PDA

View Full Version : சமநிலை!!!



கண்மணி
16-06-2008, 09:49 AM
உலகம் சமநிலை
அடைந்து கொண்டு இருக்கிறது
ஏரிகள் காணாமல் போகின்றன
மலைகளும் தான்!!!

ஆதவா
16-06-2008, 10:06 AM
உலகம் சமநிலை
அடைந்து கொண்டு இருக்கிறது
ஏரிகள் காணாமல் போகின்றன
மலைகளும் தான்!!!

தேடித்தர இறைவன் இருக்கிறார் கண்மணி.... தொழுதுகொண்டே இருப்போம்...

கண்மணி
16-06-2008, 10:19 AM
தேடித்தர இறைவன் இருக்கிறார் கண்மணி.... தொழுதுகொண்டே இருப்போம்...

இறைவனைப் பணிந்துக்
கட்டளையிடுவோம்
என் ஆசைகளை நிறைவேற்று!!!

ஆதவா
16-06-2008, 10:23 AM
இறைவனைப் பணிந்துக்
கட்டளையிடுவோம்
என் ஆசைகளை நிறைவேற்று!!!

இருவேறு ஆசைகளை
ஒருவனால் எப்படி?

கண்மணி
16-06-2008, 10:26 AM
இருவேறு ஆசைகளை
ஒருவனால் எப்படி?

இருவேறு ஆசைகளால்தானே
ஒருவன்!!!

ஆதவா
16-06-2008, 10:32 AM
இருவேறு ஆசைகளால்தானே
ஒருவன்!!!

இல்லாத இறைவன்
இருவேறு ஆசைகள்
தீர்வு?

கண்மணி
16-06-2008, 10:44 AM
இறைவனைப் பணிந்துக்
கட்டளையிடுவோம்
என் ஆசைகளை நிறைவேற்று!!!

மலைகளை உடைத்து சல்லியாக்கி, கட்டிடங்கள் சாலைகள் என்று காணாமல் போகச் செய்வது நாம்

ஏரிகளை நிரப்பி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் என்று கட்டிக் கொண்டிருப்பதும் நாம்

இறைவனை வணங்குகிறோம் போற்றுகிறோம்.. ஆனால் பிரார்த்திப்பதின் அர்த்தம் என்ன? அவனுக்கு கட்டளை இடுவது போலத்தானே? அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கு அடியாள் அந்தஸ்தும் தந்துவிடுவோம் என்று நையாண்டி செய்திருக்கிறேன். நீங்கள் பிரார்த்திப்போம் என்று சொன்னதை!!!!



இருவேறு ஆசைகளால்தானே
ஒருவன்!!!

ஒரு ஆண் அவனுக்கு ஒரு ஆசை
ஒரு பெண் அவளுக்கு ஒரு ஆசை
இந்த இருவன் ஆசையினால் தானே ஒருவன் பிறக்கிறான் என் வேற லெவல்ல இருக்கு தம்பி இந்தக் கவிதை.. ஆண்டவனை இங்க இழுக்காத,,,



இல்லாத இறைவன்
இருவேறு ஆசைகள்
தீர்வு?

இருந்து மட்டும்
என்ன வித்தியாசம்?

ஆதவா
16-06-2008, 01:00 PM
உலகம் சமநிலை
அடைந்து கொண்டு இருக்கிறது
ஏரிகள் காணாமல் போகின்றன
மலைகளும் தான்!!!

///தேடித்தர இறைவன் இருக்கிறார் கண்மணி.... தொழுதுகொண்டே இருப்போம்...///

இது நக்கல் அக்கா. என் கண்மணி அக்கா.. ஏரிகளும் மலைகளும் காணாமல் போனதாக கவிதை, ஆனால் (காணாமல்) போக்கவைத்தது உலகம்.. அது காணாமல் போகவில்லை. ஏனெனில் ஒன்று காணாமல் போனால் அது திரும்ப கிடைக்கும் என்பது விதி. இங்கே உலகம் அதை நம் கண்களுக்குக் காணாமல் போக வைக்கிறது..............

இல்லாத ஒன்றை ஒருவனால் எப்படித் தேர்ந்தெடுத்துத் தர முடியும்? அப்படி தருவதாகச் சொல்பவன் முட்டாள்... எங்கும் இல்லாதவன் மட்டுமே இல்லாத ஒன்றை இல்லாத முறையில் தேடித்தருவான்...... அதைத்தான் தொழுதுகொண்டே இருப்போம் என்று அழுத்திச் சொன்னேன்...................

பிந்தையது.


இறைவனைப் பணிந்துக்
கட்டளையிடுவோம்
என் ஆசைகளை நிறைவேற்று!!!

உங்கள் ஆசை என்ன? முந்தைய கவிதையின் படி மறைமுகமான அர்த்தமான இயற்கை அழிவைத் தடுப்பது.......... இங்கே வேறு என்ன ஈருடல் கலப்பு சேர்க்கிறீர்கள்? இறைவனைப் பணியவையுங்கள் ; கட்டளை இடுங்கள்... ஆசைகள் நிறைவேறப்போவதில்லை........


இருவேறு ஆசைகளால்தானே
ஒருவன்!!!

ட்ராக் மாறிவிட்டது......... அறிந்தேன். "தானே" எதற்கு? அல்லது "வேறு" எதற்கு? அவளுக்கு ஒரு ஆசை ; அவனுக்கு ஒரு ஆசை என்றால் அது எப்படி "இருவேறு ஆசை" ஆகும்? அக்கா கண்மணி அக்கா.. இருவேறு என்றால் இரண்டு மாறுபட்ட என்று அர்த்தம்...... ஓ,!! இரண்டு மாறுபட்ட ஆசைகள் கொண்ட உயிர்கள் என்று சொல்கிறீர்களோ? என்றால் " தானே" என்று அழுத்திச் சொன்னது எதற்கு? "இருவேறு ஆசைகளால் ஒருவன்" என்று சாதாரணமாகச் சொல்லியிருக்கலாமே?


இல்லாத இறைவன்
இருவேறு ஆசைகள்
தீர்வு?

உங்க ட்ராக்கினுள் நுழைந்தென்........... நீங்கள் முதலில் எழுதிய கவிதையின் படி "இல்லாத இறைவன்"யும் பிந்தைய கவிதையின் படி " இருவேறு ஆசைகள்" ஐயும் இணைத்து என்ன தீர்வு என்று கேட்டேன்......

அக்கா... என் புரிதலினுள் பிழையேதுமுண்டோ?

பராபரமே!


இருந்து மட்டும்
என்ன வித்தியாசம்?

இருந்திருந்தால்
சமநிலை குறையும்
சமய நிலை கூடும்...

ஒரே பஜனை.............

ஹரிஹர சம்போ ; சிவசம்போ!

இளசு
16-06-2008, 04:00 PM
இந்தச் சமநிலை
இயற்கையான நன்னிலை அன்று!
பேரழிவுக்குக் கட்டியம் கூறும்
செயற்கைச் சமனிலை!

அரசுகள் மாறினாலும் காட்சிகள்...????


வாழ்த்துகள் கண்மணி!

kavitha
17-06-2008, 05:47 AM
உலகம் சமநிலை
அடைந்து கொண்டு இருக்கிறது
ஏரிகள் காணாமல் போகின்றன
மலைகளும் தான்!!!

சமநிலையை எள்ளலாகச் சொன்ன கண்மணிக்கு பாராட்டுகள்.