PDA

View Full Version : தலைப்பில்லா கவிதை 3



ஆதவா
18-06-2008, 11:37 AM
அவளிடம் பாலருந்துவிட்டு
முகம் துடைப்பதற்குள் எழுந்தோடி
பொருள் கலைப்பதற்கும்

எதிர்வீட்டு அன்னையிடம்
அருமைகளை அளந்து கட்டி
பின்னாளில் புகார் பெறவும்

ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும்
என்றோ மறந்துவிட்ட மொழியை
நாமே கேட்டு மகிழவும்

மயிலிறகைத் தலையில் சூடிய
கண்ணன் ஒருவன்
என் இல்லத்தில் இல்லை.

ஆதலின்

நான் நந்தரில்லை
அவளும் யசோதையில்லை

இளசு
18-06-2008, 05:39 PM
சுவர்ப்பூச்சில் இன்னும் வெண்மை - கிறுக்கலில்லை..
வட்டத்தட்டில் பால்சோறு - பருக்கை சிந்தவில்லை..

முழுமையும் மூலியாகும்..
பிள்ளை இல்லாத வீடுகளில்..

இந்த ஏக்கத்தை விஞ்சும் ஏக்கம் ஏது?


----

ஆதவா

இது நேரடியாய் சட்டென நான் உணர்ந்த பொருள்..

உள்ளுறை பொருள் இருக்கும்.. பிறர் உரைக்கக் காத்திருப்பேன்

வாழ்த்துகள் ஆதவா!

kavitha
19-06-2008, 06:25 AM
அவளிடம் பாலருந்திவிட்டு
...
...
நான் நந்தரில்லை
அவளும் யசோதையில்லை
வாடகைத்தாய் பற்றியதா ஆதவா?
இல்லை யென்றாலும் கவிதையின் சோகம் இன்னும் தீரவில்லை.
வாழ்த்துகள்

ஆதவா
20-06-2008, 01:41 PM
சுவர்ப்பூச்சில் இன்னும் வெண்மை - கிறுக்கலில்லை..
வட்டத்தட்டில் பால்சோறு - பருக்கை சிந்தவில்லை..

முழுமையும் மூலியாகும்..
பிள்ளை இல்லாத வீடுகளில்..

இந்த ஏக்கத்தை விஞ்சும் ஏக்கம் ஏது?


----

ஆதவா

இது நேரடியாய் சட்டென நான் உணர்ந்த பொருள்..

உள்ளுறை பொருள் இருக்கும்.. பிறர் உரைக்கக் காத்திருப்பேன்

வாழ்த்துகள் ஆதவா!

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா. இக்கவிதையில் எந்த உட்கருத்தையும் திணிக்கவில்லை. நேரடிப் பொருளெடுக்கும் வண்ணம் எழுதியிருக்கிறேன்.

குழந்தைகள் தெய்வத்திற்கு சமானம் என்று சொல்வார்கள். அத்தெய்வத்தைப் பெற்றெடுக்கவோ வளர்ப்பெடுக்கவோ இரு தெய்வங்கள் வேண்டும்..

கண்ணன் எனும் தெய்வத்தைச் சுமந்தவர்கள் நந்தரும் யசோதையும் அப்படி ஒரு கண்ணன் இல்லாதவர்கள் வெறும் ஆசாமிகளே!!

நன்றி அண்ணா

ஆதவா
20-06-2008, 01:47 PM
வாடகைத்தாய் பற்றியதா ஆதவா?
இல்லை யென்றாலும் கவிதையின் சோகம் இன்னும் தீரவில்லை.
வாழ்த்துகள்

இல்லை அக்கா. என்றாலும் உங்கள் கணிப்பு இக்கவிதைக்கு அழகாக ஒத்துப்போவது உண்மை.

நன்றி அக்கா..