PDA

View Full Version : தவழ்ந்தாலும் தளர்வில்லை!



சிவா.ஜி
18-06-2008, 12:36 PM
http://www.imagehosting.com/out.php/i1795448_polioqjpreviewth.jpg
உடலைத் தாங்கும் வலிமை
என் கால்களுக்கில்லாதிருக்கலாம்.....
எதையும் தாங்கும் வலிமை
இதயத்துக்கிருக்கிறது!!

சூம்பியக் கால்களிருந்தும்
சோம்பியதேயில்லை...
ஒருபோதும் தனிமையில்
தேம்பியதேயில்லை!!

தவழ்ந்து செல்லும் நிலையிலும்
தளர்ந்து விடாமல்
தொடர்ந்து செல்கிறேன்
எதிர்படும் இன்னல்களை
கடந்து வெல்கிறேன்!

வெற்றிக்கு வாழ்த்து சொல்ல
கை கொடுங்கள்....
எழ உதவும் எண்ணத்தைக்
கை விடுங்கள்...
என் தோள் சாரா சுயம்
என்றும் தரும் ஜெயம்!

தயைக் கூர்ந்து இதை
மமதையாய்க் கருதாமல்
தங்களோடென்னை
சமதையாய் கருதுங்கள்!

நம்பிகோபாலன்
18-06-2008, 12:44 PM
தரமான கவிதை..வாழ்த்துக்கள் சிவா
ஊனமுற்றவர்களையும் சரிசமமாக கருதுவதே மனித பண்பு.மனமார்ந்த பாரட்டுக்கள்.

ஆதி
18-06-2008, 01:01 PM
அசதல் கவிதை சிவா அண்ணா..

இறுதி இரண்டுப்பத்திகள் உயரமாக்குகிறது, கவிதையையும் கால்வலிமையில்லாத்வரையும்..

பாராட்டுக்கள் அண்ணா..

சிவா.ஜி
18-06-2008, 01:06 PM
தரமான கவிதை..வாழ்த்துக்கள் சிவா
ஊனமுற்றவர்களையும் சரிசமமாக கருதுவதே மனித பண்பு.மனமார்ந்த பாரட்டுக்கள்.

நன்றி நம்பி. ஊனமுற்றவர் என்று சொல்வதையே விரும்பாத அவர்களின் மனோதிடம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

சிவா.ஜி
18-06-2008, 01:08 PM
இறுதி இரண்டுப்பத்திகள் உயரமாக்குகிறது, கவிதையையும் கால்வலிமையில்லாத்வரையும்..
.

அவர்களுக்குத் தேவை தோள்களல்ல...தோழமை. அதைத்தான் சொன்னேன் ஆதி. நிச்சயம் எவரையும் சாராமல் உயரும் இவர்கள் உயரமானவர்கள்தான்.

நன்றி தம்பி.

சுகந்தப்ரீதன்
18-06-2008, 01:20 PM
வாழ்த்துக்கள் சிவா அண்ணா..!!

மின்னிதழ் நோக்கி மெல்ல நடக்க தொடங்கி விட்டது இப்போழுதே இந்த கவிதை..!! தொடரட்டும்... உங்கள் உரமூட்டும் தரமான படைப்புகள்..!!

சிவா.ஜி
18-06-2008, 01:24 PM
ரொம்ப நன்றி சுபி. அவர்களின் மனோதிடம் எனக்கு அவர்களின் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது.

Narathar
18-06-2008, 07:23 PM
http://www.imagehosting.com/out.php/i1795448_polioqjpreviewth.jpg
சூம்பியக் கால்களிருந்தும்
சோம்பியதேயில்லை...
ஒருபோதும் தனிமையில்
தேம்பியதேயில்லை!!

!

அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்

இளசு
18-06-2008, 10:49 PM
உடல் ஊனமுற்றோர் மனக்கண்ணாடி இக்கவிதை!

சுயம், ஜெயம்
மமதை, சமதை..

சிவாவின் தமிழ் சமர் ஆடியிருக்கிறது!

பொருளை மதித்து, அழகை ரசித்தேன் சிவா!

சிவா.ஜி
19-06-2008, 04:16 AM
"கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!"இந்த வரிகளும் எனக்கு பிடித்தமானவை,இவை உங்கள் சொந்த வரிகளா?

பாராட்டுக்கு மிக்க நன்றி கிஷோர். உங்களுக்குப் பிடித்த இந்த வரிகள் எனக்கும் பிடித்த காரணத்தால் ஒரு தொலைக்காட்சி தொடர்நாடகத்தில் பேசப்பட்ட இந்த வரிகளை என் கையெழுத்தாக்கினேன்.

சிவா.ஜி
19-06-2008, 04:16 AM
மிக்க நன்றி நாரதர்.

சிவா.ஜி
19-06-2008, 04:18 AM
உள்ள உறுதி என்பது உடல் உறுதியினும் மிக மேலானது என்பதை ஆணித்தரமாக நிரூபித்து வரும் இந்த சகோதரர்களை மதித்து எழுதிய வரிகள் இது இளசு. பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

kavitha
19-06-2008, 07:15 AM
வெற்றிக்கு வாழ்த்து சொல்ல
கை கொடுங்கள்....
எழ உதவும் எண்ணத்தைக்
கை விடுங்கள்...
என் தோள் சாரா சுயம்
என்றும் தரும் ஜெயம்!

தயைக் கூர்ந்து இதை
மமதையாய்க் கருதாமல்
தங்களோடென்னை
சமதையாய் கருதுங்கள்!

அருமையான வரிகள் அண்ணா. ஆங்கிலத்தில் physically challenged persons என்று அழகாகக்கூறுவர். தமிழில் 'சவால் நாயகர்கள்' என்றால் பொருந்துமா?

உங்கள் கை வலிக்கும்முன்வரை குலுக்கவேண்டும் போல் இருக்கிறது. இத்தங்கையின் மனமார்ந்த பாராட்டுகள்.

சிவா.ஜி
19-06-2008, 07:23 AM
ரொம்ப நன்றிம்மா. உடல் குறைக்கு சவால்விட்டு சாதனை படைக்கும் இந்த சகோதரர்களுக்கு ஆங்கிலத்தில் வைத்த பெயர் சாலப் பொருத்தம். தமிழில் நீங்கள் சொன்னது பொருத்தமாக இருக்குமென்றே நினைக்கிறேன்.

ஆதவா
24-06-2008, 12:59 PM
இந்தக் கவிதைக்கு முன்னரே ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன்... எனது கணிணியின் ஊனம்... தொலைந்து போனது..

பிறவி ஊனம் என்பது நாம் அறியாமல் விளைந்தது.
போலியோ ஊனம் நம் அறியாமையால் விளைந்தது..

உங்களின் ஒவ்வொரு படைப்புகளிலும் அது தரும் உண்மைத் தாக்கத்தை ஒரு கலைஞனாகப் புரிந்துகொள்ளமுடிகிறது.. இக்கவிதைக்கும் விமர்சனத்தை விட, அதன் வலிகள் கண்களில் பனித்தால் அதைவிட வேறு விமர்சனம் ஏது?

குழந்தைகளின் கால்களைப் போல மனதும் வளைந்து கிடைக்கிறது... அதற்கு அவர்களைப் போல தாங்கும் வலிமை இல்லை... இனிமேலும் குறைபடைப்புகள் இறைவன் எழுதாமல் இருக்க பிரார்த்திப்போம்.

அன்புடன்
ஆதவன்

சிவா.ஜி
24-06-2008, 01:06 PM
குழந்தைகளின் கால்களைப் போல மனதும் வளைந்து கிடைக்கிறது... அதற்கு அவர்களைப் போல தாங்கும் வலிமை இல்லை... இனிமேலும் குறைபடைப்புகள் இறைவன் எழுதாமல் இருக்க பிரார்த்திப்போம்.

அன்புடன்
ஆதவன்
அருமையான வரிகள் ஆதவா.

நீங்கள் சொன்னதைப்போல அறியாமையால் விளைந்த ஊனம்தான் ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் அறியாமையால் அல்ல எனும்போது குற்றமே செய்யாமல் தண்டிக்கப்பட்டவர்களைக் காணுவதைப்போல மனம் வலிக்கிறது.

பிரார்த்திப்போம். நன்றி ஆதவா.

பூமகள்
24-06-2008, 01:23 PM
இத்தனை அற்புதக் கவிதை எப்படி தவறவிட்டேன் இத்தனை நாள்??
மேலே எழுப்பிய சிவா அண்ணாவுக்கு நன்றிகள்..!!

உடல் குறைப்பாட்டை..
ஊனமென்று சொல்லும் சொல்லாடல் கூட
மனத்தை பாதிக்கும் படி இருப்பதாக நான் கருதுகிறேன்..

இங்கே கவி அக்கா, அழகான ஒரு சொல் "சவால் நாயகர்கள்" என்று புதுப் பெயர் கொடுத்து சந்தோசத்தில் ஆழ்த்தினார்..

வளைந்தது இவர்களின்
கால்களானாலும்
வளையாதது இவர்களின்
குறிக்கோள்களாக இருக்கட்டும்..!!

"சமதை மமதை.."
சொல்லாடல் அருமை.. "சமதை" வார்த்தையாடலை பெரியண்ணாவைப் போல நானும் ரசித்தேன்..!!

இவர்களின் சுயம் சுயமாய் முன்னேறட்டும்..!!
நம்மோடு சக மனிதராய் பார்ப்பதே அவர்களை மகிழ்விப்பது தான்..!

மிகச் சிறந்த ஒரு படைப்பு படைத்த சிவா அண்ணாவுக்கு இந்த தங்கை பூவிடமிருந்து மனமார்ந்த பாராட்டும் 1000+1000 இ-பணமன்பளிப்பும்...!!

சிவா.ஜி
24-06-2008, 01:43 PM
உடல் குறைப்பாட்டை..
ஊனமென்று சொல்லும் சொல்லாடல் கூட
மனத்தை பாதிக்கும் படி இருப்பதாக நான் கருதுகிறேன்..

வளைந்தது இவர்களின்
கால்களானாலும்
வளையாதது இவர்களின்
குறிக்கோள்களாக இருக்கட்டும்..!!

இவர்களின் சுயம் சுயமாய் முன்னேறட்டும்..!!
நம்மோடு சக மனிதராய் பார்ப்பதே அவர்களை மகிழ்விப்பது தான்..!


ஆஹா எத்தனை மென்மையான உள்ளம் என் தங்கைக்கு...? உடல் குறைபாடுதான் ஆனால் ஊனமில்லை. மிகச் சரியான கருத்தும்மா.

வளைந்தது இவர்கள் காலானாலும்.....அழகான வரிகள்.

ரொம்பச் சரி...நம்மோடு அவர்களை சக மனிதராய் பார்ப்பது நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்.

அழகான பின்னூட்ட வரிகளுக்கும் இ-பண அன்பளிப்புக்கும் மனம் நிறைந்த நன்றி.

(பாத்தும்மா இப்படி அன்பளிப்பு கொடுத்து என்னை விட ஏழையாகிவிடப்போகிறாய்)

பூமகள்
24-06-2008, 01:56 PM
(பாத்தும்மா இப்படி அன்பளிப்பு கொடுத்து என்னை விட ஏழையாகிவிடப்போகிறாய்)
உங்களின் அன்பான ஐகேர்[Eye Care].. என்னிடம் இருக்கையில் இந்த இயந்திரத்தில் வாழும் ஐகேஸ்[Internet cash] எனக்கு பெரிதில்லையண்ணா...!! :icon_ush::icon_ush:

ஏழையானாலும் உங்களது அன்பு என்னிடம் இருப்பதால் என்றுமே நான் பாசப்பணக்காரி தான்..!! :icon_rollout::icon_rollout:

கலைவேந்தன்
24-06-2008, 03:18 PM
மிக மிக மிக மிக அருமையான கவிதை சிவா! விமரிசிக்க கூட மனசு வரவில்லை! அப்படியே வாசித்து அனுபவிக்கத்தான் தோன்றுகிறது!
எனது வாழ்த்துகளும் பாராட்டுக்களும் சிவா!

சிவா.ஜி
24-06-2008, 05:36 PM
கவி வேந்தனின் இந்தப் பாராட்டுப் பின்னூட்டம் இன்னும் இன்னும் உற்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி கலைவேந்தன்.

அனுராகவன்
25-06-2008, 05:18 AM
அசதல் கவிதை சிவா!!

சிவா.ஜி
25-06-2008, 05:50 AM
மிக்க நன்றி அனு.