PDA

View Full Version : தமிழ்த்தாயே நீ வாழி!



கலைவேந்தன்
15-06-2008, 04:41 PM
தமிழ்மொழியைச் சொல்லசொல்ல உள்ளமெல்லாம் குளிர்ந்திருக்கும்
அமிழ்தமிழ்தென பலமுறை சொல் தமிழெனத் தான் ஒலித்திருக்கும்
உமிழ்ந்ததெலாம் கவிகள் என்றே பிறமொழிகள் உரைத்திருக்க
துமியளவும் குறையாநல் சுவைமிகுந்த மொழி தமிழே!

இயலிசையும் நாடகமும் இயைந்த மொழி தமிழ் மொழியாம்
குயிலோசை சந்தத்திற்கும் கவிவரையும் மொழிவளமாம்
தயிர்கடையும் ஓசையிலும் தகுதிபெற்ற கவிப் பாக்கள்
உயிரூட்டம்தரும் வார்த்தை உடைந்ததையும் ஒன்று சேர்க்கும்!

வருமழையின் சடசடப்பு கவிதை மழை ஆகும்தமிழ்
தருவதெலாம் ஓசைநயம் தகரஒலி மொழியல தமிழ்
முருகன் முதல் அருகன் வரை மொழிந்தமொழி தமிழ்மொழியாம்
அருவி யொலி குறவஞ்சியும் குதுகலிக்கும் மொழியெம்மொழி!


இசையுடனே பாடஒரு இனிய கவி பாரதியும்
வசையற்ற பண்ணிசைத்து வழங்கிநின்ற பலகவிகள்
விசையுற்ற பந்தினைபோல் இயங்கிவரும் மானிடமும்
தசைகுருதி யாய் இணைந்துநல் தமிழ்மொழியைப் போற்றினரே!

இளசு
15-06-2008, 10:51 PM
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நல்வழி காட்ட வேண்டும்...


கலைவேந்தன் நம் இனிய தாய்மொழி பற்றிய
கவிதை இயற்றி நம்மை விழிப்புணர்வூட்டுகிறார்..

பாராட்டுகள் கலை!

உங்கள் மறுவரவு எனக்குள் மட்டில்லா மகிழ்ச்சி ஊட்டுகிறது..

தொடர்ந்து படையுங்கள் நண்பரே..!

உங்களுக்காய் என்றும் இருக்கும் எங்கள் ஊக்கமும் வாழ்த்தும்!!

கலைவேந்தன்
16-06-2008, 05:48 PM
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நல்வழி காட்ட வேண்டும்...


கலைவேந்தன் நம் இனிய தாய்மொழி பற்றிய
கவிதை இயற்றி நம்மை விழிப்புணர்வூட்டுகிறார்..

பாராட்டுகள் கலை!

உங்கள் மறுவரவு எனக்குள் மட்டில்லா மகிழ்ச்சி ஊட்டுகிறது..

தொடர்ந்து படையுங்கள் நண்பரே..!

உங்களுக்காய் என்றும் இருக்கும் எங்கள் ஊக்கமும் வாழ்த்தும்!!


தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி இளசு!

தங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப நல்ல கவிதைகள் வழங்குவேன் நண்பரே!

கலைவேந்தன்
16-06-2008, 05:49 PM
கலைவேந்தன் ...!
மிக நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை.
இரசித்துப் படித்தேன் நீண்ட நாட்களின் பின்னொரு நல்கவி.
தொடரட்டும் தழிழுக்கு உங்கள் பணி.
என்றும் இருக்கும் உங்களோடு தமிழ்மன்ற அணி.

தங்கள் அன்பான பாராட்டுதலுக்கு மிக்க நனறி கிஷோர்!

அனுராகவன்
17-06-2008, 02:51 PM
அடடே தமிழ்தாயிக்கு அழகிய கவி..
சிறப்பான வரிகள்...

கலைவேந்தன்
22-06-2008, 03:54 PM
பாராட்டுக்கு மிக்க நன்றி அனு!