PDA

View Full Version : முட்கள் குத்துவதில்லை



கண்மணி
15-06-2008, 03:54 AM
முட்கள் குத்துவதில்லை
ரோஜாக்களுடன்
அவற்றையும்
ரசிக்க ஆரம்பித்த பின்பு!!!

சிவா.ஜி
15-06-2008, 04:40 AM
உண்மைதான். நேசிப்பவரை, அவரின் குறை நிறைகளுடன் அவரை அவராகவே நேசிப்பது நெருக்கத்தை இன்னும் இறுக்கும். வாழ்த்துகள் கண்மணி.

பாரதி
15-06-2008, 07:39 AM
எப்போதோ படித்த வரிகள் ... (கலீல் ஜிப்ரான்..??)
ரோஜா செடியில் முள் இருக்கிறதே
என வருத்தப்படாதே...
முட்செடியில் ரோஜா இருக்கிறதே
என சந்தோசப்படு.

உங்கள் கவிதையைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது.

ஆக "அத்தனைக்கும் ஆசைப்படு" என்கிறீர்கள்..!

கண்மணி
15-06-2008, 09:09 AM
ரோஜாவின் அழகில் மயங்கி முள்ளை கண்டுகொள்ளாமல் பறிப்பதால்தான் கைகள் காயப்படுகின்றன..

ரோஜா முள்ளை கவனித்திருக்கிறீர்களா பாரதி, அடியில் கரும்பச்சை, நுனியில் வெளிர்பச்சை, கவிழ்த்துப் போட்ட கோமாளித் தொப்பி மாதிரி ஒரு உருவம்...

ரசித்துப் பார்த்தால் முள்ளும் மலரும்.. (முள் கூட மலரும்).

ஓவியன்
16-06-2008, 08:30 AM
முட்கள் குத்துவதில்லை
ரோஜாக்களுடன்
அவற்றையும்
ரசிக்க ஆரம்பித்த பின்பு!!!

முட்கள் குத்துவதில்லை
மீனுடன் சேர்த்து
முட்களையும் பொரித்து
உண்ண ஆரம்பித்த பின்பு!!! :D:D:D

kavitha
16-06-2008, 08:40 AM
முட்கள் குத்துவதில்லை
மீனுடன் சேர்த்து
முட்களையும் பொரித்து
உண்ண ஆரம்பித்த பின்பு!!! எப்படி இதெல்லாம்??!! :D


முட்கள் குத்துவதில்லை
ரோஜாக்களுடன்
அவற்றையும்
ரசிக்க ஆரம்பித்த பின்பு!!!
__________________
உங்கள் கண்மணி ஜென் கவிதை போன்றதொரு அழகிய கவிதை. ரசிப்பது சுலபம், பிடிப்பது கடினம். பாராட்டுகள் கண்மணி. :)

ஓவியன்
16-06-2008, 09:02 AM
எப்படி இதெல்லாம்??!! :D
அக்கா, நேற்று வீட்டில் நெத்தலி மீன் கறியும் பொரியலும் செய்தோம், கறியில் இருந்த மீனின் முள்ளைச் சாப்பிட முடியவில்லை ஆனால் பொரியல் மீனிலிருந்த முள்ளால் பிரச்சினை இருக்கவில்லை...

அந்த பாதிப்புடன் இந்தத் திரியினைப் பார்த்ததனால் வந்த விளைவு..!!! ;)

ஹீ, ஹீ..!!! :D:D:D

kavitha
16-06-2008, 09:10 AM
அந்த பாதிப்புடன் இந்தத் திரியினைப் பார்த்ததனால் வந்த விளைவு..!!!

ஹீ, ஹீ..!!! :) சரி சரி. கண்மணி வருவதற்குள் எஸ்கேப்பிடுங்க

ஆதவா
16-06-2008, 09:44 AM
ரோசாக்களுக்கு முட்கள் தேவை. மொட்டுகளையும் இலைகளையும் பாதுகாத்துக் கொள்ள. சிலசமயம் குத்தும். வலிக்கும்.. ரசித்தபின்னும் கவனிக்காத பொழுது...

கண்மணி
16-06-2008, 09:50 AM
முட்கள் குத்துவதில்லை
மீனுடன் சேர்த்து
முட்களையும் பொரித்து
உண்ண ஆரம்பித்த பின்பு!!! :D:D:D

இங்கே கருவேல் முட்கள் நிறைய இருக்கின்றன
அனுப்பி வைக்கட்டுமா?:D:D:D

ஓவியன்
16-06-2008, 10:33 AM
இங்கே கருவேல் முட்கள் நிறைய இருக்கின்றன
அனுப்பி வைக்கட்டுமா?:D:D:D

நான் கூறியது மீனின் உள்ளே இருக்கும் முட்களை, கரு வேலமுட்கள் மீனினுள்ளே இருந்தால் மீனுடன் சேர்த்து அவற்றை அனுப்பி வையுங்கள்... :rolleyes:

கண்மணி
16-06-2008, 10:46 AM
உங்களுக்காவே கருவேல முட்களை மீனில் சொருகி அனுப்பி வைக்கிறேன்,,,

ஓவியன்
16-06-2008, 01:53 PM
உங்களுக்காவே கருவேல முட்களை மீனில் சொருகி அனுப்பி வைக்கிறேன்,,,

கருவேல முள்னா என்ன...???

எப்படி இருக்கும்...??? :confused:

ஆதவா
16-06-2008, 02:34 PM
கருவேல முள்னா என்ன...???

எப்படி இருக்கும்...??? :confused:

காட்டில் அநாதையாகக் கிடக்கும் முள் மரங்கள் தான்..

அக்காட்டினை கருவேலங்காடு என்று அழைப்பார்கள்.. சிலருக்கு காலை நேர நிழல் தரு மரமாகவும் இருக்கிறது. அம்மரத்தை வெட்டி அடுப்பெரிப்பவர்கள் உண்டு... (இது குறித்த கவிதை ஒன்றுகூட என்னிடம் உள்ளது. நேரம் அமைந்தால் தருகிறேன்.) சிலருக்கு வீடுகட்ட வேலியாகவோ அல்லது வீட்டிற்கு வேலியாகவோ பயன்படும். ஆனால் பாவம் அந்த மரங்கள் உபயோகம் தருவதைக் காட்டிலும் சாபம் பெறுவதே அதற்கு அதிகமாகிவிடுகிறது...........

எங்கள் வீட்டு வேலி கூட, கருவேல மர முற்கள் அடங்கிய கிளைகள்தான்..

முற்கள் கூரியதாக இருந்தாலும் அவற்றைக் காட்டிலும் கூரிய முற்கள் உள்ள மரங்கள் உண்டு.

இளசு
18-06-2008, 11:16 PM
முட்கள் குத்துவதில்லை
ரோஜாக்களுடன்
அவற்றையும்
ரசிக்க ஆரம்பித்த பின்பு!!!

Its a package deal!

மனமே இவற்றை நிர்ணயிக்கிறது!

வாழ்த்துகள் கண்மணி!

-------------------------

ஓவியனுக்கு செல்ல சபாஷ்!