PDA

View Full Version : வாஞ்சி நாதன் !



தங்கவேல்
18-06-2008, 02:33 AM
எண்ணங்களில் எரிமலை
ரத்த நாளங்களில் புயல்
சுண்டி விட்ட நரம்பாகிறது உடல்
சூரியனின் தகிப்பாகிறது மனசு
அணுகுண்டின் நெருப்பாகிறது கண்கள்
கொதிக்கும் இரும்புலையின்
வசமாகிறது உணர்ச்சிகள்
உன்னை நினைக்கையில்

நரம்புகள் முறுக்கேற
ரத்தம் கொதி கொதிக்க
உடம்பு எரிய எரிய
உணர்ச்சிகள் வெடித்து சிதறுகிறது
உன் தியாகத்தை நினைக்கையில்

மேகம் தனக்காக மழை பெய்வதில்லை.
காற்று தனக்காக வீசுவதில்லை
நீதான்... நீதான்... நீதான்
மேகம்...
நீதான் காற்று...
நீதான் இந்தியாவின் ரத்தம்
நீதான் இந்தியாவின் மூச்சு
நீதான் இறைவன்.....

மணியாச்சி ரயில் நிலையத்தில் பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் துரையை
சுட்ட தமிழன் , இந்தியன் வாஞ்சி நாதனுக்கு ஒரு சல்யூட்

kavitha
18-06-2008, 03:50 AM
இன்று அவரின் நினைவுநாளா சகோதரரே?
ரத்தம் சூடேற்றும் கவிதை. பாராட்டுகள்.

தங்கவேல்
18-06-2008, 05:36 AM
தினமலரில் செய்தி பார்த்ததும் கவிதை பிறந்தது. எழுதிவிட்டேன். இன்று தான் நினைவு நாள்

ஓவியன்
18-06-2008, 06:35 AM
வாஞ்சிநாதனை புத்தகத்தில் தான் பார்த்திருக்கின்றேன்..
ஆனாலும்
தாயகத்தில் பல வாஞ்சிநாதன்களை நிஜமாகவே
பார்த்தும் கேட்டும் படித்தும் அறிந்துள்ளேன்...

அன்று தீவிரவாதியாக காட்டப்பட்ட வாஞ்சிநாதன்
இன்று ஓர் சுதந்திர தியாகி...!!

இந்த நிலை என் தாயகத்திலும் வரட்டும்..!!

நரம்புகளை சூடேற்றும் கவிக்கு என் நன்றிகள் தங்கம் அண்ணா..!!

இதயம்
18-06-2008, 06:40 AM
எண்ணங்களில் எரிமலை
ரத்த நாளங்களில் புயல்
சுண்டி விட்ட நரம்பாகிறது உடல்
சூரியனின் தகிப்பாகிறது மனசு
அணுகுண்டின் நெருப்பாகிறது கண்கள்
கொதிக்கும் இரும்புலையின்
வசமாகிறது உணர்ச்சிகள்
உன்னை நினைக்கையில்
வாஞ்சி நாதனின் நினைவாக எழுதப்பட்ட கவிதை (கொஞ்சம் ஓவர்னாலும்) அவரின் தியாகத்திற்கு நன்றிக்கடன்..!! யாரையும் அத்தனை சீக்கிரம் பாராட்டாத தங்கவேல் வாஞ்சி நாதனை இந்த அளவுக்கு தூக்கோ, தூக்குன்னு தூக்கியிருப்பதற்கு விடுதலை போராட்ட காரணம் தவிர வேற ஏதோ காரணம் இருக்குன்னு எனக்கு தெரியும்..!!



நீதான் இறைவன்.....

வாஞ்சி நாதனுக்கு கோயில் கட்ட இடம் பார்த்தாச்சா தங்கவேல்..?:D:D

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-06-2008, 07:34 AM
நாட்டில் இருக்கும் 974979341937419 கடவுள்களின் வரிசையில் வாஞ்சிநாதனையும் இணைத்திருக்கிறீர்கள். அருமையான கவிதை. பாராட்டுக்கள்

தங்கவேல்
18-06-2008, 03:36 PM
வாஞ்சி நாதனின் நினைவாக எழுதப்பட்ட கவிதை (கொஞ்சம் ஓவர்னாலும்) அவரின் தியாகத்திற்கு நன்றிக்கடன்..!! யாரையும் அத்தனை சீக்கிரம் பாராட்டாத தங்கவேல் வாஞ்சி நாதனை இந்த அளவுக்கு தூக்கோ, தூக்குன்னு தூக்கியிருப்பதற்கு விடுதலை போராட்ட காரணம் தவிர வேற ஏதோ காரணம் இருக்குன்னு எனக்கு தெரியும்..!!


வாஞ்சி நாதனுக்கு கோயில் கட்ட இடம் பார்த்தாச்சா தங்கவேல்..?:D:D

இதயம்.... எனக்கு மனிதனை கடவுளாக பார்க்கத்தான் தெரியும். மதமெல்லாம் மண்ணாங்கட்டி...

வாஞ்சி நாதன் ஆஸ்துரையினை சுடும்போது என்ன மன நிலை இருந்திருக்கும் என்று எண்ணினேன். எழுதினேன். தட்ஸ் ஆல்..