PDA

View Full Version : அம்மா எனும் மந்திரம்!

கலைவேந்தன்
20-06-2008, 09:15 AM
இந்த ஒரு சொல் மந்திரம்
ஓர் உலகையே கட்டிப்போடும்.....!

காற்றில்லாத இடம் கூட
சிலசமயம் வாழவைக்கும்
அம்மாவெனும்
ஊற்றில்லாத இடம்
பாலைவனமாய் சுட்டெரிக்கும்....!

உலகத்தின் ஒரு யுக சுகத்தை
அம்மா மடியின்
ஒருகணம் உணர்த்தும்....!

சீறும் விஷநாகத்தை தாய்மை
சிற்றெறும்பாய் நசுக்கும்
அது
சிறுகுழந்தையை கொத்த வரும்போது!

தன் வயிற்றுப்பசி நோக்காது
தன் உடல் சுகம் நோக்காது
தன் புகழ் தேடாது
தன் நலம் கருதாது
தன் வியர்வை தனை துடைக்காது
தன் குருதிப் பிரவாகம் கருதாது
தன் வலிதனை நினைக்காது
இத்தனையும் ஒருசேர
கொண்ட குணம் தாய் மட்டுமே!

இளசு
20-06-2008, 05:07 PM
அம்மா

எத்தனை கவிதைகள் எழுதினாலும்
பத்தாது அம்மா பெருமை சொல்ல!

நற்கவிதைக்குப் பாராட்டும் நன்றியும் - கலைவேந்தன்!

கலைவேந்தன்
22-06-2008, 03:58 PM
உங்கள் பாராட்டுக்கு தலைவணங்குகிறேன் இளசு அவர்களே!

அனுராகவன்
23-06-2008, 05:25 AM
நன்றி கலைவேந்தன்!!!
அம்மாவின் கவிகாக என் 25 ஐகாஷ்!!

மீரா
23-06-2008, 06:12 AM
அம்மாவுக்கு அருமையான கவிதை எழுதிய கலைவேந்தனே உங்கள் அருமையான கவிதைத்திறம் கண்டு வியந்துள்ளேன் இணையத்தில்!

அம்மாவுக்காக இத்தனை அழகான கவிதையா??
தாயின் உடற்சுமை பிள்ளையை இறக்கி வைப்பதில் உள்ளது...

கவிஞனும் தாயே... தன் படைப்புகளை வலியோடும் ஆனால் ஆசையோடும் வாஞ்சையோடும் ப்ரசவிப்பான்.... அது போல் இக்கவிதை...

உங்களின் இந்த அழகிய கவிதை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்....
இங்கும் உங்கள் கவிஅனைத்தும் பருகிக் களிப்பேன்!

இதயம்
23-06-2008, 06:34 AM
தாய்மை என்பது எதிலும் ஒன்றா தனித்தன்மை. இப்பண்பு ஆண், பெண் என்று அனைவரிடத்திலும் உண்டு என்றாலும் இது அதிகமாக காணப்படுபவர்கள் அன்புருவங்கள் ஆகிறார்கள், குறைகிறவர்கள் குற்றவாளிகள் ஆகிறார்கள். தாய்மை என்ற தன்மை கொண்டவர்களே இப்படி என்றால் தாய்மையையே உருவாக கொண்ட அம்மா என்ற அற்புத உறவு..? அது அன்பின் அச்சு அசல் அல்லவா..? மற்றவர் திட்டினால் வலிக்கும் மனது, அம்மா அடித்தாலும் இனிக்கிறது. காரணம், அவளால் நமக்கு எது கிட்டினாலும் அது நமக்கு கிடைத்த பாக்கியமே. !!

அம்மா என்ற அன்புருவத்தை அகிலம் உணர உயர்த்திச்சொன்ன கலைவேந்தனின் கவிக்கு ஒரு ஜே..!!:icon_b: பாராட்டுக்கள்..!!!

கலைவேந்தன்
23-06-2008, 06:58 AM

உங்கள் மனந்திறந்த பாராட்டுக்கள் கண்டு அகமகிழ்ந்தேன்! அன்னையில்லாமல் வளர்ந்த என்னை அன்னையினும் மேலாய் நேசிக்கும் ஓர் அன்பு இதயம் ஒன்று உண்டு! அந்த தன்னலம் அற்ற தாயை மனதில் வைத்து எழுதிய கவிதை இது!

கலைவேந்தன்
23-06-2008, 07:01 AM
நன்றி கலைவேந்தன்!!!
அம்மாவின் கவிகாக என் 25 ஐகாஷ்!!

தங்கள் பரிசுக்கும் பாராட்டுக்கும் நன்றி!

அம்மாவுக்கு அருமையான கவிதை எழுதிய கலைவேந்தனே உங்கள் அருமையான கவிதைத்திறம் கண்டு வியந்துள்ளேன் இணையத்தில்!
இங்கும் உங்கள் கவிஅனைத்தும் பருகிக் களிப்பேன்!

மிக மகிழ்ச்சி மீரா!

தாய்மை என்பது எதிலும் ஒன்றா தனித்தன்மை. இப்பண்பு ஆண், பெண் என்று அனைவரிடத்திலும் உண்டு என்றாலும் இது அதிகமாக காணப்படுபவர்கள் அன்புருவங்கள் ஆகிறார்கள், குறைகிறவர்கள் குற்றவாளிகள் ஆகிறார்கள். தாய்மை என்ற தன்மை கொண்டவர்களே இப்படி என்றால் தாய்மையையே உருவாக கொண்ட அம்மா என்ற அற்புத உறவு..? அது அன்பின் அச்சு அசல் அல்லவா..? மற்றவர் திட்டினால் வலிக்கும் மனது, அம்மா அடித்தாலும் இனிக்கிறது. காரணம், அவளால் நமக்கு எது கிட்டினாலும் அது நமக்கு கிடைத்த பாக்கியமே. !!

அம்மா என்ற அன்புருவத்தை அகிலம் உணர உயர்த்திச்சொன்ன கலைவேந்தனின் கவிக்கு ஒரு ஜே..!!:icon_b: பாராட்டுக்கள்..!!!

உங்கள் மனந்திறந்த பாராட்டுக்கள் கண்டு அகமகிழ்ந்தேன்! அன்னையில்லாமல் வளர்ந்த என்னை அன்னையினும் மேலாய் நேசிக்கும் ஓர் அன்பு இதயம் ஒன்று உண்டு! அந்த தன்னலம் அற்ற தாயை மனதில் வைத்து எழுதிய கவிதை இது!

arsvasan16
20-07-2008, 09:25 AM
தாயிற் சிறந்தவர்கள் இவ்வுலகில் இல்லை...

ஆனால்,தாயின் குணம் கொண்டவர்கள் ஏராளம்....

உங்கள் வாழ்த்து மடலில் தாயை பற்றீய தொகுப்பு மிக அருமை நண்பரே.......

வாழ்த்துக்களுடன்.....
உங்கள் நண்பன்............