PDA

View Full Version : பிளசன்ட் ஸ்டே'-இடிக்கும் பணி தொடக்கம்..ராஜா
14-06-2008, 07:03 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 மாடிகள் இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தெடர்ந்து, மீதியுள்ள 3 மாடிகளை இடிக்கும் பணியில் அதன் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

கொடைக்கானல் பிளிஸ் வில்லா தெருவில் உள்ளது பிளசன்ட் ஸ்டே. தரைத்தளம், முதல் தளம் இரண்டுக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு, கூடுதலாக 5 மாடிகள் கட்டினார் அதன் உரிமையாளரான ராஜேஷ் மித்தல்.

இந்த ஹோட்டலுக்கு முறைகேடாக அனுமதி தந்ததாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் வழக்கில் சிக்கினார்.

விதிமுறை மீறி கட்டப்பட்ட ஹோட்டலை எதிர்த்து பழனிமலை பாதுகாப்பு கவுன்சில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் 5 மாடிகள் கட்டியது சட்ட விரோதம் என 1995ம் ஆண்டிலேயே தீர்ப்பு வழங்கியது.

ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அங்கும் உயர் நீதிமன்ற ஆணை சரியே என்ற உத்தரவு வந்தது. கூடுதலாகக் கட்டப்பட்ட 5 மாடிகளை இடிக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால், உத்தரவு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் மாடிகள் இடிக்கப்படவில்லை. இதையடு்த்து பழனிமலை பாதுகாப்பு கவுன்சில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதையடுத்து 5 மாடிகளையும் 6 மாதத்திற்குள் அரசு இடிக்க வேண்டும் என்றும், இதற்கான செலவையும், இடிபாடுகளை அகற்றும் செலவையும் ஹோட்டல் உரிமையாளரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து 5 மாடிகளை இடிக்க கொடைக்கானல் நகராட்சி டெண்டர் விட்டது. இந்த இடிக்கும் டெண்டரை ரூ. 63 லட்சத்திற்கு ஒரு நிறுவனம் எடுத்தது.

ஆனால், இதையும் எதிர்த்து ஹோட்டல் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிட பகுதிகளை நாங்களே இடித்து வருகிறோம் என்றும், 2 மாடிகளை இடித்துவிட்டோம், மீதியையும் இடித்து வருகிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முகோபாத்தியா, நீதிபதி தனபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் எந்த அளவில் இடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஹோட்டல் நிர்வாகம் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இடிக்கும் பணியில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், நகராட்சி நிர்வாகமே இடிக்க அனுமதி வழங்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இந் நிலையில் மீதமுள்ள 3 மாடிகளை இடிக்கும் பணி தற்போது தொடங்கிவிட்டதாகவும், பிரின்ஸ் பில்டர்ஸ் என்ற நிறுவனம் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

இது தொடர்பான அறிக்கை வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.

தீபன்
14-06-2008, 09:26 AM
அனுமதியை மீறி கட்டப்பட்டது தப்புத்தான்... ஆனால் அந்த கட்டிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த சேதமுமின்றி உறுதியாகத்தானெ இருந்திருகிறது... சுற்றுப்புறத்கிலும் இந்த கட்டிடத்தால் இவ்வளவுகாலமும் எந்த பிரச்சினையும் தீவிரமக இருக்கவில்லைத்தானே... (இருந்திருந்தால் வழக்கில் இவ்வளவு சுணக்கம் ஏற்பட்டிருக்காது என்பது என் ஊகம்...)

அப்படியிருக்க, பலகோடி பெறுமதியான ஒரு கட்டிடத்தை சட்டத்தை காரணம் காட்டி இடிப்பது முட்டாள்தனமல்லவா... வேண்டுமானால் அதை அரசே கையகப்படுத்தி தனது சொத்தாக்கியிருந்தால் அது நல்ல முடிவாயிருந்திருக்கும்...

(எங்கூர்ல இப்டித்தான் எங்க கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக வந்த கப்பலொன்றை எங்க அரசு பிடிச்சு சட்டத்திடம் ஒப்படைக்க சட்டம் அந்த கப்பலை கடற்படியிடமொப்படைத்தது... அதை அண்மையில் திருகோணமலை துறைமுகத்தில் வைத்து புலிகள் மூழ்கடித்ததுவேறு கதை..).

நான் சொல்லவருவது, வளங்கள் வீணடிக்கப்படலாமா..? என்பதே.
(எனக்கு இந்திய நிலவரம் தெரியாது.. மேல்கண்ட செய்தியினடிப்படையில் எனக்கு தோன்றியதை சொன்னேன். மற்றபடி இதன் பின்னணிப்படி சட்டத்துறையின் தீர்ப்பிற்கு சரியான விளக்கமிருக்கலாமென்பதையும் ஏற்றுகொள்கிறேன்..)

ராஜா
14-06-2008, 09:48 AM
நீங்கள் சொல்வது போல வளங்கள் வீணடிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான், இந்த நடவடிக்கை தீபன்.

அழிந்துவரும் வன வளங்களைக் காப்பாற்ற வேண்டுமல்லவா

தீபன்
16-06-2008, 12:50 AM
ஆனால் இங்கு இடித்துவிட்டு அதில் மீண்டும் காடா வளர்க்கப்போகிறார்கள்...? இருக்கும் வனங்களை காப்பதைவிட்டுவிட்டு ஏற்கனவே பல ஆண்டுகளிற்குமுன் அளிக்கப்பட்ட வனத்தை காக்கத்தானென்றுசொன்னால் எப்படி சரியாகும்....? இதை இப்பிடியே விட்டுவிட்டு புதிதாக கொடுக்கும் ஒரு அனுமதியை நிறுத்திவிட்டால் அழிக்கப்பட்ட வனத்திற்கு அது ஈடாகிபோகும். கூடவே கட்டப்பட்ட ஒரு வளமும் காக்கப்படும். அரசுக்கும் ஒரு சொத்து சேரும். இந்த அடிப்படையில்தான் நான் கேட்டேன்.