PDA

View Full Version : புனைக்கவிதைஆதி
20-06-2008, 10:20 AM
புள்ளிகளாய் விழுந்து
கோடுகளாய் மாறி
காரின் முன்கண்ணாடியில்
கோலமிட்ட மழையை
ரிவைண்டரால் சுத்தப்படுத்திய போது
ரம்பிய தேவதை ஒருத்தியை
சாம்பல் வெளிச்சத்தில் கண்டான் கபிலன்..

அப்போது
அவனுக்குள்ளிருந்தும்
சில துளிகள் விழுந்தன மழையில்..

வெறும் மலர்களால் மட்டுமல்ல
வெளிச்சமும் தெளித்து
செய்யப்பட்டிருக்க வேண்டும்
அவள் முகம்..

பிளந்து சிவந்த
பிறைகளாய் இதழ்கள்

மேலெழுந்து
தூளாகாத அலை மார்ப்பு

பற்றினாலும் சற்றும்
அகபடா
புகையிடை

ஒற்றை பூவின்
ரெட்டைகாம்புகளாய் கால்கள்

அவன் மனம்
கியர்ப்போட்டு பறந்தது

ஓடும் நீரில்
ஓடாத நிழல்களாய்
அவன் நினைவுகள்
அவள்மீது நங்கூரம் பாய்ச்சி நின்றது

முன்பெப்போதும் இல்லாத உணர்ச்சிகள்
முகிழ துவங்கின அவனுக்க்குள்

சின்ன துளிகள்
சீதளக் காற்றும்
தென்னை மரங்கள்
தேவதை ஒருத்தியென
கவிதை கூட பூத்தது
கபிலனுக்குள்..

வாகணத்தைவிட்டு எப்போதோ
அவனிறங்கி இருந்தாலும்
பயணித்து வீடு வந்தவனிடம்
"சாப்பாடு போடவா ?" என்றாள் அன்னை
"சாப்பிட்டுவிட்டேன்.." என்றான் பிள்ளை

பூகனக்கும் உணர்ச்சிகளேந்தி
பூரிப்போடு உறங்க சென்றான்
இமைகள் இறங்கிய தருணத்தில்
அசையும் ரிவைண்டரும்
பிற்றையில் நின்ற
அவளின் முகமும்
விழிகளில் படிந்தன..

எவ்வளவு நாளெடுத்தானோ
இவ்வளவு அழகாய்
இவளைப் படைக்க
என்றும் மீண்டும்
அவளை அசைப்போட்டான்..

இரவு வினாடிகளின்
படித்துறை வழியே
இறங்கிக்கொண்டிருந்தது..

விழிப்பு அவனை
விலகாமல் தழுவி இருந்தது..

இரவின் முழுநீளத்தை
முதல்முறையாய் அனுபவித்தான்

வைகறை வண்ணங்களின்
வனப்பில் வசியமானான்

நட்சத்திரங்களின்
நுண்ணிய ஒளிகள்
கன்னியவளின் கண் சுவடென்றான்..

எப்படியவள்
என் நிமிடங்களில்
எல்லாம் தன்னை
நிர்மானித்துக் கொண்டாள்

எவ்வாறவள்
என் தனிமைகளை
தனதாக்கிக் கொண்டாள்
என்றவன் கேள்விகளை
எண்ணிய போது
சூரிய வெளிச்சம்
சூடாக முகத்தில் அறைந்தது..

கசங்கிய படுக்கையில் இருந்து
கசங்காத பூவாய் எழுந்து
வாசல் வந்தான்
வந்திருந்த செய்திதாள் எடுத்து
வாசிக்கலானான்..

வரிகளின் மேல்
நடந்திருந்த விழிகள்
ஆணியடித்தது போல்
ஓரிடத்தில் நின்றது..

அச்சமொன்று அவன் முத்தில்
அளவாலவியது

ஒரு சின்ன இருட்டு
விழிகளில் விரவியது

அடியோடு
இடிந்து விழுந்த கட்டடமாய்
நிர்மூலமானான்..

ஆம்! அந்த
கொள்ளை நிலா
கொல்லப்பட்டதாக
புகைப்படத்தோடு
செய்தி வந்திருந்தது..

தொடரும்..

தமிழ் மகன்
20-06-2008, 11:44 AM
ஆஹா என்ன இது கடைசியில் ஆவியை பார்த்துதான் பேய்அறைந்தது போல் வீடு வந்து சேர்ந்தானா கபிலன். கவிதை அருமை ஆதி. வாழ்த்துக்கள்.

ஆதவா
24-06-2008, 07:20 AM
ஆதி, ஒன்று சொன்னால் நீங்கள் வருத்தப்படமாட்டீர்களே?

மாட்டீர்கள் என்று நினைத்துக் கொண்டு,

இதைக் கதையாக எழுதினால் இன்னும் நன்றாக எழுதலாம் என்பது என் கருத்து.... கவிதையாகப் படிக்கும் போது ஒருவித சோர்வு வருகிறது.. (இப்படி ஒரு முயற்சி ஏற்கனவே எடுத்து செய்திருக்கிறேன்... அட, அதுவும் பேயோடு காதல் கதைங்க.....)

ஆதி
24-06-2008, 07:35 AM

வருத்தப்பட ஒன்றுமில்லை ஆதவா...

விஞ்ஞானப்புனை கதைகள் எத்தனையோ இருக்கு ஏன் புனைக்கவிதையாய் எழுதக்கூடாது என்றே இந்த முயற்சி..

இது காதல் கதையோ பேய்க்கதையோ இல்லை.. வேற்றுலக மனிதர்களை வைத்து புனைய விரும்பியக் கதை.. அதனால்தான் அந்த பெயர் தெரியாத பெண்ணை கொலைப்பன்னிட்டேன்.. :)

கதை எழுதி எனக்கு பழக்கமில்லை ஆதவா அதான் கவிதையாய் எழுத முயற்சிகிறேன்..

அடுத்த பதிப்பில் இருந்து தொய்வில்லாமல் தர முயற்சிக்கிறேன்..

ஆதவா
24-06-2008, 07:39 AM

உங்கள் புரிதலுக்கு நன்றி ஆதி.

கதை எழுதிப் பழகிக் கொள்ளுங்கள்.. கவிதை எழுதுவதைக் காட்டிலும் கதை எழுதுவதில்தான் ஒரு எழுத்தாளனின் திறமையே இருக்கிறது..............

ஆதி
24-06-2008, 07:45 AM
கதை எழுதிப் பழகிக் கொள்ளுங்கள்.. கவிதை எழுதுவதைக் காட்டிலும் கதை எழுதுவதில்தான் ஒரு எழுத்தாளனின் திறமையே இருக்கிறது..............

நிச்சயமாய் ஆதவா பழகிக்கொள்கிறேன், விரைவில் ஒரு சிறுகதை எழுதி மன்றத்தில் பதிக்கிறேன்..

செல்வா
24-06-2008, 09:05 AM
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ஆதி...... அதிகப்படியான வர்ணனை தான் தொய்வை ஏற்படுத்தியதோ எனத்தோன்றுகிறது. கதையோட்டத்தைக் கவனி... வர்ணனைகள் தானாகவே வரும் கவிதையோடு.
புனைக்கவிதை என்றால் என்ன?

ஆதி
24-06-2008, 09:42 AM
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ஆதி...... அதிகப்படியான வர்ணனை தான் தொய்வை ஏற்படுத்தியதோ எனத்தோன்றுகிறது. கதையோட்டத்தைக் கவனி... வர்ணனைகள் தானாகவே வரும் கவிதையோடு.
புனைக்கவிதை என்றால் என்ன?

ஆமா டா, வர்ணிப்பதில் லயித்துப்போய் கதையை கோட்டைவிட்டுவிட்டேன்.. இனி அது நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன் டா..

அறிவியல் புனைக்கவிதை என்று தலைப்பு வைக்க நினைத்தேன் டா.. இப்போதைக்கு புனைவோம்.. அறிவியல் உள்ளிருந்தால் அறிவியல் புனைக்கவிதை என்று மாற்றிவிடுவோம் என்று விட்டுவிட்டேன் டா..