PDA

View Full Version : முட்புதர்...!



பூமகள்
13-06-2008, 08:59 AM
முட்புதர்...!


தத்தித் தத்தி
தாவி வந்து
எட்டிப் பார்த்தது
முட்டி நின்றது..

சகோதரிகளோடு
வந்தென்னை
வரவேற்று போனது..

கையில் வைத்திருந்த
ரொட்டிகளை..
பாங்காய் ஊட்டும்
என் விரல் தொட்டு
கவ்வியது..

சந்தன வண்ணத்தில்
வெந்சாந்திட்டு..
எலி வாலாட்டி..
குதியாட்டம் போட்டது..

ஆறு குட்டி கால்சுற்ற..
ஆறாத என் பாசம்..
அழுகை வரவழைக்க..

முட்புதர் தாண்டி
எனைப் பெயர்ந்து
நகர்த்தினேன்..

கிணற்று முட்புதரில்
வீசப்பட்ட பெண்சிசுவின்
வீர் அழுகை..

வேண்டாம் இனி
பெண்ணினமென
எண்ண வைத்தது..

பெண்ணாய் பிறந்தால்
நாய்க்குட்டியென்ன..??!!
மனிதரென்ன..??!!

kavitha
13-06-2008, 09:22 AM
வேண்டாம் இனி
பெண்ணினமென
எண்ண வைத்தது..

நேற்றைய செய்தியில் பார்த்தாயா பூ? கணவர் அடிப்பார் என்பதற்காக தனக்கு பிறந்த பெண்குழந்தையை போட்டுவிட்டு ஆண்குழந்தையை ஆஸ்பத்திரியில் திருடியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் ஒரு பெண்.

இதை எப்படி சரி செய்வது பூமா? தெருவிற்குத் தெரு தொட்டில் குழந்தை திட்டம் வைத்தாலும் நிறைவதென்னவோ குப்பைத்தொட்டிகள் தான். வெட்கக்கேடாகவும், கோபமாகவும், அழுகையாகவும் இருக்கிறது.

பூமகள்
13-06-2008, 09:32 AM
நேற்று மட்டுமல்ல அக்கா.. பல காலமாக... மாறாத ஒரு செயலாக.. பெண் சிசு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம்.. சாக்கடையில் வீசிய சம்பவம்.. நடந்த வண்ணமே தான் உள்ளது...

தொப்புக் கொடியோடு வீச எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை...

"என்னிலை அன்றே தெரிஞ்சிருந்தாவே
கற்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே...!!" - என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது...

பிறந்தபின் இப்படி செய்ய.. பிறப்பிக்காமலே இருந்திருக்கலாமே.... ஏன் இந்த மடமைத்தனம்...வேதனையும் ஆத்திரமும் கொப்பளிக்கிறது அக்கா.

------------------------------------------
இக்கவிக்கு காரணம்.. எங்கள் வீட்டினருகில் நிகழ்ந்த.. நிகழ்கின்ற ஒரு நிகழ்வு...

ஏழு நாய்க்குட்டிகள்... சாக்கில் கொண்டு வந்து முட்புதரில் போட்டுச் சென்ற ஒரு பதுமூன்று வயது சிறுவனின் செயல்..

அந்த அம்மா மடி பால் காணாத குட்டிகள்.. முட்புதர்களிலிருந்து வெளியே வரக் கூட தெரியாத சரியாக நடக்கவே பயிலாத நாய்க்குட்டிகள்..

அருகில் இருக்கும் நல்லுள்ளம் படைத்த ஒரு அக்காவும் நாங்களும் மாறி மாறி ரொட்டிகள் கொடுத்து ஏழு குட்டிகளையும் காப்பாற்றி வருகிறோம்..

இப்போது பார்த்தால் ஒரு குட்டியைக் காணவில்லை.. ரொட்டி போட நான் போக.. ஆறு குட்டி.. ஓடி வந்து கால் சுற்றிக் கொண்டது.. பெரும்பான்மையானவை பெண் குட்டிகள்..

பெண் குழந்தையென்பதால் கிணற்றில் வீசப்பட்ட ஒரு பச்சிளம்குழந்தையினைப் பற்றியும் சிறிது காலத்துக்கு முன்பு ஒரு செய்தி படித்தேன்..

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில்.. வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது..

பூமகள்
13-06-2008, 09:34 AM
தெருவிற்குத் தெரு தொட்டில் குழந்தை திட்டம் வைத்தாலும் நிறைவதென்னவோ குப்பைத்தொட்டிகள் தான். வெட்கக்கேடாகவும், கோபமாகவும், அழுகையாகவும் இருக்கிறது.தொட்டில் குழந்தைகள் திட்டமெல்லாம் உதவாது அக்கா..:icon_ush::icon_ush:

தேவை மனமாற்றம்..
அதுவரை தொடரும்..
இவ்வகை தடமாற்றம்...! :mad::mad:

வருத்தமும் வேதனையும்
மிஞ்சி நிற்கிறது..
மனம் பதைபதைக்கிறது...:traurig001::mad:

இளசு
14-06-2008, 11:23 PM
இரக்கம் உள்ள நெஞ்சம் சுரந்த கவிதை..

பிறப்பைத் தடுக்காமல் விட்டு
வளர்ப்பை எண்ணி மாய்ந்து
இப்படி நடக்கும் மனிதர்கள் செயல்
என்றுதான் மறையும்?

நிச்சயம் அந்நாள் வரும்..

அதற்குப்பின் ஆண்சிசுக்கள் இந்நிலைக்கு
ஆளாகாமல் இருந்தால் சரி....

பாராட்டுகள் பாமகளே!

பூமகள்
15-06-2008, 06:32 AM
அதற்குப்பின் ஆண்சிசுக்கள் இந்நிலைக்கு
ஆளாகாமல் இருந்தால் சரி....
ஹா ஹா.. அப்படியொரு காலம் வந்தால்.. நிச்சயம் அவர்களுக்காகவும் போராடுவோமண்ணா. :)

பாராட்டுதல் கண்டு மகிழ்ச்சி. நன்றிகள் அண்ணா. :)

அனுராகவன்
15-06-2008, 07:32 AM
அருமை பூ..

kavitha
16-06-2008, 05:36 AM
ஹா ஹா.. அப்படியொரு காலம் வந்தால்.. நிச்சயம் அவர்களுக்காகவும் போராடுவோமண்ணா.
:) நல்மனம் வாழ்க!