தித்தாள்களிலுமிருந்து பாலியல் சம்பந்தமான குற்றங்கள் தொகுத்தீர்கள் என்றால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும்.

ஆதி
23-06-2008, 09:17 AM
அக்னி சற்று கண்திறந்து ஒரு மாத காலத்திற்கு அனைத்து தமிழ் செய்தித்தாள்களிலுமிருந்து பாலியல் சம்பந்தமான குற்றங்கள் தொகுத்தீர்கள் என்றால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும்.

நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட..

2001-லா 2002-லா தெரியல.. இந்தியா டுடேயில் ஒரு சர்வே ரிப்போட் வந்தது, அதாவது நம் நாட்டில் 90% பெண்கள் திருமணத்திற்கு முன்பே பாலியல் ரீயாக பாதிக்கப்படுகிறார்கள்.. அதுவும் பலர் பங்காளிகளாலும் தாயாதிகளாலும்..

நகரத்தைவிட கிராமங்களில்தான் இந்த கொடுமை அதிகம் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று..

அக்னி
23-06-2008, 09:43 AM
அக்னி சற்று கண்திறந்து ஒரு மாத காலத்திற்கு அனைத்து தமிழ் செய்தித்தாள்களிலுமிருந்து பாலியல் சம்பந்தமான குற்றங்கள் தொகுத்தீர்கள் என்றால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும்.
அதைத்தானே நானும் சொல்கின்றேன்...
இது குற்றமல்லவே.... இளமைத் துடிப்பில், ஒரு குருட்டு இலக்கு நோக்கிய நிகழ்வல்லவா...
குற்றங்களால் நாம் பாதிக்கப்படுவதைத் தவிர்த்தல் கடினம். ஆனால், நாம் செயற்படுத்தும் பாதிப்பான விடயங்களை இலகுவாகத் தவிர்க்கலாமல்லவா...
குற்றவியல் சம்பவங்கள், இயற்கை அனர்ந்த்தங்கள் உலகில் மலிந்து விட்டன.
அதற்காக சப்பை மேட்டர் என்று எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ள முடியுமா...

செல்வா
23-06-2008, 09:57 AM
அதற்காக சப்பை மேட்டர் என்று எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ள முடியுமா...
குற்றம் என்பது சமூகத்திற்கு சமூகம் மாறுபடக்கூடியது.
இந்தியாவில் குற்றமாகக் கருதப்படக்கூடியது இன்னொரு தேசத்தில் நடைமுறையாக இருக்கலாம்.
ஏன் தமிழகத்தில் அக்கா மகளைத் திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ள கூடியது அதே வழக்கம் கேரளாவில் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது ஏன் எங்கள் பகுதியிலே கூட அது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.
நிற்க .... தங்கவேல் அவர்கள் சப்பை மேட்டர் என்று ஒதுக்கித் தள்ளுவதற்காக அதைக் கூறவில்லை என எண்ணுகிறேன்.
இந்தியா கலாச்சார பூமி.... இந்த மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கம் பலரது பின்னூட்டத்தில் தெறித்தது. அதை மறுத்து அப்படி ஒன்றும் இல்லை இப்போதே இதைவிட பெரிய விசயங்கள் எல்லாம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. என்பதைக் காட்டத்தான் அதைச் சொல்லியிருக்கிறார்.
அந்த வார்த்தை ஒதுக்கித் தள்ள அல்ல விழித்துக் கொள்ள...

தீபன்
23-06-2008, 10:10 AM
அறிஞரே, இது உங்க ஊர் போலிருக்கே!!!!

எல்லாம் நல்லா இருந்தா சரிதான்!!!
அடடா... இந்த சர்ச்சைக்கு காரணம் நம்ம நிர்வாகியா...!!!!? :confused::confused::confused:


(இந்த விவாதத்த சொன்னேங்க...!:sprachlos020:)

அக்னி
23-06-2008, 10:24 AM
அந்த வார்த்தை ஒதுக்கித் தள்ள அல்ல விழித்துக் கொள்ள...
ஏற்றுக் கொள்கின்றேன்...

தங்கவேல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
உங்கள் பதிவுகள் தெளிவற்று இருப்பதனால் பல சந்தர்ப்பங்களில், பலராலும் தவறாக விளங்கிக் கொள்ளப்படுகின்றது.
அந்த வகையில் இன்று நான்...
நீங்கள் சொல்ல வந்தது, செல்வா தெளிவுறுத்திய காரணத்திற்காக என்றால் மட்டும்,
எனது மன்னிப்புக்களைக் கோரி நிற்கின்றேன்.
அல்லாது, அலட்சியப் பதிவு என்றால், நிச்சயமாக மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
வரும்காலத்திலும், இது போன்ற தெளிவற்ற பதிவுகள் உங்களிடமிருந்து வருமானால், உங்கள் மீதான தவறான புரிதல்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.
கவனத்திற் கொள்ள வேண்டுகின்றேன்...


அடடா... இந்த சர்ச்சைக்கு காரணம் நம்ம நிர்வாகியா...!!!!? :confused::confused::confused:


(இந்த விவாதத்த சொன்னேங்க...!:sprachlos020:)
ஆமா... இந்த சர்ச்சைக்கு நம்ம அறிஞரேதாங்க காரணம்...
அட... நானும் விவாதத்ததாங்க சொல்றேன்...

இதயம்
23-06-2008, 10:38 AM
உறவு முறை வேறுபட்டு திருமணங்களை செய்வதற்கும், திருமணமே ஆகாமல் உயிரை வயிற்றில் மாணவிகள் சுமப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. உலகின் முதல் ஆணும், பெண்ணும் தோன்றிய பிறகு சகோதர, சகோதரி உறவு முறையிலான உடலுறவிற்கு பிறகு தான் மனித இனம் பல்கிப்பெருக தொடங்கியிருக்கும். முன்பு நடந்தது தானே என்பதற்காக இதே உறவு இன்று ஏற்றுக்கொள்ளக்கூடியதா..? அப்போது உறவுகள் என்ற வார்த்தை இருந்திருக்காது, திருமணம் என்ற நிகழ்வு இருந்திருக்காது. அதன் பிறகு மனிதர்களுக்குள் அமைதியை, நிம்மதியை நிலைநாட்ட நாம் செய்தவை தான் அனைத்து சட்டங்களும், ஒழுங்குகளும்.! அதிலிருந்து சிறிது விலகினாலும் அது சப்பை மேட்டர் அல்ல செல்வா..!!

ஒரு பெண்ணின் இடுப்பை கிள்ளி கலாட்டா செய்ததாக செய்தி தாளில் படிப்பது சப்பை மேட்டராக தெரியும் நமக்கு, அந்த பெண் நம் வீட்டுப்பெண்ணாக இருந்தால்...? இங்கே தான் மனிதனின் கோணங்கள் மாறுபடுகின்றன. நிகழ்வுகள், பாதிப்புகள் எல்லாம் ஒன்றே.. ஆனால்.. சூழ்நிலைக்கேற்றவாறு நம் பார்வை மாறுவதால் ஒரே விஷயம் சப்பையாகிறது அல்லது கடுமையான சட்டத்தை நாடச்சொல்கிறது. மனிதனின் வலிகள், உணர்வுகள் எல்லோருக்கும் பொது. அதை நாம் அனுபவித்தால் மட்டுமே அதை நிஜமாக வெளிப்படுத்துவேன் என்பது நம் சுயநலம். இன்றைய மற்றவரின் வலி நாளை நம் வலியாகலாம். அதனால் சப்பை மேட்டர் என்று ஒது(ங்)க்காமல் வழி தேடுவதும், எச்சரிக்கையடைவதும் நல்ல மனிதனுக்கும், மனிதத்திற்கும் அழகு..!

அக்னி அப்படி சொன்னதில் தவறில்லை. காரணம், தங்கவேலின் பதிவில் இழையோடிய அலட்சியம்..!! அது மனிதாபிமானமுள்ள யாருக்கும் தேவையில்லாதது..!!

தீபன்
23-06-2008, 10:43 AM
ஆமா... இந்த சர்ச்சைக்கு நம்ம அறிஞரேதாங்க காரணம்...
அட... நானும் விவாதத்ததாங்க சொல்றேன்...
நீங்களும் விவாதத்ததானே சொல்றீங்க......!?:icon_rollout:

அக்னி
23-06-2008, 11:41 AM
இன்றைய மற்றவரின் வலி நாளை நம் வலியாகலாம்.
அழகிய அர்த்தமுள்ள வரிகள்....
:icon_b::icon_b::icon_b:


நீங்களும் விவாதத்ததானே சொல்றீங்க......!?:icon_rollout:
அதான் சொல்லீட்டமில்ல... அப்புறமென்ன...

செல்வா
23-06-2008, 12:16 PM
வெளியே தெரிந்தால் தான் எதுவும் உண்மையா..? நம் தேசத்தில் எத்தனையோ பேர் படிக்கும் போதும், திருமணத்திற்கு முன்பும் பெண்கள் கருவுற்று, அவை வெளியே தெரியாமல் அழிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் நடப்பவற்றில் நிறைய வெளிப்படுகிறது. நம் நாட்டில் நிறைய மறைக்கப்படுகிறது. வித்தியாசம் அவ்வளவே..!! இப்படி ஒரு இழிவு நிலை முழுதும் மாறும் வரை இந்தியா கலாச்சாரத்தில் சிறந்த நாடு என்று தம்பட்டம் அடிப்பதை நிறுத்திக்கொண்டு, இதை தடுக்க நம்மால் முடிந்த முயற்சியில் ஈடுபடவேண்டியது தான் இப்போதைய நம் தேவை..!!


இதென்ன சப்பை மேட்டர். நமக்கிட்டே அதுக்கும் மேலேயே இருக்கு.

இதயம் அண்ணா நீங்க சொன்னதுக்கும் தங்கவேல் அண்ணா சொன்னதுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அதிகப்படியாக நீங்கள் ஒரு அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள்.... அவர் சொல்லவில்லை.


உறவு முறை வேறுபட்டு திருமணங்களை செய்வதற்கும், திருமணமே ஆகாமல் உயிரை வயிற்றில் மாணவிகள் சுமப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

அண்ணா நான் குற்றம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடக்கூடியது என்பதற்கான உதாரணமாகத்தான் கூறினேனே ஒழிய. இந்த தலைப்பையும் அதையும் தொடர்புபடுத்தவில்லை.


அதிலிருந்து சிறிது விலகினாலும் அது சப்பை மேட்டர் அல்ல செல்வா..!!

இங்கே சப்பை மேட்டர் என்று உபயோகிக்கப்பட்டது... அமெரிக்காவில் நடப்பதை விட அதிகமாக இந்தியாவில் நடக்கிறது என்பதைக் காட்டத்தான்...


அக்னி அப்படி சொன்னதில் தவறில்லை. காரணம், தங்கவேலின் பதிவில் இழையோடிய அலட்சியம்..!! அது மனிதாபிமானமுள்ள யாருக்கும் தேவையில்லாதது..!!
அலட்சியமாகத் தெரியவில்லை எனக்கு ஒப்பீடாகத்தான் தெரிகிறது.

இதயம்
23-06-2008, 12:29 PM
இதயம் அண்ணா நீங்க சொன்னதுக்கும் தங்கவேல் அண்ணா சொன்னதுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அதிகப்படியாக நீங்கள் ஒரு அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள்.... அவர் சொல்லவில்லை.

என்ன செல்வா... இப்படி இரண்டுக்கும் வித்தியாசம் தெரியல்லேன்னு ஒரு குறிப்பிட்ட வரியை மட்டும் காட்டி சொல்லிட்டீங்க..!! நான் என்னென்ன சொன்னேன்னு நானே சொல்றேன். அமெரிக்காவின் கலாச்சார யோக்கியதையை சொன்னேன். அங்குள்ள கலாச்சாரம் நமக்குள் பரவும் என் கவலையை சொன்னேன். கலாச்சாரம் என்ற பெயரில் நமக்குள் ஏற்படும் மாற்றங்களை சொன்னேன், எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தாத நம் குணத்தை சொன்னேன், நமக்குள் குறையை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை குறை சொல்லும் போக்கை சொன்னேன். திருமணத்திற்கு முன் குழந்தை சுமப்பதின் அபாயம் நம்மிடம் இருப்பதை சொன்னேன், சட்டங்களை, ஒழுங்குகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை சொன்னேன், மற்றவர் பிரச்சினையையும் நம் பிரச்சினைக்கு ஒரு முன்னோட்டமாக கருத சொன்னேன், பிரச்சினைகளுக்கு ஒதுங்காமல் எச்சரிக்கையாக இருக்கவும், தீர்வு தேடவும் சொன்னேன்...! அதையெல்லாம் படிக்காமல் இப்படி சொன்னால் எப்படி செல்வா..? இதுவும், தங்கவேல் சொன்ன சப்பை மேட்டரும் ஒன்றா...? செலக்டிவ் அம்னீஷியா என்றால் ஒரு குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் மறந்து போவது என்பார்கள்.. ஒரு குறிப்பிட்ட விஷயங்களை படிக்காமல் விடுவதை என்னவென்று சொல்வது..?!!

அறிஞர்
23-06-2008, 12:31 PM
இதுபற்றி "TIME" இதழில் அலசியிருக்கிறார்கள்.

இன்று பள்ளி நிர்வாகத்தினர் கூடி இது பற்றி விவாதிக்க இருக்கிறார்கள்...

இளம் வயது தாய்கள் சிலர் "இதை முட்டாள் தனம், நாங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டு.. பாதிக்கப்பட்டோம்.... குழந்தை பெற்றவுடன் எங்களின் தனிப்பட்ட இன்பம் தொலைந்து போனது. குழந்தையே உலகம் என ஆனது" என்று கூறியுள்ளனர்.

செல்வா
23-06-2008, 12:54 PM
இதுவும், தங்கவேல் சொன்ன சப்பை மேட்டரும் ஒன்றா...?
:D:D:D:D பாருங்க நீங்களும் சப்பை மேட்டர மட்டும் பாத்துட்டுருக்கீங்க.. அதுக்கு அடுத்ததா ஹைலைட் பண்ண வாசகத்த தான் நான் உங்க வாசகத்தோட கம்பேர் பண்றன்.....
நீங்க விரிவா சொல்லிருக்கீங்க... அவரு ஒரு வரில சொல்லிருக்காரு.... வேறே வித்தியாசம் இருக்கிறதா எனக்குத் தெரியலியே அண்ணா. எதுக்கும் தங்கவேல் அவர்கள் வந்தப்புறம் கேட்டுப் பாக்கலாம்...
அவரு வந்து நான் இதெல்லாம் எதுவும் சொல்லலணு புதுசா விளக்கம் குடுத்தாருண்ணு வச்சுக்கோங்க... என் கணக்குல ஏறுன நாலு பதிவைத் தவிர்த்து வேற எந்த பயனும் இல்லாம போகும்... :eek::eek::eek: :icon_ush:

ஷீ-நிசி
23-06-2008, 02:24 PM
கர்ப்ப"மாணவர்களுக்கு" காரண"மாணவர்கள்" யாரேனும் உண்டா..?

காரணம்"ஆண்"அவர்கள் :)

இதயம்
23-06-2008, 02:33 PM
காரணம்"ஆண்"அவர்கள் :)

யப்பா.. ராஜா அண்ணனும்... ஷீ-நிசியும் சொல்லாடலில் நம்மை தள்ளாட வைக்கிறாங்கப்பா..!! இரண்டும் அசத்தல் ரகம்..!!

மன்மதன்
23-06-2008, 03:28 PM
என்ன கொடுமை சார் இது...

அங்கே எது பண்றதா இருந்தாலும் கூட்டாக பண்ணுகிறார்கள்.

கொலை.. தற்கொலை என்ற வட்டத்திலிருந்து தாண்டி இப்போ கர்ப்பம்..

இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்க கலாச்சார மோகத்திலிருந்து விடுபட வேண்டும்..

சூரியன்
23-06-2008, 03:51 PM
நாகரிகம் என்னும் பெயரில் ஏற்படுத்தப்படும் சீர்கெடு.

Narathar
23-06-2008, 04:18 PM
17ம் பெற்று சீறும் சிறப்புமாக வாழட்டும்

சூரியன்
23-06-2008, 04:22 PM
17ம் பெற்று சீறும் சிறப்புமாக வாழட்டும்

என்ன நாரதரே இப்படி சொல்லுறீங்க? :confused:

அன்புரசிகன்
23-06-2008, 04:23 PM
17ம் பெற்று சீறும் சிறப்புமாக வாழட்டும்


அது. ஒரு 5 அடியுங்க....

நாம குமுறி ஒன்றும் ஆகப்போவதில்லை.... வாழ்த்துத்தெரிவித்து நம் வட்டாரத்தில் வரவிடாமல் தவிர்ப்பதே நன்று.

செழியன்
23-06-2008, 08:16 PM
நான் இங்கே இதயம் அண்ணாவின் கருத்துடன் ஒத்து போகிறேன்.
இது அமெரிக்கர்களுக்கு இது சாதரணம் . இங்கே ஏன் செய்தியானது என்றால்,கல்லூரியில் அவர்கள் அனைவரும் ஒன்றாக மாட்டிகொண்டதுதான்.அவர்களின் கலச்சாரத்திற்கு இது சாதரணம். 1998ல் என் நினைக்கிறேன், இலண்டனில் 12 வயது மாணவி கருத்தரித்தது கூட இந்தளவிற்கு செய்தியாகவில்லை. இதை அவர்களின் கலச்சாரத்தோடு விட்டுவிடுவோம்.
நம் பிரச்சனை என்னவென்றால் இது நம்மை வந்தடையுமா? அதை தடுப்பது எப்படி? அல்லது நம்மவர்கள் நெருங்கிவிட்டார்களா?மக்களே நீங்கள்தான் சொல்ல வேண்டும்
புலம்பெயர்ந்து அந்த சூழலில் வளர்ந்து வரும் நம் குழந்தைகளை எந்தளவு பாதிக்கும்? எப்படி வளர்த்தார்கள்?எப்படி வளர்கின்றார்கள்?

மதுரை மைந்தன்
23-06-2008, 11:55 PM
மணமாகாத இளம் பெண்கள் கருத்தரித்தல் அமெரிக்கா வில் மட்டும் இல்லை ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் நடை பெற்று வருகிறது. இதனால் கலாச்சார சீரழிவு மட்டுமின்றி பொருளாதார
சீர்குலைவும் ஏற்படுகிறது. திருமணம் ஆகாமல் கருத்தரிக்கும் பெண்களுக்கு அரசாங்கம் ஆதரவு தர வேண்டி இருக்கிறது.

இந்தியாவில' கால் சென்டர்களினால் இத்தகைய கலாச்சார சீர்குலைவு ஏற்படும் ஆபத்து உள்ளது

தீபன்
24-06-2008, 01:37 AM
என்ன கொடுமை சார் இது...

அங்கே எது பண்றதா இருந்தாலும் கூட்டாக பண்ணுகிறார்கள்.

கொலை.. தற்கொலை என்ற வட்டத்திலிருந்து தாண்டி இப்போ கர்ப்பம்..

இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்க கலாச்சார மோகத்திலிருந்து விடுபட வேண்டும்..


இலங்கைக் கடற்படையினர் 15 பேர் வரையில் தற்கொலை
[ சனிக்கிழமை, 21 யூன் 2008, 01:32.32 PM GMT +05:30 ]
இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த இளம் அங்கத்தவர்கள் 15 பேருக்கு மேற்பட்டோர் யாழ் நெடுந்தீவில் தற்கொலை புரிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
16 முதல் 20 அகவையுடைய இவர்கள் தென்னிலங்கையில் பயிற்சி வழங்கப்படும் எனக் கடற்படையில் இணைக்கப்பட்ட போதிலும், போர்ப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால், கோபமடைந்து கூட்டாகத் தற்கொலை புரிந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

கொல்லப்பட்ட கடற்படையினரது உடலங்கள் ஊர்காவற்துறைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், தகவல் வெளியாகும் என்ற காரணத்தினால் விசாரணைகளோ, உடல் பரிசோதனைகளோ நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக இலங்கைக் கடற்படையினர் கூறிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கைக் கடற்படையினராலோ அல்லது பாதுகாப்பு அமைச்சினாலோ இதுவரை அறிவிக்கப்படவில்லை.
நன்றி: தமிழ்வின்

பாத்திங்களா... நம்ம நாடுகளில்கூட நடக்குதுங்கோ....!

lolluvathiyar
25-06-2008, 07:04 AM
இந்த சம்பவம் நடந்தது அமேரிக்காவில், அதனால் இதை பற்றி யாரும் கவலை பட வேன்டிய அவசியமில்லை. நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் அந்த நாட்டில் அதிகபடியாகவே இருக்கும்.

இந்த கலாசாரம் எல்லாம் நம் நாட்டுக்கு பரவி வரும் என்ற அச்சம் தேவையில்லை, அப்படி எல்லாம் பரவி வராது. அமெரிக்க மனிதர்க*ள் வேறு இனம் நாம் வேறு இனம். க*வ*லை ப*ட* வேன்டிய*தில்லை

ஆதி
25-06-2008, 07:29 AM
இந்த கலாசாரம் எல்லாம் நம் நாட்டுக்கு பரவி வரும் என்ற அச்சம் தேவையில்லை, அப்படி எல்லாம் பரவி வராது. அமெரிக்க மனிதர்க*ள் வேறு இனம் நாம் வேறு இனம். க*வ*லை ப*ட* வேன்டிய*தில்லை

ஐயா, திருமணத்திற்கு முன்பே கூடல் கொள்ளுதல் நம் இனத்திலும் உண்டு, இன்றை பற்றி நான் சொல்லவில்லை.. சங்க இலக்கியங்களில் "தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தல்" பாடல்களை எல்லாம் படித்துப்பாருங்கள் அழகாய் புலப்படும் இந்த சம்பவங்கள்...

நம் கலாச்சாரம் தன் சுயத்தை இழந்து பல நாளாகிறது, அது நமக்கும் தெரியும் ஆனாலும் நாமதைக் காண மறுக்கிறோம், நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம்..