PDA

View Full Version : உன் நினைவில் - என் காதல்



நம்பிகோபாலன்
19-06-2008, 11:13 AM
என் வாழ்க்கை பயணத்தில்
உன் நினைவில் நிற்கும்
என் நினைவு பேருந்து

உனக்காக நான் வாழ்ந்தேன்
எனக்காக நீ இருந்தாய்
எண்ணங்கள்
வாழ்வின் வண்ணங்களாய்
காதல் கூட
நம்மை பார்த்து
பொறாமைதான் பட்டிருக்கும்
அவை அனைத்தும்
அருமையானவை
இனிமையானவை

பெற்றவர்களுக்காக
நீயும்
உனக்காக நானும்
சூழ்நிலையால் பிரிந்தோம்
முதலில் வருத்தம்
உனக்காகத்தான்
என்பதால் உன் மேல்
கோபம் கூட உண்டு…

மறக்க எத்தனை வழிகள்
தேர்ந்தெடுத்த
அத்தனையும் உன்னையே
நினைவில் கொள்ள செய்தது
மறுக்க முடியாத உன்மை..

உன் நினைவால்
நான் இருப்பதால்
எவ்ளோ பேர் சொன்னார்கள்
நான் வாழ்க்கையில்
தோற்றவன்
முன்னேறமாட்டான்
பைத்தியம் என்றெல்லாம்
பலவித புக்கழ்ச்சி
மாலைகள்
இன்று நினைப்பினும்
சிரிப்புதான்
அவர்கள்
மாற்றி பேசும் பொழுது…

உன் நினைவே
என் முதலீட்டாய்
இன்று
வெற்றி பாதையில்
பயணிக்கிறேன்
உன் நினைவிலேயே

என் நினைவு
முழுக்க
நீ.....
நீ மட்டுமே

உன்னை மறக்க
நான் முயற்ச்சிக்க
போவதில்லை
நீ
என் நினைவில் இருக்கிறாய்
அதனால்
கிடைக்கும் சந்தோஷங்கள்
போதுமடி
என் காதலுக்கு….

crisho
19-06-2008, 11:59 AM
ஆஹா அனுபவித்து எழுதியது புலப்படுகிறது அன்பரே....

இன்னும் பல கவிதைகள் உங்களால் படைக்கப்படும்!!

தொடருங்கள்....


உன்னை விட
உந்தன் நினைவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன்
ஏன் தெரியுமா?
அவை எப்போதும்
என்னுடனே இருப்பதால்....

lenram80
19-06-2008, 08:02 PM
என்றும் உன் நினைவு - குற்றால நீர்வீழ்ச்சி!
தாகம் எடுக்கும் போதெல்லாம் உன் நினைவுகளில் தண்ணீர் குடிப்பேன்!
உன் நினைவு வரும் போதெல்லாம் தாகம் எடுப்பேன்!
தாகம் எடுக்கும் போதெல்லாம் உன் நினைவுகளில் தண்ணீர் குடிப்பேன்!

வாழ்த்துக்கள் நம்பிகோபாலன்,

நம்பிகோபாலன்
20-06-2008, 07:19 AM
நன்றி க்ரிஷோ மற்றும் லெனின்.
உங்களின் நினைவை பற்றிய பின்னூட்டங்கள் அருமை.