PDA

View Full Version : ஆலமரமும் வெங்காயத்தாமரையும்

kavitha
13-06-2008, 07:53 AM
ஆலமரமும் வெங்காயத்தாமரையும்

விழுதுகள் தாங்கிய ஆலமரம்
படர்ந்து படர்ந்து தன்
கிளைகளைப்பரப்பியது

வெயில்காலம் வந்தது...
தண்ணீர் ஆதாரம் தேடிச்சோர்ந்து
சுருங்கின விழுதுகள்

அடிமட்ட நீரையெல்லாம்
ஆணிவேர் மட்டுமே உறிஞ்ச
தண்டு மட்டும் பருத்தது

தொடர் ஓட்டத்திற்கும்
கிளைகள் பரப்பவும்
நீர் தேவையாய் இருந்தது

விழுதுகள் போராடித்தோற்றன
மறுக்கப்பட்ட நீரால்
சுருங்கி சூம்பிப்போய்
சல்லிவேர்களாய் நீந்தத்துவங்கின

தண்ணீர்த்தேடிய விழுதுகள்
வெங்காயத்தாமரைகளாகி
இடம்பெயர்ந்தன.

ஆதவா
13-06-2008, 09:22 AM
ஆலமரமும் வெங்காயத்தாமரையும்

விழுதுகள் தாங்கிய ஆலமரம்
படர்ந்து படர்ந்து தன்
கிளைகளைப்பரப்பியது

வெயில்காலம் வந்தது...
தண்ணீர் ஆதாரம் தேடிச்சோர்ந்து
சுருங்கின விழுதுகள்

அடிமட்ட நீரையெல்லாம்
ஆணிவேர் மட்டுமே உறிஞ்ச
தண்டு மட்டும் பருத்தது

தொடர் ஓட்டத்திற்கும்
கிளைகள் பரப்பவும்
நீர் தேவையாய் இருந்தது

விழுதுகள் போராடித்தோற்றன
மறுக்கப்பட்ட நீரால்
சுருங்கி சூம்பிப்போய்
சல்லிவேர்களாய் நீந்தத்துவங்கின

தண்ணீர்த்தேடிய விழுதுகள்
வெங்காயத்தாமரைகளாகி
இடம்பெயர்ந்தன.

இக்கவிதை இருவகைப் பொருள்களை எனக்குத் தருகிறது. இரண்டொலொன்றாகவும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். என்னுடைய சந்தேகமெல்லாம் ஆணிவேரில்தான் அடங்கியிருக்கிறது,. கவிஞரின் உள்ளார்ந்த அர்த்தம் அறியாவிடினும் வாசக அறிவில் விளைந்த பதத்தைக் கொண்டு சொல்ல நினைக்கிறேன்.

விழுதுகள் பெற்றவர்களாகவும் மற்றவை அற்றவர்களாகவும் கொண்டால்,

சுழற்சிமுறை வாழ்வில், இயற்கை விதித்த விதியால் காலம் மாறிக் கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு காலகட்டத்தில் வாடவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். வெயிற்காலமோ குளிர்காலமோ, சூழ்நிலைக்கேற்பதான் வாழ்நிலையும்.
இன்னும் சில தன் இரத்தமே தன்னை உறிஞ்சும் அவலத்தைக் காணலாம். இது முதல் அர்த்தம். தன் ரத்தத்தை உமிழ்ந்து வாழ நினைக்கலாம்.. இது இரண்டாவது அர்த்தம்.

பகிர்ந்திடாமல் ஏது வாழ்வு? சோகமோ சுகமோ, பணமோ பாசமோ பகிர்ந்திடாவிடில் குடும்ப உறவுகள் நிலைக்குமா? ஆணிவேர் மட்டும் உறிஞ்ச உறவின் ஒரு பாகம் சுயநலம் கொள்தல் தகுமா?

தொடர் ஓட்டத்திற்கும்
கிளைகள் பரப்பவும்
நீர் தேவையாய் இருந்தது

இந்த நீர் ஆதாரம், நமக்குப் பொருளாதாரம். தேவைப்படும் கட்டாயம். தன் சொந்தக் கிளைகள் பரப்பவேண்டி இயற்கை விதித்த விதிமுறை. ஒவ்வொரு ஆலமரமும் சூம்பிப் போகாமல் தப்பி வந்து தன் சந்ததியை வளர்க்க நிர்பந்திக்கும் கட்டளை. அது தொடர் ஓட்டத்தின் தேவைக்கு அத்தியாவசியமாக அமைவதில் ஆச்சரியமென்ன?

விழுதுகள் போராடித்தோற்றன

முயலவில்லை. இது ஒருவகைப் போர். நம்பிக்கையே வெற்றி ஆயுதம். ஆனால் எல்லா விழுதுகளும் இப்போரில் தோற்பதில்லை. சிற்சில நல்ல வேர்களும் அடங்கிய ஆலமரக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. தான் மட்டும் உறிஞ்சாமல் தன் கிளைகளுக்கும் பரப்பும் வேர்கள்...

தண்ணீர்த்தேடிய விழுதுகள்
வெங்காயத்தாமரைகளாகி
இடம்பெயர்ந்தன

இடம்பெயர்தல் என்பது இங்கே உந்தப்பட்டது. வேறு வழியில்லாமல்.... உருமாற்றம் கொண்டு தன் இருப்பிடத்தை இழந்து..... சிலசமயம் இதுவும் நல்லதோ என்று தோன்றும். ஒவ்வொரு செயலுக்குப் பிந்தியும் நற்செயல் ஒன்று அடங்கியிருப்பதே இதற்குக் காரணம் என்று அறிகிறேன். இவ்வுந்தப்பட்ட இடமாற்றம், தந்தை வழியோ தனயன் வழியோ இருவகைகளும் தவறென்பதே என் கருத்தும்.

நீண்ட பெருமூச்சு..
முதியோர் இல்லத்தைக் கடக்கையில்

(யாரோ எழுதிய கவிதையின் கரட்டு வடிவம்.)

முற்றிலும் வாசக எண்ணத்திற்கு விட்டுவிட்ட இக்கவிதைக்கு அர்த்தங்கள் பல உண்டாகலாம் ; பொதித்தவற்றை ஆசிரியர் வெளியிடும்வரையில்.....

கவிதையின் கவிதைக்கு தரம் பற்றி சொல்லத்தான் வேண்டுமா? :icon_b:

kavitha
13-06-2008, 09:28 AM
விரைவான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதவா.

நீ கூறிய அனைத்தும் இக்கவிதைக்கும் பொருந்தும் என்றாலும், நான் நினைத்ததில் பாதியைப்பிடித்து விட்டாய்.

இந்த நீர் ஆதாரம், நமக்குப் பொருளாதாரம். தேவைப்படும் கட்டாயம். தன் சொந்தக் கிளைகள் பரப்பவேண்டி இயற்கை விதித்த விதிமுறை.

சமீபத்திய செய்தித்தாள்களில் அடிக்கடி படிக்கும் வாசகத்தாலும், சொந்த அனுபவத்தாலும் உந்தப்பட்ட கவிதை இது. இன்னும் விளக்கங்கள் வரும் என்ற ஆவலுடன்.... உன் பதிலுக்காகவும் காத்திருக்கிறேன்.

மதி
13-06-2008, 09:40 AM
நீண்ட நாள் கழித்து முழுமையாய் ஒரு கவிதை படித்தேன்...

அன்றாட வாழ்விலும் பணியிடங்களிலும் நடக்கும் விடயங்களாக எனக்குத் தோன்றுகிறது. இது பலவகை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றாலும் குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களில் அதிகமாகவே இருக்கிறது.

நிறுவனம் வேகமாக வளர்ந்து பல்லாயிரம் ஊழியர்கள் சேர்ந்தபின் அமெரிக்காவின் பணவீக்கம் இங்கும் எதிரொலித்ததால் வசந்தகாலம் பலருக்கும் வெயில் காலமானது. இதில் அடிபடாமல் முதலாளிகளும் மேலாளர்களும் தப்பித்தாலும் கிளைபரப்பும் விழுதுகள் அடிவாங்கின். இவற்றில் சில தப்பி பிழைக்க வேற்றிடம் தேடி வெங்காயத் தாமரையானது..

ஏதோ இது கொஞ்சம் பொருந்தற மாதிரி தெரியுது.. நீங்க தாங்க்கா சொல்லணும்.. சரியான்னு..

(பேரைப் பார்த்ததுமே படிக்கணும்னு தோணுது.. "வெங்காயத்"தாமரை.. பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல)

ஆதவா
13-06-2008, 10:11 AM

வாவ்... இது சரியான பொருத்தமாக இருக்கும் மதி.... வாழ்த்துகள்.. :icon_b:

இக்கவிதை ஒரு திரவம்.. வாசக பாத்திரத்திற்கேற்ப வளையும்.... முதலாவதாக நான் கண்ட குடும்பத்திலும்... இரண்டாவதாக நீங்கள் கண்ட தொழிலிலும்..........

வாழ்த்துகள்..........

kavitha
13-06-2008, 10:31 AM
நீண்ட நாள் கழித்து முழுமையாய் ஒரு கவிதை படித்தேன்...

அன்றாட வாழ்விலும் பணியிடங்களிலும் நடக்கும் விடயங்களாக எனக்குத் தோன்றுகிறது. இது பலவகை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றாலும் குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களில் அதிகமாகவே இருக்கிறது.

நிறுவனம் வேகமாக வளர்ந்து பல்லாயிரம் ஊழியர்கள் சேர்ந்தபின் அமெரிக்காவின் பணவீக்கம் இங்கும் எதிரொலித்ததால் வசந்தகாலம் பலருக்கும் வெயில் காலமானது. இதில் அடிபடாமல் முதலாளிகளும் மேலாளர்களும் தப்பித்தாலும் கிளைபரப்பும் விழுதுகள் அடிவாங்கின். இவற்றில் சில தப்பி பிழைக்க வேற்றிடம் தேடி வெங்காயத் தாமரையானது..
ஏதோ இது கொஞ்சம் பொருந்தற மாதிரி தெரியுது.. நீங்க தாங்க்கா சொல்லணும்.. சரியான்னு..

(பேரைப் பார்த்ததுமே படிக்கணும்னு தோணுது.. "வெங்காயத்"தாமரை.. பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல)
__________________

மதி மிகச்சரியாக சொன்னீர்கள் மதி. :icon_b: :)

விழுதுகளற்ற ஆலமரம் படர முடியாது.
படர்ந்து கொண்டே இருக்கின்ற வெங்காயத்தாமரையால் தனக்கென்று எதையும் சேமிக்க முடியாது.

----------------------------------------------------------------

இக்கவிதை ஒரு திரவம்.. வாசக பாத்திரத்திற்கேற்ப வளையும்.... முதலாவதாக நான் கண்ட குடும்பத்திலும்... இரண்டாவதாக நீங்கள் கண்ட தொழிலிலும்..........
ஆமாம் ஆதவா. குடும்பம், நிறுவனம் இரண்டுக்குமே பொருந்தும்.
இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். :) :):icon_b:

மதி
13-06-2008, 10:49 AM
மிகச்சரியாக சொன்னீர்கள் மதி. :icon_b: :)

விழுதுகளற்ற ஆலமரம் படர முடியாது.
படர்ந்து கொண்டே இருக்கின்ற வெங்காயத்தாமரையால் தனக்கென்று எதையும் சேமிக்க முடியாது.

அருமையான கருத்து.....
இதுல வெங்காயம்னு என்ன சொல்லலியே.. எப்படியும் இது எனக்கு ஒத்து வராது...ஹிஹி..:eek::eek:

தாமரை
13-06-2008, 11:59 AM
அதென்னவோ மதிக்கு நேரம் சரியில்லையோன்னுத் தோணுது,,, ;)

கவிதாக்கா, ஆலமரத்திற்கு மட்டும் தமிழ் தெரிஞ்சா விழுதுகள் தண்டை நெறிச்சே கொன்னுடும்.. தண்டுகள் பருப்பது கள்ளிகளில்.. கள்ளிகள் பாலையில் வளரும்.. எப்பவாவது மழை வரும்பொழுது தளதளன்னு வளரும் கள்ளிகள், தண்ணீரை தணுகளில் சேமித்துக் கொள்ளும். தண்டுகள் பருத்துவிட தண்ணீர் குறையக் குறைய முதல்ல பூ அப்புறம் சிறுகிளைகள் அப்பட் மெதுவா உதிர்த்துக் கொண்டே போக தண்டு மட்டும் மிஞ்சும்.. அடுத்த மழையில் மறுபடி கிளைவிடும்.

கவனிச்சிருக்கீங்களா? ஆலவிழுதுகள் தரையில் கையூன்றி அடிமரம் இத்துப் போனாலும் வேர்விட்டுத் தாங்கும். ஆனால் அதே விழுதை வெட்டி நட்டால் அது ஆலாய்த் தழைக்காது..

வசதி வாய்ப்புகள் இருக்கும் பொழுது ஆடம்பரம்.. வரவு வற்றும்பொழுது சுயநலம் என்பது நிறுவனங்களில் இருக்கலாம். கிளைபரப்பிய காரணங்களால் ஆலமரத்துக்குப் பாவம் அவதூறு...

வெங்காயத் தாமரைகள் தண்ணீர்கண்ட இடத்தில் செழிக்கும்.. வறண்டால் மடியும்.. மறுபடி தண்ணீர் வந்தால் அதேகுளத்தில்தான் திரும்ப இருக்கும்..

அங்கேயே இருப்பதால் இருக்கற வரைக்கும் செலவு பண்ணிடுது.. சேர்த்து வைத்துக் கொள்வதில்லை..

கொஞ்சம் அப்படியே இயற்கையை மாற்றி ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க..

இறகுதிர்க்கும் மயிலிருக்க விழுதுதிர்க்கும் ஆலமரம் என இல்பொருள் உவமையைக் கொடுத்திருக்கீங்க,,

ஊசியிலக் காட்டு மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்து மொட்டையாகி வசந்தம் வந்ததும் புது இலைகளை பிரசவிக்கின்றன.. அதையெல்லாம் விட்டுட்டு தாயா புள்ளையா பழகிகிட்டு இருக்கிற ஆலமரத்தையும் விழுதுகளையும் இழுத்து போட்டு இருக்கீங்க..

விழுது விடும் ஆலமரம் ரைட்டு, எதையும் சேர்த்து வைக்காம படரும் வெங்காயத்தாமரை ரைட்டு.. ஆலமரவிழுதுகள் சுருங்கி இலைகள் உதிரும் ரைட்டு... ஆனாத் தண்டு பருக்கும் என்பது மட்டும் தான் இடிக்குது...

அந்த வெங்காயத் தாமரை எதையும் சேர்த்துவைக்காமல் இருக்கலாம், ஆனால் இப்போது தாமரை நிறையச் சொந்தங்களைச் சேர்த்து வச்சிருக்கக்கா!!

மதி
13-06-2008, 12:43 PM
அதென்னவோ மதிக்கு நேரம் சரியில்லையோன்னுத் தோணுது,,, ;)
அதான் ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே.... :traurig001::traurig001::traurig001:
ஏதோ நானும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணினேன்....அதுக்காக இப்படியா...

இளசு
14-06-2008, 11:15 PM
வாழ்த்துகள் கவீ..

இந்தியாவில் முதல் 3 பணக்காரர்களின் வருமானம் =
முப்பது கோடி இந்தியர்களின் வருமானம்.

அப்படிப்பட்ட பெரிய மரங்கள்..
சுற்றிலும் விழுதுகளை ஊன்றவிட்டால்தான்
''சூழல்'' தர்மம் கொஞ்சமாவது பிழைக்கும்..

இல்லையென்றால் எல்லாம் வெறும் வெங்காயமாகிபோகும்!

ஊதி வீங்கிவரும் இன்றைய வணிக/பொருளாதாரச் சந்தைவாழ்
நமக்கு நேரத்துக்கேற்ற கவி... வாழ்க கவீ!

கண்மணி
15-06-2008, 03:32 AM
ஆல மரத்துக்கு கீழே எதுவும் வளராதாம் இளசு!!!

kavitha
16-06-2008, 05:11 AM
இதுல வெங்காயம்னு என்ன சொல்லலியே.. . நிச்சயமா உங்களைச்சொல்லல மதி. கவிதை முழுவதும் கவிதையைப்பற்றியதும் கருத்தினைப்பற்றியதும் தான். யாரையும் குறிப்பிட்டு எழுத என் மனமும் அறிவும் இடம் தராது மதி. பதிவுக்கு நன்றி. :)

kavitha
16-06-2008, 05:24 AM
ஆலமரத்திற்கு மட்டும் தமிழ் தெரிஞ்சா விழுதுகள் தண்டை நெறிச்சே கொன்னுடும்..
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்.... அந்தப்பரம்பரையில் வந்தவை விழுதுகள். விழுதுகள் விழுந்தாலும், மேலே எழுந்தாலும் மற்றவை வாழ தாங்கிப்பிடிக்குமே அன்றி வாரி விடாது.

கவனிச்சிருக்கீங்களா? ஆலவிழுதுகள் தரையில் கையூன்றி அடிமரம் இத்துப் போனாலும் வேர்விட்டுத் தாங்கும். ஆனால் அதே விழுதை வெட்டி நட்டால் அது ஆலாய்த் தழைக்காது..
ஆமாம் சகோதரரே. விழுதுகள் தன்னிச்சையாய் வாழ வழியற்றவைகள். அதனால் தான் வெங்காயத்தாமரையாய் உருமாறியதாக கவிதையில் சொல்லியிருக்கிறேன்.

கிளைபரப்பிய காரணங்களால் ஆலமரத்துக்குப் பாவம் அவதூறு... கிளை பரப்பிய காரணம் அதற்குக்கிடைத்த பெரும் தீனி. அதை விழுதுகளோடு பங்கிட்டுக்கொள்ளாமை தான் அதன் தவறு. விழுதுகள் மண்ணைப்பிடிக்கவேண்டுமாயின் அது தானும் ஒரு தண்டாகும் வரை வளர வேண்டும். அதற்கு அவகாசமே தண்டு கொடுக்காமல் தன்னை மட்டுமே கவனிக்குமாயின் விழுதுகளின் நிலை சிறு சிறு கயிறாகி சல்லிவேர்களாக அற்றுப்போகும் நிலை தான்.

கொஞ்சம் அப்படியே இயற்கையை மாற்றி ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க..

இறகுதிர்க்கும் மயிலிருக்க விழுதுதிர்க்கும் ஆலமரம் என இல்பொருள் உவமையைக் கொடுத்திருக்கீங்க,,

ஊசியிலக் காட்டு மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்து மொட்டையாகி வசந்தம் வந்ததும் புது இலைகளை பிரசவிக்கின்றன.. அதையெல்லாம் விட்டுட்டு தாயா புள்ளையா பழகிகிட்டு இருக்கிற ஆலமரத்தையும் விழுதுகளையும் இழுத்து போட்டு இருக்கீங்க..

இங்கே கவிதை குறியீடு....
ஆலமரம் என உபயோகிப்பதன் அவசியம், கிளை பரப்புதல்
வெங்காயத்தாமரை என உபயோகிப்பதன் அவசியம், அதில் எந்த பலனும் சேமிக்கப்படுவதில்லை என்பது.

இல்பொருள் உவமைக்கான காரணம், கொடுக்கப்படவேண்டிய முரண். இல்லையென்றால் இது ஆலமரத்தையும், வெங்காயத்தாமரையும் நேரடியாகக்குறிப்பிடுவது போல் ஆகிவிடும். கவிதையின் நோக்கம் அதுவன்று.

ஆனாத் தண்டு பருக்கும் என்பது மட்டும் தான் இடிக்குது...
இடிக்கணும். படிப்பவர்கள் மண்டையை அது இடிக்கணும் என்பது தான் நோக்கம். ஒரே இடத்தில் பணம் முடக்கப்படுகிறது என்பதே அதன் குறியீடு சகோதரரே.

அந்த வெங்காயத் தாமரை எதையும் சேர்த்துவைக்காமல் இருக்கலாம், ஆனால் இப்போது தாமரை நிறையச் சொந்தங்களைச் சேர்த்து வச்சிருக்கக்கா!!

:) ... இன்னும் நிறைய சேர்க்கணும். அது தான் என் ஆசையும். எனது கவிதையும் 'தாமரை'க்கு பரிந்துபேசியதாகத்தான் இருக்கிறது. மரத்திற்கு அல்லவே! புரிகிறதா?

kavitha
16-06-2008, 05:25 AM
இந்தியாவில் முதல் 3 பணக்காரர்களின் வருமானம் =
முப்பது கோடி இந்தியர்களின் வருமானம்.

அப்படிப்பட்ட பெரிய மரங்கள்..
சுற்றிலும் விழுதுகளை ஊன்றவிட்டால்தான்
''சூழல்'' தர்மம் கொஞ்சமாவது பிழைக்கும்..

இல்லையென்றால் எல்லாம் வெறும் வெங்காயமாகிபோகும்!

ஊதி வீங்கிவரும் இன்றைய வணிக/பொருளாதாரச் சந்தைவாழ்
நமக்கு நேரத்துக்கேற்ற கவி...
தங்கையின் மனமறிந்தவர் தாங்கள். நன்றி அண்ணா.

kavitha
16-06-2008, 05:27 AM
ஆல மரத்துக்கு கீழே எதுவும் வளராதாம் இளசு!!!
களைகள் வளராமல் தடுப்பது அவசியம் கண்மணி. கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?

kavitha
20-06-2008, 06:48 AM
இக்கவிதையை திண்ணை (http://www.thinnai.com/?module=displaystory&story_id=30806198&format=html) தளத்தில் நேற்று வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் :)

இளசு
20-06-2008, 06:53 AM
ஆஹா! இந்த நாளை இன்னும் இனிப்பாக்கும் சேதி!

அண்ணனின் சிறப்புப் பாராட்டுகள் கவீ!

kavitha
20-06-2008, 07:20 AM
ஆஹா! இந்த நாளை இன்னும் இனிப்பாக்கும் சேதி!

அண்ணனின் சிறப்புப் பாராட்டுகள் கவீ!
__________________
நேர் சென்ற பாதைவிட்டு - நாம் செல்லும்போது வந்து
வா என்று அள்ளிக்கொள்ளும் மன்றம் இல்லையா?
- இளசு

உங்கள் பாராட்டை முதலாகப்பெற்றதில் மகிழ்ச்சி. நன்றிகள் அண்ணா.

உங்கள் கையெழுத்து அருமையான உண்மை.

சிவா.ஜி
20-06-2008, 08:51 AM
வாழ்த்துகள்ம்மா.

ஆதவா சொன்னதைப் போல இந்தக்கவிதை பல்பார்வை பார்க்க வைக்கிறது.
ஒரு தொழிற்சங்கத்துக்கும் இது பொருந்தும். தலைவன் ஆரம்பத்தில் தளர்வாய்த்தான் தொடங்குகிறான். தோழர்களெனும் விழுதுகளின் உதவியால் தண்டு பெருத்துவிடுகிறது. விழுதுகள்தான் வாழ்நாள் முழுதும் போராட்டம், போராட்டமென்று இருந்துவிட்டு பாவம் விழவேண்டியிருக்கிறது.

எதையும் தனக்கென சேர்த்து வைக்காமல் வெங்காயத்தாமரைகளாக பரவ வேண்டியிருக்கிறது.

திண்ணையில் மட்டுமல்ல எங்கேயும் அரங்கேற தகுதியுள்ள கவிதை. மீண்டும் வாழ்த்துகள் தங்கையே.

kavitha
20-06-2008, 11:01 AM
நன்றி சிவா அண்ணா.