PDA

View Full Version : என்னைவந்து அள்ளிக்கொள்!!!



aren
12-06-2008, 09:04 AM
என் நினைவை அகற்றியவன்
என் மனதைத் திருடியவன்
என் உறக்கத்தைக் கெடுத்தவன்
என்னை அலைக்கழிப்பவன்
நீதான் நீயேதான்!!!

உடனே வா
என்னைவந்து அள்ளிக்கொள்!!!

என்று உன்னுடைய மணவாட்டியானேனோ
அன்றிருந்து என்னை மறந்து
என்றும் உன் நினைவாக
உன் கரங்கள்
எனக்கு வேண்டும்
எனக்கே வேண்டும்!!!

உடனே வா
என்னைவந்து அள்ளிக்கொள்!!!

சிவா.ஜி
12-06-2008, 09:56 AM
கொடுத்து வைத்த கணவன். இவ்வளவு நேசமுள்ள மனைவி அமைந்ததில் உலகின் மிகப்பெரிய செல்வத்தை அடைந்தவனாகிறான்.

அள்ளிக்கொள்ள வேண்டியதுதான். வாழ்த்துகள் ஆரென்.

இளசு
12-06-2008, 05:58 PM
அன்பின் ஆரென்..

இதயப்பூர்வமாய் இணைந்த உறவின் இனிய கானம்..

சிவா சொல்வது போல்
பாடப்பெற்றவர் பாக்கியசாலியே - ..

பாராட்டுகள் கவிதைக்கு!

aren
13-06-2008, 02:04 AM
கொடுத்து வைத்த கணவன். இவ்வளவு நேசமுள்ள மனைவி அமைந்ததில் உலகின் மிகப்பெரிய செல்வத்தை அடைந்தவனாகிறான்.

அள்ளிக்கொள்ள வேண்டியதுதான். வாழ்த்துகள் ஆரென்.

நன்றி சிவா. ஒவ்வொரு கணவனின் எதிர்பார்ப்பும் அதுதானே.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
13-06-2008, 02:24 AM
அன்பின் ஆரென்..

இதயப்பூர்வமாய் இணைந்த உறவின் இனிய கானம்..

சிவா சொல்வது போல்
பாடப்பெற்றவர் பாக்கியசாலியே - ..

பாராட்டுகள் கவிதைக்கு!

நன்றி இளசு அவர்களே.

நிச்சயமாக பாடப்பெற்றவர் பாக்கியசாலியே. இதுதானே அனைவரும் எதிர்பார்ப்பு

ஓவியன்
13-06-2008, 05:49 AM
எந்த ஒரு கணவனும் மனைவியும் இப்படித்தான் இருக்கப் பிரியப்படுவார்கள்...

இப்படித்தான் இருக்கவும் வேண்டும் - பாராட்டுக்கள் அண்ணா..!! :)

aren
13-06-2008, 11:05 AM
எந்த ஒரு கணவனும் மனைவியும் இப்படித்தான் இருக்கப் பிரியப்படுவார்கள்...

இப்படித்தான் இருக்கவும் வேண்டும் - பாராட்டுக்கள் அண்ணா..!! :)

வார்த்தைகளைப் பார்த்தால் அங்கேயும் அப்படித்தான் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள் ஓவியன்.

நன்றி வணக்கம்
ஆரென்

பூமகள்
13-06-2008, 01:20 PM
அன்பு மிக்க பத்தினி கிடைத்தால்
அகிலத்தையும் வெல்லலாமே..!!

இங்கே பலருக்கு அவ்வகை பத்தினிகள் அமைந்ததாகத் தகவல்..!! ;)
அரென் அண்ணா, அங்கேயும் அப்படித் தானே??!! :D:D
மகிழ்ச்சியோடு பெருமிதம் கொள்கிறேன்..!!

பாராட்டுகள் அரென் அண்ணா. :)

ஆதவா
13-06-2008, 01:58 PM
என் நினைவை அகற்றியவன்
என் மனதைத் திருடியவன்
என் உறக்கத்தைக் கெடுத்தவன்
என்னை அலைக்கழிப்பவன்
நீதான் நீயேதான்!!!

உடனே வா
என்னைவந்து அள்ளிக்கொள்!!!

என்று உன்னுடைய மணவாட்டியானேனோ
அன்றிருந்து என்னை மறந்து
என்றும் உன் நினைவாக
உன் கரங்கள்
எனக்கு வேண்டும்
எனக்கே வேண்டும்!!!

உடனே வா
என்னைவந்து அள்ளிக்கொள்!!!

வாழ்வின் இண்டு இடுக்கிலும் முடிவின் இறுதித் துளிவரையிலும் இப்படி நினைப்பவளை மனைவியாக அடைவதைக் காட்டிலும் சிறந்த செல்வம் வேறேதுமில்லை........

நிச்சயமற்ற வாழ்க்கையில் நிச்சயித்து நெஞ்சில் நிறைந்து அள்ள அள்ளக் குறையா காதலை மேனியில் பூசிக் கொண்டு ஒருத்தி வேண்டும்.............

அழகிய கவிதை அண்ணா...