PDA

View Full Version : தலைப்பிடாதவைகள்



மதுரகன்
20-06-2008, 06:04 AM
தோலைத்துளைக்கின்ற பனி பொழியும்
முன்பனிகாலப் பொழுதொன்றில்
மெல்லத்துளிர் விடுகின்ற அந்தப்புல்வெளிகளில்
விண்மீன்களைச் சாட்சியாக வைத்து
உன் மீது நான் கொண்ட காதலை
உன் கண்களிடம் வெளிப்படுத்துவேன்.
அதுவரை உன் மனத்தின் திறவு கோலை
தேவதைகள் காவல் புரிவார்கள்...

kavitha
20-06-2008, 06:55 AM
உன் மீது நான் கொண்ட காதலை
உன் கண்களிடம் வெளிப்படுத்துவேன்.
அதுவரை உன் மனத்தின் திறவு கோலை
தேவதைகள் காவல் புரிவார்கள்...

என் கண்ணில் உள்ள காதலுக்கு எத்தனை ஆற்றல் பார்.... என்று சொல்லாமல் சொல்கிறது கவிதை. பாராட்டுகள் மதுரகன்.
உங்கள் கையெழுத்தும் அழகு.

ஆதவனைப்போல நீங்களும் தலைப்பில்லா கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?
தலையில்லா உடல் போல், கவிதை இருக்கிறது. அதைக்கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?

ஆதவா
20-06-2008, 01:17 PM
தோலைத்துளைக்கின்ற பனி பொழியும்
முன்பனிகாலப் பொழுதொன்றில்
மெல்லத்துளிர் விடுகின்ற அந்தப்புல்வெளிகளில்
விண்மீன்களைச் சாட்சியாக வைத்து
உன் மீது நான் கொண்ட காதலை
உன் கண்களிடம் வெளிப்படுத்துவேன்.
அதுவரை உன் மனத்தின் திறவு கோலை
தேவதைகள் காவல் புரிவார்கள்...

மது.. உன் கவிதையின் வீரியம் தான் எத்தனை? மெல்ல அழகாக அதேசமயம் ஆழமாக ஒரு காதல் கவிதையைப் படைத்துவிட்டாய்!!! வார்த்தைகள் வசியப்படுத்துகின்றன. மிக ஆழமான ஒரு கவியை எளிமையாக படைக்கமுடியும் என்பதை எனக்கு உணர்த்திவிட்டாய் ..

ஒவ்வொரு வரிகளும் மனதை அதகளப்படுத்துகிறது மதுரகன்.. இன்னும் நிறைய எழுது... மன்றத்திற்கு அடிக்கடி வாப்பா!!

வாழ்த்துகள்.

ஆதவா
20-06-2008, 01:20 PM
என் கண்ணில் உள்ள காதலுக்கு எத்தனை ஆற்றல் பார்.... என்று சொல்லாமல் சொல்கிறது கவிதை. பாராட்டுகள் மதுரகன்.
உங்கள் கையெழுத்தும் அழகு.

ஆதவனைப்போல நீங்களும் தலைப்பில்லா கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?
தலையில்லா உடல் போல், கவிதை இருக்கிறது. அதைக்கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?

என்ன செய்வது அக்கா... இதற்கு என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்து யோசித்து அடுத்த கவிதையே எழுதிவிடுகிறோம்.. பொதுவாக, என்னுடைய ஏனைய கவிதைகளின் தலைப்பை எடுத்துப் பாருங்கள். சம்பந்தமில்லாமலோ வைக்கத்தெரியாமலோதான் இருக்கும்...

மதுரகன்
21-06-2008, 01:17 PM
எந்த ஒரு மனிதனும் பிறக்கும்போது ஆடைகளுடன் பிறப்பதில்லை. அது போலத்தான் கவிதைகளும் தலைப்புகளின்றியே பிரசவிக்கப்படுகின்றன.
அதனை செயற்கைப்படுத்த நான் விரும்பவில்லை. என் கவிதைக்குழந்தைகள் ஆடைகளின்றியே அழகாக இருப்பதனால்...