PDA

View Full Version : நிமிடங்கள் கழியும் நீயின்றி...



அகத்தியன்
17-06-2008, 07:02 PM
மௌனங்கள்
என் வாழ்வாகிப்போன-
ஓர் நாளில்,
நீ என்னில் நீங்கிப்போனாய்.
அன்றுதான்,
மழை எனக்காக அழுதது.
காலம் பொய்த்த ஒரு வெளியில்
நான் குடியிருக்கலானேன்.

நீ அறிவாயா?
இன்னு நான் உன் ஞாபகங்களில் சீவிக்கின்றேன்...
உன்னோடான நிமிடங்களின் பெறுமதி
என்னைத் தவிர யார் அறிவார் கண்மணி?

உன் அருகிலான என் இருப்புகளில்,
உன் புத்தாடை வாசனை இன்றும் உண்டு..
எங்கேயோ, யாரிடமோ..
ஆனால் நீ இல்லை,

ஒவ்வொன்றும் பொய்த்துப் போகும்
ஒரு கணத்தினை மாற்றுவாய்
மெல்லிய முறுவல் செய்து....
என் அடுத்த மேசைக்காரியும் அப்படித்தான்
ஆனால் அவள் நீயில்லை..

நிமிடங்கள் கழியும்
நீயின்றி...
ஆனாலும், நினைவுகள் அகலாது கணப்பொழுதேனும்

அறிஞர்
17-06-2008, 09:39 PM
ஒவ்வொன்றும் பொய்த்துப் போகும்
ஒரு கணத்தினை மாற்றுவாய்
மெல்லிய முறுவல் செய்து....
என் அடுத்த மேசைக்காரியும் அப்படித்தான்
ஆனால் அவள் நீயில்லை..

நிமிடங்கள் கழியும்
நீயின்றி...
ஆனாலும், நினைவுகள் அகலாது கனப்பொழுதேனும்
காதலிக்கு இணையாய் யாருண்டு...
நிமிடங்கள் கழிந்தாலும்...
நினைவு மாறாமல் இருக்க அவள் செய்த மாயமென்ன??

விகடன்
17-06-2008, 09:45 PM
நினைவுகளிற்கு மட்டும் நீங்காத இடமளித்து சென்றவள் யாரோ?

சுகந்தப்ரீதன்
18-06-2008, 12:21 PM
நிமிடங்கள் கழியும்
நீயின்றி...
ஆனாலும், நினைவுகள் அகலாது கணப்பொழுதேனும்
நினைவு முழுதும்
அவளிருக்க...
அவளின்றி கழியும்
நிமிடமேது அகத்தியரே..?!
முரண்பாடாயுள்ளதே..
முடிவிலுள்ள வரிகள்..?!

வாழ்த்துக்கள்..தொடருங்கள்..!!:icon_b:

சிவா.ஜி
18-06-2008, 12:45 PM
அன்பு இதயத்தின் அருகாமை, இல்லாமல் போவது எத்தனை வேதனை. நிஜத்தில் வாழ்ந்தவள் நெடுந்தொலைவு போன பிறகு, நினைவுகளில் நிமிடங்கள் கழிவது நிம்மதியின்றித்தானே.

சிறப்பான வார்த்தையாடல். பாராட்டுகள் அகத்தியன்.

அகத்தியன்
18-06-2008, 03:48 PM
நினைவு முழுதும்
அவளிருக்க...
அவளின்றி கழியும்
நிமிடமேது அகத்தியரே..?!
முரண்பாடாயுள்ளதே..
முடிவிலுள்ள வரிகள்..?!

வாழ்த்துக்கள்..தொடருங்கள்..!!:icon_b:

நன்றி சுகந்தப்ரிதன்,
அவள் இல்லாமல் நினைவுகள் இல்லைதான். நான் சொன்னது உயிருள்ள அவளை. நடமாடும் அவளை.
அதை விடுமையா. என்னால் சொல்ல முடிய வில்லை. உமக்கு புரியாததா?:icon_b:;)

அகத்தியன்
18-06-2008, 03:51 PM
நினைவுகளிற்கு மட்டும் நீங்காத இடமளித்து சென்றவள் யாரோ?

நான் அறிவேன். அவளும் அறிவாள். என் கவிதைகளும் அறியும்.
என் பேனாக்கள் அறியும்.
உம்மிடம் கேட்டுப்பாரும்.
எங்காவது மூலையில் அழிந்த புகைப்படம் போல, அவள் தெரிவாள்.
என்ன விராடரே சரியா?:icon_b:

crisho
19-06-2008, 12:15 PM
நான் அறிவேன். அவளும் அறிவாள். என் கவிதைகளும் அறியும்.
என் பேனாக்கள் அறியும்.
உம்மிடம் கேட்டுப்பாரும்.
எங்காவது மூலையில் அழிந்த புகைப்படம் போல, அவள் தெரிவாள்.
என்ன விராடரே சரியா?:icon_b:

நானும் கண்டேன் அவளை-
ஒளிந்திருக்கிறாள் என் இதயத்தில் ஒரு ஓரமாக!! :icon_b:

அருமை அன்பரே... இன்னும் பல காதல் கவி காண பொறுத்திருக்கிறேன்!!

lenram80
19-06-2008, 07:56 PM
தேடி நிதம் வந்து
பல சின்னஞ்சிறு கதை பேசி
மனம் மகிழ பல பணிகள் புரிந்து.....
நரை கூடி கிழப்பருவமெய்தியும் மறக்க முடியுமா?

வாழ்வில் கண்ட ஒரே வசந்த காலத்தை எப்படி மறக்கும் இந்த பாலைவன மனசு?

வாழ்த்துக்கள் அகத்தியன்!!!

பூமகள்
05-07-2008, 12:05 PM
பிரிவின் துயர் கண்டிலார் யாருளர்...??!!

கசங்கிய விடியல்களிலும்..
கசப்பில் தேனுன்
நினைவில் வாழ்ந்து....
போராடியும்
மறக்க முடியுமா??

பாராட்டுகள் சகோதரர் அகத்தியன்..
தொடர்ந்து பல கவிதைகள் தாருங்கள்.

இளசு
05-07-2008, 12:23 PM
ஒரு முறுவலில் உலகைப் புரட்டிப்போடும்
அதிசய நெம்புகோல் காதலி! (காதலன்)

இழந்ததால் தெம்பு குறைந்தநிலை
வந்ததில் வியப்பில்லை!

பாராட்டுகள் அகத்தியன்..

shibly591
08-07-2008, 09:34 AM
நண்பரே கவிதை அருமை..மெல்லிய சோகம் இழையோடும் உங்கள் கவிதைகளின் வரிசையில் இதுவும் ஒரு முத்தாய்ப்பு...யார் அவள்? பழைய அவள்தானா..?அல்லது...

அதை விடுத்து எப்படி போகிறது தொழில்? திருப்தியா?

வளாகத்தில் கற்றது வாழ்க்கைக்கு உதவுகிறதா?

வேறென்ன புதினங்கள்..?

தொடர்பிலிருங்கள்..

mukilan
13-07-2008, 06:49 AM
மழை எனக்காக அழுதது.
உன் அருகிலான என் இருப்புகளில்,
உன் புத்தாடை வாசனை இன்றும் உண்டு..
எங்கேயோ, யாரிடமோ..
ஆனால் நீ இல்லை,



கண்டு கொண்டேன் அகத்தியன். வாசனைத் திரவியமோ, புத்தாடை வாசனையோ எனக்கும் வாசனைக்குமான சினேகம் அதிகம்தான்:D. காலையில் பூக்கும் மரங்கள் சில நினைவுகளையும், தடதடத்த படிக்கட்டுகள் வெளியேற்றும் வாசனையோ சில நினைவுகளையும்.. இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்களில் நுகரும் திறனால் அவதிப்பட்டது உண்மைதான்.

மழை உங்களுக்காக அழுத தற்குறிப்பேற்ற அணியை ரசித்தேன். :icon_b:
சொல்ல வந்த விடயத்தை தெளிவாக உரைத்த விதம் அருமை. பாராட்டுக்கள் அகத்தியன்.

அகத்தியன்
13-07-2008, 10:03 AM
கண்டு கொண்டேன் அகத்தியன். வாசனைத் திரவியமோ, புத்தாடை வாசனையோ எனக்கும் வாசனைக்குமான சினேகம் அதிகம்தான்:D. காலையில் பூக்கும் மரங்கள் சில நினைவுகளையும், தடதடத்த படிக்கட்டுகள் வெளியேற்றும் வாசனையோ சில நினைவுகளையும்.. இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்களில் நுகரும் திறனால் அவதிப்பட்டது உண்மைதான்.

மழை உங்களுக்காக அழுத தற்குறிப்பேற்ற அணியை ரசித்தேன். :icon_b:
சொல்ல வந்த விடயத்தை தெளிவாக உரைத்த விதம் அருமை. பாராட்டுக்கள் அகத்தியன்.

உண்மைதான் நண்பரே.

ஞாபகங்களை கிளறுவதில் வாசத்திற்கு முக்கிய இடமுண்டு.

உங்கள் அவதிகள் எதுவென என்னாலும் யூகிக்க முடிகின்றது. ஏனெனில் நானும் அதற்குள்தானே.