PDA

View Full Version : முகவரியில்லாக் கடிதங்கள் - 3



rocky
13-06-2008, 11:18 AM
என் இனியவளுக்கு,

இது நான் உனக்கு எழுதும் மூன்றாவது கடிதம். ( என்னடா இது ஒவ்வொரு கடிதத்திலும் அதன் எண்ணிக்கையை சொல்கிறான் என்று பார்க்கிறாயா? எனக்கு இன்னும் உன்னிடம் எப்படி பேச்சை தொடங்குவது என்று தெரியவில்லை, அதனால்தான். சரி இதுவே கடைசி முறை, அடுத்த கடிதத்தில் வேறு மாதிரி எழுத முயற்சிக்கிறேன் ) முந்தைய கடிதத்தில் உன் வெளித்தோற்றம் பற்றி கூறியிருந்தேன். உன் புறத் தோற்றத்தைப்பற்றி எனக்கு அதிகம் கனவுகளில்லை ( நீ கருப்பாயிருந்தாலும் கலையாக இருக்க வேண்டும். சிகப்பாயிருந்தாலும் சிரித்த முகமாய் இருக்க வேண்டும் அவ்வளவுதான்), ஆகையால் அதற்கு ஒரு கடிதம் போதுமானது. ஆனால் இப்போது உன் அகம் பற்றி கூற இருக்கிறேன். இதற்கு நிச்சயம் ஒரு கடிதம் பத்தாது.

நான் உன்னை இதுவரை ஒரு உருவமாக கற்பனை செய்ததை விட ஒரு உணர்ச்சியாகவே அதிகம் கற்பனை செய்திருக்கிறேன். என்னவள் இந்த கதாநாயகி போல் இருக்க வேண்டும் என்று நான் கனவுகண்டதில்லை, ஆனால் இந்தக் கதாப்பாத்திரம் போல் என்னைக் காதலிக்க வேண்டும், ஊடல் கொள்ள் வேண்டும், என் அவசரபுத்தியை கட்டுப்படுத்தும் அனையாக இருக்க வேண்டும், இதுபோல் இன்னும் பலவிதங்களில் உன்னை என்னுடைய இன்னொரு மனசாட்சியாகவும், உணர்ச்சியாகவும் தான் அதிகம் கற்பனை செய்திருக்கிறேன். ஆகவே இனி உன்னுடைய குணத்தைப் பற்றிக் கூறுகிறேன் கேள். ( விளையாட்டாக இருக்கிறதல்லவா, உன்னைப் பற்றி உன்னிடமே கூறுவது ).

எப்பொழுதுமே முதலில் காதலானாலும், கல்யாணமானாலும் அழகைப்பார்த்து முடிந்ததும் படிப்பைப் பற்றித்தான் விசாரிப்பார்கள். ஆகவே முதலில் என் படிப்பைச் சொல்லிவிடுகிறேன். நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். ஆனால் நீ என்னை விட அதிகம் படித்தவளாக இருக்கலாம், நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். அதேநேரம் என் படிப்பால் உன்னுடைய நண்பர்கள் வட்டத்திலோ அல்லது எந்த ஒரு சூழ்நிலையிலும் உன் மரியாதை குறையாத அளவுக்கு என்னால் நடந்து கொள்ள முடியும். அதேநேரம் நான் என் பள்ளிப்படிப்பை முடித்த பிறகுதான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன், அதை உனக்கு போகப் போகச் சொல்கிறேன். எனவே நமக்குள் படிப்பு ஒரு பெரிய விஷயமாக மாற வாய்ப்பில்லை. ஆகையால் அடுத்ததைப் பார்ப்போம்.

அடுத்ததாக பார்த்தால் பழக்கவழக்கம். உனக்கு என்ன பிடிக்கும், எனக்கு என்ன பிடிக்கும் என்று நாம் இருவரும் நம்மைப்பற்றி நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். கவனித்துக்கொள் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளாவுதான், எனக்குப் பிடித்ததை நான் உனக்கோ அல்லது உனக்குப் பிடித்ததை நீ எனக்கோ தினிக்க வேண்டியதில்லை. நான் உன்னை மட்டுமல்ல உன் விருப்பங்களையும் முழுமையாக மதிக்கிறேன். ஆகவே நம் இருவரின் தேடல்களும், விருப்பங்களும் ஒருவேளை வேறு வேறாக இருந்தாலும் நம் காதலும், வாழ்க்கையும் என்றும் இனைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். என்னடா இவன் இப்படிச் சொல்கிறான் என்று கேட்க்கிறாயா? பதில் சொல்கிறேன் கேள்,

நீயே சிந்தித்துப் பார், நீ எது சொன்னாலும் நான் ஆமா சரிதான், அதுதான் எனக்கும் பிடிக்கும், நானும் இதைத்தான் நிணைத்தேன், நான் நினைச்சே நீ சொல்லிட்டே, என்று மட்டுமே நான் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு எப்படியிருக்கும். வாழ்க்கை சலித்துப் போய்விடாதா? அதுவே நீ சொல்வதை இல்லை அது தவறு, எனக்கு அது பிடிக்காது, நான் வேறு மாதிரி யோசிக்கிறேன், இல்லை நாம வேற மாதிரி இதை செய்யலாம் என்று நன்றாக சண்டை ( ஊடல் ) போட்டுவிட்டு பிறகு சரி இன்று நீ சொல்வதைப் போல் செய்யலாம், என்று ஒருவர் விட்டுக்கொடுக்கும் போது நம் வாழ்க்கை எப்படி இருக்கும். என்ன ஒன்று நமக்குள் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் சண்டை வரலாமே தவிர நீ விட்டுக்கொடு என்று எப்போதுமே சண்டை வரக்கூடாது. அப்படி மட்டும் இருந்தோமானால் உண்மையிலேயே அதுதான் மிகவும் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையாக இருக்கமுடியும்.

உனக்கு என்னுடன் ஊடல்
கொள்ளும் ஆசை வந்தால்
நீ எனக்குப் பிடிக்காததை
செய்யவேண்டிய அவசியமில்லை
உனக்குப் பிடிக்காததைச்
செய்தாலே போதும்,
நமக்குள் சந்தோஷமான
சண்டை தொடங்கிவிடும்,
மகிழ்ச்சியின் மேகங்கள்
திரலாக அணிவகுக்க,
சிரிப்பின் இடியோசை
காதைப் பிளக்க,
காதல் மழை நம்
உறவை வளர்க்கும்.

இப்போது சொல் நாம் எப்படி வாழலாம் என்று. சரி நீ யோசித்துக் கொண்டே இரு, நான் அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன். பாய் பாய்.

அன்பு(காதலு)டன்,

ராக்கி.

Narathar
18-06-2008, 07:05 PM
பாய் பாய்.அன்பு(காதலு)டன்,

ராக்கி.

பாழும் கிணற்றிலா????? :lachen001: :lachen001:
நாரயணா!!!!!!

lolluvathiyar
25-06-2008, 06:40 AM
ம் இந்த கனவன் மனைவியிடையே காதல் பிறகு ஊடல் சமாதானம் இதெல்லாம் எப்படி எப்ப வரும் எப்ப சமாதனம் அடையும் எல்லாம் எப்பவுமே ஏட்டில் எழுத முடியாதது. ஏட்டில் எழுதி வைத்த படி நடக்க முடியாதது.

rocky
26-06-2008, 07:16 AM
நீங்கள் சொல்வதும் உண்மைதான் வாத்தியார் அண்ணா. ஏட்டில் உள்ளபடியே நடக்காவிட்டாலும் ஓரளவுக்கு நடந்தால் பரவாயில்லை. பார்ப்போம். உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி லொள்ளுவாத்தியார் அவர்களே.

தீபன்
19-07-2008, 09:17 AM
ராக்கி, உங்கள் எதிர்பார்ப்புக்கள் கொள்கைரீதியாக சரிதான். ஆனால் நடைமுறையில் முழுவதுமாக சாத்தியமாகாது. அதிக எதிர்பார்ப்புக்களே அதிக ஏமாற்றங்களுக்கும் காரணமாகிவிடும்.