PDA

View Full Version : கடவுளும் கந்தசாமியும்

மதுரை மைந்தன்
18-06-2008, 05:32 PM
கந்தசாமி ஒரு ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி. மாலை வேளைகளில் அவர் ஒரு நடையாகச் சென்று பக்கத்து பார்க் பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசம் செயவார். அன்றும் அவ்வாறே அவர் அமர்ந்திருந்தார் அன்று அவர் மனம் சஞ்சலமுற்றிருந்தது

" அப்பனே முருகா தினமும் நான் மனமுருக உன்னை துதிக்கின்றேன் என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்" என்று புலம்பினார் என்ன ஆச்சரியம்? முருகப் பெருமான் அவரின் புலம்பலைக் கேட்டு அவருக்கு அருள் புரிய அசரிரீயாக வந்து

" கந்தசாமி உன் பக்தியை நாம் அறிவோம் உனது குறை தான் என்ன?" என்று வினவினார்

கந்தசாமிக்கு மெய் சிலிர்த்தது பக்கத்தில் இருப்பவர்கள் தன்னை தப்பாக நினைக்கக் கூடாது எனறு தனது மெல்லிய குரலில்

" அதை ஏன் கேட்கிறாய் முருகா ஓய்வு பெற்று வீட்டில் கிருஷ்ணா ராமா கோவிந்தா என்று இருக்க முடியவில்லை"

அசரிரீ முருகன் குறுக்கிட்டு " கந்தசாமி உனது பரந்த மனப்பான்மையை நான் பாராட்டுகிறேன் சைவராகிய நீங்கள் ஓய்வு பெற்று வீட்டில் சிவா கணேசா முருகா என்று இல்லாமல் கிருஷ்ணா ராமா கோவிந்தா என்று இருப்பது அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்பதை பறைசாற்றுகிறது" என்றார்

கந்தசாமி தொடர்ந்து " அதை ஏன் கேட்கிறாய் முருகா வீட்டில் இருப்பதோ ஒரே டிவி அதன் ரிமோட் கண்ட்ரோலைக் கைப்பற்ற எனது மகன் குமாருக்கும் மகள் லட்சுமிக்கும் துவந்த யுத்தம் நடக்கிறது குமாருக்கு IPL மாட்சுகள் பார்க்க வேண்டும் அதே நேரத்தில் லட்சுமிக்கு சன் டிவி சீரியல்கள் பார்க்க வேண்டும். இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார்கள் அவர்களது செமஸ்டர் பரீடசைகள் வேறு நடந்து கொண்டிருக்கின்றன. எனது மனைவி வேறு என்னை கையாலாகாதவன் குழந்தைகளை கட்டுப் படுத்த தெரியாதவன் என்று பழிக்கின்றாள்" இவ்வாறு சொல்லி அங்கலாய்த்தார் கந்தசாமி.

முருகன் சிரித்துக்கொண்டே " இது எல்லா வீடுகளிலும் நடக்கிறது. இருந்தாலும் நீ என் சிறந்த பகதன் ஆதலால் நான் இதை சரி செய்கிறேன். நீ கவலையில்லாமல் வீட்டுக்குப் போ" எனறார்.

வீட்டை அடைந்த கந்தசாமிக்கு ஒரே ஆச்சரியம். வீடு அமைதியில் மூழ்கி இருந்தது. இரவு மணி 8.30 IPL மாட்சு ஆரம்பித்திருக்குமே சன் டிவி சீரியல்கள் வேறு நடந்து கொண்டிருக்குமே குமாரும் லட்சுமியும் என்ன பண்ணுகிறார்கள் என்று அவர்களது அறைகளை எட்டிப் பார்த்தால் இருவரும் பாட புத்தகங்களில் மூழ்கியிருந்தனர்.

கந்தசாமி பூஜை அறைக்குள் சென்று மனதுக்குள் முருகனை தியானம் செய்து
"முருகா எப்படி இந்த அற்புதம் நிகழ்ந்தது?" என்று வினவினார்.

அசரீரி முருகன் சிரித்துக் கொண்டே " உன் மகனுக்கு அவனது அத்தை பெண் மீது காதல். நான் அவளை அவனுக்கு ஒரு போன் செய்து நீ படிக்காமல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எனக்கு கணவராக வருபவர் நன்றாக படித்து அமெரிக்கா செல்ல வேண்டும் எனறு விரும்புகிறேன். நீ தொடரந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தால் பாஜி சிரிசந்தை அடித்தது போல் நான் உன்னை அடிப்பேன்" என்று சொல்ல பெட்டிப் பாம்பாய் படிக்க ஆரம்பித்தான்".

"அதே மாதிரி உன் பெண் அவளது மாமன் மகனை விரும்புவதால் அவனையும் ஒரு போன் செய்து நீ இப்படி சன் டிவி சீரியல்களில் ஈடுபாடு இலலாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் எனது இல்லத்து அரசி யாக வந்து கோலங்கள் பல போட முடியும்" என்று சொல்ல அவளும் படிக்க ஆரம்பித்தாள்" என்றார்.

கந்தசாமி மெய் சிலிர்த்துப் போய் " முருகா நீ கலியுகத்தில் கண் கண்ட தெய்வம்" என்றார்

SivaS
19-06-2008, 09:19 AM
பாவம் முருகனும் பிள்ளயாரோட ரிமோடுக்காக சன்டை பிடித்து தான் கந்தசாமியிட வந்தரோ தெரியேல்ல

விகடன்
19-06-2008, 09:28 AM
கடவுள்கூட மனிதனிற்கு வரமளிக்கும் போது என்ன வேண்டும் என்றுதானே கேட்டு அளிக்கிறார்.. ஓரு மனிதனிற்கு என்ன தேவை என்று அவன் மனதில் சிந்தித்துவைத்திருக்கிறான் என்று அறியுமாற்றல் அவனிற்குமில்லைத்தானே ...... (இருக்கோ இல்லையோ.... உங்கள் கதையிலிருந்து அப்படித்தானே பிரதிபலிக்கின்றது. இல்லையா?)

காதலை வைத்தே கடவுளும் விளையாடுகிறார் என்று சொல்வதா? அல்லது காதலால் எந்தப் பெரிய வேலையும் சாதிக்கலாம் என்று சொல்வதா???

மதுரை மைந்தன்
19-06-2008, 06:10 PM
பாவம் முருகனும் பிள்ளயாரோட ரிமோடுக்காக சன்டை பிடித்து தான் கந்தசாமியிட வந்தரோ தெரியேல்ல

நன்றி சிவா அவர்களே. தங்களின் பதிலில் நல்ல நகைச்சுவை உள்ளது.

மதுரை மைந்தன்
19-06-2008, 06:13 PM
கடவுள்கூட மனிதனிற்கு வரமளிக்கும் போது என்ன வேண்டும் என்றுதானே கேட்டு அளிக்கிறார்.. ஓரு மனிதனிற்கு என்ன தேவை என்று அவன் மனதில் சிந்தித்துவைத்திருக்கிறான் என்று அறியுமாற்றல் அவனிற்குமில்லைத்தானே ...... (இருக்கோ இல்லையோ.... உங்கள் கதையிலிருந்து அப்படித்தானே பிரதிபலிக்கின்றது. இல்லையா?)

காதலை வைத்தே கடவுளும் விளையாடுகிறார் என்று சொல்வதா? அல்லது காதலால் எந்தப் பெரிய வேலையும் சாதிக்கலாம் என்று சொல்வதா???

கடவுளுக்கு மனிதன் மனதில் உள்ள எண்ணங்கள் தெரிந்தாலும் சில சமயங்களில் தெரியாத மாதிரி திருவிளையாடல்கள் பண்ணுகிறார் பக்தர்களுக்கு அருள் புரிய. தங்களின் எண்ணங்களுக்கு நன்றி.

செல்வா
19-06-2008, 06:29 PM
காதலை வைத்தே கடவுளும் விளையாடுகிறார் என்று சொல்வதா? அல்லது காதலால் எந்தப் பெரிய வேலையும் சாதிக்கலாம் என்று சொல்வதா???

அட என்னவிராடன் இப்படிச் சொல்லிட்டீங்க....

கன்னியர் தன் கடைக்கண்ணைக் காட்டிவிட்டால்
மண்ணிலே காளையர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்..

நான் சொல்லலீங்க பாரதிதாசன் சொல்லிருக்காராம்.

மிகுந்த மகிழ்ச்சி ஐயா வந்ததுமே தங்கள் படைப்புக்களை வாசிக்கப் பெற்றேன்.

இன்னும் மன்றமெங்கும் உலாவுங்கள் உங்கள் ஆர்வத்திற்கு நிறைய தீனி உள்ளது.

இளசு
19-06-2008, 08:00 PM
உங்கள் ஆர்வமான பங்களிப்புக்கு என் பாராட்டுகள் மதுரைவீரன்..

நாட்டு நடப்புகளை அழகாய்க் கோர்த்த கற்பனைக்கு சபாஷ்!

ஓவியா
18-07-2008, 01:27 AM
நல்லா விழுந்து விழுந்து சிரித்தேன் கலியுகத்தில் கடவுளா என்று, சிக்கனமான கரு. முற்றிலும் உண்மை.

ஆனாலும் கதையின் முடிவு உங்கள் திறமையை விளக்கியது. பாராட்டுக்கள்.

மதுரை மைந்தன்
18-07-2008, 01:35 AM
அட என்னவிராடன் இப்படிச் சொல்லிட்டீங்க....

கன்னியர் தன் கடைக்கண்ணைக் காட்டிவிட்டால்
மண்ணிலே காளையர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்..

நான் சொல்லலீங்க பாரதிதாசன் சொல்லிருக்காராம்.

மிகுந்த மகிழ்ச்சி ஐயா வந்ததுமே தங்கள் படைப்புக்களை வாசிக்கப் பெற்றேன்.

இன்னும் மன்றமெங்கும் உலாவுங்கள் உங்கள் ஆர்வத்திற்கு நிறைய தீனி உள்ளது.

நண்பர் செல்வா

சற்று தாமதமாக பதலளிக்கிறேன். பொருத்தருளவும். பாரதி தாசன் அவர்களை மேற்கோள் காட்டி பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

மதுரை மைந்தன்
18-07-2008, 01:37 AM
உங்கள் ஆர்வமான பங்களிப்புக்கு என் பாராட்டுகள் மதுரைவீரன்..

நாட்டு நடப்புகளை அழகாய்க் கோர்த்த கற்பனைக்கு சபாஷ்!

நண்பர் இளசு அவர்களே

உங்களின் பாராட்டுக்கள் எனக்கு தெம்பூட்டும் டானிக் மாதிரி. மிக்க நன்றி;

மதுரை மைந்தன்
18-07-2008, 01:39 AM
நல்லா விழுந்து விழுந்து சிரித்தேன் கலியுகத்தில் கடவுளா என்று, சிக்கனமான கரு. முற்றிலும் உண்மை.

ஆனாலும் கதையின் முடிவு உங்கள் திறமையை விளக்கியது. பாராட்டுக்கள்.

நண்பர் ஓவியா

உங்களது பாராட்டுக்கள் என் செவிக்கு இனபத் தேனாய் வந்து விழுகின்றன. மிக்க நன்றி

கண்மணி
18-07-2008, 01:43 AM
காதலி சொன்னதற்காக கிரிக்கெட் மறந்த ஆண்
காதலன் சொன்னதற்காக சீரியல்களை மறந்த பெண்..

ஆனா ஆனா ஒண்ணு மட்டும் இடிக்குதே!!!!

நான் நினைக்கிறேன் இப்ப அண்ணனும் தங்கையும் சன் டிவி மட்டுமே பார்ப்பாங்கன்னு

;)

ஓவியா
18-07-2008, 01:44 AM
நண்பர் ஓவியா

உங்களது பாராட்டுக்கள் என் செவிக்கு இனபத் தேனாய் வந்து விழுகின்றன. மிக்க நன்றி

திறமையை பாராட்ட வேண்டும். :)

மன்னிக்க வேண்டும், நான் தமிழை ரொம்ப சிக்கனமாகதான் கற்றேன், அதனால் ஒரு கேள்வி, நண்பர் என்பது பெண்பாலா ஆண்பாலா?

மதுரை மைந்தன்
18-07-2008, 02:38 AM
திறமையை பாராட்ட வேண்டும். :)

மன்னிக்க வேண்டும், நான் தமிழை ரொம்ப சிக்கனமாகதான் கற்றேன், அதனால் ஒரு கேள்வி, நண்பர் என்பது பெண்பாலா ஆண்பாலா?

உங்களது கேள'வி சரியானது. நண்பர் என்பது பெரும்பாலும ஆண்பாலை குறிக்கும். நண்பி எனபது பெண் பால்.
சரியா நண்பி ஓவியா?

ஓவியா
18-07-2008, 10:01 AM
உங்களது கேள'வி சரியானது. நண்பர் என்பது பெரும்பாலும ஆண்பாலை குறிக்கும். நண்பி எனபது பெண் பால்.
சரியா நண்பி ஓவியா?

ஓ ஓ சரி. விளக்கத்திற்க்கு நன்றிகள். :)

mukilan
24-07-2008, 09:29 PM
கடவுளுக்கு காதலோட சக்தி நல்லாவே தெரியுது. காதலித்து திருமணம் செய்து கொண்ட (இரண்டு முறை வேறு) முருகனுக்கு காதலின் மகத்துவம் தெரிந்துதான் இருக்கும் :)

உங்களது கடவுளும் .....ம் தொடர் அருமையாக இருக்கிறது. சின்ன விசயங்கள் அதில் இழயோடும் நகைச்சுவை........
கூறவரும் செய்தி ...........
என ரத்தினச் சுருக்கமாய். வாழ்த்துக்கள் மதுரை வீரரே!

மதுரை மைந்தன்
24-07-2008, 11:05 PM

என்னுடய கதைகளை படித்து ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி முகிலன் நண்பரே

ஓவியன்
25-07-2008, 03:07 AM
ஒரு சின்ன சந்தேகம் மதுரை வீரன், இந்த இணையத்தளத்திலும் (http://www.indusladies.com/forums/indian-stories/28019-2965-2975-2997-3009-2995-a.html) இதே பதிவு இருக்கிறதே....??

எப்படி....???

கீதா என்பவர் உங்கள் பதிவுகளை சுட்டு விட்டாரா...??? :confused:

மதுரை மைந்தன்
25-07-2008, 03:29 AM
ஒரு சின்ன சந்தேகம் மதுரை வீரன், இந்த இணையத்தளத்திலும் (http://www.indusladies.com/forums/indian-stories/28019-2965-2975-2997-3009-2995-a.html) இதே பதிவு இருக்கிறதே....??

எப்படி....???

கீதா என்பவர் உங்கள் பதிவுகளை சுட்டு விட்டாரா...??? :confused:

கீதா என்பவர் என் சகோதரி. அது பெண்களின் இணைய தளமானதாலும் அதில் அவர் தீவிரமாக பங்கேற்பதாலும் எனது கதைகளை எடுத்து வெளியிடுகிறார் எனது அனுமதியுடன். தங்களின் சந்தேகம் நியாயமானதே.

ஓவியன்
25-07-2008, 03:39 AM
நல்லது மதுரை வீரன்..!!

சந்தேகம் வந்ததால் கேட்டேன், தப்பாக எடுத்துக் கொள்ளாதிருந்தமைக்கு நன்றிகள் பல...

தொடர்ந்து உங்கள் அருமையான படைப்புக்களை முன் வையுங்கள்....