PDA

View Full Version : கலைவேந்தனின் மீராவின் கண்ணன்...!



கலைவேந்தன்
22-06-2008, 04:31 PM
மீராவின் கண்ணன் - ஓர் உன்னதக் காதல் ஓவியம்
http://i196.photobucket.com/albums/aa136/sramasamy1962/krs63kis.jpg
1.
ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்..
ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்!
மீராவின் குரல்கேட்டும் வாராத தேனோ
சீராட்டி நீயென் குழல்கோது கண்ணா!

2.
என்றாவது உன்னுள் கலந்திடத் தானே
என்றன் உயிரைக் கையகம் வைத்தேன்
இன்றோ நாளையோ இடறாமல் நீயும்
நன்றே வந்து நகையாட்டு கண்ணா!

3.
நீயாகப் பேசாமல் புன்னகைத் தாலும்
ஓயாமல் உன்னை பாராட்டு வேனே
வாயாற நீயும் வாழ்த்திடு வாயே
சேயாக என்னை சீராட்டு கண்ணா!

4.
துயிலாடும் போதென் துகிலாடு மென்று
துணைகாக்க உன்னை தருவாயென் றெண்ணி
துயில்துறந் தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
தூயவனே என்மாயவனே எனைகாத்திடு கண்ணா!

5.
தீராமல் விளையாடி ஓயாத உன்னை
சேராமல் எங்ஙனம் நான்வாடி நிற்பேன்?
ஓராயிரம் முறை உன் நாமம் சொல்வேன்
பாராமுகம் ஏனோ பார்த்திடு கண்ணா!

தொடர்வாள் மீரா!

mgandhi
22-06-2008, 06:50 PM
தொடருங்கள் வேந்தரே

இளசு
22-06-2008, 09:28 PM
கண்ணன், முருகனைப் பாடவென்றால்
கன்னல் தமிழுக்கும் தனி ஆர்வம் போலும்!

அன்று கண்ணதாசன்..
இன்று கலைவேந்தன்..

சந்தம் சிந்தும் சொல்லழகோடு
சொந்தம் பேசும் மீரா கதை வளரட்டும்!

அறிஞர்
23-06-2008, 01:47 AM
3.
நீயாகப் பேசாமல் புன்னகைத் தாலும்
ஓயாமல் உன்னை பாராட்டு வேனே
வாயாற நீயும் வாழ்த்திடு வாயே
சேயாக என்னை சீராட்டு கண்ணா!

ஓயாமால் பாராட்டுபவளை...
சேயாக சீராட்ட வந்திடுவான்.. கண்ணன்..

மீராவின் காவியம்
இன்னும் வளரட்டும்...

ஓவியன்
23-06-2008, 02:11 AM
உண்மையான அன்பும், உண்மைக் காதலும்
என்றும் வீண் போவதில்லை....!!

கண்ணனின் காதலியாய்
கவிதை வடிக்கும் கலைவேந்தனுக்கு
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.........!!! :)

crisho
23-06-2008, 03:56 AM
தொடர் வரிகள் காண அவலுடன் காத்திருக்கிறேன்....

தொடருங்கள் உங்கள் படைப்பை....

ஆதவா
23-06-2008, 11:07 AM
இங்கே தமிழோடு விளையாடிக்கொண்டிருக்கிறீர்களே!!

ஒவ்வொன்றும் தமிழ்கொஞ்சும் அமுதம். இருமுறை படித்தேன்.

தொடருங்கள்.. உடன் வருகிறோம்.. இப்பாவினை ஏதேனும் மரபு இலக்கணங்கள் வைத்து எழுதியிருப்பின் இன்னும் சுவை கூடும் என்பது என் தாழ்மையான கருத்து.,.

அன்புடன்
ஆதவன்

கலைவேந்தன்
23-06-2008, 11:27 AM
தொடருங்கள் வேந்தரே

உங்க ஆசிக்கு நன்றி அண்ணா!


கண்ணன், முருகனைப் பாடவென்றால்
கன்னல் தமிழுக்கும் தனி ஆர்வம் போலும்!

அன்று கண்ணதாசன்..
இன்று கலைவேந்தன்..

சந்தம் சிந்தும் சொல்லழகோடு
சொந்தம் பேசும் மீரா கதை வளரட்டும்!

என்றும்போல தாய்போல் பாராட்டும் இளசுக்கு என் வணக்கங்கள்!

ஓயாமால் பாராட்டுபவளை...
சேயாக சீராட்ட வந்திடுவான்.. கண்ணன்..

மீராவின் காவியம்
இன்னும் வளரட்டும்...

நன்றி அறிஞரே! கண்டிப்பாய் வளரும்!


உண்மையான அன்பும், உண்மைக் காதலும்
என்றும் வீண் போவதில்லை....!!

கண்ணனின் காதலியாய்
கவிதை வடிக்கும் கலைவேந்தனுக்கு
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.........!!! :)

உங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் சிரமேற்கொள்கிறேன் ஓவியன்! நன்றி!


தொடர் வரிகள் காண அவலுடன் காத்திருக்கிறேன்....

தொடருங்கள் உங்கள் படைப்பை....

நன்றி கிஷோர்! உங்க பாராட்டை ஏற்கிறேன்!


இங்கே தமிழோடு விளையாடிக்கொண்டிருக்கிறீர்களே!!

ஒவ்வொன்றும் தமிழ்கொஞ்சும் அமுதம். இருமுறை படித்தேன்.

தொடருங்கள்.. உடன் வருகிறோம்.. இப்பாவினை ஏதேனும் மரபு இலக்கணங்கள் வைத்து எழுதியிருப்பின் இன்னும் சுவை கூடும் என்பது என் தாழ்மையான கருத்து.,.

அன்புடன்
ஆதவன்

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆதவா!

இலக்கணங்கள் பார்த்தால் நம் உணர்வுகள் தடைபடாமல் வருமா என்று தெரியவில்லை!

உங்கள் ஆலோசனைக்கு நன்றி!

ஆதி
23-06-2008, 11:32 AM
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆதவா!

இலக்கணங்கள் பார்த்தால் நம் உணர்வுகள் தடைபடாமல் வருமா என்று தெரியவில்லை!

உங்கள் ஆலோசனைக்கு நன்றி![/QUOTE]

கவிதை அருமை கலைவேந்தரே, ஆதவனின் கருத்தே என் கருத்தும்..

இலக்கணத்தல் உள உணர்வு தடைபடாது வேந்தரே முயற்சியுங்கள்..

தொடருங்கள் பின் தொடர்கிறோம்..

வாழ்த்துக்கள்..

அனுராகவன்
23-06-2008, 12:23 PM
தொடருங்கள் வேந்தரே!!!
மிக அருமை...
இன்னும் தர என் வாழ்த்துக்கள்

கலைவேந்தன்
24-06-2008, 09:57 AM
நன்றி நண்பர்களே! இன்று இரவுக்குள் அடுத்த பகுதியை வழங்குகிறேன்!

கலைவேந்தன்
25-06-2008, 03:45 PM
மீராவின் கண்ணன் தொடர்ச்சி........!


6.
பூதகி மார்பில் பூவிதழ் பதித்தாய்
சாதலின் மூலம் சாபமும் தீர்த்தாய்
ஓதிட ஓதிட உன்நாமம் இனிக்கும்
வேதத்தின் மூலனே வெல்எனை கண்ணா!


7.
பார்த்தனின் மயக்கம் தெளிவித் தவனே
தேர்தனை வலித்து தேர்வித் தவனே
ஓர்முறையேனும் என்னருகில் வந்தென்
மார்பகம் புதைந்துன் மனம்மகிழ் கண்ணா!


8.பூவிதழ் உந்தன் பூமணம் காண
தாவியுன் செவ்விதழ் சுவைத்திட ஏங்கும்
பாவியென் பாவம் தொலைத்தெனை ஏந்தியே
ஓவிய மாயுறைந் திடவா கண்ணா!


9.
உந்தன் ஓர்முத்தம் பெறவேண்டி நானும்
எந்தன் ஓர்ஜென்மம் இழப்பேனே கண்ணா!
சிந்தும் ஓர்முத்து இதழமுதம் என்றும்
எந்தன் ஓராயுள் காத்திருக்கும் கண்ணா!


10.
கண்ணாடி முன்நின்று பார்த்தே உன்னைப்
பெண்ணாக நான் மாற்றினேனே! நானும்
நீயாக மாறித்தான் போனேன் என்றும்
சேயாக என்னோடு வாழாயோ கண்ணா!


தொடர்வாள் மீரா.....!

மீரா
25-06-2008, 05:21 PM
அருமையான அழகான அன்பான உருக்கமான மீராவின் இதயத்தின் கூக்குரல் கண்ணனை எட்டியதா?? தெரியவில்லை... ஆனால் இதோ உங்கள் பாமாலை மீராவின் இதயத்தில் வைத்து பூஜிக்கும் கண்ணனை உருகி உருகி அழைக்கும் விதம் மிக அழகு..... நன்றி கலைவேந்தன்....

கலைவேந்தன்
26-06-2008, 09:55 AM
மீராவின் எண்ணக்குவியல்களை ரசித்து பின்னூட்டமிட்ட மீராவுக்கு வணக்கங்கள்!

கலைவேந்தன்
20-07-2008, 07:20 PM
மீராவின் கண்ணன் தொடர்ச்சி...

11.
ஆயர் பாடியில் வாழ்ந்திட்ட போதும்
மாயப் போர்வைகள் போர்த்திட்டபோதும்
வேயப் புல்லாங் குழலூதும் போதும்
தூயன் உன்மீதென் காதலென்றுமே கண்ணா!

12.
உலகமே என்னைக் கூறுஇட்ட போதும்
கலகமே செய்தென்னைக் கொன்றிட்டபோதும்
விலகவே சொல்லியே விலங்கிட்டபோதும்
நிலைமாற மாட்டேனே நீங்கேனே கண்ணா!

13.
என்மேனி காத்தது பசலை என்றும்
உன்மேனி தழுவவே உருகினேன் என்னை
தின்னாலும் மண்ணுக்கு தரமாட்டேன் உயிரை
உன்னுடைமை என்றுமே என்னுயிர் கண்ணா!

14.
காதலர் என்றே பலபேரும் சொல்லியே
பாதக காமமே கலந்திட வந்தார்
சோதனை என்றே எத்தனை வந்திடினும்
நாதனே உன்சரண் அடைவேனே கண்ணா!

15.
கட்டாய மென்னுடன் புரிந்திட்ட போதிலும்
சுட்டாலும் என்மேனி பட்டாலும் புண்பல
விட்டாலும் சிறையில் ஏறுடன் தனித்துமே
தட்டாமல் உன்னுடனே கலப்பேனே கண்ணா!

தொடர்வாள் மீரா.....

கலைவேந்தன்
30-07-2008, 04:47 PM
மீராவின் கண்ணன் தொடர்ச்சி.....!

16.
வேதமே மூலமாம் சான்றோர்க்கு என்றென்றும்
சாதமே தெய்வமாம் ஏழைகளுக் கென்றென்றும்
பாதமே கடவுளின் பகதருக் கென்றென்றும்
நாதனே நீயேஎனக் கென்றென்றும் கண்ணா!

17.
தலைசீவிப் பூச்சூட்டும் போதும் மாய
நிலைகாட்டும் கண்ணாடி முன்நின்ற போதும்
குலையாமல் உடையணியும் போதும் உந்தன்
விலையிலா மெய்க்காதல் உணர்கிறேன் கண்ணா!

18.
நடக்கின்ற போதும்உன் நினைவு மஞ்சத்தில்
கிடக்கின்ற போதும்உன் உணர்வு உணவு
படைக்கின்ற போதும்உன் கனவு மரணம்
கிடைக்கின்ற போதும்உன் நினைவுதான் கண்ணா!

19.
நீராடும் போதென் உடலினைத் தழுவிடும்
நீராக நீமாறித் தழுவிட வேண்டும்
சீராக நீவந்து சிக்கெடுக்க வேண்டும்
போராடும் என் கூந்தல் உனக்காக கண்ணா!

20.
நீயூட்ட வாராமல் எந்தன் உணவும்
சேயூட்ட இல்லாத தாய் போல நானும்
தாயூட்ட வாராத சேய் போல நீயும்
ஓயாத போராட்டம் ஏனின்று கண்ணா!

தொடர்வாள் மீரா....!

கலைவேந்தன்
18-07-2009, 04:17 PM
தாமதத்துக்கு மன்னியுங்கள் நண்பர்களே....! விரைவில் மிகுதியும் இடம் பெறும்....!

கலைவேந்தன்
07-08-2009, 05:02 PM
மீராவின் கண்ணன் தொடர்ச்சி...!

21.
வழிப் பாதை எதிர்பார்த்து நானும் என்றும்
விழிப் போர்வை விரித்திட்டேன் உனக்காக மன்னா!
எழில் கூடும் உன்னுதல் என்றென்றும் என்னை
விழி மூட மறந்திடச் செய்திடும் கண்ணா!


22.
குழந்தையாய் நீ பேசும் போதும் என்னை
மழலையால் தாலாட்டும்போதும் என்றும்
நிழலைப்போல் நீஎன்னைத் தொடர்ந்திட்ட போதும்
பழங்கண்ட மந்தியின் நிலைகொண்டேன் கண்ணா!


23.
ஒருபார்வை உனதென்னைக் கொல்லும் மறுபார்வை
திரும்பவும் உயிர்ப்பிக்கும் இதுவென்ன மாயம்
இரும்பினை கவர்ந்திழுக்கும் காந்தமாய் நீயும்
துரும்பினைப் போலவே நானுமாய் கண்ணா!


24.
நீயாட நான்பாட வேண்டும் சிலநேரம்
ஓயாமல் நீபாடவேண்டும் மயங்கியே
தீயாட்டம் போல்நானும் சதிராட்டம் போட்டு
தேயாத நிலா உன்மேல் விழவேண்டும் கண்ணா!


25.
முகம்வாடி நான் சோர்ந்த போதும் எந்தன்
அகம்வாடி தணலின்மேல் துடித்திடும் போதும்
முகம் தாங்கி என்னையுன் மடிமீது போட்டு
இகம்தாங்கும் பூதேவி போல்காப்பாய் கண்ணா!

இன்னும் வரும்....!

கா.ரமேஷ்
08-08-2009, 08:23 AM
அருமை தொடருங்கள் கலை....

மஞ்சுபாஷிணி
08-08-2009, 10:33 AM
எத்தனை அருமையான முத்துக்கள் கோர்த்த வரிகள்...

வைரமாய் மின்னும் சொற்கள்.... வார்த்தைகள் வரிகள் உருகும் பாடல்கள் எல்லாமே மீரா சொன்னதுபோல் அமைத்த விதம் மிக மிக அருமை கலை...

இத்தனை அழகான பாடல்களுடன் நானும் என் முயற்சியில் சிறிது வரிகள் எழுதி இருக்கேன்... உன்னளவு அழகு இந்த வரிகளில் காண இயலாது... ஆனாலும் முயற்சித்துள்ளேன் நண்பனே..

மீராவின் உருகும் மனதை வரிகளில் நீ கொண்டுவந்தது மிக ப்ரமாதம்

அருமையான திறமைகளை உள்ளடக்கி
மீராவின் வரிகளால் எங்களை வசப்படுத்தி
முத்துக்களை பாமாலையாய் கோர்த்தாய்
மீராவின் கண்ணனை காட்டிவிட்டாய்

மஞ்சுபாஷிணி
08-08-2009, 10:45 AM
மீராவின் கண்ணன் - ஓர் உன்னதக் காதல் ஓவியம்
http://i196.photobucket.com/albums/aa136/sramasamy1962/krs63kis.jpg
1.
ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்..
ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்!
மீராவின் குரல்கேட்டும் வாராத தேனோ
சீராட்டி நீயென் குழல்கோது கண்ணா!

2.
என்றாவது உன்னுள் கலந்திடத் தானே
என்றன் உயிரைக் கையகம் வைத்தேன்
இன்றோ நாளையோ இடறாமல் நீயும்
நன்றே வந்து நகையாட்டு கண்ணா!

3.
நீயாகப் பேசாமல் புன்னகைத் தாலும்
ஓயாமல் உன்னை பாராட்டு வேனே
வாயாற நீயும் வாழ்த்திடு வாயே
சேயாக என்னை சீராட்டு கண்ணா!

4.
துயிலாடும் போதென் துகிலாடு மென்று
துணைகாக்க உன்னை தருவாயென் றெண்ணி
துயில்துறந் தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
தூயவனே என்மாயவனே எனைகாத்திடு கண்ணா!

5.
தீராமல் விளையாடி ஓயாத உன்னை
சேராமல் எங்ஙனம் நான்வாடி நிற்பேன்?
ஓராயிரம் முறை உன் நாமம் சொல்வேன்
பாராமுகம் ஏனோ பார்த்திடு கண்ணா!

தொடர்வாள் மீரா!

1.
இப்பிறவிதனி லுன்னைச் சேராதபோதும்
இனியொரு பிறவியும் வேண்டாமே கண்ணா
இல்லாது போகும் நிலையாமை எண்ணாது
இதுவே என்வாழ்க்கை வழியாகும் கண்ணா...

2.
கலங்காது நானும் காத்திருப்பேன் கண்ணா
ராதையாய் உன்னுடன் அருகில் இல்லாது
மீராவாய் மன்னனை மணந்ததென் தவறோ
உன்னவளாய் நானும் சேருவேனோ கண்ணா?

3.
என்மனம் நீஅறிந்த துண்டோ என்கண்ணா?
உன்மனம் என்னை எண்ணியது முண்டோ
கோபியரின் குறைதீர்த்த கோகுலக் கண்ணா
உன்னிடம் நான்சேர்வ தெப்போது கண்ணா?

4.
மயில் தோகை வெண்சாமரம் வேண்டாமெனக்கு
ஐஞ்சுவை உணவுவகை வேண்டாமெனக்கு
பஞ்சணை தரும்சுகமும் வேண்டாமெனக்கு
பஞ்சனைய முகத்தோனே நீ போதும் கண்ணா...

5.
நானிலம் தனில் புல்பூண் டாகினாலும்
மானிடப் பிறவியாய் இனிபிறந் திடேனே
வேய்ங்குழ லாகிநான் உன்மூச்சு சுமப்பேன்
உன்இதழ் ஸ்பரிசத்தில் மெய்மறப்பேன் கண்ணா....

ஆதி
10-08-2009, 01:22 PM
எனிதயப்புல் லாங்குழலை இசைநீ கண்ணா
உனிதழோர ராகமாய் எனையாக்கு கண்ணா
மணிகணக்கில் ஏங்கிஉன்னில் மயங்கவிடு கண்ணா
தனியா காதல்தந்து தவிக்கவிடு கண்ணா


வாழ்த்துக்கள் கலை ஐயா

கலைவேந்தன்
12-08-2009, 07:40 AM
நன்றி ஆதி...!

இன்று இன்னும் ஐந்து பாடல்கள் தருகிறேன்.

ஆதி
16-09-2009, 02:28 PM
ஜீவநதி போன்றொரு போகநதி வேண்டும்
தேவசுவை கண்டதனில் யோகமுற வேண்டும்
பாவநதி நீந்திசுக தாகமுற வேண்டும்
பாவைநதி கூடுமாழி கண்ணனாக வேண்டும்..

ஆதி
18-09-2009, 12:38 PM
பதமான ஸ்பரிசமொன்று தருவாய் கண்ணா
..பக்குவமாய் நெஞ்சோடு அணைப்பாய் கண்ணா
இதமான இதழாலே அளப்பாய் கண்ணா
..இதயத்தின் இருள்போக்கி விடுவாய் கண்ணா
முதலாக உன்கலையை துவங்கு கண்ணா - என்
..மூச்சுக்குள் புயல்வீச வைநீ கண்ணா
விதமான வித்தைகளை தெளிவி கண்ணா
..விரகத்து விளக்கென்னில் ஒளிசெய் கண்ணா

நித்திரையில் உன்நினைவு நுழைந்து கண்ணா
..நிதமென்னை ராச்சசர்ப்போல் வருத்தும் கண்ணா
அத்தருணம் பஞ்சணையின் மீது கண்ணா
..ஆதவாரம் எடுத்ததனை வதைப்பாய் கண்ணா
பத்திரமாய் என்பெண்மை இருந்தும் கண்ணா
..பரண்போட்ட பொருளாக கிடக்கு கண்ணா
எத்தனைநாள் இத்தனிமை கொடுப்பாய் கண்ணா
..என்றைக்கு எந்துணையாய் ஆவாய் கண்ணா

வானதிதேவி
18-09-2009, 03:16 PM
ஆகா அருமை.அத்தனை காதல் கவிதைக்கும் ஜீவாதரமாய்...ஆனாலும் இந்த மீராவுக்குத்தான் கண்ணன்பால் எத்துனை அன்பு!

கலைவேந்தன்
15-10-2010, 08:25 AM
http://www.gitaaonline.com/wp-content/uploads/meerabai_qi21.jpg

26.
இப்புவியை நீங்கிட நான் நினைத்தாலும்
தப்பென்று சொல்லிநீ தடுத்திடு கண்ணா!
எப்போதும் என்னருகில் நீ இருந்தென்னை
தப்பாமல் என்னைநீ காப்பாயா கண்ணா?

27.
நீராடி என்கூந்தல் சிக்கெடுக்கும் போதும்
சீராடிஎன்னுடலை மணமூட்டும்போதும்
ஓராடி முன்நின்று எனைப்பார்க்கும் போதும்
போராடிஉனை விரட்டி உடுத்துவேன் கண்ணா!

28.
உன்பட்டுக் கன்னத்தில் ஓர்முத்தம் பதித்து
மென்பட்டு உதட்டினில் மெல்லமாய் மோதியே
கண்பட்டுப் போகுமுன் கண்ணேறு கழித்து
என்பட்டு உள்ளத்தில் மகிழ்வேனே கண்ணா!

29.
மாறாத அன்பும் மன்னிக்கும பண்பும்
மீறாத சொல்லும் மேம்பட்ட செயலும்
கூராக என்னைக் குத்திடும் பார்வையும்
மீராவாம் என்னை மயக்குதே கண்ணா!

30.
சுந்தரப் பார்வையால் சுண்டியிழுத் தென்னை
வந்தும யக்கியே வாத்சல்ய மாய்ப்பேசி
நந்த கோபாலனே என்நாயகனே நீயும்
எந்தனமனம் தனைக்கவர்ந்தாயே கண்ணா!

31.
மோகனப் புன்னகையில் சுண்டி யேஎன்னை
மேகத்தின் வண்ணனே நீயும் மயக்கினாய்
வேகமாய் வந்தென் உள்ளம் கவர்ந்தாய்
தாகம் தீர்த்தென்னையே ஆட்கொள்வாய் கண்ணா!

32.
நாகத்தின் மீதுந்தன் நர்த்தனம் கண்டே
சோகம் தீர்த்தனர் தேவர்கள் அன்று
மோகம் கொண்டுன் மேல்பாய்ந்தனர் கோபியர்
யோகமே வேண்டினேன் நானுன்னை கண்ணா!

33.
சற்றே தலை சாய்த்து சிரித்திடுவாய் அழகாக
உற்றுநோக்கி கண்ணிமைத்து ஓர்நொடியில் எனைஉருக்கி
குற்றம்புரிந்தவன் போல்நீயுன் முகம் வைத்து
பற்றிலா தவன்போல்எனைப் பார்த்திடுவாய் கண்ணா!

34.
அன்பாய்ப்பேசியே அரவணைப்பாய் அக்கறையாய்
என்பும் உருக்கிடும் உன்பாசப் பொழிவினில்தான்
முன்பே மயங்கினேன் முறுவலில் மெய்மறந்தேன்
உன்பேர் சொல்லியே உறஙகுகிறேன் கண்ணா!

35.
பஞ்சுபோல் உன்கன்னம் பட்டுபோன்ற உன்மார்பு
மஞ்சுபடர் மலைபோல நீலவண்ணம் உன்மேனி
தஞ்சமென வந்தோரைத் தாங்கிடும் தாயுள்ளம்
வஞ்சமிலா வாளிப்பு எனைமயக்கி விடும்கண்ணா!

36.
தாய்போல வந்தாய் எனைத் தோள்தாங்கி நின்றாய்
வாய்பேசிப் பேசியே வாழ்த்திட்டாய் நீஎன்றும்
மாய்மாலம் செய்திடும் இப்புவியில் இருந்தென்னை
தூய்மை யுள்ளத்தோனே எனைத் துணைகொள்வாய் கண்ணா!

தொடர்வேன்...

அன்புடன்

க்லை

கலைவேந்தன்
10-08-2012, 09:18 AM
இம்மீராவின் கண்ணனை முழுமையாய் அளித்தபின்னர் கண்ணனின் மீரா தொடங்க எண்ணினேன்..

இன்று கோகுலக்கண்ணனின் அவதார நாள்.. இன்றே அதனைச் செய்தால் என்ன என யோசிக்கிறேன்..!

தொடர்ச்சியைத் தருகிறேன்..!

கலைவேந்தன்
10-08-2012, 09:49 AM
http://ih0.redbubble.net/work.2707207.6.flat,550x550,075,f.meerabai-in-vrindavan.jpg

37.
எத்தனை சோதனை நீவைத்த போதினும்
அத்தனை காதல் பெருகுதே உன்மேல்
அத்தனைச் சுற்றிடும் பித்தனைப் போலவே
முத்தனை உன்முகம் மறக்கிலேன் கண்ணா

கலைவேந்தன்
10-08-2012, 09:50 AM
http://www.freeindia.org/dynamic_includes/images/biographies/greatdevotees/sakhubai.jpg


38.
ராதையை உன்னருகில் பாதியாய் வைத்தாய்
பாதை யறியா புள்ளிமான் போலவே
பேதையாம் என்னையும் உன்னருகே ஓரமாய்
கீதையின் நாயகா சேர்த்துக்கொள் கண்ணா!

கலைவேந்தன்
10-08-2012, 09:51 AM
http://farm3.static.flickr.com/2114/2252326904_3cfa270d2a.jpg

39.
கோபியர் பலருண்டு போற்றிடவே உன்னை
பாபியரு முன்னை போற்றிடக் கண்டேன்
தாபத்தில் மகளிரும் சுற்றினர் உன்னையே
கோபாலா உன்மேல் உயிர்வைத்தேன் கண்ணா!

கலைவேந்தன்
10-08-2012, 09:53 AM
http://www.chittorgarh.com/picturegallery/images/chittorgarh_meerabai_temple2.jpg

40
சாதனை செய்யும் சாதகன் நீயே
போதனை செய்யும் கீதையும் நீயே
வேதனை தீர்க்கும் வேதமும் நீயே
சா தனை போக்கும் கடவுளே கண்ணா!

M.Jagadeesan
10-08-2012, 11:01 AM
எத்தனை கவித்துவம்! பாராட்ட வார்த்தைகளே இல்லை! கண்ணனிடம் மீரா கொண்ட காதல் என் கண்களுக்குத் தெரியவில்லை! தமிழ் மொழியின்பால் தாங்கள் கொண்ட காதலே என் கண்ணுக்குத் தெரிந்தது!

ஜானகி
10-08-2012, 04:08 PM
கண்ணனின் மீராவும் மீராவின் கண்ணனும் சேர்ந்து [ஆடிய] பாடிய ராசலீலை வெகு அருமை......அனுபவம் புதிது.....தொடருங்கள்

jayanth
12-08-2012, 06:26 AM
மீராவின் கண்ணன்...வார்த்தைஜாலம்

இதைப் படித்து கருத்தோ பின்னூட்டமோ இட எனக்குத் தகுதியில்லை.

அருமை...அருமை...அருமை...

Keelai Naadaan
12-08-2012, 06:39 AM
பாடல் எழுத தமிழில் நல்ல பரிச்சயமும், எழுத எடுத்து கொள்கிற விசயத்திலே ஆழ்ந்த லயிப்பும் வேண்டும். அவை இரண்டுமே உங்களிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

கீதம்
12-08-2012, 10:08 AM
மீராவாகவே மாறினால்தான் கண்ணன்பால் இத்தனைக் காதலை, கவின்தமிழ்க் கவிதைகளாய் அள்ளி வழங்க இயலும். எந்த வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்வதென்று தெரியவில்லை. தன் உள்ளம் கவர்ந்த கண்ணனிடம் மோகமும் தாபமும் கொண்டு தவிக்கும் மீராவின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வரியிலிருந்தும் அத்தனை எளிதில் விடுபட இயலவில்லை. ஆழ்ந்த ரசனையான காதல் அனுபவத்தை அள்ளித்தெளிக்கும் அற்புதக் கவிகள். பாராட்டுகள். இனிதே தொடருங்கள் கலைவேந்தன்.

கலைவேந்தன்
16-08-2012, 06:00 AM
மீராவாகவே மாறினால்தான் கண்ணன்பால் இத்தனைக் காதலை, கவின்தமிழ்க் கவிதைகளாய் அள்ளி வழங்க இயலும். எந்த வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்வதென்று தெரியவில்லை. தன் உள்ளம் கவர்ந்த கண்ணனிடம் மோகமும் தாபமும் கொண்டு தவிக்கும் மீராவின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வரியிலிருந்தும் அத்தனை எளிதில் விடுபட இயலவில்லை. ஆழ்ந்த ரசனையான காதல் அனுபவத்தை அள்ளித்தெளிக்கும் அற்புதக் கவிகள். பாராட்டுகள். இனிதே தொடருங்கள் கலைவேந்தன்.

தங்களின் ஆழ்ந்த ரசிகத்தன்மையுடனான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம்..

கலைவேந்தன்
16-08-2012, 06:02 AM
எத்தனை கவித்துவம்! பாராட்ட வார்த்தைகளே இல்லை! கண்ணனிடம் மீரா கொண்ட காதல் என் கண்களுக்குத் தெரியவில்லை! தமிழ் மொழியின்பால் தாங்கள் கொண்ட காதலே என் கண்ணுக்குத் தெரிந்தது!

தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா... தங்களின் ஆதரவும் நல்லாசியும் என்னை மேலும் எழுத வைக்கும்..!

கலைவேந்தன்
16-08-2012, 06:04 AM
கண்ணனின் மீராவும் மீராவின் கண்ணனும் சேர்ந்து [ஆடிய] பாடிய ராசலீலை வெகு அருமை......அனுபவம் புதிது.....தொடருங்கள்

மிக்க நன்றி ஜானகி.. அவசியம் தொடர்கிறேன்.. நூற்றியெட்டுப் பாடல்கள் கொண்ட எனது படைப்பு இது..

கலைவேந்தன்
16-08-2012, 06:05 AM
மீராவின் கண்ணன்...வார்த்தைஜாலம்

இதைப் படித்து கருத்தோ பின்னூட்டமோ இட எனக்குத் தகுதியில்லை.

அருமை...அருமை...அருமை...

தமிழை ரசிக்கத் தகுதி அவசியமில்லை ஜெயந்த்.. தங்களின் பாராட்டு என்னை மிகவும் மகிழ்வித்தது.. மிக்க நன்றி நண்பனே..!

கலைவேந்தன்
16-08-2012, 06:06 AM
பாடல் எழுத தமிழில் நல்ல பரிச்சயமும், எழுத எடுத்து கொள்கிற விசயத்திலே ஆழ்ந்த லயிப்பும் வேண்டும். அவை இரண்டுமே உங்களிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீழை நாடான்.. இதோ அடுத்து சில பாடல்களைத் தொடர்கின்றேன்..!

கலைவேந்தன்
16-08-2012, 06:08 AM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQTh-CzvG9Q1chof3SF3dyGXDy3FDWxXDcqN523gnvoPm54zsepdolf10nh

41.
என்றும்உன் நலம் காணத்துடிக்கிறேன் நானும்
கன்றினைக் காத்திடும் தாய்ப்பசு போலவே
ஒன்றுமே நேராமல் காத்திடுவேன் உன்னை
அன்றியும் வேறேதும் பணியுண்டோ கண்ணா!

கலைவேந்தன்
16-08-2012, 06:10 AM
http://lh5.ggpht.com/aroratejas365/SK5vntRcDTI/AAAAAAAABXw/9qQ5McDLYgM/ss.jpg

42.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந் தென்னை
காப்பிட்டு காத்திடும் காதலன் நீயே
பூப்போல என்றுமே பேதை நான் உன்னை
காழ்ப்பின்றி காத்திடுவேன் கார்வண்ணக் கண்ணா!

கலைவேந்தன்
16-08-2012, 06:11 AM
http://madpals.com/forum/index.php?action=dlattach;topic=33220.0;attach=39948;image

43.
சோர்ந்து சுருங்கியே சோகமாய் நானும்
கார்மழை போலவே கண்ணீரில் மூழ்கினேன்
கூர்ந்து நோக்கியும் குளிர்நகை பூட்டியும்
சேர்ந்தே என்னுடன் சிரிப்பாயே கண்ணா!

கலைவேந்தன்
16-08-2012, 06:12 AM
http://1.bp.blogspot.com/-0gAthuvAjTk/TYtggpU1yeI/AAAAAAAAFxE/gyF-4uL8C9E/s400/28D80C9.JPG

44.
ஊனுறக்கம் இன்றியே உன்னினைவில் நானும்
தேனுக்குள் விழுந்திட்ட உன்மத்த வண்டு போல்
வான்மதி கண்டலரும் வண்ணமிகு அல்லிபோல்
நான்உன்னைக் கண்டதும் மலர்கிறேன் கண்ணா!

கலைவேந்தன்
16-08-2012, 06:13 AM
http://www.exoticindiaart.com/artimages/meera_and_krishna_os13.jpg


45.
எத்தனை அலட்சியங்கள் நீ செய்த போதிலும்
அததனை அன்பென் மனதிலே ஊறிடும்!
பித்தி என் கனவுகள் கைகூடா தொழிந்திடினும்
அத்தன் உனை மறவா பக்தை நான் கண்ணா!

கலைவேந்தன்
16-08-2012, 06:14 AM
http://indiansaints.files.wordpress.com/2009/09/meera-krishna-1.jpg?w=500&h=463

46
அம்மையுமாய் அத்தனுமாய் ஆசிதரும் ஆசானாய்
இம்மையும் மறுமையும் இன்மையாக்கும் இறைவனாய்
செம்மையும் வழங்கும்நல் அரசனாய் என்றும் நீ
எம்மையும் நீங்காது இருப்பாயோ கண்ணா?

கலைவேந்தன்
16-08-2012, 06:15 AM
http://4.bp.blogspot.com/_MsvsPTnNLSU/SZZYjAFno8I/AAAAAAAAAFI/h4MX_tfI17w/s320/Mira.jpg

47.
உன்னையே வழிநோக்கி உருகினேன் நானும்
என்னையே இழந்துநான் உன்னிலே கலந்திட்டேன்
பொன்னையும் பொருளையும் வேண்டிலேன் என்றுமே
என்னையும் கைவிடல் கூடுமோ கண்ணா!

கலைவேந்தன்
16-08-2012, 06:15 AM
http://www1.sulekha.com/mstore/BuntysBanter/albums/default/Meerabai%5B1%5D.jpg


48.
ஆயிரம் கோபியர் ஆர்ப்பரிப்பர் உன்மேன்மை
வாய்நிறைய உச்சரிப்பர் உன்நாமம் என்றும்
ஆயினும் என்னுயிராய் உன்னையே என்றுமே
சாயினும் வாழினும் ஏற்றிருப்பேன் கண்ணா!

கலைவேந்தன்
16-08-2012, 06:16 AM
http://www.saieditor.com/img/mira1.jpg


49.
நீ சிரிக்க புன்னகை தொற்றிக் கொள்ளும்
பூ விரிக்க மணம்பரப்பும் முல்லைபோலே ;
தாய் சிரிக்க தாவி வரும் குழந்தை போல
தூயவனே நீ சிரிக்க மகிழ்வேன் கண்ணா!

கலைவேந்தன்
16-08-2012, 06:19 AM
http://nirmalyaghosh.files.wordpress.com/2011/02/mirabai_a_devotional_saint_of_india_oq804.jpg

50.
சந்தோஷக் கணங்களிலும் உன் நினைவே என்றும்
என் தோஷக் கணங்களிலும் உந்தன் எண்ணம்
சிந்தனை முழுவதிலும் வியாபிக்கும் உன்னுருவம்
வந்தெனை அணைத்திடவே அருள்வாயே கண்ணா!

ஜானகி
16-08-2012, 10:12 AM
வடமொழியில் கோபிகா கீதம் என்ற பாடல்....ராசலீலை பற்றியது.....உயரிய தத்துவங்களைக் கொண்டது....அதுபோலத் தமிழில் படித்ததில்லையே என்ற ஏக்கம் தீர்க்கிறது உங்கள் பாடல்கள்...நன்றி...

ஆதி
16-08-2012, 11:33 AM
நாயம்நயமாய் நீபேசும் வார்த்தை எல்லாம்
லயம்லயமாய் சிந்தனையின் இசையில் சேரும்
வயம்வயமாய் வகைவகையாய் என்னை ஈர்த்து
சுயமற்ற காதலிலே ஸ்ருதியா யாக்கும்

நீயூதும் குழலாக என்னை ஏந்தி
வாயோடு இதமாக வைத்து ஊதி
நோயோடு அலைகின்ற மேனி தன்னில்
பேயாடும் விரகத்தீ பெரிதாய் மூட்டு

தலையாடும் மயிலிறகாய் என்னை சூடு
வளையாடும் கையிரண்டும் மாலை யாக
மலையாடும் மார்பிரண்டில் மையல் பாய
நிலையான உன்பார்வை நீரை ஊற்று

உன்நினைவு தீபங்கள் எரிந்தெ ரிந்து
கண்ணிரண்டின் இமைகளிலே புகைப்ப டரும்
பொன்குழலை ஊதுமிதழ் என்பேர் சொன்னால்
பெண்நிலவு தேகமெலாம் வெளிச்ச மாகும்

கலைவேந்தன்
16-08-2012, 02:21 PM
வடமொழியில் கோபிகா கீதம் என்ற பாடல்....ராசலீலை பற்றியது.....உயரிய தத்துவங்களைக் கொண்டது....அதுபோலத் தமிழில் படித்ததில்லையே என்ற ஏக்கம் தீர்க்கிறது உங்கள் பாடல்கள்...நன்றி...

ராசலீலை சொல்லும் கோபிகா கீதம் தமிழில் உள்ளதா எனத்தெரிவியுங்கள் ஜானகி.. அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்தாலும் போதும். வாசிக்க மனம் ஆவலைத்தூண்டுகிறது.

தங்களின் பாராட்டுக்கு நன்றி ஜானகி..!

கலைவேந்தன்
16-08-2012, 02:22 PM
ஆதனின் அருமையான பாடல்பின்னூட்டம் என் மனம் நெகிழ்வித்து நான் எழுதியதன் பலனை அனுபவிக்கவைத்தது.. அருமை அருமை ஆதி..!

கலைவேந்தன்
18-08-2012, 02:17 PM
http://2.bp.blogspot.com/_6MUp16lfcdM/TSMLKOtAw0I/AAAAAAAABDc/90YjgxRPAPM/s400/sogno.jpg

51.
நாமமுனை அனுதினமும் செப்பிடுவேன் தளராமல்
காமனும் தானெனைக் கொல்ல அம்பெய்த போதும்
சோமனும்தான் குளிர்விக்க வந்த போதும் உந்தன்
தாமரைப் பாதந்தனை விடுகிலேனே கண்ணா!

கலைவேந்தன்
18-08-2012, 02:18 PM
http://2.bp.blogspot.com/_6MUp16lfcdM/TQ-FPuASezI/AAAAAAAAAy8/zDOTvMPnGRI/s1600/giridhari-1.gif

52.
காழ்ப்புடன் நம்காதல் மனங்களைப் பிரிக்கவே
தீப்புண்ணாய் வார்த்தைகள் கொட்டிடும் போதும்,
வேப்பெனப் பார்வைகள் கசந்திட்ட போதுமே
காப்பாய் நம் காதலை கார்மேகக் கண்ணா!

கலைவேந்தன்
18-08-2012, 02:20 PM
http://www.exoticindiaart.com/details/panels/krishna_and_mirabai_wj95.jpg


53.
கனவுலகில் நீஎன்றும் எனை யணைத்தாய்
நனவுலகில் உனைக் காணக் காத்திருந்தேன்
எனதாக்கி உனைத் தழுவத் துடித்திருந்தேன்
மனமாளும் மாதவனே வாராய் கண்ணா!

கலைவேந்தன்
18-08-2012, 02:21 PM
http://moralstories.files.wordpress.com/2006/07/govardhanagiridhari.jpg?w=437&h=294


54.
சித்திரத்தில் உனை என்றும் கண்டிருக்க
பித்தியாய் உனைக்காணத் தவமிருந்தேன் நானும்
சித்திரை வெய்யிலில் கடுமழையாய் நீயும்
முத்துதிரும் சிரிப்புடனே முகிழ்த்தாய் கண்ணா!

கலைவேந்தன்
18-08-2012, 02:24 PM
http://www.dollsofindia.com/dollsofindiaimages/batik-paintings/meerabai-krishna-devotee-QD89_l.jpg
55.
உனைக்கண்ட நேரமென் சிந்தை தன்னில்
பனைவெல்லம் ருசிகண்ட மந்தி போலே
தனைமறந்த உன்மத்தம் ஊறக் கண்டேன்
எனையாண்டு எடுத்தணைக்க வாராய் கண்ணா!

கலைவேந்தன்
18-08-2012, 02:26 PM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSmr1uOX0g-W6CgoNMQ_a5-f1HYihJuLJU_TqBQnyC_uHcpzk3zew&t=1
56.
சித்திரத்தில் நான் கண்ட கண்ணன் தானோ
சித்தமெலாம் நிறைந்திருந்த மாயன் தானோ
முத்தமிட நான் துடித்த மன்னன் தானோ
பித்தாகி அணைத்திடுவேன் வாராய் கண்ணா!

கலைவேந்தன்
18-08-2012, 02:27 PM
http://www.birjumaharaj-kalashram.com/photogal/Page2/Meerabai.JPG
57.
நான் வாழ ஆதாரம் நீதான் என்றும்
மான் வாழா தம்மிணைதான் மரித்துப்போயின்
தேனூறும் அதரத்தால் முத்தம் தந்து
வான்போல எனை நீயும் காப்பாய் கண்ணா!

கலைவேந்தன்
18-08-2012, 02:28 PM
http://www.dollsofindia.com/dollsofindiaimages/woven-bamboo-blinds/meerabai-krishna-devotee-wall-hanging-QK32_l.jpg

58.
மின்னிணைப்பு தந்துவிட்ட பதுமை போலே
உன்னணைப்பு என்றென்றும் என்னைக் காக்கும்
பின்னணைத்து பின்கழுத்து முகர்ந்தாய் நீயும்
என்னினைவு இழந்துவிட்டேன் ஏற்பாய் கண்ணா!

கலைவேந்தன்
18-08-2012, 02:29 PM
http://3.bp.blogspot.com/_knbd2EX9oqE/R_B8Znb2KmI/AAAAAAAAAMA/j84NmiBi8Z0/s320/meera1.jpg

59.
என்மார்பைத் தொட்டணைத்து மகிழ்ந்த போதும்
உன் மார்பை எனக்கரணாய் அளித்தபோதும்
உன் கைகள் என்கூந்தல் அளையும்போதும்
மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தேன் கண்ணா!

கலைவேந்தன்
18-08-2012, 02:30 PM
http://farm5.static.flickr.com/4141/4758721736_e04cc26560.jpg

60.
ஈருடலும் ஓருடலாய் கலந்த போதும்
தேர்போன்று என்னிடையில் தவழ்ந்தபோதும்
சீராய் நீ காது மடல் வருடும் போதும்
ஓர்மூச்சாய் உன்மூச்சில் கலந்தேன் கண்ணா!

கலைவேந்தன்
20-08-2012, 05:52 PM
http://img.youtube.com/vi/l_6_6MUPQOg/0.jpg

61.
உன்னருகில் நானுரசி நின்ற போதும்
என்னிதழில் நீஉரசி மகிழ்ந்த போதும்
மின்னணுவில் ஓர் மாற்றம் கண்டாற்போல
சின்னதோர் பூகம்பம் உணர்ந்தேன் கண்ணா!

கலைவேந்தன்
20-08-2012, 05:54 PM
http://images.fineartamerica.com/images-medium/meerabai-gautam-chatterjee.jpg

62.
உன் மடியில் எனை யமர்த்தி மகிழ்ந்த போது
பின்முடியில் ஓர்கற்றை உன்மேல் தழுவி
என்மனம்தான் குளிர்ந்துபோய் குலுங்கும் வண்ணம்
உனை இம்சைசெய்தாலும் மகிழ்ந்தாய் கண்ணா!

கலைவேந்தன்
20-08-2012, 05:56 PM
http://www.mythicmaps.net/Book_of_days/Sep/Krishna/meerabai250.jpg

63.
வானில்லா நிலவாம் நான் நீயில்லாமல்
தேனில்லா மலராய் நான்தேய்ந்தே போவேன்
ஊனின்றி கூட நான் வாழ்ந்திருப்பேன்
நான் வாழ உன்மூச்சு தேவை கண்ணா!

கலைவேந்தன்
20-08-2012, 05:59 PM
64.
ஓர்நாள் நான் உன்மடியில் துயின்ற போது
கார்மேகம் கலைந்துவந்து கவிழ்ந்தாற் போல
போர்முகத்தில் வெற்றிகண்ட மன்னன் போல
ஆர்ப்பரித்தேன் அகமகிழ்ந்தேன் அழகுக் கண்ணா!

கலைவேந்தன்
20-08-2012, 06:00 PM
http://www.palwow.com/uploads/19/18344/photos/20100518182642.jpg

65.
ஓராசை என் மனதில் என்றும் கொண்டேன்
நேராக உனைத்தூக்கி இடுப்பில் வைக்க
பேராசைஎன்றே நான் காத்திருந்தேன்
சீராசை என்றேநீ வந்தாய் கண்ணா!

கலைவேந்தன்
20-08-2012, 06:00 PM
http://www.stephen-knapp.com/images/Krishna302.jpg

66.
கண்ணாலே உன்னுருவம் காணும்போது
கண்ணுக்குள் உனைவைக்க முயற்சி செய்தேன்
கண்ணெதிரே நீயின்றி வாடும்போது
கண்ணுக்குள் உன்னுருவம் கண்டேன் கண்ணா!

ஆதி
23-08-2012, 11:57 AM
ஆதனின் அருமையான பாடல்பின்னூட்டம் என் மனம் நெகிழ்வித்து நான் எழுதியதன் பலனை அனுபவிக்கவைத்தது.. அருமை அருமை ஆதி..!


மிக்க நன்றி ஐயா, மீராமீதும், ஆண்டாள் மீதும் எனக்கு தீராத ஒரு ஈர்ப்பு உண்டு
உங்கள் கவிதைகளை வாசித்ததும், அந்த தீ பற்றி கொள்ள கவிதை எழுதிவிட்டேன் ஐயா
உங்கள் புலமை திறம் நன்கு அறிந்தவன் என்பதால் பிரம்மிப்பைவிட மகிழ்வும், ஆனந்தமுமே அதிகமாக உள்ளது, நிச்சயமாய் இந்த பாடல்கள் புத்தக வடிவு பூண வேண்டும் ஐயா

கலைவேந்தன்
23-08-2012, 04:10 PM
மிக்க நன்றி ஆதன்.. இது 108 பாடல்களைக் கொண்டது. இதை முடித்தபின் கண்ணனின் மீரா - 108 எழுதும் எண்ணம் உண்டு. இன்ஷா அல்லாஹ் அது நிறைவேறும். பணி ஓய்வு பெற்றபின் அனைத்தும் ஐந்து அல்லது ஆறு புத்தகங்களாகப்பதியும் எண்ணமும் இன்னும் முழுவீச்சாய் எழுத்தில் ஆழும் எண்ணமும் உண்டு.

கீதம்
23-08-2012, 10:54 PM
மிக்க நன்றி ஆதன்.. இது 108 பாடல்களைக் கொண்டது. இதை முடித்தபின் கண்ணனின் மீரா - 108 எழுதும் எண்ணம் உண்டு. இன்ஷா அல்லாஹ் அது நிறைவேறும். பணி ஓய்வு பெற்றபின் அனைத்தும் ஐந்து அல்லது ஆறு புத்தகங்களாகப்பதியும் எண்ணமும் இன்னும் முழுவீச்சாய் எழுத்தில் ஆழும் எண்ணமும் உண்டு.

எண்ணியவை யாவும் ஈடேற என் மனமுவந்த வாழ்த்துக்கள் கலைவேந்தன்.

கலைவேந்தன்
24-08-2012, 04:13 AM
உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி கூறித் தொடர்கிறேன் கீதம்..!

கலைவேந்தன்
24-08-2012, 04:15 AM
http://media1.santabanta.com/full1/Hinduism/Lord%20Krishna/lor20a.jpg

67.
எழிலூற்றாய் எனக்காய் நீ காட்சியளிப்பாய்
விழிநிறைய உன்னுருவம் பருகித்திளைப்பேன்!
குழலூதிநீ மறைந்தபோது அழுது நிற்பேன்
தழலினில் துடிக்குமெனை காப்பாய் கண்ணா!

கலைவேந்தன்
24-08-2012, 04:16 AM
http://www.iskconorlando.com/images/krishna4.jpg

68.
மோகமாய் புன்னகைத்து வசமாக்கி கோபியரை
வேகமாய் களித்து நீ விளையாட்டு காட்டுகையில்
தாகமாய் வந்தமான் வறண்டகுளம் கண்டதுபோல்
சோகமாய் ஏங்கிநான் பார்த்திருப்பேன் உனைகண்ணா!

கலைவேந்தன்
24-08-2012, 04:16 AM
http://wallpaperpassion.com/upload/5411/shree-krishna-wallpaper.jpg

69.
எனக்காய் நீ என்றாவாய் எனைமட்டும் கொஞ்சிடுவாய்
எனக்காத்து ஏங்குகின்றேன் என் குறை நீதீர்ப்பாயா
உனக்காய் மட்டுமே உயிருடனே காத்திருப்பேன்
மனக்காயம் தனைதுடைத்து எனைக்காப்பாய் என்கண்ணா!

கலைவேந்தன்
24-08-2012, 04:17 AM
70.
கோடைவெயிலுக்குப் பின்வரும் மழைபோல் நீ
வாடிநிற்கும் எனைமீட்க ஓடியே வருவாயா?
வாடைக்காற்றிலே வாட்டமுற்ற மலர்போல் நான்
ஓடிவந் தெனைக்காத்து உயிர்ப்பிப் பாயோகண்ணா!

கலைவேந்தன்
24-08-2012, 04:19 AM
http://www.16rounds.com/wp-content/uploads/2010/10/krishna1.jpg

71.
பாராமுக முந்தன் எனதுயிரை துடிக்கவைக்கும்
சேராதுன் மனதை சேய்பசியால் துடிப்பதுபோல்
நீராவிவெயில்பட்டு மறைவதுபோல் தவிக்கின்றேன்
நாராயணனாம்உன் அடிமையன்றோ நான்கண்ணா!

கலைவேந்தன்
24-08-2012, 04:20 AM
http://media1.santabanta.com/full1/Hinduism/Lord%20Krishna/lord-krishna-58a.jpg

72.
கொஞ்சமாய் நீ பேசி முகம் நோக்க விலை எனினும்
வஞ்சமே இன்றி நான் வலம்வருவேன் உனைஎன்றும்
தஞ்சமே நானென்றும் உன்னன்பு மடியணைப்பில்
நெஞ்சம் நிறைய உனை காதலிப்பேன் கண்ணா!

கலைவேந்தன்
24-08-2012, 04:21 AM
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-snc7/c0.0.403.403/p403x403/599657_10151937117035375_1159750973_n.jpg

73.
மாசில்லா மனத்துடன் தான் மன்னவனே உனைநினைத்தேன்
காசில்லா* இதயமிது கருணை செய் கார்முகிலா
நேசமது நான் வைத்தேன் நாகுழறி பேசிவிட்டேன்
பாசமுடன் எனை மன்னித் தருள்வாயா நீகண்ணா?



*காசில்லா = குற்றமில்லா

கலைவேந்தன்
24-08-2012, 04:22 AM
http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings3/radha_krishna_QN97_l.jpg

74.
இத்தனை பாராமுகம் என்னுயிரை உருக்கிடுமே
அத்தன் உனை யன்றி ஆர்பாதம் தொழுதிடுவேன்
பித்தனைப்போல் உன் காலைப்பற்றி நின்றேன் மன்னவனே
முத்தனைய பல்லழகா மன்னித்திடு எனைகண்ணா!

கலைவேந்தன்
24-08-2012, 04:23 AM
http://www.ganesh.us/krishna1/images/god-krishna-wallpaper04.jpg


75.
உன்னினைவே எனைநாளும் உயிரூட்டி வாழவைக்கும்
என்னுயிரும் உடலுமுனை அனுதினமும் ஏங்கி நிற்கும்
தன்னினைவே இன்றிஉனை எந்நாளும் போற்றுகின்றேன்
மன்னவனே எனைஏற்று மகிழ்விப்பாய் என்கண்ணா!

A Thainis
24-08-2012, 01:49 PM
கலைவேந்தனின் மீரா கவி வரிகள், ஒரு கவி ஓவியம், தொடருங்கள், வாழ்த்துமழை.

ஜானகி
24-08-2012, 02:42 PM
ஓவியம் சொல்ல வந்ததையெல்லாம் சொற்களில் சித்திரமாக வடிக்கும் உங்களது பாவண்மைக்கு வணக்கங்கள் பல...! வாழிய செந்தமிழ் !

கீதம்
25-08-2012, 07:33 AM
லயித்து எழுதுகிறீர்கள்.... ரசித்து மகிழ்கிறோம்... வேறென்ன சொல்ல? அழகானப் படங்களுடனான அற்புதமான காதல் காவியத்துக்குப் பாராட்டுகள்.

கலைவேந்தன்
25-08-2012, 02:21 PM
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி தைனிஸ் ஜானகி மற்றும் கீதம்..!

கலைவேந்தன்
25-08-2012, 02:22 PM
http://www.dandavats.com/wp-content/uploads/Radha_Krishna.jpg

76.
என்னசைவில் உனையுணர்ந்தேன் மென்னகையில் மெய்மறந்தேன்
பொன்னனைய உன்கையில் பொம்மையாய் தினம்மகிழ்ந்தேன்
சின்னதொரு உன்னசைவும் சிறப்பாக நானுணர்ந்தேன்
கன்னங்கள் சிவக்க நானும் உன்மடியில் மகிழ்ந்தேன் கண்ணா!

கலைவேந்தன்
25-08-2012, 02:23 PM
http://media1.santabanta.com/full1/Hinduism/Lord%20Krishna/lord-krishna-63s.jpg


77
வெள்ளையாய் பட்டுடுத்தி வெண்மேகம் போல்தான் நீயும்
கள்ளமில்லா சிரிப்புடன்தான் கவலைகள் மறக்கச்செய்தாய்
தள்ளாத வயதிலும் என் தளர்நடைப் பருவத்திலும்
உள்ளுவேன் உன்னை என்றும் ஓடிவா நீயும் கண்ணா!

கலைவேந்தன்
25-08-2012, 02:25 PM
http://www.krishnabalarama.com/wp-content/uploads/2009/09/kidnap_of_rukmini.jpg

78
சித்திரம்போல் சிற்றிடைச் சிலைபோல்தான் நீயுமென்னை
பத்திரமாக என்றும் பாதுகாத்து வந்தாய் அன்பில்
எத்தனை இடர்வரினும் காத்திடும் உந்தன் ஆழி
பத்தரைப் பைம்பொன்னே பவித்திரனே என்கண்ணா!

கலைவேந்தன்
25-08-2012, 02:26 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSJDfCPTaoGniTXojjaniIWX6cO2fqKgfcmbOQL3BLDmyS_4yOTNADoxsDi


79
இப்புவியில் முக்கனிகள் இன்சுவை என்றார் மூத்தோர்
தப்பில்லை ஆனால் உந்தன் இதழமுதம் பருகிடாதோர்
செப்பிவைத்த கூற்றென்பேன் உன்னிதழ்கள் பருகியபின்
ஒப்பிலா அழகாஉன்னை வைத்திட்டேன் நெஞ்சில் கண்ணா!

கலைவேந்தன்
25-08-2012, 02:28 PM
http://www.shobana.in/wp-content/uploads/2011/07/krishna-radha.jpg


80
கற்பனையில் என்றாலும் உனைமட்டும் சங்கமிப்பேன்
விற்பன்னர் பலபேராய் வந்திடினும் நான் வேண்டேன்
சிற்பம்போல் உன்முன்னே துகிலின்றி நான்நிற்பேன்
கற்பகமே என்னுயிரே கலந்திடவே வாகண்ணா!

கலைவேந்தன்
25-08-2012, 02:28 PM
http://www.ganesh.us/krishna/latest/images/lord_krishna51.jpg


81.
நடமாடும் கற்பகமாய் நளினமிகு நாயகனாய்
புடம்போட்ட பொற்சிலையாய் புன்னகையில் எனைமயக்கி
விடமேறும் வேகமுடன் வேந்தனேநீ உள்புகுந்தாய்
சுடர்மிகு வனப்புடனே எனைஆள்வாய் நீகண்ணா!

கலைவேந்தன்
25-08-2012, 02:29 PM
http://www.harekrsna.de/fotos/Radha_Krishna.jpg


82.
கீதையு ரைத்தனை பார்த்தனை காத்தனை
பாதை தவறிய மாமனை வென்றனை
போதை அளித்தனை கோபியரைக் களித்தனை
கோதையென் கருத்தினுள் புகுந்தனை கண்ணா..!

கலைவேந்தன்
25-08-2012, 02:30 PM
http://www.allindiaarts.com/paint_images/big/Radha_Krishna.jpg


83.
உள்மூச்சு உன்பேரைச் சொல்லியே இழுத்தேன்
என்பேச்சு அத்தனையும் உன்னிலே முடித்தேன்
செல்மூச்சு எந்தன் உயிரினில் மிகுந்துமே
நல்மூச்சு வாங்கியே உயிர்த்திட்டேன் கண்ணா..!

கலைவேந்தன்
25-08-2012, 02:31 PM
http://iskconstlouis.org/images/detail/krishna_balaram.jpg


84.
நாளொரு போதினில் நான்செயும் கருமங்கள்
தோளொடு உன்னைத் தழுவியே செய்கிறேன்
தாளொடு ஒன்றிய மைபோல் என்னுடன்
கோளறு காலமும் வாழ்ந்திடு கண்ணா..!

கலைவேந்தன்
25-08-2012, 02:32 PM
http://www.glimpseofkrishna.com/images/gopis.jpg

85.
முப்போகம் முகிழ்த்திடும் வளமிகு நிலமன்ன
எப்போதும் என்னுள் கரந்தனை மன்னனே
தப்பேதும் என்மீது கண்டிட்ட போதிலும்
அப்பனைப் போலவே காத்திட்டாய் கண்ணா..!

கீதம்
30-08-2012, 11:51 PM
84.
நாளொரு போதினில் நான்செயும் கருமங்கள்
தோளொடு உன்னைத் தழுவியே செய்கிறேன்
தாளொடு ஒன்றிய மைபோல் என்னுடன்
கோளறு காலமும் வாழ்ந்திடு கண்ணா..!


தாளொடு ஒன்றிய மைபோல் என்னும் உவமையில் நானும் மனம் ஒன்றிப்போனேன்.

எழுத எழுத வற்றாது, ஊறும் காதல் உணர்வுகளால் உந்தப்படும் கவிவரிகள் அற்புதம்.

பாராட்டுகள் கலைவேந்தன்.

கீதம்
30-08-2012, 11:53 PM
85.
முப்போகம் முகிழ்த்திடும் வளமிகு நிலமன்ன
எப்போதும் என்னுள் கரந்தனை மன்னனே
தப்பேதும் என்மீது கண்டிட்ட போதிலும்
அப்பனைப் போலவே காத்திட்டாய் கண்ணா..!


தாயைப் போல் மனைவி அமையவேண்டுமென்பது பெரும்பான்மை ஆண்களின் விருப்பமாகவும், தந்தையைப் போல் கணவன் அமையவேண்டுமென்பது பெரும்பான்மைப் பெண்களின் விருப்பமாகவும் இருக்கும். அந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் வரிகளைக் கண்டு வியந்தேன். பாராட்டுகள் கலைவேந்தன்.

கலைவேந்தன்
31-08-2012, 03:43 AM
உங்கள் மனமுவந்த பாராட்டுகளுக்கு நன்றி கீதம்..

கலைவேந்தன்
16-09-2012, 04:45 AM
http://www.efunbox.com/album/Radha_Krishna_10.jpg


86.
உறவும் பிறவுமெனைப் பிரிந்திட்ட போதிலும்
குறைப் பிறவி யாய்க்கனவு கரைந்திட்ட போதிலும்
வறையின்றித் துன்பங்கள் வருத்திட்ட போதிலும்
குறையேதும் இல்லை கார்முகில் கண்ணா...!

கலைவேந்தன்
16-09-2012, 04:47 AM
http://3.bp.blogspot.com/-AVXmHMxNANo/Tk5nIPpOPyI/AAAAAAAABm8/eScnK-aHVoo/s1600/lord-krishna-wallpaper-016.jpg


87.
மத்தளமாய் என்மனது இடிபட்ட போதிலும்
கொத்தடிமை யாய்நானும் சோர்ந்திட்ட போதிலும்
செத்துப் பிழைத்தேதினம் வாழ்ந்திட்ட போதிலும்
அத்தனையும் உனக்காகப் பொறுப்பேனே கண்ணா...!

கலைவேந்தன்
16-09-2012, 04:48 AM
http://www.hindugodwallpaper.com/images/gods/fullsize/336_035.jpg

88.
பொல்லாங்கு பலசொல்லும் பலமுக மனிதரும்
இல்லாத கதைசொல்லி எரித்திடும் வீணரும்
நில்லாமை அறியாத நிர்மூல மாந்தரும்
சொல்லாலே கொன்றாலும் என்னுயிர்நீ கண்ணா...!

கலைவேந்தன்
16-09-2012, 04:49 AM
http://www.biographyonline.net/spiritual/images/Mirabai.jpg

89.
கற்புக்கு பேர்சொன்ன பலகதை உண்டு
சொற்கணை தாளாத கவரிமான் உண்டு
பற்பல கலைகள்நீ அறிந்தாலும் என்றும்
தற்புகழ் தேடாத தலைவனே கண்ணா...!

கலைவேந்தன்
16-09-2012, 04:51 AM
http://www.internationalartgallery.org/files/imagecache/display/images/328/cupids_cup.jpg

90.
நூறாண்டு நான் வாழ்ந்து முடிந்தாலும் அன்றி
போறாமல் இடையில்நான் வீழ்ந்தாலும் என்றும்
மாறாமல் உன்னோடு மாண்புற வாழ்வேன்
வேறாரும் என்ம்னதில் இனி இல்லை கண்ணா...!

கலைவேந்தன்
16-09-2012, 05:13 AM
http://farm5.static.flickr.com/4005/4458968782_c33b0b4104.jpg


91.
முற்றத்தில் நானுன்னை எண்ணியே நின்றேன்
கொற்றவன் சுடுசொல்லும் குத்தியே என்னை
வற்றலாய் வாட்டியே வீசிட்ட போதும்
முற்றிலும் உன்னிடம் மூழ்கினேன் கண்ணா

கலைவேந்தன்
16-09-2012, 05:14 AM
http://farm6.staticflickr.com/5123/5331906455_ca7d2af0bc_z.jpg

92.
ஊனாகி உயிருக்கு விருந்தாகி நீயும்
தேனாகி உடலுக்கு மருந்தாகி நின்றாய்
நானாகத் தேடியுன் பதமடைந் தேனே
கோனாகி எந்தன் குறைதீர்ப்பாய் கண்ணா...!

கலைவேந்தன்
16-09-2012, 05:16 AM
http://3.bp.blogspot.com/_cBIVPtZkaUg/TRx1h-QryDI/AAAAAAAAAAY/dYH2CDastKc/s1600/Bhaktha+Meera.jpg

93.
உன்கற்றைக் குழலென் மனம்கட்டிப் போடும்
முன்கற்ற யாவுமே மறந்தொழிந்து போகும்
பின்பற்ற குருவிலா மாணாக்கன் போலே
உன்பற்று தேடியே உருகினேன் கண்ணா..!

கலைவேந்தன்
16-09-2012, 05:18 AM
http://www.biographyonline.net/spiritual/images/Mirabai.jpg

94.
ஓதுவார் வேதத்தின் உட்பொரு ளானாய்
சூதுவா தறிந்துநீ பாரதம் வென்றாய்
மாதுக்கள் சூழவே வலம்வந்து சென்றாய்
தீதின்றி நானும்உனைச் சேர்வேனோ கண்ணா...

கலைவேந்தன்
16-09-2012, 05:19 AM
http://2.bp.blogspot.com/_7oR06qBoGZk/TUGLo8g7UnI/AAAAAAAAAWU/yK94H7iKm-8/s1600/f2sMirabai.jpg

95.
வெண்ணெயுண் டேநீயுன் வாய்துடைத்த போதும்
கண்ணிலே காதலைக் காட்டி நின்றபோதும்
மண்ணை யள்ளிநீ மகிழ்ந்துண்ட போதும்
பெண்ணிவள் காதலை அறிந்தாயோ கண்ணா..!

நாஞ்சில் த.க.ஜெய்
16-09-2012, 09:22 AM
இதனை மனமொன்றி படிப்பதற்க்கான சூழல் இன்று தான் அமைந்தது என்றே நினைக்கிறேன்...ஒவ்வொரு வரிகளையும் ஆழ்ந்து அதன் சுவைதனை அறிந்து படிக்கையில் தித்திக்கிறது மீராவின் கண்ணன்...வாழ்த்துகள் கலை’வேந்தே’...

கீதம்
17-09-2012, 12:07 AM
93.
உன்கற்றைக் குழலென் மனம்கட்டிப் போடும்
முன்கற்ற யாவுமே மறந்தொழிந்து போகும்
பின்பற்ற குருவிலா மாணாக்கன் போலே
உன்பற்று தேடியே உருகினேன் கண்ணா..!

உங்கள் கவித்திறனால் எங்கள் மனம்கட்டிப்போட்டு விட்டீர். மீராவின் வசம் கண்ணன் சொக்குகிறாரோ இல்லையோ, தங்கள் கவிதைத் தமிழின் வசம் நாங்கள் சொக்கிவிட்டோம். பாராட்டுகள் கலைவேந்தன். தொடர்ந்து படையுங்கள் இனிய காதற்கானங்களை.

ஜானகி
17-09-2012, 01:49 AM
மீராவின் பார்வையிலே, கண்ணன் ஒருவன் தான் நாயகன்... மற்ற ஜீவராசிகள் அனைத்துமே அவனது நாயகிகள்தான்...மிக உயர்ந்த தத்துவம் இது....அதனை வெளிக்கொணர்கிறது உங்கள் கவிதை வரிகள்.
நன்றி.

மதி
17-09-2012, 05:46 AM
ஐம்புலனும் கண்ணனின் சிந்தையிலேயே லயித்திருக்க அவன் மேல் கொண்ட அதீத காதல் என்னும் பக்தி அல்லது பக்தி என்னும் காதலின் விளைவாய் விழுந்தனவோ மீராவின் கண்ணன் கவிப்பூக்கள். அனைத்து பூக்களுமே மாலையாய் கோர்த்து மீரா கண்ணனுக்கு தன் அன்பால் இடுகிறாள்.

அழகுதமிழ் சொட்ட சொட்ட வடித்துள்ள கவிதைகளுக்கு நன்றி கலைவேந்தரே.

ஆதி
17-09-2012, 06:08 AM
http://2.bp.blogspot.com/_7oR06qBoGZk/TUGLo8g7UnI/AAAAAAAAAWU/yK94H7iKm-8/s1600/f2sMirabai.jpg

95.
வெண்ணெயுண் டேநீயுன் வாய்துடைத்த போதும்
கண்ணிலே காதலைக் காட்டி நின்றபோதும்
மண்ணை யள்ளிநீ மகிழ்ந்துண்ட போதும்
பெண்ணிவள் காதலை அறிந்தாயோ கண்ணா..!

இந்த கவிதைக்குள் ஒரு அழகான விடயம் ஒளிந்திருக்கிறது

இது வெறும் காதல் பாடலாக மட்டுமே வெளிப்படவில்லை

மீரா கண்ணனின் ஒவ்வொரு பிராயத்திலும் அவனுடன் வாழ்ந்து வளர்ந்து வருதலையும் இது குறிக்கிறது

கண்ணன் வெண்ணை உண்டதும் மண்ணை தின்றது சிறு பிராயத்தில் அந்த தருணத்திலும் என் காதலை அறிந்தாயா கண்ணா என்பது அவனுடம் அவள் அந்த வாழ்வை வாழ்கிறாள் என்பதையும் குறிக்கிறது அல்லது கண்ணன் தண்ணுடன் வாழ்கிறான் என்பதௌ குறிக்கிறது

மிகவும் லயிக்க வைத்த பாடல் ஐயா

வாழ்த்துக்கள் ஐயா