PDA

View Full Version : நீ அழகுதான் கண்ணே!



கலைவேந்தன்
15-06-2008, 11:49 AM
சித்திரத்தில் கண்ட உன்னை
சிதறாமல் பார்த்தபோது
தத்தித்தாவி தகித்துப்போய்
தவிக்கின்ற இதயத்தை
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
பலவிதமாய் முயற்சித்தேன்!
ஒத்திருக்க வில்லையடி
உன் முகமும் சித்திரமும்!

முதன் முதலாய் கண்டுவிட்டு
முத்தமிட ஆசைப்பட்டேன்...
வதனம் கண்டு தயங்காமல்
வாரிக்கொள்ள ஆசைப்பட்டேன்...
தனியான இடம் பாத்து
தழுவிகொள்ள் துடித்திருந்தேன்....
இனியாரும் நமைப்பிரிக்க
இயலாதென யோசித்தேன்!

வாகனத்தில் நாம் வந்தோம்
வானத்தில் நான் மிதந்தேன்
பாகம் ஒரு உமை கொண்ட
பரமசிவன் போல் களித்தேன்...
யாரும் பார்க்காமல்
இன்பமாய் தழுவிகொண்டேன்
சீரும் சிறப்புமாய்
சிந்தாமல் வாழவைப்பேன்!

சக ஊர்தி பார்க்குமென்று
சங்கடங்கள் மிகக் கொண்டோம்
சகபயணி இலையெனினும்
சாரதியின் கண் மறைத்தோம்
முகம்பார்த்து அகம்வேர்த்தோம்
முடிந்தவரை மூச்சுவிட்டோம்!
நகம் கடித்து தரைசுரண்டி நீ
நகைமுகத்தால் நளினம் செய்தாய்!

அனுராகவன்
17-06-2008, 02:52 PM
அருமை கலை...
காதல் கவி கைவந்த கலை போல...
இன்னும் தொடர்க..

இளசு
19-06-2008, 08:04 PM
காதல் நிரப்பிய இடம்போக
மீதி மட்டுமே மூச்சுக்கு..

வாழ்த்துகள் கலைவேந்தன்!

சித்திரப்பூம்பாவை பற்றி
தித்திப்புத்தமிழ்க் கவிதை!

செல்வா
19-06-2008, 10:24 PM
எச்சரிக்கை :
தனியாக வாழும் பிரம்மச்சாரி வாலிபர்கள் யாரும் இக்கவிதையைப் படிக்கவேண்டாம்...

பின்விளைவுகளுக்கு மன்றம் பொறுப்பல்ல...

அறிஞர்
19-06-2008, 10:47 PM
சக ஊர்தி பார்க்குமென்று
சங்கடங்கள் மிகக் கொண்டோம்
சகபயணி இலையெனினும்
சாரதியின் கண் மறைத்தோம்
முகம்பார்த்து அகம்வேர்த்தோம்
முடிந்தவரை மூச்சுவிட்டோம்!
நகம் கடித்து தரைசுரண்டி நீ
நகைமுகத்தால் நளினம் செய்தாய்!
கலக்கல் கவிதை....
காதல் வயப்படுவோரின்
இயல்பான செயல்களை..
அழகாய் வர்ணித்துள்ளீர்கள்....
வாழ்த்துக்கள் கலைவேந்தன்...

செல்வாவின் எச்சரிக்கை.. கவிதை மகத்துவத்தை விளக்குகிறது.

கலைவேந்தன்
20-06-2008, 07:57 AM
அருமை கலை...
காதல் கவி கைவந்த கலை போல...
இன்னும் தொடர்க..

தங்கள் ஆசி வேண்டும் அனு!


காதல் நிரப்பிய இடம்போக
மீதி மட்டுமே மூச்சுக்கு..

வாழ்த்துகள் கலைவேந்தன்!

சித்திரப்பூம்பாவை பற்றி
தித்திப்புத்தமிழ்க் கவிதை!

தங்கள் அன்பான பாராட்டுகளை மனம் நெகிழ்ந்து ஏற்கிறேன் இளசு!


எச்சரிக்கை :
தனியாக வாழும் பிரம்மச்சாரி வாலிபர்கள் யாரும் இக்கவிதையைப் படிக்கவேண்டாம்...

பின்விளைவுகளுக்கு மன்றம் பொறுப்பல்ல...

தங்களின் இந்த எச்சரிக்கை என்னைப்புளகாங்கிதமடையவைத்த பாராட்டு செல்வா!


கலக்கல் கவிதை....
காதல் வயப்படுவோரின்
இயல்பான செயல்களை..
அழகாய் வர்ணித்துள்ளீர்கள்....
வாழ்த்துக்கள் கலைவேந்தன்...

செல்வாவின் எச்சரிக்கை.. கவிதை மகத்துவத்தை விளக்குகிறது.

மனம்சிலிர்த்துப்போனேன் தங்கள் வாழ்த்துகண்டு அறிஞரே!

கீதம்
15-08-2012, 03:29 AM
சந்தர்ப்பம் வழங்கா சங்கடமிகு காதல்தருணம்.

சாரதிக்கோ சாலையில் இல்லையாம் கவனம்!

எரியும் காதலுணர்வுக்கு எண்ணெய் வார்க்கிறது நகம் கடிக்கும் நாணம்.

எழுதும் கவிதைக்கு அழகு கூட்டுகிறது நகை முகத்து நளினம்.

பாராட்டுகள் கலைவேந்தன்.

கலைவேந்தன்
15-08-2012, 05:56 AM
நீண்ட காலத்துக்குப் பிறகு எனது கவிதைக்கு கிடைத்த அற்புதமான அங்கீகாரப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம்..!

jayanth
16-08-2012, 06:44 PM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif...http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif...http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif...http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif...http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif

கலைவேந்தன்
18-08-2012, 02:14 PM
கைத்தட்டுகளுக்கு நன்றி ஜெயந்த்..!

நாஞ்சில் த.க.ஜெய்
21-09-2012, 12:30 PM
கவிதைக்கும் அண்ணன் வயதிற்க்கும் தொடர்பில்லை ஆனால் கவிதையின் இளமை கூறுகிறது அண்ணலின் காதலை ....வாழ்த்துக்கள் அண்ணலே..

ஆதவா
21-09-2012, 01:07 PM
இந்த கவிதை இன்னும் நீண்டுகொண்டே செல்லாதா என்று தோணவைக்கிறது.

வதனம் கண்டு தயங்காமல்...

இது முகநக காதல் அல்ல என்பதால் போலித்தனத்தைப் போக்கி பார்க்கமுடிகிறது. மிக எளிமையான, நாசூக்கான காதல். கவிதையும் அவ்வாறே!

வாழ்த்துக்கள் கலை ஐயா.

HEMA BALAJI
21-09-2012, 01:36 PM
மிக அழகான கவிதைகள் கலை அண்ணா.. காதல் ரசம் சொ(கொ)ட்டுகிறதே!!! அருமை.

கலைவேந்தன்
21-09-2012, 01:39 PM
சித்திரத்தில் கண்ட உன்னை
சிதறாமல் பார்த்தபோது
தத்தித்தாவி தகித்துப்போய்
தவிக்கின்ற இதயத்தை
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
பலவிதமாய் முயற்சித்தேன்!
ஒத்திருக்க வில்லையடி
உன் முகமும் சித்திரமும்!

முதன் முதலாய் கண்டுவிட்டு
முத்தமிட ஆசைப்பட்டேன்...
வதனம் கண்டு தயங்காமல்
வாரிக்கொள்ள ஆசைப்பட்டேன்...
தனியான இடம் பாத்து
தழுவிகொள்ள் துடித்திருந்தேன்....
இனியாரும் நமைப்பிரிக்க
இயலாதென யோசித்தேன்!

வாகனத்தில் நாம் வந்தோம்
வானத்தில் நான் மிதந்தேன்
பாகம் ஒரு உமை கொண்ட
பரமசிவன் போல் களித்தேன்...
யாரும் பார்க்காமல்
இன்பமாய் தழுவிகொண்டேன்
சீரும் சிறப்புமாய்
சிந்தாமல் வாழவைப்பேன்!

சக ஊர்தி பார்க்குமென்று
சங்கடங்கள் மிகக் கொண்டோம்
சகபயணி இலையெனினும்
சாரதியின் கண் மறைத்தோம்
முகம்பார்த்து அகம்வேர்த்தோம்
முடிந்தவரை மூச்சுவிட்டோம்!
நகம் கடித்து தரைசுரண்டி நீ
நகைமுகத்தால் நளினம் செய்தாய்!

அகமகிழ்ந்து அணைத்துன்னை
இட்டதொரு கனிமுத்தம்
முகமலர்ந்து ஏற்றனைநீ
முன்வந்து முறுவலித்தாய்..
சிகைகோதி உன்கழுத்தை
சீண்டிவிளை யாடுகையில்
முகைவிட்ட முன்கொடிபோல்
மடிதன்னில் விழுந்தனை நீ..

சிரந்தாழ்த்தி நாம்செய்த
சிறுக்குறும்புதனை எண்ணி
வரந்தந்த தேவனுக்கு
வாழ்த்துகளைச் சொரிந்துநின்றோம்..
புரவிதனில் போகுமொரு
புதுவீரன் நானானேன்..
இரதமொன்றில் வீற்றிருக்கும்
இலக்குமியாய் நீயானாய்..

எல்லையின்றி நீண்டிடாதோ
எம்பயணம் என்றேங்கி
நல்லாள் நீ என்மார்பில்
நாணியே நீசுகித்தாய்
வில்லை வளைத்தொரு
விந்தையைச் செய்தான்போல்
முல்லைக் கொடியாளுன்
முகம் நோக்கி கர்வங்கொண்டேன்..!


ஆதியின் பின்னூட்டம் கண்டு இன்னும் சற்று நீட்டித்தால் என்ன என்றுஎண்ணி சட்டென்று சேர்த்துவிட்ட சளசளப்புவரிகள் இவை..!:icon_rollout:

கலைவேந்தன்
21-09-2012, 01:44 PM
ஜெய் ஆதி மற்றும் ஹேமாவுக்கு என் நன்றிகள்.. இத்தனை வருடங்கள் கழிந்து அதே இளமை மாறாமல் இன்னும் மூன்று பத்தி என்னால் இணைக்க முடிகிறது என்பதில் எனக்கு பெருமையே.. ஆதிக்கு இதற்காக சிறப்பு நன்றிகள்..!

கீதம்
22-09-2012, 08:37 AM
இந்த கவிதை இன்னும் நீண்டுகொண்டே செல்லாதா என்று தோணவைக்கிறது.

வதனம் கண்டு தயங்காமல்...

இது முகநக காதல் அல்ல என்பதால் போலித்தனத்தைப் போக்கி பார்க்கமுடிகிறது. மிக எளிமையான, நாசூக்கான காதல். கவிதையும் அவ்வாறே!

வாழ்த்துக்கள் கலை ஐயா.


ஜெய் ஆதி மற்றும் ஹேமாவுக்கு என் நன்றிகள்.. இத்தனை வருடங்கள் கழிந்து அதே இளமை மாறாமல் இன்னும் மூன்று பத்தி என்னால் இணைக்க முடிகிறது என்பதில் எனக்கு பெருமையே.. ஆதிக்கு இதற்காக சிறப்பு நன்றிகள்..!

அப்படியென்றால் ஆதவாவுக்கு...? :)

கோபாலன்
22-09-2012, 09:28 AM
கவிதை மிக அருமை... உங்கள் கவிதையை பார்க்கும்போது நானும் அதுபோல் எழுதுவதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற பிரயாசை மேலோங்குகிறது...
உங்களுக்கு கலைவேந்தன் என்ற பெயரைவிட காதல்வேந்தன் என்ற பெயர் தான் சரியோ என்று தோன்றுகிறது...

மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ..:)

கலைவேந்தன்
22-09-2012, 02:18 PM
ஆஹா.. மன்னிக்கவேண்டும் ஆதவா.. ஆதியின் பெயர்க்குழப்பத்தில் தங்களை விட்டு அவருக்கு நன்றி சொன்னேன். ஆதவாவின் ஆதங்கத்தைக் கண்டபின் இன்னும் சில பத்திகள் சேர்த்தால் என்ன என்று தோன்றியது.

தோன்றியதும் இக்கவிதை எழுதக்காரணமாய் இருந்த என் இனிய வசந்தகாலத்தைப் பெருமூச்சுடன் நினைவுகூர்ந்து அக்காலத்துக்கே மீண்டும் பயணமானேன். அதே வாகனம். அதே காதலி. அதே சில்மிஷங்கள். அதே உணர்வுகள். எத்தனை காலம் ஆனால் என்ன நினைவுகள் வற்றியா போய்விடும்..? அவள் என்னை தற்சமயம் நினைத்துப் பார்க்கிறாளோ என்னவோ.. ( தன் குடும்பம் தன் குழந்தைகள் என்று பெண்கள் விரைவில் சுயநலக்காரர்களாகி விடுகின்றனர். :( ) இன்றும் அந்த நிகழ்வை எண்ணி எண்ணி ஏக்கம் மாளவில்லை எனக்குள்.

தவறினைச் சுட்டிக்காட்டிய கீதமுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தங்களின் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி கோபாலன்.

சுகந்தப்ரீதன்
22-09-2012, 03:03 PM
அப்படியென்றால் ஆதவாவுக்கு...? :) சூனா பீனா கண்ணா பிண்ணாவாயி... ஞானி யானையாயி.. இப்ப ஆதி ஆதவனாயி... கலையண்ணா உண்மையிலியே நீங்க முன்னாபாயிதான்..:lachen001:


அவள் என்னை தற்சமயம் நினைத்துப் பார்க்கிறாளோ என்னவோ.. ( தன் குடும்பம் தன் குழந்தைகள் என்று பெண்கள் விரைவில் சுயநலக்காரர்களாகி விடுகின்றனர். :( ) இன்றும் அந்த நிகழ்வை எண்ணி எண்ணி ஏக்கம் மாளவில்லை எனக்குள். .மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் அடின்னு சும்மாவா சொன்னாங்க..?!:)

இது ஒரு இயக்குனரின் (பெயர் நினைவினில் இல்லை) பேட்டியில் வாசித்தது...
”காதலித்து பிரிந்தவர்களில் 100 பேரை எடுத்துக்கொண்டால் 98 ஆண்கள் அதை வெளியே சொல்லிகொள்கிறார்கள்.. வெறும் 2 பெண்கள் மட்டுமே அதை வெளிகாட்டுகிறார்கள்... மற்ற அந்த 98 பெண்களும் செத்தா போய்விட்டார்கள்... இல்லையே... மனதின் எங்கோ ஒருமூலையில் அதையெல்லாம் பத்திரபடுத்திவிட்டு யதார்த்தத்தில் வாழ வேண்டிய நிர்பந்தத்தில்தானே அவர்கள் இருக்கிறார்கள்... இன்றைக்கும் பேருந்து நிறுத்ததில் நம் பிரியத்துக்கு ஆளானவர்கள் இடுப்பில் கைக்குழந்தையுடன் பேருந்தைவிட்டு இறங்குவதை காணநேர்கையில் அவர்கள் கண்களில் ஒருநொடியேனும் அந்த காதல் தோன்றிமறைவதை காணக்கூடியதாகத்தான் இருக்கிறது”

ஆதி
22-09-2012, 03:15 PM
ஆதவனின் புண்ணியத்தில் கவிதை நீணுடு கொண்டு இன்னும் சுவை கோடி இருக்கிறது

சன்கடமான சோழல் தன், சன்கடமான கதல் தன், ஆனால் கவிதை அனைத்தையும் தின்று ரம்மியமானதாக மாறியிருகிறது

ஆதவா
23-09-2012, 06:46 AM
ஆஹா.. மன்னிக்கவேண்டும் ஆதவா.. ஆதியின் பெயர்க்குழப்பத்தில் தங்களை விட்டு அவருக்கு நன்றி சொன்னேன். ஆதவாவின் ஆதங்கத்தைக் கண்டபின் இன்னும் சில பத்திகள் சேர்த்தால் என்ன என்று தோன்றியது.
.

அண்ணே, ஆதியோ, ஆதவனோ நீங்கள் இன்னும் சேர்த்து எழுதியதுதான் மிக்க சந்தோஷம். பெயர் மாற்றமெல்லாம் நான் கண்டுகொள்ளவே மாட்டேன்...

கேட்டது கிடைத்தது

ஆதவா
23-09-2012, 06:50 AM
இத்தனை வருடங்கள் கழிந்து அதே இளமை மாறாமல் இன்னும் மூன்று பத்தி என்னால் இணைக்க முடிகிறது .!

எல்லையின்றி நீளாதா எனும்பொழுது அதில் தெரியும் நாசூக்கான காதல்..
வில்லை வளைத்தவன் ராமன். சீதையின் மீதுள்ள காதலில் வில்லை வளைக்கிறான். அது பேரதியசம். முன்னமே அவனும் அவளும் நோக்கியதில் காதல் பிறந்துவிட்டது இல்லையா? ”நோக்குதல்” விந்தையைத் தரும் என்பதால் அவள் முகம் நோக்கி கர்வம் கொள்ளவேண்டியிருக்கிறது.

நன்றாக இருக்கிறதுங்க அண்ணா.

வயது, கவிதைக்குப் பொருந்தாது என்பதை நிரூபிக்கிறீர்கள்.

கீதம்
23-09-2012, 11:24 PM
காந்தமாய் இழுத்த விழிகளில் கர்வம் பீறிட்டக் காதலது
காந்தர்வ மணமாகுமுன் கானலானதில் வருத்தம்.
வேந்தவன் மையலில் வீழ்ந்த நொடிகளின் நெடிதனை
மீண்டும்தன் மையிற்கொணர்ந்த விந்தை மன உருக்கம்.

பாராட்டுகள் கலைவேந்தன்.

கலைவேந்தன்
31-10-2012, 04:08 AM
நன்றி கீதம்..!