PDA

View Full Version : புற்களின் விளையாட்டு



நாகரா
21-06-2008, 01:52 PM
கண்ணுக்குத் தெரியாத நூலால்
தும்பிகளைப் பறக்கவிட்டு
விளையாடும் புற்கள்

பென்ஸ்
24-06-2008, 02:51 AM
மேலேழும்பி செல்ல முயற்ச்சிக்கும் தும்பியை
பின்னும் பின்னும் கீழெ இழுத்து...
தன் கையில் தாங்கி....
ரசித்து...
மீண்டும் பறக்கவிட்டு....

இயற்க்கையை ரசிக்க
ஒரு மூன்றாம் கண் வேண்டும் அல்லவா நாகரா அவர்களே...
உங்கள் கவிதை வழியாக அது எனக்கும்....

நன்றி பல...

shaktii
24-06-2008, 03:20 AM
கண்ணுக்குத் தெரியாத நூலால்
தும்பிகளைப் பறக்கவிட்டு
விளையாடும் புற்கள்


பொம்மலாட்டத்தின் சூத்திரதாரி புல்லா? :confused:
சூட்சுமம் புரியவில்லையே குரு... விளக்குவீர்களா

நாகரா
30-06-2008, 06:25 AM
உம் அழகிய பின்னூட்டத்துக்கு நன்றி பென்ஸ்.

நாகரா
30-06-2008, 06:27 AM
பொம்மலாட்டத்தின் சூத்திரதாரி புல்லா? :confused:
சூட்சுமம் புரியவில்லையே குரு... விளக்குவீர்களா

சூட்சுமம் ஏதுமில்லை சக்தி, கற்பனையின் ஆடலே தவிர வேறேதுமில்லை. நன்றி