PDA

View Full Version : தவிப்பு



சுகந்தப்ரீதன்
18-06-2008, 09:00 AM
தடாகத்தில் தாவிக்குதிக்கும்
தவளையாய் தவிக்கிறேன்
தன்னிலை மறந்து
தாமரைநீ நீராடுகையில்..!!

ஓவியன்
18-06-2008, 09:53 AM
தடாகமே அழகு
தாவிக் குதிக்கும் தவளை
தடாகத்தில் அழகு
தடாகத்தில் தவழும்
தாமரையும் அழகு

அவை உவமையான
சுகந்த கவி
இன்னும் அழகு...!! :icon_b:

kavitha
18-06-2008, 11:15 AM
அழகிய காட்சிப் பா .... வாழ்த்துகள் சுபி.

சுகந்தப்ரீதன்
18-06-2008, 12:03 PM
அவை உவமையான
சுகந்த கவி
இன்னும் அழகு...!! :icon_b:
நன்றியண்ணே..!!
உம் பின்னூட்டமும் அழகு..!!:)

அழகிய காட்சிப் பா .... வாழ்த்துகள் சுபி.நன்றி.. கவி தா அக்கா..!!:icon_ush:

இளசு
18-06-2008, 11:11 PM
மண்டூகமும் (தவளை), முண்டகமும் (தாமரை)
தண்ணீரில் அருகருகே இருந்தாலும்
வண்டுக்குத்தான் தேனுண்டு உறவாடும்
வாய்ப்புண்டாம்...!

சங்கப்பாட்டு நினைவுக்கு வந்தது!

காட்சிப்பாவுக்கு பாராட்டுகள் சுகந்தன்!

சுகந்தப்ரீதன்
19-06-2008, 02:19 AM
காட்சிப்பாவுக்கு பாராட்டுகள் சுகந்தன்!
மிக்க நன்றி அண்ணா..!!

சிவா.ஜி
19-06-2008, 04:46 AM
தாமரை தன்னிலை மறந்ததால்....தவளை தன்னையே மறந்ததா?
தாமரைதான் எப்போதுமே தண்ணீரில் இருக்குமே....அப்போ தவளை தாமரையில்லாக் குளத்திலிருந்து இந்த குளத்திற்கு தாவி வந்ததா?
வாழ்த்துகள் சுபி.

சுகந்தப்ரீதன்
19-06-2008, 08:41 AM
தாமரை தன்னிலை மறந்ததால்....தவளை தன்னையே மறந்ததா?
தாமரைதான் எப்போதுமே தண்ணீரில் இருக்குமே....அப்போ தவளை தாமரையில்லாக் குளத்திலிருந்து இந்த குளத்திற்கு தாவி வந்ததா?
வாழ்த்துகள் சுபி.
அண்ணா... நீங்க தாமரைக்கான அர்த்தத்தை புரிஞ்சி பேசுறீங்களா..?
புரியாம பேசுறீங்களான்னு தெரியலையே..? எதுவானாலும் வாழ்த்தியமைக்கு நன்றியண்ணா..!!

சிவா.ஜி
19-06-2008, 09:18 AM
புரிஞ்சுதான் சொன்னேன் சுபி. விளக்கமளித்தால் அது பண்பட்டவர் பகுதிக்குப் போய்விடும்...ஹி..ஹி..

சுகந்தப்ரீதன்
19-06-2008, 09:22 AM
புரிஞ்சுதான் சொன்னேன் சுபி. விளக்கமளித்தால் அது பண்பட்டவர் பகுதிக்குப் போய்விடும்...ஹி..ஹி..
:D:D:D

பூமகள்
19-06-2008, 09:36 AM
சுகு... எப்பவெருந்து உங்க ஊரில்... தாமரைக் குளமெல்லாம் வந்துச்சு?? ஆனாலும் நீ தவளைன்னு நீயே ஒத்துக்கிட்டியே...!! இதைத்தான் "நுணலும் தன் வாயால் கெடும்"-னு சொன்னாங்களோ??! ;)

நீர்கொண்ட தாமரை
மேல் கொண்ட பித்தத்தால்
சித்தம் கலங்கிடுச்சோ?? :sprachlos020::sprachlos020::rolleyes:

அருமை சுகு.. சீக்கிரம் தாமரையைப் பரிச்சி உன் கூட வைச்சிக்க வாழ்த்துகள்..!! :D:D

புரிஞ்சுதான் சொன்னேன் சுபி. விளக்கமளித்தால் அது பண்பட்டவர் பகுதிக்குப் போய்விடும்...ஹி..ஹி..
:icon_b::icon_b: :p:p :D:D

சுகந்தப்ரீதன்
19-06-2008, 12:01 PM
சுகு... எப்பவெருந்து உங்க ஊரில்... தாமரைக் குளமெல்லாம் வந்துச்சு?? அதுவா... அன்னிக்கொரு நாள் கனவுல வந்துச்சிங்கோ..:wuerg019::icon_rollout:

அருமை சுகு.. சீக்கிரம் தாமரையைப் பரிச்சி உன் கூட வைச்சிக்க வாழ்த்துகள்..!! :D:D
மிக்க நன்றிம்மா பூ.. உன்னோட அட்வான்ஸ் ஆசிர்வாதத்துக்கு..!!:mini023:

ஆதவா
24-06-2008, 01:48 PM
கவிதை அழகு....

இதைத்தவிர எனக்கு சொல்ல ஏதுமில்லை சுபி...

சுகந்தப்ரீதன்
28-06-2008, 03:02 PM
கவிதை அழகு....

இதைத்தவிர எனக்கு சொல்ல ஏதுமில்லை சுபி...
எனக்கு அதுபோதும் ஆதவா..!!:icon_b:

மலர்விழி
28-06-2008, 06:57 PM
நான்கு வரியில் ஓர் அற்புதம்.......:aktion033::aktion033:

தடாகம், தவளை, தவிப்பு, தாமரை
எத்தனை 'த'??? - நீங்கள்
தரவேண்டும் பல கவிதை
தவிக்கிறேன் அதை படிக்க -நான்:icon_rollout::icon_rollout::icon_rollout:

சுகந்தப்ரீதன்
29-06-2008, 04:33 AM
நீங்கள் தரவேண்டும் பல கவிதை
தவிக்கிறேன் அதை படிக்க -நான்:icon_rollout::icon_rollout::icon_rollout:

அப்ப முதல்ல தண்ணி குடிங்க..தங்கச்சி..:confused: (தாகம்ன்னா முதல்ல தண்ணிக் குடிக்கனும்ன்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க..:sprachlos020: )

மிக்க நன்றி மலர்விழி..கவிதையை பாராட்டியமைக்கு..:icon_b:!!

முயற்சிக்கிறேன் என்னால் முடிந்தவரை இன்னும் எழுத..சரியா..?!!:icon_rollout:

கலைவேந்தன்
29-06-2008, 05:06 AM
கவிதை அழகு!
தடாகம் அழகு!
தவளைஅழகு!
தாமரை அழகோ அழகு!

சுகந்தப்ரீதன்
29-06-2008, 10:08 AM
கவிதை அழகு!
தடாகம் அழகு!
தவளைஅழகு!
கலைவேந்தரின் பின்னூட்டம் அதைவிட அழகு..!!
நன்றி கலையண்ணா..!!:icon_b:


தாமரை அழகோ அழகு!

அப்படியா... நான் இன்னும் அவரை பார்க்கலை..!!
அதனால அதுபற்றி என்னால கருத்து சொல்ல முடியாதுங்கோ..:wuerg019::icon_rollout:

மலர்விழி
29-06-2008, 10:25 AM
[QUOTE=சுகந்தப்ரீதன்; அப்ப முதல்ல தண்ணி குடிங்க..தங்கச்சி..:confused: (தாகம்ன்னா முதல்ல தண்ணிக் குடிக்கனும்ன்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க..:sprachlos020: )

மிக்க நன்றி அண்ணா...தாகம் தீர்க்க வழி சொன்னதற்கு...
உங்கள் கவி பணி தொடர வாழ்த்துகள்:mini023::icon_b:

சுகந்தப்ரீதன்
29-06-2008, 10:41 AM
[
மிக்க நன்றி அண்ணா...தாகம் தீர்க்க வழி சொன்னதற்கு...:icon_b:
கோவிச்சுக்காதிங்க... சும்மா..கிண்டலுக்கு சொன்னேங்கே.. தங்கச்சி..!!:wuerg019:

உங்கள் கவி பணி தொடர வாழ்த்துகள்:mini023:
மிக்க நன்றி...!! சரி..என்னை வாழ்த்துறீங்களே.. நீங்க எப்ப உங்க விழி.. மன்னிக்கவும் கவி பயணத்தை ஆரம்பிக்க போறீங்க..??!:fragend005: