PDA

View Full Version : 21ம் நூற்றாண்டு காதலிகள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
22-06-2008, 07:20 AM
உன் சுபச்செய்தி ஒன்றை
எடுத்துவிட
என் துக்க நேரத்தை
துலாவுகிறாய்.

என் துக்கத்தை
பகிர்ந்து கொண்டால்
தலைப்பை மாற்றச்சொல்கிறாய்

ஐந்து நிமிடம் காத்துவிட்டு
ஐம்பது நிமிடம்
காத்திருந்ததாய் சொல்கிறாய்

இதே தவறு
உன் புறத்தில் இருந்தால்
காத்திருந்ததில்
குடியா முழுகிப்போச்சு என்கிறாய்.

உன் வரலாற்றை மட்டுமின்றி
ரேகா மாலா சந்தியா
அனைவரின் வரலாறையும் கூறி
“ம” கொட்டச்சொல்கிறாய்

பூக்காரியிடம் கூட
அடிமாட்டு விலைக்கு
பேரம் பேசும் நீ
நான் புழங்குவதில்
விலைகுறைந்த
பொருளை கண்டுவிட்டால்
மகா கஞ்சனென்கிறாய்

நடுநிசி வரை
யார் யாருக்கோ
குறுந்தகவல் அனுப்பும் நீ
பேருந்து நெரிசலில்
என்னை பார்த்துவிட்டால்
சந்தேகம் கொள்கிறாய்

எனக்கு பிடித்தவைகள்
உனக்கு பிடிக்காத பட்சத்தில்
என்ன ரசனையோ என்று
கேலி செய்கிறாய்
உனக்கு பிடித்தவைகள்
எனக்கு பிடிக்காத பட்சத்தில்
கழுதைக்கு தெரியுமா
கற்பூர வாசனை என்கிறாய்

காதலுக்கு கண்கள் மட்டுமல்ல
மனதும் இருக்ககூடாதென்கிறாய்
எனக்கு தெரிந்தவரை
உன் நிபந்தனைகள் படி
உன்னை காதலிக்க
என் வீட்டு
அல்சேஷியனை தவிர
ஒரு ஜீவன் இருப்பதாய்
எனக்கு தெரியவில்லை.

எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in

சிவா.ஜி
22-06-2008, 12:29 PM
அல்ஷேசனுக்குக் கூட தனியான விருப்பு வெறுப்புகள் உண்டு. இந்தக் காதலிக்குத் தேவை ஒரு முன் கூட்டியே நிரல் எழுதப்பட்ட ரோபோ தான்.
சிந்திக்கும் எந்த உயிரும் தோதுபடாது.

பாவம் அந்த காதலன்(இன்னும் அந்த காதல் தொடரும் பட்சத்தில்)

எளிய வரிகள். அழகான கட்டமைப்பு. அருமையான கவிதை. வாழ்த்துகள் ஜுனைத்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
22-06-2008, 12:56 PM
பாராட்டுக்கு நன்றி சிவா அவர்களே.

இதயம்
22-06-2008, 01:05 PM
காதலி என்று சொல்லிக்கொள்பவர்களின் பண்புகள் தான் காலத்திற்கேற்றார் போல் மாறுகிறதே தவிர, காதல் ஆண்டாண்டு காலமாய் அதன் தூய வடிவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதை புரிந்து, உணர்ந்து பகிர்ந்து கொள்வதில் தான் முரண்பாடு இக்கால காதலர்களிடம்..!! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எந்த பண்பும் காதலியிடம் இருப்பதற்கான தகுதி படைத்தவை அல்ல..!! "காதலியிடம்" என்ற வார்த்தைக்கு முன் "உண்மையான" என்ற வார்த்தையை சேர்க்க என்னால் முடியவில்லை. காதல் என்பதே உண்மை தான் என்கிற போது, அதென்ன "உண்மையான காதல்"..?!! காலம் மாற்றிய அர்த்தங்களில் "காதல்" என்ற வார்த்தையும் சிக்கிக்கொண்டதோ..? சுயநலத்தையே சுகமாக கருதும் இது போன்ற ஒரு பெண்ணை காதலிப்பதை விட நீங்கள் சொன்ன அல்சேஷன் எவ்வளவோ மேல் தான்..!!

காதல் என்ற போர்வை போர்த்திய சுயநல பேயை துகிலுறிந்திருக்கிறீர்கள்..!! பாராட்டுக்கள்..!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
22-06-2008, 02:34 PM
தங்கள் பதிலுக்கு நன்றி இதயம்.