PDA

View Full Version : கவிதையாய் ஒரு கதை..!!



பூமகள்
21-06-2008, 06:54 PM
முன்குறிப்பு:

மன்றத்தில் எழுத்துலகின் ஆன்றோர்களே.. சான்றோர்களே..!!:icon_rollout::icon_rollout:

ஒரு வித்தியாசமான முயற்சியில் பூ எடுத்து வைக்கும் முதல் சுவடு இக்க(வி)தை..!! :icon_ush::icon_ush:

இங்கே.. கவிதையைத் தேடினீர்களானாலும்.. கதையைத் தேடினீர்களானாலும் இரண்டில் பாதியேனும் கிடைக்குமென்ற நம்பிக்கையில்.. பதிக்கிறேன்.. :icon_rollout::icon_rollout:

உங்களின் பொன்னான நேரத்தை இப்பதிவைப் படிக்கச் செலவிடப் போவதற்கு முன்கூட்டிய நன்றிகள்..! :)
---------------------------------------------------------------

கவிதையாய் ஒரு கதை..!


சொல்லாமல் என்றோ
சென்றதை..
மறக்காமல் தன்நாசி
சிவக்க... காத்திருந்தது..
வான வில்(லி)..

எங்கோ பெய்யும்
மழை தாண்டி
ஏதோ ஈரம்
அடிமனம் கசியவைத்தது..

வெட்டுக் கிளி
வெட்டாயிலைகள்..
தன் அரையுடல்
ஆடையுடன்..
வேருக்கு விருந்தாக்கும்
முனைப்பில்..

கவனிப்பதை
கவனிக்காதது போன்று
கவனித்தன..
தோள் சாய்ந்து சிரிக்கும்..
மலர்மொட்டுகள்..

கண்ணாமூச்சு ஆடும்
கதம்ப பூக்களின் மேல்
கவனம் போகவில்லை..

இத்தனை வருட
இல்லறத்தில்..

இரும்புக்கரம் எழுந்து
இதுவரை படிந்ததில்லை..
படியுமளவு நான்
பயணித்ததுமில்லை..

எழில் என் வாழ்வில்
வந்த பின்..
பொழிலுக்குப்
பஞ்சமில்லை..

மூன்றாண்டுகால
இணையோட்டத்தில்..
ஓரெண்ணம்..
ஓர் வாக்கென
இருவர் ஒருவராக..

இன்று மட்டும்
ஏன் இப்படியெல்லாம்?

மென் பொருளில்..
மென்மையிழக்கும்..
கலையின்
கண்கள் இறுக்க
மூடித்திறந்தன..

உறுத்தும் வலி
கண்ணிலா மனத்திலா??

காலையில் வெடித்த
கலவரம்..
கண் முன் வந்துபோனது..

ஆத்திரம் தாளாமல்
அடி வைத்த கை..
இன்னும் சிவந்தபடியே...

ச்சே.. மனம் திட்டி
மாண்டது...
எத்தனை வலித்திருக்கும்..
எழிலுக்கு...!!

நன்கு புரிந்தபின்..
நாலாமவர் போல்
சிந்தை சிதற
என்ன காரணம்??

புரிதல் பிரச்சனையா..
புரிவித்ததில் பிரச்சனையா..
புரியாமலே கலை புலம்பியபடி..
இரு நாட்களாக..
இல்லம் வர தாமதமான
இடைக்கால பணிப் பளு..

அலுவலகத் தோழி..
அவசரத்தில் உதவி கேட்க..
அழைத்துச் செல்ல வேண்டிய
கட்டாயச் சூழல்..

தாமிருக்கும் இருக்கை..
தனக்குமட்டுமென
பாசப் பைந்தமிழ்
எழிலின் குரல்..
ஓரத்தில் ஒலித்தது..

சூழலும் காரணமும்..
சுத்தி வளைத்து
இருதலைக் கொள்ளி
எறும்பாக்கியது..

காட்சிகள் மாறாமல்..
துணையுடன் பகிர்ந்த பின்பும்..

பாசத்தில் வார்த்தைகள்
தடிக்கத் தவறவில்லை..

தடித்த வார்த்தைகள்..
தன் கோடு தாண்டுகையில்
கையும் கொஞ்சம் நீண்டு
தணிந்தது..

பாச எல்லையும்
சந்தேக எல்லையும்
அருகருகோ??

குழப்பத்தில் மனம்..
குழந்தைகள் ஓட்டத்தை
பார்த்து ஓடாதிருந்தது..

ஏழு தாண்டி..
அரை கூட்ட
காத்திருந்தது காலம்..

கலங்கும் நெஞ்சுடைந்து
காயமுற்று நானிருக்கையில்..
கயலவள் தோழியானாள்..

எட்டு வைத்து
ஏற்றம் காண..
தட்டிக் கொடுக்கும்
தங்க தோழமை..

தங்கம் கூட
உரசினால் தான்
உண்மையென
ஊர்ஜிதமாம்..

மென் கட்டிட வல்லுநராக
என் தரமுயர..
அழைப்பின்றி விருந்தினராக..
வந்து சேர்ந்தது..
பணிப்பளுவும்..
நேரப் பஞ்சமும்..

நாளில் முக்காலை
அலுவலகம் விழுங்க..
கால் பங்கில்
குடித்தனம் செய்ய..
தூங்கவா..?
தன்னிலை விளக்கம்
தாக்கல் செய்யவா??

எண்ணவோட்டம்
எங்கோ போக
கலைத்திருந்த..
பூக்களோடு
கலையும் சேர்ந்திருந்தார்..

மெல்ல மாயும்
இருள் தோண்டி..
வெளிச்சம் வர துவங்கியது
மனத்தில்..

நேரவாளுமையும்
திறந்த மனமும்..
தெளிந்த சிந்தையும்
துணையாக்கும் வழி
கலை மனம் அடைந்தன..

களைத்த முகம்..
களையானது..


அன்பின் அரிச்சுவடை
அறியப்படுத்த..

பூக்களோடு கைநிறைய..
புன்னகையும்..
சேர்த்து எழிலோடு
தொடுக்க..
எத்தனிக்க..

துவங்கியது..
கலைப்பயணம்..!!

இளசு
21-06-2008, 07:22 PM
முதல் வாழ்த்துகள் இந்த அண்ணனுடையதாக இருக்கட்டும் பாமகளே!


நல்ல முயற்சி..மொழி ஆளுமையின் அடுத்த வளர்ச்சி..!

நேர ஆளுமை - திறந்த மனப்பான்மை..
இவையே பணி/இல்லப் பயணத்தின் இருசக்கரங்கள்..

இனி கலைப்பயணம் சீராய் இருக்கும்!

உன் வர்ணனைகளின் எழில் போல் எழிலின் வாழ்வும் இருக்கும்!

-----------------

இவ்வகைப் படைப்புகளை மன்றத்தில் பதிய
புதுப்பகுதி தொடங்கலாமா என ஆலோசிக்கலாம் சொந்தங்களே!

பூமகள்
21-06-2008, 07:28 PM
முதல் வாழ்த்துகள் இந்த அண்ணனுடையதாக இருக்கட்டும் பாமகளே!
நேர ஆளுமை - திறந்த மனப்பான்மை..
இவையே பணி/இல்லப் பயணத்தின் இருசக்கரங்கள்..
மனம் நெகிழ்ந்தேன் பெரியண்ணா..!!
முதல் வாழ்த்துகளே.. முத்தானவரிடமிருந்து வந்தது கண்டு எம்பி ஒரு கணம் குதித்தே விட்டேன்..!! :)

புத்துணர்ச்சி பொங்க.. மகிழ்கிறேன்..! :icon_rollout::icon_rollout:

இவ்வகைப் படைப்புகளை மன்றத்தில் பதிய
புதுப்பகுதி தொடங்கலாமா என ஆலோசிக்கலாம் சொந்தங்களே!
என் படைப்பு இப்படியொரு ஆலோசனையை உருவாக்க உதவியது குறித்து மகிழ்ச்சி வெள்ளமென பாய்கிறது பெரியண்ணா..!!

முதல் பதிவிட்ட முத்து அண்ணலுக்கு தங்கையின் அன்பு மற்றும் நன்றிகள்..!! :)

சிவா.ஜி
22-06-2008, 04:29 AM
பூ(பா)மகளின் அடுத்த கட்ட பயணம் எழிலோடு தொடங்கியிருக்கிறது. கதை சொல்லும் கவிதை. நல்ல முயற்சி. வார்த்தைகள் வசப்பட்டு நிற்கின்றன. உறுத்தாத வர்ணனைகள், நிறுத்தாத கற்பனைகள் எழிலுக்கு எழில் சேர்க்கிறது.

கலைத்த முகம்..
களையானது..
இது கலைத்த முகமா? களைத்த முகமா?

கடைசிவரி குழப்புகிறது. எழிலோடு கலைப்பயனமா...இல்லை கலையோடா?
(கலை அலுவலகத் தோழிதானே)

பூக்களோடு கைநிறைய..
புன்னகையும்..
சேர்த்துத் எழிலோடு
தொடுக்க..
எத்தனிக்க..

(நீக்க வேண்டுமே)

வாழ்த்துகள் பூ. நல்ல முயற்சிக்கு மன்றம் என்றும் உடனிருக்கும்.

பூமகள்
22-06-2008, 04:38 AM
ரொம்ப நன்றிகள் சிவா அண்ணா..!!
எழுத்துப் பிழையை மாற்றிவிட்டேன். :)


கடைசிவரி குழப்புகிறது. எழிலோடு கலைப்பயனமா...இல்லை கலையோடா?
(கலை அலுவலகத் தோழிதானே)
:sprachlos020::sprachlos020: :eek::eek:
அச்சச்சோ... கதையின் பாத்திரங்களின் பெயரில் குழப்பமா??!! :traurig001::traurig001:

அப்போ ஒரு போட்டியே வைக்கலாம் போல இருக்கே...!! :rolleyes::icon_rollout:

சரி.. இந்த கேள்விகளுக்கு பதில் தெரியுதா பாருங்க...!!:icon_ush::rolleyes:

1. கதையில் எத்தனை கதாப்பாத்திரங்கள்?
2. கதாப்பாத்திரங்களின் பெயர்கள் என்னென்ன?
3. கதையின் பின்புலத்தில் சொல்லப்பட்ட சூழல் என்ன?

இதுக்கு பதில் சரியா சொல்லீட்டிங்கன்னா... என் கதை பாஸ்..!! :icon_b::icon_b:

pasaam
22-06-2008, 05:07 AM
கவிதையாய் ஒரு கதை..!

”பாச எல்லையும்
சந்தேக எல்லையும்
அருகருகோ??”

ஆமாம் மகளே! மானுடவாழ்வெனும் பாலத்தின் இருகரையில் - ஒரு பக்கம் பாசம் - மறுபக்கம் அந்தபாசம் மாறிடுமோ என்ற சந்தேகம். இது தான் யதார்த்தம். வாழ்த்துக்கள் மகளே.
மேலும் தங்கள் ஆக்கங்கள் பெருகிட,
என்றென்றும் வாழ்த்துக்களுடன்,

பாசம்.

பூமகள்
22-06-2008, 05:23 AM
ஹை ஹை..!! :huepfen024::huepfen024:
என்னோட பதிவின் ஆணி வேர் கண்டுபிடிச்சிட்டாங்க..!!:4_1_8::thumbsup::icon_shades::innocent0002:

ரொம்ப சரியா சொன்னீங்க பாசமப்பா...!!:4_1_8::080402cool_prv:
ஊக்கத்துக்கு மிகுந்த நன்றிகள்..!! :smilie_flags_kl::icon_03:

சாம்பவி
22-06-2008, 02:50 PM
தன்னிலை தடுமாறி..
படர்க்கையாய் படர்கையில்
முன்னிலை பின்னடைகிறதே.. :( ... !

பூமகள்
23-06-2008, 07:12 AM
நன்றி சாம்பவி..!!
கவனத்தில் கொள்கிறேன்..!!

திருத்திக் கொள்கிறேன். :)

அறிஞர்
23-06-2008, 02:03 PM
வாழ்த்துக்கள் பூமகள்....

வித்தியாசனமான முயற்சியில்
புதிய கலைப்பயணம்.....
சிறப்பாய் தொடரட்டும்...

சுகந்தப்ரீதன்
28-06-2008, 03:12 PM
முதலில் புதுமையாய் எதையாவது செய்ய நினைக்கும் உன் எண்ணத்திற்க்கு எனது வாழ்த்தும் பாராட்டும் பூ..!!

தலைப்பிற்க்கு ஏற்றார் போலவே பதிவும் இருப்பது மனதுக்கு நெகிழவை தருகிறது..!!

அன்பு அதிகரிக்கும்போது அங்கே ஆளுமையும் அதிகரிப்பது அனைவரின் வாழ்விலும் நிகழும் நிகழ்வே..!! அதை கவிதை வடிவில் கதையாய் சொன்ன விதம் புதுமை..!!

வாழ்த்துக்கள்..பூ..தொடரட்டும் உன் முயற்சிகள் மென்மேலும்..!!

mukilan
30-06-2008, 03:25 PM
கலை- கணவன்

எழில் -மனைவி

கயல்- தோழி

கதையில் மொத்தமாக மூன்று பாத்திரங்கள். ஆணும் பெண்ணும் இணைந்தே பணியாற்றும் அலுவலகச் சூழலில் ஆண்-பெண் நட்பை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லது புரியுமாறு செய்தல் வேண்டும். சந்தேகக் கோடு சந்தோசக் கேடு என்பதை புரிந்தால் இல்லறம் நல்லறமாம்.

என்ன தங்கையே நீ பாசாயிட்டியா? இல்லை நான் தான் இன்னமும் புரியாத கடைசிப் பெஞ்சு மக்குப் பயலா இருக்கேனா?

பூமகள்
30-06-2008, 03:32 PM
கலை- கணவன்
எழில் -மனைவி
கயல்- தோழி
கதையில் மொத்தமாக மூன்று பாத்திரங்கள்.

என்ன தங்கையே நீ பாசாயிட்டியா? இல்லை நான் தான் இன்னமும் புரியாத கடைசிப் பெஞ்சு மக்குப் பயலா இருக்கேனா?
அண்ணே... கையைக் கொடுங்க..!!
அசத்திட்டீங்க போங்க..!! :icon_b::icon_b::icon_b:

நான் உங்களைப் பாஸாக்குவதா??!! :eek::eek::eek:
என்னைப் பாஸாக்கிய புண்ணியவானே... :traurig001::traurig001:
நீங்க தான் இனி எனக்கு வாத்தியார்...!! :icon_rollout::icon_rollout:

கலக்கிட்டீங்க போங்க..!! :rolleyes::cool:

நன்றிகள் முகில்ஸ் அண்ணா..!! :) (அப்பாடா.. பூவு பாஸாயிடிச்சி.. மக்கா... இனியாவது கதை படிச்சி புரியுதான்னு சொல்லுங்கோ...!!:icon_ush::rolleyes:)