PDA

View Full Version : உண்மைத்தலைவனுக்கு ஒரு தளம்!



poo
17-07-2003, 11:42 AM
பெருந்தலைவர் காமராஜர் பற்றிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

அதில் காமராஜரின் வாழ்க்கை வரலாறு,அரிய புகைப்படங்கள் மற்றும் அவரது பேச்சுக்கள் உள்ளன.

உலகம் முழுக்க அவரைத்தெரிந்துகொள்ள எடுத்துள்ள சிறந்த முயற்சி.

நாமும் பயன்பெறலாமே..

www.kamaraj.com

பாரதி
17-07-2003, 06:00 PM
மிக்க நன்றி பூ..
கர்மவீரரைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு.

anbu
18-07-2003, 07:21 AM
சிறந்த தளம் பற்றி அறிவித்த நண்பர் பூ அவர்களுக்கு
அன்பின் நன்றிகள் பல.

இளசு
18-07-2003, 04:12 PM
பெருந்தலைவர் நினைவுக்கு
என் 2000 வது மடல் அர்ப்பணம்!

கதர்சட்டை , வேட்டி எளிதாய்
கிழிந்துவிடும் கோஷ்டி சண்டையில் என்பதால்
செயற்குழு கட்டடம் அருகே
தற்காலிக தையல்கடை முளைக்கும்! :lol:

இது காங்கிரஸ் கலாச்சாரம்!

அந்தக்கூடாரத்தில் இருந்தும்
உருப்படியாய் எப்பவாவது
ஒண்ணு ரெண்டு நடக்கும்...
இத்தளம் ஓர் உதாரணம்!
:D
இங்கே தந்த என் தம்பி பூவுக்கு நன்றி...

எங்கேயும் சினிமாப் பாட்டு சொல்லும்
உங்க சித்தாளு இங்கேயும் தலைவர் நினைவா சொல்லப்போறேன்...

என் தம்பி பதிவு போற்றி முதலில்
என் தம்பி படப்பாடல்...


கண்ணதாசன்...
தலைவர் தேர்தலில் தோற்று தர்மம் கவிழ்ந்தபோது.
கணேசன் படத்தில் பாடுவது...
தங்கை கால்விளங்காமல் தவழ்ந்த போது!

முத்து நகையே உன்னை நானறிவேன்...
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம்..

நிலவும் வானும் நிலமும் நீரும்
ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ..?
நீயும் நானும் காணும் உறவு
நெஞ்சை விட்டு செல்ல எண்ணுமோ...?

அடுத்து.. "என்னைப் போல் ஒருவன்.."

தங்கங்களே நாளைத் தலைவர்களே - நம்
தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே - நம்
தேசம் காப்பவர் நீங்கள்...
........கல்விச்சாலை தந்தவன் ஏழைத்தலைவனை
தினமும் எண்ணுங்கள்!

"டாக்டர் சிவா"

மலை மேல் படர்ந்த கொடிகளைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்... அவர்
மடியினில் எதையும் மறைத்ததில்லை -இந்த
மாநிலம் அவர் வசமாகலாம்.

பட்டணத்தில் பூதம்
அந்த
சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னை
சேரும் நாள் பார்க்க சொல்லடி!

சிவகாமியின் செல்வன்..
சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ - நாளை
இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ...

ராஜபார்ட் ரங்கதுரை..

இங்கே ஒரு காந்தி இருக்கின்றார் அவர் வாழ்க..
தெற்கே ஒரு காந்தி வருகின்றார் அவர் வாழ்க!
இன்குலாப் ஜிந்தாபாத்!
இந்துஸ்தான் ஜிந்தாபாத்!


கரிய மாமலை போல் மேனி
கருணையே கமலச் செங்கண்..
அருளிலே விளைந்த சொற்கள்..
அகமெல்லாம் தேச பக்தி!
இருளிலே விளக்கை ஏற்றி
இளமைக்குத் தமிழ்ப்பால் தந்த
திருவுளம் நிறைந்த செல்வா
தெய்வமாய் நிற்கின்றாயே...

தாள் தோய் தடக்கை கொண்ட
தலைவனின் தாளுக்கு வணக்கம் சொல்லி
முடிக்கின்றேன்... நன்றி..!!

lavanya
18-07-2003, 10:56 PM
பாராட்டுக்கள் தம்பி பூவின் அருமையான பதிவுக்கும் இளசு அவர்களின்
முத்தாய்ப்பான பாடல்களுடன் கூடிய பதிவுகளுக்கும்....
காமராசரை பற்றி நான் படித்த இரண்டு சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்.

1. காங்கிரஸின் வட நாட்டு தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு பெரிய தலைவர்கள்
எல்லாம் செல்கையில் காமராசரும் சென்றிருந்தார். ஒரு இடத்தில் மேடையில்
எல்லாத் தலைவர்களும் முறையே பேசிக்கொண்டிருந்தபோது காமராசரையும் பேச
சொன்னார்கள்.காமராசருக்கு இந்தி பேசத் தெரியாததால் இரண்டொரு வார்த்தைகள்
பேசி விட்டு அமரப் போனார். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் போலோ ஜி!
போலோ ஜி ( இன்னும் பேசுங்கள்....1) என்று கோஷமிட்டார்கள். பின் அந்த மக்களிடம்
பத்திரிக்கையாளர்கள் பேட்டி கண்ட போது 'அவர் என்ன பேசினாரோ அது எங்களுக்கு
தேவையில்லை..ஆனால் அவர் இருந்த எளிமை கோலம் எங்களில் ஒருவரைப் போல்
அவரை காண்பித்தது.அவரால் அவர் சார்ந்திருக்கும் கட்சியால் எங்களுக்கு ஏதும் நல்லது
நடக்கும் என்ற நம்பிக்கை தெரிகிறது என்று கூறினார்கள்.


2. அது அண்ணாவும்,காமராசரும் அரசியலில் எதிரும் புதிருமாய் இருந்த நேரம்.
காமராசர் முதல்வராக இருந்த போது அமெரிக்காவிலிருந்து கென்னடி இந்தியா
வந்திருந்தார்.அவர் காமராசரை பற்றி நிறைய கேள்விப்பட்டு அவரை சந்திக்க விருப்பம்
கொண்டார். அது குறித்து அவரிடம் அதிகாரிகள் அணுகி கேட்டபோது காமராசர்
மறுத்து விட்டார். அதிகாரிகள் பவ்யமாக " ஸார் அவர் அமெரிக்காவின் பிரஸிடண்ட்..
அவரை சந்திக்க ஆயிரம் பேர் தவமாக கிடக்கின்றனர் நீங்கள் ..." என்று சொல்ல
காமராசர் " தெரியும்ணே.... அதான் வேணாம்கறேன்" என்று இறுதிவரை மறுத்து விட்டார்
பின்பு நெருங்கியவர்கள் அவரிடம் இது குறித்து கேட்டபோது " நம்ம அண்ணாதுரை
அமெரிக்கா போயிருந்த போது இந்த ஆள் அவரை பார்க்க முடியாதுண்ணுட்டாராமே...
நம்மாளை பார்க்க முடியாதுன்னு சொன்னவனை நாம ஏன் பார்க்கணும்ணேன்..."
என்றாராம்.

விட்டுப் போகும் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதன்
பெயர் மரணமல்ல...காமராசர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இன்னும் வாழ்வார்.

இளசு
19-07-2003, 07:02 AM
அருமை லாவண்யா அவர்களே...
முத்தான இருநிகழ்வுகளைப் பதித்த
வைரத்துக்குப் பாராட்டுகள்!

Hayath
19-07-2003, 02:00 PM
பூ அவர்களால் இளசு அவர்களின் நினைவு கூர்தலும்,லாவண்யா அவர்கள் வழங்கிய வரலாற்று பதிவுகளும் நமக்கு கிடைத்தது.மிக்க நன்றி.

poo
19-07-2003, 03:40 PM
அன்பு அண்ணனுக்கும்.. அக்கா லாவண்யாவிற்கும் நன்றிகள்..

என் பதிவுகண்டு உங்கள் பதில் படைப்புக்கு பாராட்டுக்கள் பலப்பல..

உண்மையில் இந்த தகவல் சொன்னமைக்கு நான் பெருமைப்படுகிறேன்!!

சகுனி
20-07-2003, 02:03 PM
நல்ல தகவல்களைத்தந்த லாவண்யாவிற்கு நன்றி

முத்து
21-07-2003, 12:31 AM
அருமையான தகவல்கள்... நன்றி அனைவருக்கும்.. என் பங்குக்கு ஒரு சிறு தகவல்....

காமராசரிடம் மக்கள் யாராவது தங்கள் ஊருக்கு வசதிகள் கேட்டால் (தேர்தலுக்கு வாக்கு கேட்டு வரும்போதுகூட) இன்றைய அரசியல்வாதிகள்போல் இன்றே முடிக்கிறேன்.. நாளை முடித்துவிடுவேன் என்றெல்லாம் கூறுவதில்லை.. மாறாக பார்க்கலாம் என்று மட்டுமே கூறுவார்...

ஒருமுறை அவர் ஒரு ஊருக்குச் சென்றிருந்தபோது அந்த ஊரிலிருந்த ஒருவர் சொன்னாராம் " அய்யா எங்கள் ஊரில் சுடுகாட்டுக்குப்போகும் வழி பழுதுபட்டிருக்கிறது.. அதைச்சரிசெய்துதரவேண்டும் என்றாராம்...".. அதற்குக் காமராசர் சிரித்தபடியே சொன்னாராம் .. "அண்ணே... நான் இருக்குரவங்களுக்கு வழி தேடுறேன்.. நீங்க போறவங்களுக்கு வழி கேக்குறீங்க... சரி பாக்கலாம்.. " என்று சொன்னாராம்..

இளசு
01-10-2003, 11:50 PM
இன்று கர்மவீரர் நினைவு நாள்!

karikaalan
02-10-2003, 05:49 AM
பள்ளிச்செல்வங்களுக்கு மதிய உணவு அறிவித்த பெருந்தலைவர் காமராசர்தினத்தன்று, அவருக்கு நம் அனைவரின் அஞ்சலி உரித்தாகுக.

===கரிகாலன்

பாரதி
02-10-2003, 01:51 PM
அரசியல் என்றாலே வெறுக்கும் அளவிற்கு இருக்கும் இன்றைய நிலையில் .... மீண்டும் வேண்டும் எமக்கு ஒரு காமராசர்.

பைத்தியகாரன்
02-10-2003, 04:28 PM
காமராஜரின் தூரத்து.................................பக்கம் நான்.அவர் புகழுக்கு புகழ் சேர்ப்போம்.