PDA

View Full Version : மதுபான விற்பனை அரசு முடிவு



ஆதி
11-06-2008, 07:40 AM
சென்னை:டாஸ்மாக் நிறுவனம் மதுபான விற்பனையை 28 சதவீதம் அதிகரித்து, 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக தொகைக்கு மதுபான விற்பனை நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் அரசு நிறுவனமான "டாஸ்மாக்' ஆறாயிரத்து 650 சில்லரை விற்பனை கடைகள் மூலம் மதுவகைகளை விற்பனை செய்கிறது.


கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான வகைகளை மட்டும் 36 லட்சம் கேஸ்கள் விற்றுள்ளது. இது மொத்த மதுபான விற்பனையில் 83 சதவீதம். மீதம் 17 சதவீதம் பீர் வகைகள் விற்பனையாகியுள்ளன. மதுபான வகைகளில் அதிகபட்சமாக பிராந்தி வகைகள் தான் 52 சதவீதம் விற்பனையாகியுள்ளன. அதற்கு அடுத்ததாக ரம் வகைகள் 32 சதவீதமும், விஸ்கி 13 சதவீதமும் விற்பனையாகியுள்ளன.


விற்பனை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சில புதிய மதுபான வகைகளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுடன் "டாஸ்மாக்' நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த நிதியாண்டில் 10 ஆயிரத்து 469 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந் துள்ளது. இந்த நிதியாண்டில் இதை விட 28 சதவீதம் அதிகமாக 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நன்றி:தினமலர்

உண்மையில் தமிழ்நாடு எந்த இலக்கை நோக்கி போய்க்கிட்டு இருக்கு தெரியல.. :frown:

குடி குடியை கெடுக்கும் என்பதை நீக்கிவிட்டு..

மதுக்கோப்பையை நீங்கள்
காலி செய்கிறீர்கள்
அதற்கு பதிலாய்
அது உங்கள் குடும்பத்தாரின் கண்ணீரை
நிரப்பிக் கொள்கிறது

- கவிவேந்தர் மு.மேத்தா

இந்த வரிகளை எழுதி வைத்தாலாவது மக்கள் மாறுவார்களா ?

தமிழ் தென்றல்
13-06-2008, 04:32 PM
சாதனைகள் (வேதனைகள்) தொடரும் என்பதைத் தவிர இதில் வேறென்ன இருக்கிறது சொல்ல.....

- வேதனையுடன்....

தமிழ்...

தங்கவேல்
16-06-2008, 12:58 PM
காலம் மாறுது... எனது நண்பர் ஒருவர் அந்தக்காலத்தில் பிராந்திக் கடை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார். இன்று அவரது வாரிசுகள் படும் பாட்டை நேரில் பார்ப்பவர்களுக்கு திகில் பிடித்து விடும். பந்தை சுவற்றிலெறிந்தால் திரும்ப வரும் என்று தெரியாமல் வாழும் வாழ்க்கையின் முடிவு மிகவும் கோரம்.

சாராய சாம்ராஜ்ஜியங்கள் மண்ணோடு மண்ணாகும். அதுவரையிலும் ஏற்படும் விளைவுகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். வேறு என்ன செய்ய இயலும்