PDA

View Full Version : அன்னை



மதுரை மைந்தன்
20-06-2008, 07:36 PM
அவள் கண் அசைந்தால் கருணை வெள்ளம்
அவள் நா அசைந்தால் அன்பின் பெருக்கு
அவள் கை அசைந்தால் பாசத்தின் அணைப்பு
அவள் அசையவில்லை இறைவனடி சேர்ந்த அன்று
அசைய மறுக்கிறது என் உலகம் அன்னையில்லாமல்

இளசு
20-06-2008, 09:15 PM
கண்கள் பனித்தேன் மதுரை வீரன்..

அன்னையின் அசையாக் கைகளுக்காக
''கைகள்'' என்று முன்னர் மன்றத்தில் கவிதை எழுதியிருக்கிறேன்..

அதே உணர்வலைகளை இங்கே கண்டு இளகினேன்..

வாழ்த்துகள்!

செல்வா
20-06-2008, 09:52 PM
ஊருக்குப் புறப்படும் முன்பு கவலைப்படாதீர்கள் ஒன்றுமில்லை என்று ஆறுதல் கூறி அனுப்பிவைத்தேன்...
ஆனால் ஊருலிருந்து திரும்பும் போது ஈடுசெய்ய இயலாத இழப்போடு திரும்பினீர்கள்....
என்ன செய்வது ஐயா... உலகில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான விதி இது...
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை -அவள்
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை...
உங்கள் கவிக்கு வாழ்த்துக் கூற இயலா நிலை....

பென்ஸ்
21-06-2008, 01:37 AM
மனம் கனக்கிறது...
பிராத்தனைகள் மட்டும்..

ஓவியன்
21-06-2008, 01:57 AM
இருக்கும் போது
ஓயாமல் அசைந்தவைகள்
ஓயாமல் உழைத்தவைகள்
இனியாவது ஓய்வெடுக்கட்டும்

என் பிரார்த்தனைகளும்.....

ஆதவா
24-06-2008, 12:52 PM
அன்னையைப் பற்றி எத்தனை கவிதைகள் எழுதினாலும் சலிக்கவே சலிக்காது மதுரைவீரன். ஆனால்....

அன்னை இல்லாத குறை?

எனது அன்னைக்கும் எனக்கும் ஒரே சண்டையாக இருக்கும்... ஆனால் ஒருநாள் ஊருக்குப் போய் வந்தால்... எனக்கு மனம் கனத்துவிடும்... அந்தப் பிரிவு, நம்மையும் அறியாமல் எழும் வலி....

தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்... ஒரு தாயின் நிரந்தரப் பிரிவு..... ???

மிக வலியுள்ள வரிகள் உம்முடைய கவிதைகள் கொண்டிருப்பது..