PDA

View Full Version : அந்நிய நாட்டு முதலைகள்........Nanban
18-07-2003, 03:55 PM
அந்நிய நாட்டு முதலைகள்..........மாருதி கம்பெனியைப் பற்றி மற்றுமொரு செய்தி படிக்க நேர்ந்தது. The Econoic Times பத்திரிக்கையில், 18/7/03 முதல் பக்க செய்தியாக வெளியான அந்த செய்தியின் சாராம்சம் இதுதான்:

மாருதி நிர்வாகத்தில் சுசுகி-ஜப்பான், மற்றும் இந்திய அரசு பங்கு தாரர்களாக உள்ளது. மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப, இந்திய அரசு தனது பங்குகளை விற்றுவிட தீர்மானித்தது. அரசாங்கம் அரசு தொழிலை மட்டுமே செய்யவேண்டும், வர்த்தகத்தில் ஈடுபடுதல் கூடாது என்பது தானே நியதி? அதன்படி, மாருதி நிறுவன அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் பல்வேறு நிதித்துறை தலைவர்களையும், வங்கி அதிகாரிகளையும் சந்தித்து, இந்த பங்கு வெளியீட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர் - உள்நாட்டில் மட்டுமல்ல. வெளிநாடுகளிலும் தான்.

இப்பொழுது தான் வில்லன் உள்ளே நுழைகிறார். மாருதி நிறுவனத்தினர் யார் யாரையெல்லாம் சந்தித்தார்களோ, அவர்களையும் இவர்கள் போய் சந்தித்தனர். Automobile மார்க்கெட் நிலவரம் அத்தனை உற்சாகமூட்டுவதாயில்லை என்றும், மாருதியின் சந்தை வீழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் ஒவ்வொருவரிடமும் வத்தி வைக்கும் வேலையைச் செய்து வந்தனர். இது மாருதியின் கவனத்திற்கு வந்ததும், திகைத்துப் போனவர்கள் பத்திரிக்கை விளம்பரம் மூலம் இந்த 'வில்லனின்' வில்லத்தனத்தை முறியடித்து விடலாம் என்று ஒரு சாரர் அபிப்ராயப் பட்டனர். ஆனால், மற்றும் சிலர் இதை விரும்பாது, மீண்டும் ஒரு சுற்று இந்த வில்லன்கள் சந்தித்தவர்களை எல்லாம் சந்தித்து, விளக்கம் அளிப்பது என்று முடிவு கட்டி அதன்படியே செய்தனர். என்றாலும் ஒரு வித பயத்துடனே இருந்தனர். எதிர்பார்த்த தொகையை விட பல மடங்கு பங்கு விண்ணப்பங்கள் விற்று விட பின்னர்தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அது சரி - அந்த 'வில்லன்கள்' யார்?

[size=2]ஹ�ண்டாய் கார் நிறுவனத்தினரும், சிட்டி பாங்கின் ஒரு பிரிவும் தான். ஏன் இவர்களுக்கு இந்த வேலை? தங்களின் போட்டி நிறுவனத்தினரைக் கவிழ்க்க வேண்டும். இது எல்லா போட்டியாளர்களும் நினைக்கக் கூடியது தான். ஆனால், இந்த பங்கு விற்பனை தோல்வி அடைந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? இந்திய அரசு தன் பங்குகளை விற்க முடியாமல் போயிருக்கும். அதாவது, கோடிக்கணக்கான இந்தியர்களின் வரிப்பணம், மக்களின் நலனுக்குக் கிட்டாமல் போயிருந்திருக்கும்.

ஹ�ண்டாய் நிறுவனம் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்ததே இந்திய அரசின் மாறிவரும் பொருளாதாரக் கொள்கையினால் தான். அதாவது வரிகட்டும் இந்திய மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசின் மூலமாகத் தான். [size=18]அந்த அரசின் - மக்களின் - விருப்பத்தையே தோற்கச் செய்யும் ஒரு வழிமுறையில் தான் ஹ�ண்டாய் நிறுவனம் செயல்பட்டது. இந்திய மக்கள் வரியாக கட்டிய பணம், பணக்காரர்களின் பயண்பாட்டிற்கான ஒரு நிறுவனத்தில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்றே ஹ�ண்டாய் விரும்பியது போலும்.

அந்நிய முதலீட்டிற்காக, நாம் ஓடி ஓடி சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம். ஆனால், அவர்கள் இங்கு சம்பாதித்து தங்கள் நாட்டிற்கு அள்ளிச் செல்லும் வழிமுறிகளைத் தான் தேடுகின்றனர். மாருதி போன்ற ஒரு பெரிய நிறுவனத்திற்கே, இவர்களால் இத்தனை தலைவலி கொடுக்க முடியும் என்றால், சிறிய தொழில்களெல்லாம் எந்த மூலைக்கு?

பாரதி
18-07-2003, 06:37 PM
அன்பு நண்பா...

இது மட்டும் அல்ல... புதிய பொருளாதார கொள்கையை சற்று ஆழமாக படித்தோம் என்றால் நமக்கு நன்கு விளங்கும் - இது போன்ற கொள்கைகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளால் வளரும் மூன்றாம் உலக நாடுகளை மிகப் பெரிய சந்தையாக மாற்றி, அந்த நாட்டின் வளங்களை சுரண்ட வேண்டும் என்ற நவீன காலனியாக்கத்தின் முகமூடிதான் அது என்பது!

எப்போதுதான் நம் மக்களிடையே இது பற்றி விழிப்புணர்வு வருமோ என்று ஏக்கமாக இருக்கிறது.

இளசு
19-07-2003, 10:30 AM
அர்த்தமுள்ள சிந்தனைகள்..
பாராட்டுகள் அறிஞர் நண்பனுக்கும் தம்பி பாரதிக்கும்!

anbu
19-07-2003, 03:41 PM
நண்பன் மற்றும் பாரதி மூலம் சில முக்கிய தகவல்களைப் பரிமாறிக்கொண்டத
ற்க்கு அன்பின் நன்றிகள் பல.

29-07-2003, 10:39 AM
புதிய பொருளாதாரக் கொள்கையை
நாட்டில் அறிமுகப்படுத்தியதே
உலகவங்கி, ஐ.எம்.எப் போன்றவற்றின்
நிர்ப்பந்தத்தால்தான்!
அவை போடும் உத்திரவுகளை சிரமேற் கொண்டு
செய்து கொண்டு, அவர்கள் கைகாட்டும் பன்னாட்டு நிறுவனங்களை
சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றதன் விளைவுதான் இது!
இன்னும் எவ்வளவே இருக்கு! பொறுத்திருந்து பாருங்க!

poo
29-07-2003, 06:44 PM
அன்பே சிவத்தில் ஆணித்தரமாய் சொன்னார் கமல்... அந்த 910 பாடல் இன்னமும் ஒலிக்கிறது உள்ளத்துக்குள்..


நண்பனின் பார்வைகள்.. அடிக்கடி தோலுரிக்கட்டும் நம் அவலங்களை.. அடிமைத்தனங்களை..