PDA

View Full Version : நிழலின் வண்ணங்கள்



மதுரை மைந்தன்
18-06-2008, 06:11 PM
கோடி அழகை கொட்டி செய்த பதுமையே
பாரதி கனவு கண்டு பாடிய புதுமையே
உன் நிழலின் வண்ணங்களும் அருமையே


(நிழல் எப்போதும் கருமை தானே அதில் வண்ணங்கள் காண்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு விடை தேடி ஒரு கற்பனை )

பாண்டிய மன்னன் நெடுஞசெழியன் ராணி கோப்பெருந்தேவியின் நிழலில் வண்ணங்களைக் கண்டு இது சாத்தியமா என்று குழம்புகிறான். மன்னனின் சந்தேகத்தை பாட்டின் மூலம் தீர்க்கும் புலவருக்கு பொற்கிழி அளிக்கப் படும் என்று பறை அறிவிக்கப்படுகிறது.

பாண்டிய மன்னன் அரசவை.

காவலர்: மன்னா தருமி என்ற புலவர் தங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் பாட்டுடன்
வந்துள்ளார்

நெடுஞசெழியன்: மிக்க மகிழ்ச்சி புலவரே உமது பாட்டைக் கூறி பரிசு பெற்று செல்லும்

தருமி: கொங்குதேர் வாழ்க்கை.....என்று செய்யுளைப் படிக்கிறார்

அதன் உட்கருத்து:

மலர்களிடத்தே உள்ள மகரந்த பொடியை ஆராய்ந்து கொண்டிருக்கும் தும்பி இனத்தைச் சேர்ந்த உயர்ந்த ஜாதி வண்டே
காண்பவரின் எண்ணங்களைப் பொறுத்து
நிழலின் வண்ணங்கள்
என்பதை நீ அறியாயோ?

நெடுஞ்செழியனுக்கு பாட்டின் அர்த்தம் விளங்கியது.

நெடுஞசெழியன்: ஆஹா அற்புதமான பாட்டு என் சந்தேகம் நீங்கியது யார் அங்கே பொற்கிழி எடுத்து வாருங்கள்

அவையின் மூத்த புலவரான நக்கீரர் இதை தடுக்கிறார்

நக்கீரர்: மன்னா சற்று பொருங்கள் புலவரே இந்த பக்கம் வருகிறீர்களா?

நக்கீரர்: பாட்டின் அர்த்தத்தைக் கூறி பிறகு பரிசு பெற்று செல்லுங்கள் உமது பாட்டில்
பிழை இருக்கிறது

தருமி: அதனாலென்ன எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி கழித்துக் கொண்டு மீதி பரிசு தொகையை கொடுங்கள்

நக்கீரரின் பேச்சைக் கேட்ட சிவ பெருமான் கோபமடைந்து அங்கு ஒரு புலவரைப் போல் பிரசன்னமாகிறார்

சிவ பெருமான்: நக்கீரரே எமது பாட்டில் என்ன பிழை கண்டீர்?
பாட்டின் பிழை என்று கூறும் நக்கீரரே,மங்கையரின் நிழலில் வண்ணங்கள் தோன்றுவது சாத்தியமா இல்லையா?

நக்கீரர்: மங்கையரின் நிழலில் வண்ணங்கள் தோன்றுவது ஒருக்காலும் இல்லை

சிவபெருமான் உக்கிரமாகி: நீர் தினம் வணங்கும் பரம்பொருள் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது சாத்தியமென்றால் அவரின் ஒரு பாதி உமையவளின் நிழலிலும் வண்ணங்கள் தெரியாது என்று கூறுகிறீரா?

நக்கீரர் வந்திருப்பது சிவ பெருமான் என்று உணர்ந்தாலும்: நீரே முக்கண் முதல்வராகுக. உமது நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

சிவபெருமான் நக்கீரரை எரித்து பின் அவரை பொற்றாமரைக் குளத்திலிருந்து வரவைத்து தடுத்தாட் கொண்டார். நக்கீரரும் அழகான மங்கையரின் நிழலில் வண்ணங்கள் தெரிவது சாத்தியமே என்று ஒப்புக் கொண்டார்

இளசு
18-06-2008, 10:57 PM
வருக மதுரை வீரன் அவர்களே!

உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுகள்..

இப்பதிவை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தி இருக்கலாம்..

படைப்பின் ஆணிவேரான கொங்குதேர் வாழ்க்கைத் தும்பிப்பாடல் போல்
ஒரு செய்யுள்/கவிதை எழுதி, அதையொட்டி இந்த
parody படைப்பை செதுக்கியிருக்கலாம் என்பது என் எண்ணம்..

இப்பதிவை எப்பிரிவில் பதிக்கலாம் என்பது இன்னொரு எண்ணம்..

நிறைய வாசியுங்கள்.. நிறைய விமர்சியுங்கள்..
தொடர்ந்து படையுங்கள்..

வாழ்த்துகள்!

சிவா.ஜி
19-06-2008, 05:03 AM
மதுரை வீரன்.....மிகுந்த ஏமாற்றம். ஆங்கிலத்தில் நீங்கள் எழுதிய அந்த வரியைத் தவிர வேறெதுவும் உங்கள் சொந்தமில்லையே....இளசு சொன்னதைப் போல இன்னும் செறிவாக்குங்கள். உங்களின் கடவுளும் கந்தசாமியும் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சியுங்கள். வாழ்த்துகள்.

விகடன்
19-06-2008, 09:35 AM
தெரியாமல்த்தான் கேற்கின்றேன்.

என்ன இது?

இதிலிருந்து எந்தக் கதையுமே எனக்கு புலப்படவில்லை. வெறுமனே திருவிளையாடலின் உல்ட்டா போலத்தான் தென்பட்டது.
காமடி கீமடி பண்ணேலையே?

மதுரை மைந்தன்
19-06-2008, 05:58 PM
வருக மதுரை வீரன் அவர்களே!

உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுகள்..

இப்பதிவை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தி இருக்கலாம்..

படைப்பின் ஆணிவேரான கொங்குதேர் வாழ்க்கைத் தும்பிப்பாடல் போல்
ஒரு செய்யுள்/கவிதை எழுதி, அதையொட்டி இந்த
parody படைப்பை செதுக்கியிருக்கலாம் என்பது என் எண்ணம்..

இப்பதிவை எப்பிரிவில் பதிக்கலாம் என்பது இன்னொரு எண்ணம்..

நிறைய வாசியுங்கள்.. நிறைய விமர்சியுங்கள்..
தொடர்ந்து படையுங்கள்..

வாழ்த்துகள்!

நன்றி இளசு அவர்களே. தங்களின் ஆலோசனையை ஏற்று என்னால் இயன்ற செய்யுளை தந்திருக்கிறேன். தங்களின் ஒப்புதலை எதிர் பார்க்கிறேன்

மதுரை மைந்தன்
19-06-2008, 06:01 PM
மதுரை வீரன்.....மிகுந்த ஏமாற்றம். ஆங்கிலத்தில் நீங்கள் எழுதிய அந்த வரியைத் தவிர வேறெதுவும் உங்கள் சொந்தமில்லையே....இளசு சொன்னதைப் போல இன்னும் செறிவாக்குங்கள். உங்களின் கடவுளும் கந்தசாமியும் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சியுங்கள். வாழ்த்துகள்.

நன்றி சிவாஜி அவர்களே. தங்களின் ஆலோசனையை ஏற்று மாற்றங்கள் செயதிருக்கிறேன்.

மதுரை மைந்தன்
19-06-2008, 06:04 PM
தெரியாமல்த்தான் கேற்கின்றேன்.

என்ன இது?

இதிலிருந்து எந்தக் கதையுமே எனக்கு புலப்படவில்லை. வெறுமனே திருவிளையாடலின் உல்ட்டா போலத்தான் தென்பட்டது.
காமடி கீமடி பண்ணேலையே?

விராடன் அவர்களே, காமெடி பண்ண எனது முயற்சி சரிவரவில்லை என்று தோன்றகிறது தங்களின் பதிலை படித்தபின். இம்முறை மன்னியுங்கள்.

செல்வா
19-06-2008, 06:43 PM
அடடா மன்னிப்பெல்லாம் எதற்கு வீரரே... அனைவரும் இங்கே மாணவர்கள் தான். தட்டிக்கொடுப்பதற்கும் தட்டிக்கேட்பதற்கும் கரம்பிடித்து வழிநடத்தவும் தகுந்த தளம் இது...
இன்னும் கொஞ்சம் உங்கள் கற்பனை வளத்தைப் பயன்படுத்துங்கள்.
அதே உரையாடல் அதே பாடல் வேண்டாமே என்பது தான் என் எண்ணமும். அதோடு அந்த பாடலுக்கும் இந்த கற்பனையும் எப்படிப் பொருந்துகிறது என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும். அதே திரை உரையாடல் மட்டுமல்லாது உங்கள் கற்பனையும் கலந்து இறுதி செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து...

புதியவர் நீங்கள் இந்த விமர்சனங்களை தவறாக எண்ணகூடாது என்பதற்கு கீழ்க்கண்ட சுட்டியை தருகிறேன். மன்றம் பற்றி இன்னும் தெரிந்து தெளிவீர்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15019

இளசு
19-06-2008, 08:08 PM
மன்னிப்பு என்ற சொல்லெல்லாம் மன்றச் சொந்தங்களுக்குள் வேண்டாம்
மதுரை வீரரே!

முதலில் ஆர்வமாய் தமிழில் பங்களிப்பதே பாராட்டுக்குரிய சாதனை..

அதை இன்னும் மெருகூட்ட இங்கே இதுபோல் ஆலோசனைகள், கருத்துகள் கிடைக்கும்..

கூட்டல் மனதுடன் அவற்றை ஏற்பதும் நம்மவர் பழக்கம்..

நீங்கள் நம்மில் ஒருவர்..

சேர்ந்து தீந்தமிழ் பழகி, இணைந்து இணையத்தில் வளர்வதே
மன்றத்தின் நோக்கம்..

மனக்கிலேசம் அகற்றி, புதுத்தெம்புடன் உலவுங்கள்..

அறிஞர்
19-06-2008, 11:12 PM
தமிழ் எழுதப்பழகி கலக்குகிறீர்கள்.

உம் படைப்புகள் இன்னும் மெருகேறட்டும்...
சிறந்த எழுத்தாளராக உருவெடுக்க ஆசை..