PDA

View Full Version : நினைவாகவே வாழ்கிறோம்



நம்பிகோபாலன்
17-06-2008, 06:50 PM
மகனே
நீ நலமாய்
இருப்பாய் என்கிற
நினைவில் எழுதும்
என் எழுத்துக்கள்

உன்னை பற்றிய
எண்ணங்களே
எங்கள் இருவரின்
வாழ்க்கையாகி போனதால்
இன்று நீ
விட்டு பிரிந்து
சென்ற பின்னும்
உன் முகம் எங்கள்
நெஞ்சை வருடி போகிறது

மேல்நாடு போனதாலா
மேற்கத்திய கலாசாரத்தில்
மாறியதாலா
எங்களுடன் வாழ
இஷ்டமில்லை என்று
சொன்னாய்
அப்பொழுதே
நாங்கள் இருவரும்
நிஜமாய் இறந்தோம்
நிழலாய் வாழுகிறோம்

சின்ன வயது
முதலே உனக்காக
பார்த்து பார்த்து
செய்தோமோ
அவையெல்லாம்
எங்களை பரிகாசம்
செய்கிறது
உன் பாசத்தால்...

இன்று
இருவரும் பெரிய
வீட்டில் தனிமையில்
ஆறுதல் கொண்டாலும்
உன் நினைவாகவே
வாழ்கிறோம் வாழ்க்கையை.........

kavitha
18-06-2008, 05:43 AM
வலியை ஏற்படுத்திவிட்டது கவிதை.
பெற்றோர்களையும் கூட வைத்துக்கொள்ளலாம் என்பது சில நாடுகளில் உள்ளதே.


எங்களுடன் வாழ
இஷ்டமில்லை என்று
சொன்னாய்
அவர்களுடன் வாழவாவது இவர்கள் இஷ்டம் தெரிவித்திருக்கலாமே.
உறவுகளின் அன்பை உணராதவர்கள் பணம் தேடும் எந்திரங்கள்.

ஓவியன்
18-06-2008, 06:09 AM
பெற்று ஆளாக்கி
பாலூட்டி சோறூட்டி
மகன் இலட்சியமே
தன் இலக்கென வாழ்ந்து
ஏணியாக இருந்து
ஏற்றி விட்டவர்களை
மேலிருந்து காலால்
உதைத்து வீழ்த்திய
கயமையை சாடும் கவிதை...

பாராட்டுக்கள் நம்பி...!!

நம்பிகோபாலன்
18-06-2008, 07:11 AM
நன்றி கவி, பணம் தேடும் எந்திரங்கள் உண்மையான வார்த்தை.

நன்றி ஓவியன்.

ஆதவா
24-06-2008, 01:02 PM
ஒரு பெற்றவர்களின் கண்ணீர் கடிதம்.

திரவியம் சேர்க்க மேலை நாடுகளுக்குச் சென்றவர்களைச் சாடி... அதிலும் பெற்றவர்களை மதிக்காமல்..

நன்று நம்பி.