PDA

View Full Version : பிரபலங்களின் பிறவளங்கள்...தீபன்
18-06-2008, 02:05 AM
பிரபலங்களின் பிறவளங்கள்...

அணுவைத் துளைத்து அதிசயம் படைத்த
ஜன்ஸ்டீன் கூட
மனமதைத் துளைத்து மங்கையை கவரும்
மதிதனையிழந்து
மனைவியைப் பிரிந்தார் மும்முறை!

சிரிப்பால் கலக்கி சிந்தையை மயக்கி
சலிப்பைப் போக்கிய
சாளி சப்ளீனும்,
மனம் சேரா இணையால்
வனமாகக் கண்டார் வாழ்வில்!

தத்துவம் உதிர்த்து பு(து)த்தகம் படைத்து
உலகை உலுக்கிய
டால்ஸ்டாயும்,
சுற்றமே விரட்ட நித்தமும் அலைந்து
உதிர்ந்தே போனார்,முகவரி இழந்து!

நெடுங்காலமாண்ட கொடுங்கோலாட்சி
கனவாகிப் போக நெருப்பாகி வந்த
நெல்சன் மண்டேலாவும்,
உடன் வந்த வின்சி உடன் வாழ்வு காணாது
மறுதேச மங்கையுடன் மணவாழ்வு கண்டார்!

நடிப்பின் தந்தையாகிய நாடகத்தின் தெய்வமாகி
ஆங்கிலத்தின் அண்ணலான
ஷேக்ஸ்பியர் கூட
வரியேய்ப்பு வழக்கால்-வாழ்க்கை
வலுவிழந்து போனார்!

அழகே நிறைந்தார் இளவரசியுமானார்
அன்பே கொண்டார்-அதில்
தன்னையும் மறந்தார்
டயானா வென்ற தேவதையுமானார்,
மாளிகைவாழ்வின் கசப்பை மறக்கவே
பண்பைத் துறந்து பலரோடிணைந்தார்!

திகிலைப் படைத்தார் த்ரில்லை நுழைத்தார்
சிந்திப்பால் காதலையும் சேர்த்தார்
மூழ்காத ரைட்டானிக்கால் ஆஸ்காரில் மூழ்கினார்-
ஜேம்ஸ் கமரூன்,
விவாகரத்து விவாகரத்தால்
வாழ்க்கைப் படகு மூழ்கித் தவித்தார்!

அதிரடிகள் கொடுத்தார் புதிரடிகள் படைத்தார்
புயம் இரண்டும் வார்த்த இரும்பெனக் கொண்ட
ஜெயம் கொண்ட ஜெயசூரியாவும்,
புயங்கொண்ட வலிமை
மனங்கொள்ள மறுத்தமையால்
உடன் வந்த முதல்மங்கை
உதிர்ந்தோடிப் போனாள்!

உலகை ஆண்டார் உல்லாசம் கண்டார்
தொடர்ந்துமிருமுறை அதிபருமானார்
பில்கிளிங்டன்,
மோனிக்காவில் கொண்ட மோகத்தால்
வாழ்வில் கொண்டார் சோகம்!

கறுப்புநாட்டிற்கு வெள்ளைச் சூரியனாய்
துடுப்பாட்டத்திற்கு துடுப்பானார்
தலைமைத்துவத்தில் தலைவரானார்
ஹன்சி குரன்ஞ்சே,
திறமையை விலைபேசி தரத்திற்கு திறம்பார்த்ததால்
தலைகுனிந்தார், வாழ்விழந்தார்!.

(பல ஆண்டுகளுக்குமுன் நான் பத்திரிகையில் எழுதியது இது. தற்போது சில தரவுகள் மாறிப்போயிருக்கலாம்.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்னைய பதிவு...

சோரம் போனவனிற்கு…. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16017)--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேசம்
18-06-2008, 05:36 AM
பிரபலங்களின் பிறவளங்கள் சிலது எனக்கு புதிதாக இருந்தது.பிரபலங்களுக்கு தங்களது திறமை தாண்டி சில விஷயங்கள் தேவைபடுகிறது அவர்கள்து வாழ்க்கை சிறக்க. வாழ்த்துகள் தீபன்

kavitha
18-06-2008, 06:52 AM
இதைத்தாண்டி சொந்த வாழ்க்கையில் எத்தனை சோகங்களோ? ஒருவரின் ஒவ்வொரு செயலுக்குமே ஒரு காரணம் கற்பிக்கப்படுகிறது. அது நியாயமானதா? என்பதை எதிராளியிடமிருந்து பெற்ற பிறகு முடிவெடுத்தல் நலம். அதுவரை சுயநலப்பேய் பிடிக்காமல் இருக்கவேண்டுமே.
முன்னோடியாய் இருப்பவர்கள், தன் வழியில் வரும் பிறரையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். சாதனையாளர்கள் அனைவரும் வல்லவர்கள், நல்லவர்களா? என்பது கேள்விக்குறியே!

அது சரி தீபன். இப்படி உங்கள் இஷ்டத்துக்கு 'பெரிய' மனிதர்களை இழுத்துப்போட்டு எழுதியிருக்கிறீர்களே.. என்ன தைரியம் உங்களுக்கு? எந்த பத்திரிகையில் எழுதினீர்கள்? அவர்களின் ரசிகர்கள் ஏதும் உங்களைச் சொல்லவில்லையா?

ஓவியன்
18-06-2008, 08:09 AM
தீபன், உங்களது வேறுபட்ட சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்
இருந்தாலும்
மற்றவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைக் கீறிப் பார்ப்பது நாகரீகம்தானா...??
அவர்கள் நம் தலைவர்களாக, பெரியவர்களாக இருந்த ஒரே காரணத்திற்காக
அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் நாம் தலையிடுவது சரிதானா...???

உலகத்தில் எந்த மனிதனும் நூற்றுக்கு நூறு சரியாக இருக்க முடியாது,
ஒரு வெள்ளைப் பேப்பரில் ஒரு கறுப்புப் புள்ளி இருந்தால் அந்த
கறுப்புப் புள்ளியை மட்டும் பார்த்துப் பழகிவிட்டோம்
மீதமுள்ள வெளைப் பேப்பரில் எத்தனை நல்ல விடயங்களுண்டு என நாம் சிந்திப்பதில்லை...!!

சிந்தனைகளை மாற்றுவோம்
நல்லதையே சிந்திப்போம்
நல்லவையை மட்டுமே பின்பற்றுவோம்
நீரகற்றி பாலுண்ணும் அன்னம் போல....

தீபன்
18-06-2008, 09:15 AM
பிரபலங்களின் பிறவளங்கள் சிலது எனக்கு புதிதாக இருந்தது.பிரபலங்களுக்கு தங்களது திறமை தாண்டி சில விஷயங்கள் தேவைபடுகிறது அவர்கள்து வாழ்க்கை சிறக்க. வாழ்த்துகள் தீபன்
நன்றி நேசம்,

"ஜேனா" தானா நீங்க ...?
பத்திரிகையில் படித்திருக்கிறேன்.

நன்றி கிஷோர்... ஆமா... பத்திரிகை படிக்கிற பழக்கமெல்லாம் இருக்கா...!

தீபன்
18-06-2008, 09:18 AM
அது சரி தீபன். இப்படி உங்கள் இஷ்டத்துக்கு 'பெரிய' மனிதர்களை இழுத்துப்போட்டு எழுதியிருக்கிறீர்களே.. என்ன தைரியம் உங்களுக்கு? எந்த பத்திரிகையில் எழுதினீர்கள்? அவர்களின் ரசிகர்கள் ஏதும் உங்களைச் சொல்லவில்லையா?

2000ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வரும் தினக்குரல் நாள்தளில் பிரசுரமாகியிருந்தது. இதுக்கெதுக்கு தைரியம்...? நானென்ன சினிமா நாயகர்களை பற்றியா எழுதினேன்...!?

தீபன்
18-06-2008, 09:29 AM
மற்றவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைக் கீறிப் பார்ப்பது நாகரீகம்தானா...??
அவர்கள் நம் தலைவர்களாக, பெரியவர்களாக இருந்த ஒரே காரணத்திற்காக
அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் நாம் தலையிடுவது சரிதானா...???

உலகத்தில் எந்த மனிதனும் நூற்றுக்கு நூறு சரியாக இருக்க முடியாது,
ஒரு வெள்ளைப் பேப்பரில் ஒரு கறுப்புப் புள்ளி இருந்தால் அந்த
கறுப்புப் புள்ளியை மட்டும் பார்த்துப் பழகிவிட்டோம்
மீதமுள்ள வெளைப் பேப்பரில் எத்தனை நல்ல விடயங்களுண்டு என நாம் சிந்திப்பதில்லை...!!

சிந்தனைகளை மாற்றுவோம்
நல்லதையே சிந்திப்போம்
நல்லவையை மட்டுமே பின்பற்றுவோம்
நீரகற்றி பாலுண்ணும் அன்னம் போல....

ஓவியன்... மீண்டும்படித்து பாருங்கள்...
நான் எவரையும் குறைகூறவில்லையே... எவரிலும் தப்பு சொல்லவில்லையே... அவர்கள் சொந்த வாழ்வில் இருந்த சோகங்களைத்தான் சொல்லியிருந்தேன்...

விஐபி க்களானாலும் அவர்களுக்கும் கஸ்ரங்கள், பலவீனங்கள் இருக்குமென்ற கருத்தை வலுப்படுத்தும் விதமாகவேபிரபலங்கள் சிலரின் வாழ்க்கை சம்பவங்களை கையாண்டிருந்தேன். மேலும் அந்த சம்பவங்களுக்கு அந்த பிரபலங்கள்தான் காரணமென நான் ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை.

இதிலெங்கே நாகரிகக் கேடு இருக்கிறது...?

நல்லதையே சிந்திப்போமென்று இருந்ததால்தான் நாம் இன்றும் இப்பிடியே இருக்கிறோம். நாம் சிந்திக்காமலே விடுவாதால் கெட்டவை இல்லாமல் போய்விடப்போவதில்லை... அவற்றையும் சிந்தித்து பார்த்தால்தான் அதிலிருந்து விலகியிருக்கவும் முடியும்.

தவறுகளை சிந்திப்பது தவறாகாது. அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவைகளை கற்றுக்கொள்ளாதிருப்பதுதான் தவறு என்பது என் சிந்தனை.

kavitha
18-06-2008, 09:37 AM
2000ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வரும் தினக்குரல் நாள்தளில் பிரசுரமாகியிருந்தது. இதுக்கெதுக்கு தைரியம்...? நானென்ன சினிமா நாயகர்களை பற்றியா எழுதினேன்...!?
சினிமா நாயகர்களைவிடவும் உலக அளவில் இவர்களுக்கான ரசிகர்கள் அதிகம் தீபன். உங்கள் கவிதை தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்

ஓவியன்
18-06-2008, 10:07 AM
நல்லதையே சிந்திப்போமென்று இருந்ததால்தான் நாம் இன்றும் இப்பிடியே இருக்கிறோம். நாம் சிந்திக்காமலே விடுவாதால் கெட்டவை இல்லாமல் போய்விடப்போவதில்லை... அவற்றையும் சிந்தித்து பார்த்தால்தான் அதிலிருந்து விலகியிருக்கவும் முடியும்.

தவறுகளை சிந்திப்பது தவறாகாது. அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவைகளை கற்றுக்கொள்ளாதிருப்பதுதான் தவறு என்பது என் சிந்தனை.

நீங்கள் கூறுவது சரியாகத் தெரிந்தாலும் எண்ணம் போல வாழ்வு என்பார்களே, அதனடிப்படையிலேயே என் கருத்தினை நான் பதித்தேன்..

நம் எண்ணங்களும் சிந்தனைகளும் நம் வளர்ச்சியைத் தீர்மானிக்கவல்லவை...

அதனால் அவற்றை கவனமாகப் பயன்படுத்துவது நம் கடமை...

தீபன்
18-06-2008, 10:35 AM
சினிமா நாயகர்களைவிடவும் உலக அளவில் இவர்களுக்கான ரசிகர்கள் அதிகம் தீபன். உங்கள் கவிதை தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்

நான் சொல்லவந்தது, என் கருத்துக்களை தவறாக புரிந்துகொண்டோ அல்லது கண்மூடித்தனமாக தம் தலைவர்களை ஆதரித்துக்கொண்டோ வர்மளவுக்கு மேற்படி விஐபிக்களின் ரசிகர்கள் இருகமாட்டார்கள். ஆனால், சினிமா ரசிகர்கள் கொஞ்சப்பேரே இருந்தாலும் அப்படியல்ல என்ற அர்த்தத்தில்தான்.

வாழ்த்துக்களிற்கு நன்றி சகோதரி.

தீபன்
18-06-2008, 10:45 AM
நீங்கள் கூறுவது சரியாகத் தெரிந்தாலும் எண்ணம் போல வாழ்வு என்பார்களே, அதனடிப்படையிலேயே என் கருத்தினை நான் பதித்தேன்..

நம் எண்ணங்களும் சிந்தனைகளும் நம் வளர்ச்சியைத் தீர்மானிக்கவல்லவை...

அதனால் அவற்றை கவனமாகப் பயன்படுத்துவது நம் கடமை...

உங்கள் கருத்து எனக்கும் ஏற்புடையதே. ஆனால், உங்கள் கருத்திற்கும் என் ஆக்கத்திற்கும் என்ன தொடர்பென எனக்கு புரியவில்லை நண்பா.
நான் சொன்னவை சிலரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களே. என் எண்ணங்களல்ல.
பலருக்கும் தெரிந்தவர்களின் வாழ்வில் இடம்பெற்ற சம்பவங்களை சொல்வதில் என்ன தவறு...?
(அவர்களின் கறுப்பு புள்ளியை மட்டுமே நான் பார்ப்பதாக சொல்வீர்கள்... அப்படியல்ல, மிகுதி நல்ல விடயங்கள் பொதுவாக எல்லோடுக்கும் தெரிந்ததுதான்.அதனால்தான் அவற்றை சொல்லவில்லை. அப்படியிருக்க சிலவரிகளில் எந்த விதத்தில் அவர்கள் பிரபலெமென சுட்டிக்காட்டியிருப்ப்தில் அவர்களின் சிறப்புக்களும் கொஞ்சம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுதானே...

மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன், மேற்படி நிகழ்வுகளில் அவர்களின் தவறு எந்தளவிற்கு உள்ளதென்ற அவரவர் சொந்த வாழ்க்கையில் நான் தலையிடவில்லை.

ஓவியன்
18-06-2008, 10:48 AM
மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன், மேற்படி நிகழ்வுகளில் அவர்களின் தவறு எந்தளவிற்கு உள்ளதென்ற அவரவர் சொந்த வாழ்க்கையில் நான் தலையிடவில்லை.

உண்மைதான், நான் தான் கொஞ்சம் தவறாகப் புரிந்து விட்டேன் போல..

இத்துடன் முடித்துக் கொள்வோமே தீபன்..!! :)

தீபன்
18-06-2008, 11:00 AM
உங்கள் பார்வையில் தப்பென சொல்லவில்லை. ஆனால் என் பார்வையிலும் தவறில்லையென சொல்ல நினைத்தேன் அவ்வளவே. நன்றி நண்பா.

உண்மைதான், நான் தான் கொஞ்சம் தவறாகப் புரிந்து விட்டேன் போல..

இத்துடன் முடித்துக் கொள்வோமே தீபன்..!! :)

இதில உள்குத்தொண்ணுமில்லையே...

ஓவியன்
18-06-2008, 11:10 AM
இதில உள்குத்தொண்ணுமில்லையே...

என்ன தீபன் இப்படிச் சொல்லிப் போட்டியள்...

எங்களுக்கெல்லாம் வெளிப்படையாகத் குத்தித்தானே பழக்கம்..!! :)

kavitha
18-06-2008, 11:19 AM
எங்களுக்கெல்லாம் வெளிப்படையாகத் குத்தித்தானே பழக்கம்..!!
:) :) :)

ஆதவா
18-06-2008, 11:36 AM
பிரபலங்களை எழுதும்
நிருபனின் வளம்கூட
வாழ்விழந்துதான் போனது........

நல்ல கவிதை தீபன். பத்திரிக்கைகளில் வருவது அவ்வளவு சுலபமல்ல. நம் எழுத்துக்களை அச்சில் பார்த்தால் வரும் சுகமே அலாதி.

வாழ்த்துகள்

தீபன்
18-06-2008, 04:43 PM
பிரபலங்களை எழுதும்
நிருபனின் வளம்கூட
வாழ்விழந்துதான் போனது........

நல்ல கவிதை தீபன். பத்திரிக்கைகளில் வருவது அவ்வளவு சுலபமல்ல. நம் எழுத்துக்களை அச்சில் பார்த்தால் வரும் சுகமே அலாதி.

வாழ்த்துகள்

புரியவில்லை நண்பா... நிருபன் வாழ்விற்கு என்ன கேடு...? யாரவர்?

ஆமாம்... அதொரு காலம்.... பசுமை நினைவுகள்....

தீபா
09-07-2008, 07:50 AM
கவிதை அருமைங்க. பத்திரிக்கையில போடவேண்டிய திறமைகள் இந்தக் கவிதையில இருக்கு..

உடைந்த நிலாக்கள் என்று பா.வீஜய் எழுதிய புத்தகமும் இந்த க்ருத்தை மையமா வெச்சுத்தான் இருக்கும்.. படிச்சுப்பாருங்க..