PDA

View Full Version : ஒரு விதையின் விதை

meera
19-06-2008, 10:32 AM
என் 1000வது பதிவை வித்தியாசமாய் தர முயற்சி செய்து கடைசியில் இந்த பதிவை பதிக்க முடிவு செய்யபட்டிருக்கிறது என்பதை அவையோருக்கு அறிவிக்கிறேன்.

எனது முதல் முயற்சி இள நிலை (B.Sc)கல்லூரி காலத்தில் மனம் என்னும் மண்ணில் விதைக்கப்பட்டது. தோழிகளின் உற்சாக நீர் ஊற்றலில் விதை மெதுவாய் முளைக்க தொடங்கியது. விதை மண்ணைவிட்டு வெளிவரும் நாளில் கல்லூரியும் முடிந்து போக, விதை அப்படியே நட்ட இடத்தில் நின்று போனது. 4 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் விதை வளர நம் மன்றம் நீர் ஊற்றத்துவங்கியது.

ஆரம்பத்தில் முதலும் முடிவும் தெரியாமல் எழுதியதை நம் மன்ற மக்களின் அன்பான, அழகான விமர்சனத்தால் என்னை மாற்றிக்கொள்ள முடிந்தது.

என்னை செதுக்கிய சிற்பிகள் அனைவருக்கும் நன்றி.
காளான் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7072)
என் உயிர் தோழி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7484)
நினைக்கவில்லை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6863)
தேடிக்கொண்டிருக்காதே! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7248)
காகிதப் பூ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14961)
கண்ணீர் கதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7154)
அர்த்தநாரீஸ்வரர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14256)
பலிகடா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13581)
துரோகிகள். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13577)
மழை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13242)
ஜன்னலோரம். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13348)
கிளி ஜோசியம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994)
கல்வெட்டு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9517)
கல்யாணம். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7056)
திருமணச் சந்தை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7120)
சுனாமி! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7383)
பைத்தியக்காரர்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7265)
குருவிக் கூடு. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7317)
சட்டம் வந்தது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7093)
மனக்கூட்டில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7096)
மழை. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7105)
சிதைந்த காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7051)
சாட்டையடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7050)
ஏக்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7023)
முதியோர் இல்லம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7025)
வறுமை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6970)
மறக்கத்தான் நினைக்கிறேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6971)
ஒரு தாயின் தவிப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6860)
நீ அல்ல நான் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6916)
முதிர் கன்னி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6886)
ஓய்வதில்லை. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6887)
ஆதங்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6876)
கண்மணி அவள் காத்திருக்கிறாள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6856)
இதயத்தின் வலி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6862)

நன்றி அமரன் அண்ணா.

ஆதவா
19-06-2008, 11:10 AM
விதை முட்டும்.. விண்ணை எட்டும்..

விதை சிறியது என்றாலும் வீரியம் பெரியது.. ஹைகூ சிறியது என்றாலும் அதன் வீரியம் பெரியதாகவே இருந்தது மீரா.

இத்தொகுப்புகளைப் பார்க்கும் போது இவ்வளவு பெரிய தோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்ற மகிழ்வும் ஏற்படுகிறது.

நன்றிக்காக அமரனை முடமாக்கிவிட்டீர்களே!!!

சுகந்தப்ரீதன்
19-06-2008, 11:30 AM
விதையின் பயணத்தை விரிவாக எழுதியிருக்கலாமே மீராக்கா..!!

உங்களை போலவே உங்கள் கவிதைகளும் அடக்கமான வடிவில் அமைந்திருக்கும்... அதுபோலவே கவி அறிமுகமும் அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறது..!!

ஆனாலும் இப்போதுதான் 1000 வது பதிவு, கவி அறிமுகம் என்பதெல்லாம் ரொம்பவே தாமதமாய் தோன்றுகிறது..!!

தொடர்ந்து உங்கள் எண்ண விதைகளை மன்றத்தில் ஊன்றுங்கள்...!! அவை விருட்சமாய் வளர எனது வாழ்த்துக்கள்...!!

சிவா.ஜி
19-06-2008, 11:39 AM
உங்களுள் ஊன்றப்பட்ட கவி(வி)தை வளர்ந்து இன்று செடியாக தழைத்து நிற்கிறது. நாளை மரமாகும், பின் வனமாகும். அன்புத் தங்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

meera
20-06-2008, 02:41 AM
விதை முட்டும்.. விண்ணை எட்டும்..

விதை சிறியது என்றாலும் வீரியம் பெரியது.. ஹைகூ சிறியது என்றாலும் அதன் வீரியம் பெரியதாகவே இருந்தது மீரா.

இத்தொகுப்புகளைப் பார்க்கும் போது இவ்வளவு பெரிய தோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்ற மகிழ்வும் ஏற்படுகிறது.

நன்றிக்காக அமரனை முடமாக்கிவிட்டீர்களே!!!

நன்றி ஆதவா. உன்னை போல் நம் மன்ற மக்களின் உற்சாக விமர்சனத்தில் தான் இன்று விதை செடியாக நிற்கிறது. உன் விமர்சனம் என்றும் எனக்கு தேவை சகோதரா.

அட கவனிக்காமல் பிழை செய்துவிட்டேன் ஹி ஹி ஹி. இதோ திருத்தியாகிவிட்டது.

meera
20-06-2008, 02:46 AM
விதையின் பயணத்தை விரிவாக எழுதியிருக்கலாமே மீராக்கா..!!

உங்களை போலவே உங்கள் கவிதைகளும் அடக்கமான வடிவில் அமைந்திருக்கும்... அதுபோலவே கவி அறிமுகமும் அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறது..!!

ஆனாலும் இப்போதுதான் 1000 வது பதிவு, கவி அறிமுகம் என்பதெல்லாம் ரொம்பவே தாமதமாய் தோன்றுகிறது..!!

தொடர்ந்து உங்கள் எண்ண விதைகளை மன்றத்தில் ஊன்றுங்கள்...!! அவை விருட்சமாய் வளர எனது வாழ்த்துக்கள்...!!

வாழ்த்துக்கு நன்றிங்கோ. ஹி ஹி நான் கொஞ்சம் சோம்பேறி.கொஞ்சம் தான் அதான் 2 வருசத்திலேயே 1000 தொட்டுட்டமில்ல.

விரிவாய் தர எண்ணம் தான் ஆனால் அலுவலகத்திலிருந்து இவ்வளவுதான் எழுதமுடிந்தது. :sprachlos020::lachen001:

மற்றவர்களின் பதிவை படிக்கும் போது பதிவிட வேண்டும் என்ற உந்துதல் அதிகமானதால். இதை சுருக்கமாய் பதித்துவிட்டேன்.

meera
20-06-2008, 02:48 AM
உங்களுள் ஊன்றப்பட்ட கவி(வி)தை வளர்ந்து இன்று செடியாக தழைத்து நிற்கிறது. நாளை மரமாகும், பின் வனமாகும். அன்புத் தங்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணா.

உங்களை போன்றோரின் ஆசி இருந்தால் நிச்சயம் மரமாகி, வனமாகும்.

kavitha
20-06-2008, 03:31 AM
ஆயிரமாவது பதிவைப் பயனுள்ளதாக மாற்றிய மீராவிற்கு எனது வாழ்த்துகள். இந்த விதையின் விதை விருட்சமாகி கிளைபரப்பி நிழல் தர வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். :)

பென்ஸ்
20-06-2008, 04:09 AM
வாழ்த்துகள் மீரா...

க-விதை மன்றத்தில் விதையுங்கள்... வளரும்.
அதையே மனதில் புதைக்க வேண்டாம்...

மதி
20-06-2008, 04:30 AM
வாழ்த்துகள் மீரா...
மன்றத்தில் கவிஅறிமுகம் தாமதமாகவே இருந்தாலும் சிறப்பாக இருந்தது..!
இன்னும் பல்லாயிரம் நீங்க படைக்க வாழ்த்துகள்

ஓவியன்
20-06-2008, 04:54 AM
நல்ல விதைகள் என்றும் செழித்து வளரும்
பல நல்ல விதைகளை விதைக்கும்...

மீரா, நீங்கள் ஒரு நல்ல விதை...!!

இன்னும், இன்னும் பல்லாயிரம் ஹைக்கூக்களால்
மன்றப் பூங்காவினை நிரப்ப என் வாழ்த்துக்களும்...!! :)

இளசு
20-06-2008, 06:52 AM
அன்பு மீரா,

ஆயிரமாவது பதிவை சுயத்தேடல், எடைபோடல், புதுப்பித்தல் என
பயனுள்ள பதிவாய் தந்தமைக்கு வாழ்த்துகள்!

சூழலுக்கேற்றாற்போல் கொஞ்சம் மண்ணுக்குள் வாளாவிருந்து, பின்னர் முளைவிட்டு, பின்னர் தேங்கி, அப்புறம் ஓங்கி... என
இயற்கையின் பல கட்டங்கள் கண்ட விதை...

எங்கள் அன்பான ஊக்கம் என்றும் இருப்பதால்
தடங்கல்கள் தாண்டி விருட்சமாய் வளரும் என்பதில் முழு நம்பிக்கை எனக்குள்...

அண்ணனின் ஆதுரமான வாழ்த்துகள்!

கலைவேந்தன்
20-06-2008, 07:39 PM
வாழ்த்துகள் மீரா!

meera
21-06-2008, 09:56 AM
ஆயிரமாவது பதிவைப் பயனுள்ளதாக மாற்றிய மீராவிற்கு எனது வாழ்த்துகள். இந்த விதையின் விதை விருட்சமாகி கிளைபரப்பி நிழல் தர வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். :)

நன்றி கவி. உண்மை சொல்ல வேண்டும் என்றால் நான் முதலில் மன்றம் வந்ததும் வாசித்த முதல் கவிதை தங்களுடையது. அதில் உந்தப்பட்டு எழுத தொடங்கினேன். இன்று உங்களின் வாழ்த்து மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

அமரன்
04-07-2008, 10:34 PM
விதையைக் கீறிவிடலாமே தவிர..
விதையை புதிதாய் உருவாக்க முடியுமா?!

தாமதமானாலும் தரமான கவிதாயினி அறிமுகம். எங்கோ முளைத்து மன்றத்தில் கிளைத்த உங்கள் கவி விருட்சத்தில் விருப்புடன் இளைப்பாறினோம். பசியாறினோம். நன்றி மீரா.

meera
05-07-2008, 03:52 AM
வாழ்த்துகள் மீரா...

க-விதை மன்றத்தில் விதையுங்கள்... வளரும்.
அதையே மனதில் புதைக்க வேண்டாம்...
வாழ்த்துக்கு நன்றி பென்ஸ்.

ஆரம்பத்தில் என் தவறுகளை அழகாய், நான் வருந்தாமல் சுட்டிகாட்டி என்னை செதுக்கிய சிற்பிகளில் நீங்களும் ஒருவர். மீண்டும் மீண்டும் நன்றி பென்ஸ்

வாழ்த்துகள் மீரா...
மன்றத்தில் கவிஅறிமுகம் தாமதமாகவே இருந்தாலும் சிறப்பாக இருந்தது..!
இன்னும் பல்லாயிரம் நீங்க படைக்க வாழ்த்துகள்

நன்றி மதி. எங்கு என் கவி வரிகளை கண்டாலும் ஓடி வந்து தட்டிகொடுக்கும் இந்த அன்பான தட்டல் என்றும் வேண்டும் உங்களிடமிருந்து.

meera
05-07-2008, 04:03 AM
நல்ல விதைகள் என்றும் செழித்து வளரும்
பல நல்ல விதைகளை விதைக்கும்...

மீரா, நீங்கள் ஒரு நல்ல விதை...!!

இன்னும், இன்னும் பல்லாயிரம் ஹைக்கூக்களால்
மன்றப் பூங்காவினை நிரப்ப என் வாழ்த்துக்களும்...!! :)

நன்றி ஒவியன் அண்ணா,

உங்கள் பாராட்டும் வாழ்த்தும் இன்று போல் என்றும் வேண்டும்.

அன்பு மீரா,

ஆயிரமாவது பதிவை சுயத்தேடல், எடைபோடல், புதுப்பித்தல் என
பயனுள்ள பதிவாய் தந்தமைக்கு வாழ்த்துகள்!

சூழலுக்கேற்றாற்போல் கொஞ்சம் மண்ணுக்குள் வாளாவிருந்து, பின்னர் முளைவிட்டு, பின்னர் தேங்கி, அப்புறம் ஓங்கி... என
இயற்கையின் பல கட்டங்கள் கண்ட விதை...

எங்கள் அன்பான ஊக்கம் என்றும் இருப்பதால்
தடங்கல்கள் தாண்டி விருட்சமாய் வளரும் என்பதில் முழு நம்பிக்கை எனக்குள்...

அண்ணனின் ஆதுரமான வாழ்த்துகள்!

நன்றி என்ற ஒற்றை வார்த்தியில் முடித்துவிட இயலாது இளசு அண்ணா.

இது வரை நீங்கள் என் கவிதைகளில் ஒன்றை கூட விட்டதில்லை.எனக்குள் விழுந்த விதையை நீரூற்றி வளர்த்த என் இனிய அண்ணா நன்றி நன்றி நன்றி.. வேறு ஏதும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

meera
05-07-2008, 04:09 AM
வாழ்த்துகள் மீரா!

நன்றி கலைவேந்தன்.

தாமதமானாலும் தரமான கவிதாயினி அறிமுகம். எங்கோ முளைத்து மன்றத்தில் கிளைத்த உங்கள் கவி விருட்சத்தில் விருப்புடன் இளைப்பாறினோம். பசியாறினோம். நன்றி மீரா.

மிக்க நன்றி அமரன் அண்ணா