PDA

View Full Version : பொன்சேகா & சந்திரசிறி vs எழிலன்



தீபன்
13-06-2008, 01:28 AM
பொன்சேகா & சந்திரசிறி vs எழிலன்

சரத் பொன்சேகாவின் நேரடிக் கண்காணிப்பில் மணலாறு படை நடவடிக்கை
[வியாழக்கிழமை, 12 யூன் 2008, 01:54 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நேரடிக் கண்காணிப்பிலேயே மணலாறு படை நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ள சரத் பொன்சேகா, இந்நடவடிக்கை குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒளிந்துள்ள எல்லைப் பிரதேசத்தை படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

நான்கு பக்கங்களாலும் முன்னேறிக்கொண்டிருக்கும் படையினர் முல்லைத்தீவை சுற்றிவளைத்திருப்பதால் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பியோடுவதற்கு வழியின்றி பதுங்கு குழிக்குள் ஒளிந்திருக்கிறார். அவரை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

56, 57, 58 மற்றும் 59 ஆவது படையணிகளே நான்கு பக்கங்களாக முன்னேறி முல்லைத்தீவிற்குள் நுழைந்துள்ளன.

இப்படையணிகளின் சுற்றிவளைப்புக்கு உதவும் வகையில் 61 ஆவது படையணியும் அதிரடிப்படை - II படையணியும் என இரண்டு படையணிகள் மேலதிகமாகச் செயற்படுகின்றன.

எனது நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும் இப்படை நடவடிக்கையில் புலிகளின் வன்போர் என்ற தளத்தை படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தியப் படை இலங்கைக்கு வந்தபோது பிரபாகரன் ஒளிந்து கொள்வதற்காகவே இம் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இம் முகாம் சிறு சிறு காவலரண்கள் பலவற்றைக் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 800 கிலோமீற்றர் பரப்பளவான பகுதியை படையினர் இப்போது பலப்படுத்தியுள்ளனர். இன்னமும் 21 கிலோமீற்றர் பிரதேசமே மீதமாக உள்ளது என்றார் அவர்.



குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு புலிகள் தயாராகின்றனர்: யாழ். இராணுவத் தளபதி
[வியாழக்கிழமை, 12 யூன் 2008, 02:24 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

யாழ். குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, இதன் காரணமாக அடுத்த வாரம் குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் இருந்து வெளிவரும் மூன்று பத்திரிகைகளின் பிரதிநிதிகளை பலாலியில் நேற்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளால் குடாநாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யாழ். நகருக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்களின் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுகிறது.

எனவே குடாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக யாழ். குடாக்கடலில் மீன்பிடிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை ஒருவார காலத்திற்கு இருக்கும். அத்துடன் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் நேரத்தையும் அதிகரித்துள்ளோம்.

ஊரடங்குச் சட்ட நேரம் இரவு 7:00 மணிமுதல் 5:00 மணிவரை இருக்கும். ஏற்கனவே இருந்ததை விட இது 2:30 மணிநேரம் அதிகமாகும்.

அத்துடன் படையினரின் வாகனத் தொடரணிகள் செல்லும் வீதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பொதுமக்கள் போக்குவரத்து தடையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

படையினரின் வாகனத் தொடரணி பயணிக்கும் பாதையை கடப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

குடாநாட்டில் உள்ள பத்திரிகை நிறுவனங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரச உயர்மட்டம் பணித்ததற்கு இணங்க குடாநாட்டில் உள்ள பத்திரிகை நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் சிறப்புத்திட்டத்தை படையினரும் காவல்துறையினரும் உடனடியாக மேற்கொள்ளவுள்ளனர்.

இத்திட்டத்தின் பிரகாரம் குடாநாட்டு பத்திரிகை நிறுவனங்களுக்கு வெளியே படையினர் சுற்றுக்காவலில் ஈடுபடுவர். இதற்கு பத்திரிகை நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டின் தென்கரையோரப் பகுதி ஊடாக எதிர்வரும் 19, 20 ஆம் நாட்களில் தாக்குதல் நடத்திக்கொண்டு குடாநாட்டுக்குள் நுழையப் போகின்றோம் என்று யாழ். குடாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடம் புலிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்ற ஒரு செய்தி குடாநாட்டில் பரவியுள்ளதையடுத்தே யாழ். மாவட்டத்தில் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுககளை படையினர் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.



எமது காலடியில் சிறிலங்காவின் அனைத்துப் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள்: சி.எழிலன்
[வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 05:02 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.
பரந்தனில் நேற்று நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் தற்போது விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடுத்து, தரையிறங்குவார்கள் என்ற அச்ச உணர்வில் யாழ். குடா கடல் தொழிலாளர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அத்துடன் ஊரடங்குச் சட்ட நேரத்தை அதிகரித்து மக்களை சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாக்கி வருகின்றது. யாழ். குடாநாடு மிகவும் மோசமான இறுக்கமான கட்டுக்குள் நேற்றில் இருந்து உள்ளாக்கப்பட்டுள்ளது.

இதனை விட சிறிலங்காவின் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் மக்கள் வரலாறு காணாத அச்ச உணர்வினை சந்தித்துள்ளனர். இவ்வாறான நிலையில் சிறிலங்கா அரசாங்கம், குறிப்பாக சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இன்னும் சற்று தூரம்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அன்று தலைவர் அவர்களை அழித்து விட்டதாக இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அவரை அவர்களால் நெருங்கவே முடியவில்லை. இதே போன்றதொரு செயற்பாட்டைத்தான் தற்போது சிங்கள மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் முன்பிருந்ததைப் போன்று இல்லாமல் தற்போது மேலோங்கித்தான் காணப்படுகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறிலங்காவுக்கான பாடத்தை வெகுவிரையில் புகட்டுவார்.

நாம், இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பினை இன்று சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கொடுத்திருக்கின்றது. அது எவ்வாறு வந்துள்ளது எனில், சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன.

உலகின் போராட்டத்தை எடுத்து பார்ப்போமாக இருந்தால், அவர்கள் எப்போது வெற்றி பெற்றார்கள் எனில், ஒரு ஆக்கிரமிப்புப் படை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்குள் எப்போது காலடி எடுத்து வைத்தார்களோ அன்றுதான் அவர்கள் தோல்வியைச் சந்தித்த காலமாக மாறியிருக்கின்றது.

வியட்நாம் விடுதலைப் போராட்டத்தில் வட வியட்நாமில் எப்போது ஆக்கிரமிப்புப் படை சென்றதோ அன்று வியட்நாம் விடுதலைக்கான நாளை குறித்துக்கொண்டது.

எரித்திரியா விடுதலைப் போராட்டத்தில் எரித்திரிய மக்களின் சொந்த இடமான அஸ்மரா பிரதேசத்திற்குள் ஆக்கிரமிப்பாளர்கள் போனபோது தான் எரித்திரியா விடுதலையைப் பெற்றுக்கொள்ளும் நாளாக மாறியது.

அதேபோன்று இன்று தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையான வன்னிக்குள் சிறிலங்காப் படை முழுப் படையினரையும் கொண்டு வந்து விட்டிருப்பது தமிழீழத்திற்கான நாளை குறிப்பதற்கான பலமாக உருவாகியுள்ளது. இதுதான் எமது வெற்றி.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ் மக்கள் அனைவரும் தவற விடமால் தமிழீழத்தின் வெற்றியை பெற்றெடுக்க தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்றார் சி.எழிலன்.

நன்றி: புதினம்

ஓவியன்
13-06-2008, 03:46 AM
இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அறிக்கையைப் பார்த்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை, வன்னியின் முக்கியமாக முல்லைத் தீவின் புவியியல் நிலமைகளை நன்கு அறிந்த எந்த இலங்கைக் குடிமகனும் இத்தகைய ஒரு கேலிக் கூத்தான அறிக்கையை விட்டிருக்க மாட்டான்...!! :lachen001:

ஓவியன்
13-06-2008, 05:33 AM
வன்னிப் படையெடுப்பில் ஈடுபட்டுள்ள படையினர் சிறந்த மன தைரியத்துடனும் விட்டுக்கொடுப்புடனும் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை நாம் பெற்றுள்ள வெற்றிகளுக்கான முக்கிய காரணமாகும்.

சரத் பொன்சேகா - வீரகேசரி (http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=3871)


:lachen001: :lachen001: :lachen001: :icon_rollout: :lachen001: :lachen001: :lachen001:

தீபன்
13-06-2008, 07:08 AM
பொன்சேகா அப்பிடி சொன்ன அதே நாளிலதான் அவருக்கு கீழ வேல பார்க்கிற சந்திரசிறி அதுக்கு எதிர்மாறான கருத்தை சொல்லியிருக்கார்... பிரபாகரனையே பிடிக்கப் போறவங்களுக்கு (அதுவும் உயிருடன்...) புலியள் யாழ்ப்பாணத்த பிடிக்கப்போனுமெண்ட பயம் எதுக்காம்...?

ஆமா, பொன்சேகாவுக்கு கணிதத்திற்கான நோபல் பரிசு வழங்க பரிசீலிக்கப்படுகிறதாமே... உண்மையா...!?

அக்னி
13-06-2008, 02:12 PM
எல்லாம் சரிதான்...
ஆனால் தலைப்புத்தான் பொருத்தமில்லாத மாதிரி இருக்கு...
பொன்சேகா Vs சந்திரசிறி & எழிலன்
இப்பிடி வந்தால் பொருத்தமாயிருந்திருக்குமோ...

தீபன்
13-06-2008, 02:52 PM
நீங்கள் பதியப்பட்ட செய்தியினடிப்படையில் சொல்வதால் அப்படி இருந்தால்பொருத்தமாயிடுக்கும்தான். நான் தலைப்பிட்டது செய்திக்குரியவர்களின் பின்னணியைக்கொண்டு...
எதுவானாலும் தலைப்பா முக்கியம்... இங்கே செய்திகூட நகைச்சுவையாகிக்கொண்டிருக்கு...