PDA

View Full Version : ஏதோ ஒன்று



தீபா
21-06-2008, 05:55 AM
முற்செடிகள் வெட்டப் போயிருந்த
அந்த அந்திமக் காலையில்
அன்னை கேட்டாள்

அவரை பிடித்ததா?

பிடிக்காமல் போகுமா அம்மா?

எனது செரிமானத்தின்
வாழ்த்தொலி
காதில் மிதந்தது...

இளசு
21-06-2008, 06:17 AM
எதோ ஒரு காரணத்துக்காக
எதோ ஒன்று அமைந்தால் சரி என்ற
''இனி இழக்க ஏதுமில்லை'' -மனநிலையில் நாயகி..

முட்செடி - களத்தேர்வு சங்கப்பாடல்போல் நேர்த்தி!

கசப்பை விழுங்குவது கடினம்..
கடினத்தை செரிப்பது கடினம்..

இவள் தாண்டிவிட்டாள்...
இனி நடப்பவையாவது நன்மையாய்..?!


பாராட்டுகள் தென்றல்!


அதென்ன அந்திக்காலை???

தீபா
21-06-2008, 06:40 AM
எதோ ஒரு காரணத்துக்காக
எதோ ஒன்று அமைந்தால் சரி என்ற
''இனி இழக்க ஏதுமில்லை'' -மனநிலையில் நாயகி..

முட்செடி - களத்தேர்வு சங்கப்பாடல்போல் நேர்த்தி!

கசப்பை விழுங்குவது கடினம்..
கடினத்தை செரிப்பது கடினம்..

இவள் தாண்டிவிட்டாள்...
இனி நடப்பவையாவது நன்மையாய்..?!


பாராட்டுகள் தென்றல்!


அதென்ன அந்திக்காலை???


இது இருபொருள் கவிதை.
ஒன்று கவிஞை அறிந்தது,
மற்றது அண்ணன் அறிந்தது,.

கவிச் சூழ்நிலை
ஒத்துவந்த பார்வையாளர் அர்த்தம்
கவிக்கருவைத் தின்று
உயர்ந்து நிற்கிறது.

அவரை காயாக நினைத்தது - அது
அவரை அவராகவே அர்த்தமாயிற்று.

அவ்வர்த்த பொருள் கண்டறிந்த
அண்ணன் திறம்
வியக்க வைக்கிறது.

அந்திக் காலை - பிழை - அது
அந்திமக் காலை - அதிகாலை.

நன்றியுடன்
தென்றல்

ஆதவா
24-06-2008, 12:40 PM
முற்செடிகள் வெட்டப் போயிருந்த
அந்த அந்திமக் காலையில்
அன்னை கேட்டாள்

அவரை பிடித்ததா?

பிடிக்காமல் போகுமா அம்மா?

எனது செரிமானத்தின்
வாழ்த்தொலி
காதில் மிதந்தது...

தென்றல் என்றாலே சிரிப்புத்தான்.. :D

முன்பு அவல், ஆப்பாயில், இப்பொழுது அவரை... நாளை என்ன ?

எனக்கும் ஆவல்தான். அடுத்த அயிட்டம் என்னவாக இருக்கும்?

காத்திருக்கிறேன்.