PDA

View Full Version : வாழ்க தலைவா!தீபா
21-06-2008, 05:40 AM
அரசியல் விளம்பர
ப்ளக்ஸ் பேனர்கள்
படுக்கை விரிப்பாகவும்
கட்சிக் கொடிகள்
உடல் மறைக்கும்
உடைமைகளாகவும்
அரசியல் கூட்டங்கள் ,பேரணிகள்
இதர இத்யாதிகள்
ஒருவேளை உணவுக்கும்
பயன்படுமேயானால்

வாழ்க தலைவா!

அன்புடன்
தென்றல்

இளசு
21-06-2008, 06:13 AM
வாழ்தல் அடுத்த நிலை

இருத்தலே முதல் நிலை.. ( Exsistence)

இருப்பதை இருத்தலுக்கு பயன்படுத்தும் இவன் நிலை!

கூடவே கிடைக்கும் குவார்ட்டர் இம்முறை இல்லையா????


கொள்கைக்காக, பக்திக்காக, கலைக்காக
கூட்டமாய் தன்னால் குவிந்த தமிழினம்...

இன்று குவிக்கப்பட்டு, இழுக்கப்பட்டு....


உஸ்.. ஒரு கட்சி மாநாடு நடத்துவதற்குள்
கண் இருண்டு போகிறது அவர்களுக்கு இப்போதெல்லாம்..

இழுத்தும் வராத அளவுக்கு
தனிநபர் (வரு)மானம் உயர்ந்துவிட்டால்
ஊர்வலம், மாநாடு மறைந்துவிடும்..
ஏடுகள், தொலைக்காட்சிகள், இணையம் மட்டுமே அப்போது யுத்தகளம்..


வாழ்த்துகள் தென்றல்!

சிவா.ஜி
21-06-2008, 06:21 AM
ஆமா...கவிதையில் சொன்னதெல்லாம் கிடைக்குதுன்னா தலைவன் வாழ்க!

இளசுவின் பின்னூட்டம் அசத்தல். அந்த நிலை வரும் என்று தெரிந்தோ என்னவோ ஓவ்வொரு கட்சியும் ஒரு தொலைக்காட்சியைத் தொடங்குகிறது. இனி வீட்டுக்கூடத்தில் ரத்தத்தின் ரத்தங்களேவும், உடன்பிறப்புகளேவும் கேட்கக்கூடும்.

நல்ல கவிதை தென்றல். வாழ்த்துகள்.

தீபா
21-06-2008, 06:30 AM
வாழ்தல் அடுத்த நிலை

இருத்தலே முதல் நிலை.. ( Exsistence)

இருப்பதை இருத்தலுக்கு பயன்படுத்தும் இவன் நிலை!


இழுத்தும் வராத அளவுக்கு
தனிநபர் (வரு)மானம் உயர்ந்துவிட்டால்
ஊர்வலம், மாநாடு மறைந்துவிடும்..


வாழ்த்துகள் தென்றல்!ஆமா...கவிதையில் சொன்னதெல்லாம் கிடைக்குதுன்னா தலைவன் வாழ்க!

இளசுவின் பின்னூட்டம் அசத்தல். அந்த நிலை வரும் என்று தெரிந்தோ என்னவோ ஓவ்வொரு கட்சியும் ஒரு தொலைக்காட்சியைத் தொடங்குகிறது. இனி வீட்டுக்கூடத்தில் ரத்தத்தின் ரத்தங்களேவும், உடன்பிறப்புகளேவும் கேட்கக்கூடும்.

நல்ல கவிதை தென்றல். வாழ்த்துகள்.


இருத்தலின் (முதல்)நிலை
இல்லாமை எனும்போது
கோஷங்களுக்கு முதலிடம்
பாசங்களுக்கு அடுத்த இடம்

இழுத்தும் வாராத அளவு
இல்லாத நிலை.
அப்படியொரு நிலை
இல்லாத போது
இல்லாமல் போகும்
இந்த அவல நிலை

நன்றியுடன்
தென்றல்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-06-2008, 08:38 AM
தென்றல் அப்படி ஏதாச்சும் offer வந்தா சொல்லுங்க. கோஸம் போட நான் ரெடி.

பென்ஸ்
24-06-2008, 02:56 AM
தென்றல்....

என்ன திடீரென்று புயலாய் ஒரு கவிதை....

அவன் கதையை சொல்லிவிட்டீர்கள்... இனி அடுத்து....

சாக்கடை அழுக்காய் இருக்கிறது....
என்று மட்டும் சொல்லி போகிறீர்கள்...

இளசு.... இன்னும் பொறாமை அதிக்கமாகுது உங்கள் மேல்....

தீபா
01-07-2008, 04:30 AM
தென்றல் அப்படி ஏதாச்சும் offer வந்தா சொல்லுங்க. கோஸம் போட நான் ரெடி.


வாங்க
எங்க ஊருக்கு


தென்றல்....

என்ன திடீரென்று புயலாய் ஒரு கவிதை....

அவன் கதையை சொல்லிவிட்டீர்கள்... இனி அடுத்து....

சாக்கடை அழுக்காய் இருக்கிறது....
என்று மட்டும் சொல்லி போகிறீர்கள்...

இளசு.... இன்னும் பொறாமை அதிக்கமாகுது உங்கள் மேல்....

இனிய பென்ஸ்.
நெடும் சாக்கடை
நானோ ஒருத்தி
எப்படி கழுவ?
சாக்கடையில் அமுங்கிவிட்டால்?
சாக்கடை என்னை அமுக்கிவிட்டால்?
***************--------------
அந்த பொறாமை எனக்குள்ளும்...ஆரோக்கியமாய்

தென்றல்

தாமரை
01-07-2008, 06:04 AM
தொண்டன் தலைவனாகிறான்
தேர்தல் சமயத்தில்!

முத்திரைகள் படிந்த பின்னால்
நித்திரை இழந்து
சிற்றிரை தேடிக்
காத்திருக்கிறான்
அடுத்த தேர்தலுக்காய்!

பசி வந்துப் பறந்து போன பத்தில்
சிந்தனையும் விசுவாசமும் கரையக் கரைய

அடுத்த கட்சி அடுத்த கொள்கை
வரு(ம்)மானத்திற்கு
வழியில்லை
செலவு ஈனத்திற்கும் யோசனை

வீட்டுக்குள் தலைவர் உரை
சேனல் மாற்ற குடும்பத்தினருடன் போராட்டம்
வெல்வது கதையா கற்பனையா
கவர்ச்சியா கண்ணீரா
இல்லை
ஒரு கோப்பை மதுவா?

ஓவியன்
06-07-2008, 07:09 AM
ஒரேயடியாகத் தலைவர்களில் பழிபோடுவதும் தப்பு,
அந்த தலைவர்களை உருவாக்கி
அவர்களை ஆட்சியிலமர்த்தி
அழகு பார்ப்பதும் நாம் தானே..!!

ஒட்டு மொத்த மக்களின் எண்ணத்தில்
மாற்றம் வர வேண்டும்
அன்றுதான், இக் கவிதையில்
வாழ்த்துப் பெறும் தலைவனை
நாம் காணலாம்....!!

பாராட்டுக்கள் தென்றல்..!! :)

சுகந்தப்ரீதன்
06-07-2008, 01:40 PM
இன்றைக்கு இருக்குற கட்சிகளின் எண்ணிக்கையையும் அவற்றின் இன்றைய நிலையையும் பார்த்தா நீங்க சொன்ன மாதிரி கோஷம் போட்டே காலத்தை ஓட்டிடலாம்ன்னுதான் தோணுது..!!

வாழ்த்துக்கள் தென்றல்..!!