PDA

View Full Version : அம்மா...



நம்பிகோபாலன்
16-06-2008, 06:27 AM
அகராதியில்
அன்புக்கு மறுபெயர்
நீ

அம்மா
உன்னை பற்றி எழுத
தோன்றியபொழுதெல்லாம்
எழுத வார்தைகள்
இல்லாமல் தோற்றுபோன
நாட்கள் பல

இருப்பின்
உன் அன்பைபோல
இன்று என் எழுத்துக்கள்
உன்னை பற்றி எழுத
ஆனந்த தாண்டவம்
ஆடுகின்றன

உன்னை பற்றி
எழுதிகொண்டே
போகலாம்
முடிவு என்பது
உன் அன்பை போல
அளவு கிடையாது

உனக்கு நான் மகனாக
இருந்த நாட்களை விட
அதிகமாக
எனக்கு தோழியாகவே
நீ இருந்திருக்கிறாய்

அவற்றில்
நான் ரசித்தவை

என்மேல் கோபம் கொண்டு
மெளனமாய் இருந்து
என்னை திருத்துவதும்
என் சந்தோஷத்திற்காக
எதை வேண்டுமானாலும்
விட்டு கொடுப்பதும்
நீயின்றி யாரால்
முடியும்

கண்ணீரில் நான்
உன் மடியில் புதைந்து
அழுத நாட்களும்
அப்படியே தூங்கிய
நாட்களும்
இன்று நினைத்தாலும்
சுகமான நினைவுகளாய்
மனதில் தாலாட்டுகிறது..

இன்று
உன் பேர குழந்தைகளை
கொஞ்சும் அழகை பார்த்து
மீண்டும் நான் குழந்தையாக
மாட்டேனா என்றே
ஏங்க வைக்கிறாய்…

உன்னை பற்றி
எழுதிகொண்டே
போகலம் முடிவு
என்பது உன் அன்பை போல
அளவு கிடையாது

முடிவாய்
மீண்டும் எனக்கு
ஜனனம் இருந்தால்
உன் மடியில் குழந்தையாக
வேண்டும் அம்மா...

இளசு
18-06-2008, 11:20 PM
என் அன்பும் வாழ்த்தும் நம்பிகோபாலனுக்கு!

மௌனம் மட்டுமே போதும்.
மகன்/மகள் மனம் உருக!

அப்படி ஒரு மகாசக்தி - அம்மா!
--------------------------------

சிவா.ஜி
19-06-2008, 04:38 AM
அம்மா, அம்மாவாகப் பலருக்கு அன்பு செலுத்தலாம். ஆனால் தோழியாக வாழ்பவர்கள் குறைவுதான். அம்மாவின் அன்பு என்பது நீங்கள் சொன்னதைப்போல அளவிடமுடியாததுதான் நம்பி. வாழ்த்துகள்.

இதயம்
19-06-2008, 05:11 AM
இன்றைய காலகட்டத்தில் பல காரணங்களை சொல்லி அம்மாவை வெறுக்கிறார்கள், விரட்டுகிறார்கள்..! ஆனால், அம்மா என்ற அன்பின் வடிவத்தை காலம் முழுதும் கண்ணுக்குள்ளும், இதயத்திற்குள்ளும் வைத்து காக்க 10 மாதம் சுமந்து பெற்ற தியாகம் போதும் என்பது என் கருத்து..! கண் பனிக்க செய்யும் கவி உங்களுடையது..! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நம்பி.!

kavitha
19-06-2008, 06:00 AM
இன்று
உன் பேர குழந்தைகளை
கொஞ்சும் அழகை பார்த்து
மீண்டும் நான் குழந்தையாக
மாட்டேனா என்றே
ஏங்க வைக்கிறாய்…
திகட்டாத அன்பு அன்னையுடையது.

நம்பிகோபாலன்
19-06-2008, 06:32 AM
அனைவரின் தாயுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

நேசம்
19-06-2008, 02:29 PM
இதயம் சொல்வது போல் அன்பு என்ற வடிவத்தை அவர்கள் நம்மை கஷ்டப்பட்டு பெற்றேடுத்தது முலம் உணரலாம்.எளிமையான கவிதை.வாழ்த்துகள் நம்பி அவர்களே

arsvasan16
20-07-2008, 09:29 AM
மெளனத்தின் அழகெல்லாம் தாய் தான் .....

செய்த பிழைகளையும் செய்யும் பிழைகளையும் திருத்துபவள்.......

தன்னிலை மறக்க செய்யும் தாயின் மடியும் கரங்களும் போதும் வாழ்க்கைக்கு......

உங்கள் அன்னை தமிழும் உங்கள் அன்னை கவிதையும் என்னை தன்னிலை மறக்க செய்கிறது நண்பரே........

என்றும் அன்புடன்...
உங்கள் நண்பன்.......

lenram80
30-07-2008, 09:04 PM
தாய் பாசம் என்பது இயற்கை. மகன்(ள்) பாசம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ளது.
இந்த பாசத்தை கவிதையாக்கிய நம்பிக்கு இந்த தும்பியின் வாழ்த்துகள்

அறிஞர்
30-07-2008, 09:20 PM
முடிவாய்
மீண்டும் எனக்கு
ஜனனம் இருந்தால்
உன் மடியில் குழந்தையாக
வேண்டும் அம்மா...
பலரின் ஏக்கம் இது தான்..
அம்மாவுக்கு இணையேது இவ்வுலகில்..

வாழ்த்துக்கள் நம்பிகோபாலன்.

மலர்விழி
31-07-2008, 03:09 AM
அன்பின் அழுத்தமான, அழகான, ஆழமான, இதமான, ஈரமான, உறவாடும், மனதை ஊஞ்சலாட செய்த கவிதை...:icon_rollout:

இப்பொழுதுதான் அம்மாவின் மடியில் தவழ்ந்தது போன்ற நினைப்பைத் தந்து விட்டது:icon_rollout:

"கண்ணீரில் நான்
உன் மடியில் புதைந்து
அழுத நாட்களும்
அப்படியே தூங்கிய
நாட்களும்
இன்று நினைத்தாலும்
சுகமான நினைவுகளாய்
மனதில் தாலாட்டுகிறது.."
என்னையும் தாலாட்டிவிட்டது இவ்வரி

நன்றி நம்பி அண்ணா:icon_b:

meera
31-07-2008, 03:16 AM
அன்னையின் அன்பு மட்டும் குறைவதே இல்லை. வரிகள் அருமை. பாராட்டுக்கள்.

நம்பிகோபாலன்
31-07-2008, 05:14 AM
உங்களின் அனைவரின் அன்பிற்க்கும் மனமார்ந்த நன்றி...