PDA

View Full Version : கேலி செய்த மாணவருக்கு புதுமையான தண்டனை



அறிஞர்
11-06-2008, 02:52 PM
பஸ் பயணத்தில் பெண்ணை கேலி செய்த மாணவருக்கு நீதிமன்றம் புதுமையான தண்டனை

புதுடெல்லி, ஜூன் 11: பெண்ணை கேலி செய்த மாணவருக்கு, அவ்வாறு கேலி செய்வதால் பெண்கள் மனம் எப்படி புண்படும் என்பது குறித்து 25 பக்கங்கள் எழுதி அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் Ôஓட்டல் நிர்வாகம்Õ படித்து வரும் 21 வயதான மாணவர் பரத் அல்வாட். இவர் டெல்லியில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரின் மகன். கடந்த ஆண்டு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண்ணை அல்வாட் கேலி செய்தார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அல்வாட்டை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி தருண் ஷெராவத், மாணவருக்கு நூதன தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். மாணவரின் எதிர்காலம் வீணாகாமலும் அதே நேரம் தவறை மாணவர் உணருமாறும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்வதால் அவர்களின் மனம் எந்த அளவுக்கு புண்படும் என்றும் பெண்களை ஏன் கேலி செய்யக் கூடாது? என்பது பற்றியும் 25 பக்கங்கள் எழுதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், பெண்களை கேலி செய்வதை தடுக்கும் சட்டம் பற்றியும் அதற்கான தண்டனைகள் குறித்தும் விவரங்கள் கொண்ட 500 பிரசுரங்களை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அல்லது டெல்லி பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர வரும் மாணவர்களுக்கு போலீசாரின் கண்காணிப்பின் கீழ் விநியோகிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி-தினகரன்

ஷீ-நிசி
11-06-2008, 03:06 PM
இதெல்லாம் வேலைக்கு ஆகாத தண்டனை... அந்த பொண்ண கூட்டிவந்து நடுரோட்ல பளார்னு அறைய வச்சிருக்கனும்....

இளசு
11-06-2008, 04:48 PM
நல்ல தொடக்கம்..

நல்ல செய்திக்கு நன்றி அறிஞரே..

ராஜா
11-06-2008, 05:46 PM
இதெல்லாம் வேலைக்கு ஆகாத தண்டனை... அந்த பொண்ண கூட்டிவந்து நடுரோட்ல பளார்னு அறைய வச்சிருக்கனும்....

இது என்னா கொடுமை.. அல்வாட் செய்த தப்புக்கு அந்த பொண்ணை எதுக்கு அழைச்சுட்டு வந்து அறையணும்..?
:confused::confused::confused::confused::confused:

அல்வாட் தண்டனையிலிருந்து அல்வா கொடுத்து தப்பிக்காம பார்த்துக்குவாங்களா.. :fragend005::fragend005::fragend005::fragend005:?

Narathar
11-06-2008, 05:56 PM
இது என்னா கொடுமை.. அல்வாட் செய்த தப்புக்கு அந்த பொண்ணை எதுக்கு அழைச்சுட்டு வந்து அறையணும்..?
:confused::confused::confused::confused::confused:


இப்போ நம்ம ஷீ சொன்னது உங்களுக்கு புரியலை.......... ( அவர் அதை முழுமையா சொல்லவும் இல்லை ஹீ ஹீ )

அங்க அவரு அப்படின்னா இங்க நீங இப்படி.. நாராயணா!!!

arun
11-06-2008, 05:58 PM
இது போல தண்டனை கொடுத்தால் கொஞ்சமாவது திருந்த வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன்

mera
11-06-2008, 07:58 PM
அவன் திறமையானவனாக இருந்தால் "பொது இடங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்வதால் அவர்களின் மனம் எந்த அளவுக்கு புண்படும்" என்பதை தலைப்பாக வைத்தே ஒரு முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்யலாம். :)

SivaS
12-06-2008, 04:23 AM
தப்பு செய்த ஒருவனை தண்டிப்பதை விட உணரச்செய்தலே சாலச்சிறந்தது

இதயம்
12-06-2008, 04:37 AM
தவறு செய்தவன் திருந்த கொடுக்கப்படும் தண்டனைகள் இரு வகை. 1. மன்னித்தல், 2. மன, உடலியல் ரீதியாக அவனை துன்புறுத்துதல். இந்த இரண்டில் புதிய குற்றவாளிகளுக்கும், அறியாமல் செய்தவர்களுக்கும் முதல் தண்டனையை தான் நான் பரிந்துரைப்பேன். ஆனால், இந்த நூதன தண்டனை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை.

aren
12-06-2008, 04:50 AM
அவனை 25 பக்கம் எழுதவைத்த அந்த பெண்ணின் நிலை என்னவாகும் என்று நீதிபதிக்குத் தெரியவில்லை.

பாவம் அந்தப் பெண். இனிமேல் பஸ்ஸில் அவள் செல்லமாட்டாள் என்றே நினைக்கிறேன்.

சூரியன்
12-06-2008, 04:56 AM
வித்தியாசமான தண்டனையா இருக்கு.

ராஜா
12-06-2008, 04:59 AM
பாதிக்கப்பட்ட பெண்ணின் கோணத்தில் சிந்திக்கும் மாட்டிரிக்ஸுக்கு ஒரு சபாஷ்..!

ஓவியன்
12-06-2008, 05:50 AM
திருடனாகப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒரு போதும் ஒழிக்க முடியாது....

இது, இங்கும் பொருந்தும் - என்ன தண்டனை கொடுத்தாலும் அவன் மனம் வைத்தாலே நல்லது நடக்கும்...!!

இதயம்
12-06-2008, 05:54 AM
திருடனாகப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒரு போதும் ஒழிக்க முடியாது....

இது, இங்கும் பொருந்தும் - என்ன தண்டனை கொடுத்தாலும் அவன் மனம் வைத்தாலே நல்லது நடக்கும்...!!
அப்ப சவுதியில் சிவா, செல்வா எல்லாம் ஒழுங்கா இருக்கிறது அவங்கவங்க மனசாட்சிக்கு பயந்து தான்னு இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க..?

(அப்பாடி.. மக்களை சிந்திக்க வச்சாச்சி..!! இன்னிக்கு நிம்மதியா தூங்கலாம்..!!)

ஓவியன்
12-06-2008, 06:07 AM
அப்ப சவுதியில் சிவா, செல்வா எல்லாம் ஒழுங்கா இருக்கிறது
சிவாவும் செல்வாவும் மட்டும் தான் சவூதியில் ஒழுங்காக இருப்பதாகவும் நீங்கள் ஒழுங்காக இல்லை என்றும் சொல்லாமல் சொல்லுறீங்க...!! :lachen001:

(அப்பாடா, இந்த பதிவை எப்படியாவது அண்ணிக்கு ஃபேக்ஸ் பண்ணினா நானும் இன்னிக்கு நிம்மதியாகத் தூங்கலாம் :icon_rollout:)

aren
12-06-2008, 06:15 AM
அப்ப சவுதியில் சிவா, செல்வா எல்லாம் ஒழுங்கா இருக்கிறது அவங்கவங்க மனசாட்சிக்கு பயந்து தான்னு இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க..?

(அப்பாடி.. மக்களை சிந்திக்க வச்சாச்சி..!! இன்னிக்கு நிம்மதியா தூங்கலாம்..!!)

அப்படின்னா நீங்க????????

அப்பாடா, திருப்பி கொடுத்தாச்சு!!!!

இதயம்
12-06-2008, 06:16 AM
சிவாவும் செல்வாவும் மட்டும் தான் சவூதியில் ஒழுங்காக இருப்பதாகவும் நீங்கள் ஒழுங்காக இல்லை என்றும் சொல்லாமல் சொல்லுறீங்க...!! :lachen001:

(அப்பாடா, இந்த பதிவை எப்படியாவது அண்ணிக்கு ஃபேக்ஸ் பண்ணினா நானும் இன்னிக்கு நிம்மதியாகத் தூங்கலாம் :icon_rollout:)

கீழ்க்கண்ட பதிவை தொடர்ந்தால், அந்த பதிவில் உள்ள கடைசி வரி தான் உங்களுக்கு நான் தரும் பதில்..!

என் பதில்

ஓவியன்
12-06-2008, 06:18 AM
அப்பாடா, திருப்பி கொடுத்தாச்சு!!!!

நானும் கொடுத்தாச்சு, இனி இதயம் வீட்டுக்கு போனா பூசை நடத்திதான் அண்ணி வரவேற்பாங்க என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்...!! :rolleyes:

இதயம்
12-06-2008, 06:24 AM
அப்படின்னா நீங்க????????
அப்பாடா, திருப்பி கொடுத்தாச்சு!!!!
இதயம் இயற்கையிலேயே ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன் என்பதை அறியாத இ(அ)ப்பாவிகளை மன்னித்தருள்வாயாக என் பரமாத்மாவே..! ஆமென்..!!

(செய்றது சேட்டை.. இதில் கூட்டு வேறயா..?? இருக்கட்டும்..இருக்கட்டும்..!!)

இதயம்
12-06-2008, 06:25 AM
நானும் கொடுத்தாச்சு, இனி இதயம் வீட்டுக்கு போனா பூசை நடத்திதான் அண்ணி வரவேற்பாங்க என்று நான் தீர்க்கமாக
நம்புகிறேன்...!! :rolleyes:
அட.. ஏம்பா காமெடியா எழுதுறதையெல்லாம் பெரிசு படுத்தி எனக்கு உயிர் பயத்தை உண்டு பண்றீங்க..?!!

ஷீ-நிசி
12-06-2008, 02:36 PM
இது என்னா கொடுமை.. அல்வாட் செய்த தப்புக்கு அந்த பொண்ணை எதுக்கு அழைச்சுட்டு வந்து அறையணும்..?
:confused::confused::confused::confused::confused:

அல்வாட் தண்டனையிலிருந்து அல்வா கொடுத்து தப்பிக்காம பார்த்துக்குவாங்களா.. :fragend005::fragend005::fragend005::fragend005:?

ஆனாலும் இப்படி அநியாயத்துக்கு யோசிக்ககூடாது.... ;)
அந்த பொன்னு கையால அவன் அடி வாங்கியிருக்கனும்னு நான் சொல்ல வந்தது உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.... :mini023:

lolluvathiyar
14-06-2008, 09:39 AM
தன்டனை பத்தாது என்றே கருதுகிறேன். இப்படி சிம்பிளான தன்டனை தருவதால் தான் குற்றங்களை தடுக்க முடியவில்லை. நீதிபதிகளின் மனதில் மானவனின் எதிர்காலம் மட்டுமே தெரிந்திருக்கிறது, அதே இந்தியாவில் உள்ள மற்ற பென்களின் எதிர்காலம் கன்னில் படவில்லை.

என்னை பொருத்தவரை தீர விசாரிக்க வேன்டும், விசாரித்து புகார் உன்மை என்று அறிந்த பின் நல்ல தன்டனையாக தந்தால் தான் பயம் வரும்.

இதயம் அன்னன் அவர்களின் பதிப்புக்கு கோட் பன்னி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் ஆச்சு அதான்


தவறு செய்தவன் திருந்த கொடுக்கப்படும் தண்டனைகள்

தன்டனை குற்றம் செய்தவன் திருத்த கொடுக்கபட கூடாது. குற்றம் செய்தவன் செய்து விட்டான் இனி அவன் திருந்தி பயன் இல்லை. அவனுக்கு தரபடும் தன்டனை அடுத்தவர்களை குற்றம் செய்ய பயம் ஏற்படுத்தும் அளவில் இருக்க வேன்டும்.

(அதில் முக்கியமான ஒன்று எது குற்றம் என்று தெளிவாக இருக்க வேன்டும், சும்மா கலாசாரத்தை வைத்து கன்டதை எல்லாம் குற்றமாக்க கூடாது)


1. மன்னித்தல்,

மனிதர்கள் தான் மன்னிக்க வேன்டும். சட்டம் யாரையும் மன்னிக்க கூடாது. சட்டம் என்பது அனைவரின் பாதுகாப்புக்காக இயற்றபட்டது. அதில் மன்னிப்பு என்ற வார்த்தை வந்தால் பாதுகப்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும்


2. மன, உடலியல் ரீதியாக அவனை துன்புறுத்துதல்.

சமூகவிரோதிகளால் குற்றவாளிகளால் துன்புறுத்தலிருந்து மக்களை காப்பாற்ற தான் சட்டமே இயங்குகிறது, சிரை தன்டனை ஓக்கே ஆனால் எக்காரனத்தை கொன்டும் குற்றவாளியை துன்புறுத்தல் செய்வது நல்லதல்ல. மிக மோசமான குற்றத்துக்கு மட்டும் தூக்கில் போடலாம்.


புதிய குற்றவாளிகளுக்கும், அறியாமல் செய்தவர்களுக்கும்

அறியாமல் செய்யும் குற்றங்கள் என்று ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தகராறு கேலி செய்பவனுக்கு தெரியாதா அது குற்றம் என்று.

SathyaThirunavukkarasu
14-06-2008, 11:17 AM
நல்ல தொடக்கம், பழிக்கு பழி எல்லாம் கதைக்கு ஆகாது

இதயம்
14-06-2008, 11:35 AM
வாத்தியார் தம்பிக்கு(!) பதில் கொடுத்து ரொம்ப நாளாகி விட்டதால் இதோ பதில்கள்.!!

தன்டனை குற்றம் செய்தவன் திருத்த
குற்றவாளியை மட்டும் மையப்படுத்தி பேசியதால் அவன் திருந்தத்தான் தண்டனை என்றேன். குற்றத்தை அவன் செய்து விட்டாலும் மீண்டும் அதை செய்யக்கூடாது என்பதால் தண்டனை அவசியம் தான்..!!

இதயம்
14-06-2008, 11:36 AM
மனிதர்கள் தான் மன்னிக்க வேன்டும்.
சட்டத்திலும் குற்றத்தின் அளவை பொறுத்து மன்னித்தல் என்பது ஏற்கக்கூடியது. சிறையிலிருப்பவர்களின் நன்னடத்தையை கொண்டு குற்றவாளிகளின் தண்டனையை குறைப்பதும், விடுதலை செய்வதும் வாத்தியாருக்கு தெரியாதோ..?

இதயம்
14-06-2008, 11:37 AM
குற்றத்துக்கு மட்டும் தூக்கில் போடலாம்.
சிலருக்கு திட்டினாலே அவமானம். சிலருக்கு நிர்வாணமாக்கி நடுரோட்டில் வைத்து, நயப்புடைத்தாலும் கூலாக இருப்பார்கள். எனவே அப்படிப்பட்டவர்களுக்கு உடலியல் ரீதியான தண்டனைகள் அவசியமே.! உயிரை எடுப்பதற்கு இது எவ்வளவோ மேல்..!!

இதயம்
14-06-2008, 11:37 AM
அறியாமல் செய்யும் குற்றங்கள் என்று ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
அறியாமல் செய்த குற்றம் என்பது தெரியாதா..? உ.தா. புகைப்பிடிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகை இருப்பதை அறியாமல், திட்டமிடாமல் புகைப்பிடித்து மாட்டினால் அதான் அறியாமல் செய்த குற்றம்.!!

விகடன்
14-06-2008, 04:04 PM
சிறப்பான ஒரு தண்டனை.
இனிமேல் இப்படி ஒரு ஒப்படை செய்யவேண்டும் என்ற பயத்தினாலேயே பலர் இந்த தப்பை செய்யவே மாட்டார்கள்....