PDA

View Full Version : நான் பேசுகின்றேன்........



அகத்தியன்
22-06-2008, 07:52 PM
"வெளிநாடு போனாத்தாண்டா இப்ப இருக்கிற நிலமைல ஒழைக்கலாம். இஞ்ச இருந்து ஒரு............ செய்ய ஏலா" கென்ரீனில் கூடி இருந்த போது சினாஸ் கூறினான்.
எல்லோரும் ஆமோதிப்பது போல ரீயினை உறிஞ்சிக்கொண்டிருந்தோம். அது- எனதூ பல்கலைக்கழகத்தின் இறுதிப்பருவம்.அனைவருடனும், "அடுத்தது என்ன?" என்ற வினா உலவிக்கொண்டிருந்தது.நான்கு நண்பர்கள் கூடும் போது இவ்விடயமே முக்கிய விவாதப்பொருளானது. அவ்வாறான நாள் ஒன்றில்தான் சினாஸின் கருத்து கொஞ்சம் காரமாக வெளிவந்து கொண்டிருந்தது.
பட்டப்படிப்பு முடிகின்ற சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான ஆயத்தங்களெவை என்பதனை தீர்மானிப்பதில் ஒரு பயம், சிறு தயக்கம் அனைவருக்கும் இருப்பது போல, என்னையும் ஆட்கொண்டது.
"இப்ப NGO லதான் நல்ல சம்பளம். கொஞ்ச நாளைக்கு இருந்தா லைfப்ல ஒரு மாதிரி செட்டில் ஆகிரலாம். அதுக்குப்பிறகு,ஏதாவது கவர்மண்ட் சேவிஸ் எக்ஸாம் ஒண்ட எழுதி எப்படியாவது போய்ரலாம்." என்ற என்னை ஏக்கத்தோடு பார்த்தான் நயீம்.
அவனது பார்வை அனைத்தினையும் கூறியது.
"ஒனக்கு NGO ஏலும். ஒண்ட கோஸ் பராவாயில்லை. நாங்க தமிழ படிச்சிட்டு எங்க போற? ஒண்டும் வெளங்கல்ல" என்ற அவனது குரலில் ஆயாசம் தொனித்தது.
நியாயம்தான். நான் என்ன செய்ய முடியும்? உனக்காக பிரார்த்திப்பதை தவிர என எண்ணிக்கொண்டேன்...


(தொடரும்)

இளசு
22-06-2008, 10:15 PM
எல்லா இளைஞரும் எதிர்நோக்கும் பிரசினை..

மோசமான அரசியல் நிலைமை, தமிழில் படித்தவர்களுக்கு - இன்னும் தீவிரமாய்..

தொடருங்கள் அகத்தியன்..

கொஞ்சம் பெரிய பாகங்களாய்க் கொடுக்க முயலுங்கள்.. நன்றி..

SathyaThirunavukkarasu
23-06-2008, 03:23 AM
வாழ்க்கையின் நிகழ்வுகள்.....

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

அறிஞர்
23-06-2008, 04:11 AM
பல பல மாற்றங்கள்.. முன்னேற்றங்கள்....
இது தான் வாழ்க்கை......

இன்னும் தொடருங்கள்.
---------
எழுத்துப்பிழைகளை கொஞ்சம் களைந்து எழுதினால்.. நன்றாக இருக்கும்.

arun
20-08-2008, 07:31 PM
வாழ்க்கையின் உண்மை நிலை உண்மையில் இது தானோ? தொடருங்கள்

பாரதி
20-08-2008, 08:22 PM
பேசுங்கள் அகத்தியன். மேற்கொண்டு கேட்க காத்திருக்கிறோம்.