PDA

View Full Version : தலைப்பிடாதவைகள் 2

மதுரகன்
21-06-2008, 01:34 PM
நீ நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கலாம்
நமக்காக ஒருநாள் காலத்தால் வெளிப்படுத்தப்படும்
அது இறைவனின் ஆசிபெற்று உருவானது
வசந்தகாலங்களால் கருவாக சுமக்கப்பட்டது
காந்தருவர்களே நெகிழும்படியாக உன்கைகளைப்பற்றி
உன் புன்னகை கலந்த உதடுகளில் முத்தம் கொடுப்பேன்.
ஜென்ம ஜென்மங்களாக என்னைப்பற்றியிருந்த பீடை
அப்போது விலகியிருக்கும்,
மெல்லத்திறக்கப்பட்ட உன் மனத்தின் சாளரங்களைப்போல..

ஆதவா
21-06-2008, 01:56 PM

அருமை மதுரகன்...

இது இருபாலர் கவிதை. அது எனக்குறிப்பிடப்பட்டது காதல். தெய்வீக வார்த்தைகள் ஆங்காங்கே இருப்பதால் அந்தக் காதலும் தெய்வீகமாய்த் தென்படுகிறது. காந்தர்வர்கள் சிற்றின்பக் கிணற்றினுள் மூழ்கிக்கொண்டிருப்பவர்களாக புராணங்கள் கூறுகின்றன. அவர்களும் நெகிழும்படியான முத்தம் என்பது அழுத்தித் தரப்பட்டதாகக் கருதலாம். காதலியின் புன்னகை அவள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

அன்றுவரையிருந்த அவன் குறைகளெல்லாம் மெல்ல நீங்குகிறது..

அழகு மதுரகன்....

மதுரகன்
21-06-2008, 02:04 PM
அது எனக்குறிப்பிடப்பட்டது காதல்
எது எனக்குறிப்பிடப்பட்டது காதல் அல்ல அந்தக்குறிப்பிடப்பட்ட நாள்..
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ஆதவா..

ஷீ-நிசி
21-06-2008, 02:08 PM
மதுரகனுக்கு மீண்டும் ஒரு வரவேற்புகள்....

காதலன் காதலிக்கு விடை கொடுக்கும் நேரத்தில்
அவள் மனதில் எழும் கேள்விகளுக்கு கொடுக்கும் விடைகள்....
கவிதையாய்!!

வாழ்த்துக்கள் மதுரகன்!

தீபா
21-06-2008, 02:11 PM
அருமை மதுரகன்...

இது இருபாலர் கவிதை. அது எனக்குறிப்பிடப்பட்டது காதல். தெய்வீக வார்த்தைகள் ஆங்காங்கே இருப்பதால் அந்தக் காதலும் தெய்வீகமாய்த் தென்படுகிறது. காந்தர்வர்கள் சிற்றின்பக் கிணற்றினுள் மூழ்கிக்கொண்டிருப்பவர்களாக புராணங்கள் கூறுகின்றன. அவர்களும் நெகிழும்படியான முத்தம் என்பது அழுத்தித் தரப்பட்டதாகக் கருதலாம். காதலியின் புன்னகை அவள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

அன்றுவரையிருந்த அவன் குறைகளெல்லாம் மெல்ல நீங்குகிறது..

அழகு மதுரகன்....

ஆதவன், நீங்கள் ஒன்றை கவனிக்க மறந்துவீட்டிர். நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கலாம் என மதுரகன் சந்தேகம் ஏன் கேட்கிறார்? அப்படி என்றால் இல்லாமலும் போகலாம் என்ற அர்த்தமும் உண்டல்லவா? என்ன மதுரகன் நான் சொல்வது?

ஆதவா
21-06-2008, 02:16 PM
எது எனக்குறிப்பிடப்பட்டது காதல் அல்ல அந்தக்குறிப்பிடப்பட்ட நாள்..
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ஆதவா..

அது என்ற இடத்தில் காதலைப் பொருத்திப் பாருங்கள் மது. மிகச்சரியாக இருக்கும்.

காதல் இறைவனின் ஆசிபெற்று உருவானது, அது (காதல்) வசந்தகாலங்களால் கருவாக சுமக்கப்பட்டது...

முன்பு வெளிப்படுத்தப்படும் என்று என்று சொன்னது காதலே!! காதலே இருவருக்குள்ளும் வெளிப்படுகிறது.. அது கருவாக சுமந்து அதனை நீங்கள் முத்தமாக வெளியே கொடுக்கிறீர்கள்..

நாள் என்று சொன்னால், வரிகள் ஒத்துவரவில்லை என்பதே உண்மை.

ஆதவா
21-06-2008, 02:21 PM
மதுரகனுக்கு மீண்டும் ஒரு வரவேற்புகள்....

காதலன் காதலிக்கு விடை கொடுக்கும் நேரத்தில்
அவள் மனதில் எழும் கேள்விகளுக்கு கொடுக்கும் விடைகள்....
கவிதையாய்!!

வாழ்த்துக்கள் மதுரகன்!

கவிதை செல்லும் பாதை அப்படியில்லையே ஷீ!

தென்றல் சொன்னதைப் போல சந்தேகம் முதல் வரியில் கலந்து இருக்கிறது. உதடுகளில் முத்தம் கொடுப்பேன் என்பதும் உறுதியான வார்த்தையே தவிர கொடுக்கப்படவில்லை. அதாவது அவர் திடமாக நினைக்கிறாரே தவிர நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை அவர் எடுத்துக்காட்டவில்லை.

ஒரு அசாதாரணக் காதல் கவிதை இது. காத்திருத்தல் என்பது ஒரு பகுதியாக வந்து செல்கிறது..

மது, இதைப்பற்றிய உன் கருத்து?

ஆதவன், நீங்கள் ஒன்றை கவனிக்க மறந்துவீட்டிர். நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கலாம் என மதுரகன் சந்தேகம் ஏன் கேட்கிறார்? அப்படி என்றால் இல்லாமலும் போகலாம் என்ற அர்த்தமும் உண்டல்லவா? என்ன மதுரகன் நான் சொல்வது?

தென்றல்... நீங்கள் அடிக்கடி வரலாமே.. :rolleyes:

மதுரகன்
22-06-2008, 05:20 AM
சரி இந்தக்கவிதையை எனது நோக்கில் விளக்குகிறேன்.
அவனுக்குள் காதல் புகுந்தது பர்வைகளால் உஷ்ணம் பற்றிகொள்ள அவளுக்குள்ளும் அது நுழைகிறது.
அதை வெளிப்படையாக எடுதுக்கூற இருவருக்கும் தயக்கம்.
சரியான தருணம் அமையவில்லை.
இருந்தாலும் யாராவது ஒருவர் கூறித்தானே ஆகவேன்டும் ஆனால் பெண்களின் இயல்பான வெட்கம் அவளைத் தடுக்கின்றது. அவனுக்கு என்னவாயிற்று. அவன் பயம் சிலவேளைகளில் சந்தர்ப்பங்களின் சூழ்ச்சியில் அவள் மறுத்து விட்டால்.. காதல் என்பது விநோதமான பரீட்சை அறையல்லவா.. அதுதான் சரியான தருணம் வேண்டும். அதற்காக அவன் காத்திருக்கிறான். அவன் மனதைப்பற்றிய பீடைதான் அவனது தயக்கம்.
அவ்வப்போது வீதிகளில் சந்திது கொள்ளும் போது எப்போது என்னிடம் உன் தயக்கங்களை களைந்து காதலை கூறப்போகிறாய் என தன் பார்வையால் ஏங்கி கேட்கும் காதலிக்கு அவனும் பார்வையாலே கூறுகிறான்.
நீ நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கலாம்
எமக்கான சரியான தருணம் ஒன்று காலத்தால் வெளிப்படுத்தப்படும். அந்த நாளைப்பற்றிய பயம் வேண்டாம் உனக்கு அந்த நாள் இறைவனின் ஆசி பெற்று உருவானது.
அந்த நாள் மிகவும் இனிமையானது ஏனென்றால் அது வசந்த காலங்களால் கருவாக சுமக்கப்பட்டது.
அந்த நாளில் காதல் செய்வதையே வேலையாகக் கொண்ட காந்தருவர்களே பிரமித்து வெட்கப்படக்கூடிய உன்னதமானதொரு முத்தத்தை உன் உதடுகளில் கொடுப்பேன் என்னைப்பற்றியிருந்த தயக்கம் என்கிற பீடை அப்போது விலகியிருக்கும்..

இது எனது நோக்கம்

ஷீ-நிசி
22-06-2008, 08:18 AM
மதுரகனின் கவிதையின் விளக்கம் அழகாகவும், அதே சமயம் தெளிவாகவும் இருந்தது...
கவிதைகள் பலவும் எழுதுகிறவர் எந்த சூழ்நிலையை மனதில் இருத்தி எழுதுகிறார் என்பதை அடையாளம் காண்பது சிரமமே...

என்னைப்பொருத்தவரை படிப்பவரை நம் கவிதைகள் எளிதில் அடையவேண்டும் என்பதே என் அவா...

கவிதைகள் பலவிதம்.. அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம்!

வாழ்த்துக்கள் மதுரகன்!

மதுரகன்
23-06-2008, 04:51 AM
நன்றி ஷீ

இளசு
24-06-2008, 06:28 AM
மதுரகன் விளக்கத்துக்குப்பின் கவிதை
மதுரமாய் இனிக்கிறது!

இருந்தாலும் இந்த விழியீர்ப்பு விசையின் வீச்சு ரொம்ப்ப்ப்ப்ப அதிகம்!
ஒரு பார்வைக்கு எத்தனை நீண்....ட பதில்!