PDA

View Full Version : கல்யாணம்



rocky
16-06-2008, 01:22 PM
எப்போதும் போல் அன்றும் சுப்ரமணி (சுப்பு) தாமதமாகவே எழுந்து காலை கடன்களை கழிக்கச் சென்றுவிட்டான். அவன் தாய் சமயலறையில் தன் வேளையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்தார்கள் பழனிச்சாமி மாமாவும், செல்வி அத்தையும். அவர்கள் எப்போது வந்தாலும் கையில் ஒரு மஞ்சல் பையுடந்தான் வருவார்கள், காரணம் அவர்கள் சுப்புவின் வீட்டிற்கு வருவதானால் அது ஏதேனும் ஒரு விசேசத்திற்கு அழைப்பதற்காக மட்டுமே இருக்கும். மற்றபடி அவர்கள் சுப்புவின் வீட்டிற்கு வருவதில்லை.

குளித்து முடித்து சுப்பு வீட்டிற்குள் நுளையும்போது மாமாவும், அத்தையும் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். அவனைக் கண்டவுடன் ஒரு அரைகுறை புன்னகையுடன் வேளையெல்லாம் எப்படி இருக்கு என்று கேட்டார் மாமா. பரவாயில்லை மாமா நல்லா போகுது என்று கூறிவிட்டு உங்களுக்கு உடம்பெல்லாம் பராவில்லையா என்று இருவரையும் கேட்டான். "ம்" என்று மட்டும் பதில் வந்தது அத்தையிடமிருந்து. அது ஏனோ அத்தைக்கு அவனை அதிகம் பிடிப்பதில்லை.

அதற்கான காரணமும் சுப்புவுக்கு புரியவில்லை. காரணம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன், தன் சம்பளத்தை முழுவதும் வீட்டில் கொடுத்துவிட்டு தினமும் அம்மாவிடம் பத்து ரூபாய் வாங்கிச்செல்லும் ஒரு நல்ல பையன் அவன். அனைவரிடமும் மரியாதையுடனும் விளையாட்டாகவும் பேசி எல்லோருக்கும் தன்னைப் பிடித்தவனாக வைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இந்த அத்தைக்கு மட்டும் அவனை பிடிப்பதில்லை. ஒருவேளை தன் மகளுக்கு பிடித்தவன் என்பதால் அவருக்கு இவனைப் பிடிக்கவில்லை போலும்.

இப்போது இருவரும் எழுந்து கல்யாணப் பத்திரிக்கையை சுப்புவின் அம்மாவிடம் கொடுத்தார்கள், இரண்டு நாள் முன்னாலயே வந்துரனும் அக்கா என்று மாமா சொல்லிவிட்டு பெயருக்காக நீயும்தான் சுப்பு என்று சொன்னார்கள். பிறகு அம்மாதான் அவர்களிடம் கல்யாண வேளைகள், மற்றும் செலவுகள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு சரி நாங்க புரப்படுறோம்கா நிறைய வேளையிருக்கு என்று சொல்லிவிட்டு வெளியே போனார்கள். வாசல் வரை வழியனுப்ப வந்து நின்றவனிடம் மீண்டும் ஒருமுறை அந்த அரைகுறை புன்னகையை வீசிவிட்டு சென்றனர்.

இப்போது வீட்டிற்குள் வந்து அந்தக் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தான் சுப்பு. மணமகள் திருநிறைச்செல்வி "கெளரி" என்றும், மணமகன் திருநிறைச்செல்வன் "அருள் குமார்" என்றும் இருந்ததைப் பார்த்து ஒரு நிமிடம் மனதில் மிகவும் வருந்தினான். இதுவரை அவர்கள் வீட்டிற்கு எந்தக் கல்யாணப் பத்திரிக்கை வந்தாலும் அதில் மணமகள் என்ற இடத்தில் கெளரியின் பெயரையும் மணமகன் என்ற இடத்தில் தன்னுடைய பெயரையும் எழுதிப் பார்பதே அவன் பழக்கம். ஆனால் இந்த முறை இரண்டு பெயர்களுக்கு பதிலாக ஒன்றில் அவள் பெயரே இருந்தாலும் மற்றொன்றில் மட்டும் தன் பெயரை மாற்றி எழுத அவனால் முடியவில்லை.

கெளரி சுப்புவின் மாமன் மகள். அமைதியான பெண். கருப்பாக இருந்தாலும் நல்ல கலையான முகம் அவளுக்கு. பெரிய கண்கள், மற்றவருக்கு அந்தக் கண்கள் சாந்தமாகத் தெரிந்தாலும் சுப்புவை மட்டும் அது மிகவும் கொடுமைப்படுத்தியது. அவர்கள் அதிகமாக பேசிக்கொல்வதில்லை என்றாலும் அவள் அவனை அந்த விழிகளிலேயே ஆட்டிவைப்பாள். அவளுக்கு அவனிடம் பிடிக்காதது என்றால் அது அவன் மற்ற பெண்களுடனும் மிகவும் சகஜமாக விளையாட்டாகப் பழகுவது, அது யாராக இருந்தாலும் சரி, அதற்கு அவள் தங்கைகள் கூட விதிவிலக்கல்ல. அதையும் மீறி அவன் யாருடனாவது பேசுவதைப் பார்த்தால் பார்வையிலேயே அவனை எரித்துவிடுவாள்.

ஆனால் அதே கண்களில் அவள் அவனைக் காதலுடன் ஒருமுறை பார்த்தாலும் அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இவர்கள் இப்படிப் பழகுவது உறவினர்களுக்குத் தெரிந்தவுடன் அவர்கள் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. சந்தேகப் பார்வைகள், கிண்டல் பேச்சுக்கள், இலக்காரப் புன்னகைகள் என்று அவர்களின் பிரச்சனை தொடங்கியது. இதன் காரணமாக அவள் பெற்றோருக்கும் சுப்புவின் பெற்றோருக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் வந்தது. சில கேட்கக்கூடாத கேள்விகள் சொல்லக்கூடாத பதில்கள் என்று அந்தப் பிரச்சனை பெரிதாக மாறியது. அதனால் சிறிது காலம் இரு குடும்பங்களும் அதிகமாக பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

தொடரும்......

அன்புரசிகன்
16-06-2008, 05:18 PM
கிராமத்துப்புறக்காதலை மறைமுகமாக வெளிப்படுத்தும் ஒரு கதையாக எனக்கு படுகிறது. கல்லூரிக்காதலிலும் வலிமையான காதலுக்கு எதிர்ப்பு வருவது சகஜம். அதனை சைகைகளால் வடிவமைத்த ரொக்கிக்கு ஒரு Hi 5...

ஒரே ஒரு சந்தேகம். அந்த வேளை என்பதில் வேலை என்பதா அல்லது உண்மையிலேயே வேளை என்ற சொற்பதம் தான் பொருந்துமா? சந்தேகத்துடன் தான் இந்த கேள்வி... தொடருங்கள்.

SivaS
19-06-2008, 09:30 AM
அருமையான தொடக்கம் நண்பரே தொடர்ந்து தந்து ஒரு அருமையான காதல் காவியம் படையுங்கள் எமது கருத்துக்கள் உஙக்ளை மேலும் வலுவூட்டும்

விகடன்
19-06-2008, 09:42 AM
கதையின் ஆரம்பத்திலே கதாபாத்திரங்கள் வர்ணிக்கப்பட்ட முறை நன்று,
திருமண அழைப்பிதழைப் பார்க்கும்வரை ஒரளவு திரிலாக கதை நகர்த்தப்பட்டிருப்பதும் அதில் முறைப் பெண்ணின் பெயரைக் கண்டதும் அவர்களிற்கிடையிலான உறவுமுறை பற்றிய விவரிப்பும் கதையின்பால் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. மேலும் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டிவிடுகின்றது.

பாராட்டுக்கள். விரைவாக அடுத்த பாகத்தையும் தொடருங்கள்.

rocky
21-06-2008, 11:56 AM
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கோபம் தனிந்து இப்போது ஏதாவது விஷேசம் என்றால் மட்டும் அழைப்பு வந்துவிடும். சுப்புவின் வீட்டிலும் அதை மறுக்காமல் சென்று வந்து கொண்டிருந்தார்கள். இதோ இப்போது கெளரிக்குத் திருமணம் என்று வந்து அழைத்திருக்கிறார்கள், அம்மா சுப்புவை கொஞ்சம் பரிதாபமாகப் பார்த்தார். அவன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிடாமலேயே அன்று வேலைக்குச் சென்றுவிட்டான். அன்றிலிருந்து அவன் மிகவும் அமைதியானான். அதிகமாக பேசிக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தவன் இப்படி மாறியது அவன் உடன் பணிபுரிபவர்களுக்கு புதிராக இருந்தது.

ஆனால் அவன் அமைதிக்குக் காரணம் அவன் தன் நிலை எதுவென்பதையும் எதற்காக தனக்கு அவர்கள் பெண் கொடுக்க மறுத்தார்கள் என்பதையும் நன்றாக அறிந்திருந்ததால் இதை பெரிய எதிர்ப்புகள் எதுவுமின்றி ஏற்றுக்கொண்டான். அவனிடம் அவர்கள் எந்தக் குறையையும் கூறிவிட முடியாது. ஆனால் அவன் பெற்றோர்களுக்குள் அடிக்கடி வரும் சண்டை அவர்களை யோசிக்க வைத்துவிட்டது. ஒருவேளை தந்தையைப் போல் மகனும் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிவிட்டனர். ஆனால் அவன் நிலையே வேறு. ஒரு கணவன் மனைவி எப்படியிருக்க வேண்டும், எப்படியிருக்கக் கூடாது என்ற இரண்டையுமே அவன் தன் பெற்றோரிடமிருந்து நன்றாகக் கற்றுக்கொண்டிருந்தான். அதனால் தன்னுடைய வருங்கால மனைவியை அவன் எந்த அளவு சந்தோஷமாக வைத்துக்கொள்வான் என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஆனால் அவர்கள் கெளரியிடம் இந்தக் காரணங்களைக் கூறவில்லை. இதற்குப் பதிலாக அவன் ஒன்றும் உன்னை உண்மையாக காதலிக்கவில்லை, ஏதோ டைம்-பாஸ்சாகவே உன்னுடன் பழகியிருக்கிறான். அவனுக்கு பெண்கள் நட்பு மிகவும் அதிகம். வீணாக அவனை நினைத்து நீ உன் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளாதே என்று அவள் தாயும் மற்ற உறவினர்களும் பேசி அவளை இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டனர். அவளும் அவர்களை எதிர்க்க முடியாமல் தன் சம்மதத்தை தெரிவித்துவிட்டால்.

அதே நேரம் சுப்புவும் தன்னை இந்த அளவு மோசமாக நினைத்துவிட்டவர்களுக்கு முன் தான் ஒரு மகிழ்ச்சியான, மற்றவர்களுக்கு உதாரணமான ஒரு திருமண வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முடிவுகட்டினான். இனி வரப்போகும் தன் மனைவிக்கு தான் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக அப்போதே கெளரியை தன் காதலி என்ற எண்ணத்திலிருந்து முழுவதுமாய் அகற்றிவிட்டான். இத்தனை கஷ்டங்களுக்கு இடையில் தன் கற்பனை மனைவியுடன் அவன் வாழ்ந்து வந்தான். இந்த நிம்மதியைக் கூட அவனுக்கு கெளரி அதிக நாள் தரவில்லை.

திருமணத்திற்கு பத்து நாட்களே இருக்கும் நிலையில் ஒருநாள் சுப்புவிற்கு ஒரு அழைப்பு வந்தது கெளரியிடமிருந்து. அவனுக்குக் காரணம் புரியாமலே ஏன் என்று கேட்டான். அதற்கு எனக்கு அந்த மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை, என்னால் அவனைக் கல்யாணம் செய்துகொள்ள முடியாது. நான் உன்னைத்தான் கட்டிக்கொள்வேன், இல்லாவிட்டால் செத்துவிடுவேன் என்று அவள் அழுகத் தொடங்கிவிட்டால். சுப்புவிற்கு தான் என்ன செய்யவேண்டும் என்ற ஒரு தெளிவான முடிவே எடுக்கமுடியவில்லை. இதை ஏன் இவ்வளவு தாமதமாக சொல்கிறாய், ஊரெல்லாம் பத்திரிக்கை கொடுத்தாகிவிட்டது, இனிமேல் திருமணத்தை நிறுத்துவதென்பது நடக்காது. புரிந்துகொள் என்று அவன் அவளுக்கு எவ்வளவோ சொன்னான்.

ஆனால் அவன் மிகவும் மோசமாகப் பேசுகிறான். என்னிடம் மிகவும் சந்தேகப்பட்டு கேள்விகள் கேட்க்கிறான். நிச்சயம் என்னால் அவனுடன் வாழமுடியாது. உன்னால் முடிந்தால் என்னை எங்காவது அழைத்துச் சென்றுவிடு. இல்லாவிட்டால் நான் சாகத்தான் போகிறேன் என்று அவள் உறுதியாகக் கூறினாள். சரி நான் உன்னை அழைத்துச் செல்வது மிகவும் தவறு, வேண்டுமானால் நீ உன்னுடைய வீட்டில் சொல்லி எப்படியாவது கல்யாணத்தை நிருத்து. பிறகு நானே என் பெற்றோருடன் வந்து உன்னை பெண் கேட்கிறேன் என்று கூறினான். ஆனால் அதற்கும் அவள் சம்மதிக்கவில்லை. உன்னால் முடிந்தால் என்னை எங்காவது அழைத்துச் சென்றுவிடு, இல்லாவிட்டால் நான் நிச்சயம் சாகத்தான் போகிறேன் என்று அதையே தன் முடிவாகக் கூறினால்.

ஓராண்டுகள் கழித்து......
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.




இதோ மருத்துவமனையில் கெளரி படுக்கையில் இருக்கிறாள், அவளருகில் ஒரு அழகான ஆண் குழந்தையுடன் சுப்பு நின்றுகொண்டிருக்கிறான். கெளரியின் பெற்றோர்கள் மற்றும் சுப்புவின் பெற்றோர்கள் அனைவரும் அங்கிருக்க சுப்பு அந்தக் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருந்தான். குழந்தை அப்பாவைப் போலவே இருக்கிறதே என்று கூறிக்கொண்டே அவன் அருள் குமாரிடம் சென்று குழந்தையைக் கொடுத்துவிட்டு வாழ்த்துக்களைச் சொன்னான். தான் வாங்கிச்சென்ற பழங்களை கெளரியிடம் கொடுத்துவிட்டு "உடம்பை நல்லா பாத்துக்க" என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டான். உள்ளே நடக்கும் பேச்சுக்குரல் அவனுக்கு மெதுவாய்க் கேட்டுக்கொண்டிருந்தது. அது குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதைப்பற்றி.

அப்போது கெளரி தயங்காமல் சத்தமாகச் சொன்னால், நான் முருகனுக்கு வேண்டியிருக்கிறேன், ஆண் குழந்தை பிறந்தால் "சுப்பிரமணி" என்றுதான் பெயர் வைப்பேனென்று. அதனால் என் பிள்ளையின் பெயர் "சுப்பிரமணி".

இளசு
11-07-2008, 12:54 PM
சிறுகதைக்குப் பாராட்டுகள் ராக்கி.

என்ன நடந்தது.. நடக்காமல் போனது என யூகத்து விட்டுவிட்டீர்கள்.

முக்கிய முடிவுகளில் இருதுருவ வழிகளை வைத்துக்கொண்டு அல்லாடுவது அனைவருக்கும் நடப்பதுதான்..

பெயர் வைப்பது பற்றி மன்றத்தில் கவிதைகள், அலசல்கள் உண்டு..

--------------

வேலை
களையான
கொள்வது
சொன்னாள்..

என பல இடங்களில் ல,ள மாறிக் கொல்(ள்)வதை மாற்ற முயலுங்கள்.

நன்றி!

arun
11-07-2008, 06:30 PM
ஒரு அழகான சிறுகதை கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்

ஆனால் நடுவில் என்ன நடந்தது என்பதனை சொல்லாமல் விட்டு விட்டீர்கள்

பொதுவாக பெண்களின் மனம் என்பது இப்படி தான் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்களோ?