PDA

View Full Version : நீ மட்டுமே தெரிகிறாய்



நம்பிகோபாலன்
11-06-2008, 10:13 AM
உன்னை பார்த்த பிறகுதான்
என்னுள் எத்தனை
மாற்றங்கள்
அனைத்தும் பிடித்துவிட்டது
உன்னையும் சேர்த்து….
என்னை நானே ரசிக்கிறேன்
உன் சிரிப்பை என்னை
என்னுள் குதூலிக்கிறேன்
உன் பார்வை பார்த்து
நீ கடித்த அப்பளம்
போலதான் நானும்
நொறுங்கி போகிறேன்
உன்னை ஒரு நாள்
கானாவிடில் சோகத்தின்
சிம்மாசனத்தில் அமர்கிறேன்
என்னாச்சு எனக்கு
எல்லோரும் கேட்க
எனக்கே தெரியவில்லை
என்னாச்சு எனக்கென்று
கண்மூடி யோசித்து
பார்த்தால்
நீ மட்டுமே
தெரிகிறாய்.....ஆ
இது கூட நல்லாயிருக்கே
இனி
எப்பொழுதும் யோசிப்புதான்...

அக்னி
11-06-2008, 10:18 AM
உன்னை யோசித்து யோசித்து
எனக்குள் மாற்றம்...
மற்றவர்கள் பைத்தியம் என்றனர்...
நீயும் கூடவா...
இப்படியாவது என்னைப்
பார்ப்பாய், நினைப்பாய்
என்றால்,
பைத்தியமாகவே என்றும் இருப்பேன்...

இந்த

உன் சிரிப்பை என்னை
என்னுள் குதூலிக்கிறேன்

வரிகளில் எனக்குத் தெளிவில்லாதது போல இருக்கின்றது...
மற்றும்படி அழகிய கவிதை...
பாராட்டுக்கள் நம்பிகோபாலன்...

Narathar
11-06-2008, 02:09 PM
நீ கடித்த அப்பளம்
போலதான் நானும்
நொறுங்கி போகிறேன்
...


பார்த்து சூதானமா இருந்துக்க அப்பு!
அப்புரம் வாழ்க்கையே அப்பளமாகிவிடும்! :traurig001:
நாராயணா! நமக்கு தெரிந்ததை சொன்னேன் :icon_b:

நம்பிகோபாலன்
11-06-2008, 06:01 PM
அக்னியின் பாராட்டுக்கச்ளுக்கு மிக்க நன்றி.
நாரதரின் எச்சரிக்கைக்கும் மிக்க நன்றி...

இளசு
11-06-2008, 09:33 PM
தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம் தோன்றுவதும் -
பார்க்கும் மரங்களெல்லாம் பச்சை நிறம் காணுவதும்-

நந்தனிடம் பக்தி வைத்த பாரதிக்கு!

கடித்த அப்பளமாய்த் தான் நொறுங்குவதும்-
தான் உள்ளிட்ட அனைத்தையும் ரசிப்பதும் -

நங்கையிடம் காதல் வைத்த நம்பிக்கு!..


பக்தி, காதல், பாசம், இசை, இயற்கை..

எத்தனை மயக்க இன்பங்கள் இவ்வாழ்வில்!

எல்லாம் தனித்தனி விதம்..
எல்லாமே தனித்தனிச் சுகம்!


வாழ்த்துகள் நம்பிகோபாலன்..

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
15-06-2008, 05:56 AM
பநபனப கபனப

பூமகள்
15-06-2008, 06:23 AM
ஒருவித மாய மயக்கம்..
ஆனால்..
சுகமான மயக்கம்..

"பிள்ளை மொழிச் சொல்லைவிட..
ஒற்றைப்பனைக் கள்ளை விட..
போதை தரும் காதல்.." - என்ற "பிரிவோம் சந்திப்போம்" திரைப்படத்தின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன..

உன் பற்றிய கற்பனைகள்
தூசுபடியாமல் காக்கிறேன்..
அவ்வப்போது
கண்ணீரால்.. கழுவிவிடுகிறேன்..
இன்னும் பளபளப்பாகி
மின்னுகிறது உன் போலவே..
உன் நினைவுகளும்..

நல்ல கவிதை.. பெரியண்ணாவின் அசத்தல் பின்னூட்டம்.. அக்னி அண்ணா சொன்னது போல கவிதையில் ஆங்காங்கே சொற்கள் சரிவர அமையவில்லை.. மற்றபடி.. கவிதை அருமை..

பாராட்டுகள் நம்பியண்ணா. :)