PDA

View Full Version : வணக்கம்

செழியன்
22-06-2008, 03:06 PM
அன்பை அள்ளி தெளிக்கும் மன்ற உறவுகளே..
வணக்கம்
யான் செழியன். ஒரு இரசிகன். இந்த மன்ற பூந்தோட்டத்தில் பூக்களாக பூத்து குலுங்கும் உங்கள் பதிவுகளை சற்று நின்று முகர்ந்தும் ,இனிக்கும் போது அதனை நுகர்ந்தும் செல்லும் ஒரு இரசிகன். என்னையும் உங்கள் பூந்தோட்டதினுல் சேர்த்துக்கொள்ளுங்கள் பூச்செடியாக அல்ல, தேனை திருடும் ஒரு தேனியாக
நன்றி
செழியன்

சூரியன்
22-06-2008, 03:25 PM
வாருங்கள் செழியன் தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
மன்றத்துடன் இணைந்திருங்கள்.

செழியன்
22-06-2008, 03:54 PM
நன்றி
சூரியன் :natur008:
மங்கள விளக்கேற்றி வரவேற்பது
தினத்தையே
என்னையும் இங்கு வரவேற்றதுக்கு :medium-smiley-065:
நன்றி

SathyaThirunavukkarasu
22-06-2008, 04:05 PM
வாருங்கள் செழியன் வரவு நல்வரவாகட்டும்

செழியன்
22-06-2008, 04:07 PM
வாருங்கள் செழியன்..வரவேற்புகள்..!
உங்களை பற்றி இன்னும் சற்று கூடுதல் விபரம் தரலாமே?

நன்றி கிஷோர்
என்னை பற்றி
தொழில் ஊர் சுற்றுவது(நிஜமாதான்)
அதனால் வதிவிடம் யாதுமூரே யாவரும் கேளீர்.
முக்கியமான ஒன்று தமிழனிடம் தமிழிலே பேசும் தமிழன்

செழியன்
22-06-2008, 04:53 PM
வாருங்கள் செழியன் வரவு நல்வரவாகட்டும்

நன்றி சத்யா திருநாவுக்கரசு

சத்யா நீங்கள் உங்கள் திருநாவுக்கரசா?

அறிஞர்
23-06-2008, 01:50 AM
வாருங்கள் அன்பரே..

மன்ற விதிமுறைகளை.... சரியாக படித்து.... அதின் படி... பல்லாயிரம் பதிவுகளை கொடுங்கள்...

ஓவியன்
23-06-2008, 02:00 AM
வாருங்கள் செழியன், பூக்களை நுகர்வதுடன் அந்தப் பூக்களின் படைப்பாளிகளையும் தட்டிக் கொடுங்கள்....

நீங்களும் ஒரு பூ மரமாக மாறுவீர்கள்..........!!! :)

சிவா.ஜி
23-06-2008, 04:31 AM
அழகு தமிழில் எழுதி, அதனோடு தாய்த்தமிழில் என்றும் உரையாடுவேன் என்று சொல்லும் உங்களை இந்த தமிழ்வாழும் மன்றத்துக்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தேனியாகவும் இருந்து தேனான பதிவுகளையும் தரவேண்டும். வாழ்த்துகள் செழியன்.

lolluvathiyar
23-06-2008, 04:46 AM
வாங்க செழியன் இங்கு தேன் பருக வந்தவர்கள் தேன் உற்பத்தியும் செய்வார்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பங்களியுங்கள்

அனுராகவன்
23-06-2008, 04:49 AM
வாருங்கள் செழியன்.!!

மன்றத்தின் சார்பில் தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி..!!

செல்வா
23-06-2008, 10:19 AM
வாருங்கள் செழியன்.... மன்றில் தங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

Narathar
23-06-2008, 04:26 PM
அன்பு செழியனை மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

மனோஜ்
23-06-2008, 04:41 PM
வருக செழியன் வாழ்த்துக்கள்
தொடர்ந்து மன்றம் வாருங்கள்

செழியன்
23-06-2008, 05:50 PM
வாருங்கள் அன்பரே..

மன்ற விதிமுறைகளை.... சரியாக படித்து.... அதின் படி... பல்லாயிரம் பதிவுகளை கொடுங்கள்...

நன்றி அறிஞர் .இனிதான் மன்ற விதிகளை படிக்க வேண்டும். :icon_b:

செழியன்
23-06-2008, 06:02 PM
வாருங்கள் செழியன், பூக்களை நுகர்வதுடன் அந்தப் பூக்களின் படைப்பாளிகளையும் தட்டிக் கொடுங்கள்....

நீங்களும் ஒரு பூ மரமாக மாறுவீர்கள்..........!!! :)

ஆமா மறந்துட்டனில்ல.
நன்றி ஓவியன்
உங்களின் பெயரில் ஏன் நிறைய ஆச்சரியங்கள்
ஓ!!!+வியன்(வியப்பு= பெருமை)(விளையாட்டாக:D)

செழியன்
23-06-2008, 06:23 PM
அழகு தமிழில் எழுதி, அதனோடு தாய்த்தமிழில் என்றும் உரையாடுவேன் என்று சொல்லும் உங்களை இந்த தமிழ்வாழும் மன்றத்துக்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தேனியாகவும் இருந்து தேனான பதிவுகளையும் தரவேண்டும். வாழ்த்துகள் செழியன்.

நன்றி அண்ணா.நான் தாயகத்தில் இருக்கும் போது தமிழை இவ்வளவு நேசித்ததில்லை.ஆனால் விட்டு விலகிய போதுதான் புரிந்தது நமது மொழியின் பெ(அ)ருமை.
ஆனால் தமிழின் பெருமையை தமிழ்நாட்டிற்கு வந்தபோதுதான் உணர்ந்தேன். பெயரில் தான் தமிழ் உள்ளது ,மக்களிடையே இல்லை என்பதை(கடந்த மாசியில் இரண்டு வாரம் சென்னையில் மட்டும்தான் தங்கியிருந்தேன்).
கடைகளின் பெயர்ப்பலகையை பார்க்கும்போது இன்னும் வியப்பாக இருந்தது. ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதியிருந்தார்கள்(ராஜா கூல் பார். இது எப்படி இருக்குன்ன ராஜா கூல், இங்கே பார் என்ற மாதிரி) . அதிலே வடமொழி எழுத்துக்கள் எல்லம் தாராளமாக புழக்கத்தில்(ஸ்கூல்)
மன்னிக்கவும் அண்ணா , எதோ ஒரு அதங்கம்.

என்றோ படித்த நகைச்சுவை.
எந்த ஒரு நாட்டு மக்களும் பிற நாட்டில் சந்தித்தாலும் தங்கள் தாய்மொழியில் பேசுவார்கள்,ஆனால் உலகில் ஒரு இடத்தில் உள்ள மக்கள் மட்டும் தங்கள் தாய்நாட்டில் சந்தித்தாலும் ஆங்கிலத்தில் பேசுவார்கள்(இருவருக்கும் தாய்மொழி தெரியும்).அவர்கள் யார் தெரியுமா?
நம்ம தமிழ்நாட்டுகாரங்கதான்பா(யாரையும் வருத்தப்படுத்தும் நோக்கோடு அல்ல)

செழியன்
23-06-2008, 06:27 PM
வாங்க செழியன் இங்கு தேன் பருக வந்தவர்கள் தேன் உற்பத்தியும் செய்வார்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பங்களியுங்கள்

முயற்சிக்கிறேன் வாத்தியாரே. உறவுகள் முன்னே நடை பயலாமல், வேறெங்கே பழகுவது?
நன்றி

crisho
23-06-2008, 06:28 PM
ஹ ஹா ஹா....

தமிழ் பேசும் மக்களிடம் குடியிருக்கும் செழியனை... தமிழ் மன்றம் இணைந்திருந்து சிறப்பிக்க... வரவேற்கிறேன்...

செழியன்
23-06-2008, 06:30 PM
வாருங்கள் செழியன்.!!

மன்றத்தின் சார்பில் தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி..!!

நன்றி சகோதரி(ரா?). உங்கள் வரவேற்புகளை பார்க்கும் போது மிகமகிழ்ச்சியாக உள்ளது

செழியன்
23-06-2008, 06:34 PM
வாருங்கள் செழியன்.... மன்றில் தங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

நன்றி அண்ணா. இத்தனை உறவுகள் என்னை வரவேற்கும் என எதிர்பார்க்கவேவில்லை அண்ணா . ரொம்ப ஆணந்தமாக இருக்கின்றது .
நன்றி

செழியன்
23-06-2008, 06:38 PM
அன்பு செழியனை மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

மகிச்சியுடன் கூடிய நன்றி அண்ணா
நாரதர் வழி நாரதரோ?(நாரதர்= நார்+அதர், அதர்=வழி)

செழியன்
23-06-2008, 06:40 PM
வருக செழியன் வாழ்த்துக்கள்
தொடர்ந்து மன்றம் வாருங்கள்

நன்றி மனோஜ் அண்ணா. இங்கே நான் தனித்திருப்பதால் ,நிச்சயமாக மன்ற உறவுகளுடன் இணைந்திருப்பேன்.நன்றி

செழியன்
23-06-2008, 06:44 PM
ஹ ஹா ஹா....

தமிழ் பேசும் மக்களிடம் குடியிருக்கும் செழியனை... தமிழ் மன்றம் இணைந்திருந்து சிறப்பிக்க... வரவேற்கிறேன்...

நன்றி Crisho
மன்னிக்கவும் ,தமிழ் பேசும் மக்களை விட்டு விலகி இருப்பதால்தான் தமிழ் மேல் இவ்வளவு பாசம். எதுவும் எட்ட இருந்தால் தான் இனிக்குமோ?

அன்புரசிகன்
28-06-2008, 09:27 AM
வருக வருக செழியன். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

சுகந்தப்ரீதன்
28-06-2008, 02:26 PM
வாருங்கள் செழியன்..!!

உங்களை மன்றத்தில் வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே..!!

தொடர்ந்து இணைந்திருந்து மன்ற பூங்காவில் தேனுண்டு மகிழ்ந்திருங்கள்..!!

செழியன்
30-06-2008, 05:35 PM
வருக வருக செழியன். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நன்றி அன்புரசிகன்.

செழியன்
30-06-2008, 05:37 PM
வாருங்கள் செழியன்..!!

உங்களை மன்றத்தில் வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே..!!

தொடர்ந்து இணைந்திருந்து மன்ற பூங்காவில் தேனுண்டு மகிழ்ந்திருங்கள்..!!

நன்றி சுகந்தப்ரீதன். மன்ற உறவுகளை காணும் பொழுது மனம் ஆனந்தம் கொள்கிறது.

அமரன்
02-07-2008, 08:06 AM
பூஞ்செடிகளின் பெருக்கத்துக்கு தேனிகளும் அவசியம்.
பூஞ்செடியாகத்தான் இருக்க வேண்டுமென்பது அநாவசியம்.
கொஞ்சும் தமிழில் உங்கள் அறிமுகம் செய்கிறது வசியம்.
நீயும் நானும் டமில்.. கொஞ்சம் கொஞ்சம் டமில்.. இது பலர் கட்சி.
நான் உங்க கட்சி.. மாறட்டும் காட்சி..
வாழ்த்தும் வரவேற்பும்

செழியன்
02-07-2008, 10:16 AM

நன்றி அமரன்.

நீயும் நானும் டமில்.. கொஞ்சம் கொஞ்சம் டமில்.. இதை நான் எங்கே கண்டேன் தெரியுமா? டமில் நாட்டில்...........

விகடன்
02-07-2008, 10:54 AM
வாருங்கள் செழியன்,
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. மன்றத்தினுள்ளே ஓடித்திரிந்ததால் வாயிற்கதவுப் பக்கம் சில காலம் வராமல் இருந்துவிட்டேன்.
இருந்தாலும், இப்ப வரவேற்கின்றான் உங்களை அன்புடன்.

பாலகன்
02-07-2008, 11:23 AM
என்னையும் உங்கள் பூந்தோட்டதினுல் சேர்த்துக்கொள்ளுங்கள் பூச்செடியாக அல்ல, தேனை திருடும் ஒரு தேனியாக
நன்றி
செழியன்

வாருங்கள் செழியன், வந்து தேனை உரிமையுடன் பருகுங்கள், ஏன் திருடவேன்டும்.............

நீங்கள் தேன் திருடும் வண்டும் அல்ல, மன்றமோ, வந்தவர்களுக்கு தேனை தரமறுக்கும் பூவும் அல்ல ஆசைதீர குடியுங்கள் தேனை..................

நீங்களும் பூக்கலாம் நாங்களும் பருகுவோம்ல..........

அதுதுதுதுதுதுதுது

அன்புடன்
பில்லா

அக்னி
07-07-2008, 09:57 PM
அன்பை அள்ளி தெளிக்கும் மன்ற உறவுகளே..
வணக்கம்
யான் செழியன்.
வருக செழியன் அவர்களே...
அழகான அறிமுகம். சுவைத்தேன்.
பூவில் தேன் குறையலாம். மன்றத்தில் தமிழ்த்தேன் குறையாது.
தேனி சுவைப்பது, இனிமையாய், முழுமையாய் மீளத் தருவதற்கே.
என்றும் சுவைத்திருங்கள். சுவைக்கவும் தந்திடுங்கள்.
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

ஷீ-நிசி
08-07-2008, 01:21 AM
வரவேற்புகளும்! வாழ்த்துக்களும்! செழியன் அவர்களே!

ஓவியா
17-07-2008, 11:58 PM
அன்பை அள்ளி தெளிக்கும் மன்ற உறவுகளே..
வணக்கம்
யான் செழியன். ஒரு இரசிகன். இந்த மன்ற பூந்தோட்டத்தில் பூக்களாக பூத்து குலுங்கும் உங்கள் பதிவுகளை சற்று நின்று முகர்ந்தும் ,இனிக்கும் போது அதனை நுகர்ந்தும் செல்லும் ஒரு இரசிகன். என்னையும் உங்கள் பூந்தோட்டதினுல் சேர்த்துக்கொள்ளுங்கள் பூச்செடியாக அல்ல, தேனை திருடும் ஒரு தேனியாக
நன்றி
செழியன்

வணக்கம் செழியன்,

உங்கள் வரவு நல்வரவாகுக.

அழகிய தமிழ். உங்கள் ரசனைக்கு தகுந்தாற்ப்போல் இங்கு ரகசியம் குவிந்து கிடக்கிறது. படித்து மகிழுங்கள்.