PDA

View Full Version : 54வது தேசிய விருதுகள் அறிவிப்பு : பிரியாமணி, சிறந்த நடிகை!



mgandhi
10-06-2008, 05:58 PM
http://64.27.74.18/data/images_news/tbltopnews_1146662236.jpg

54வது தேசிய விருதுகள் அறிவிப்பு : பிரியாமணி, சிறந்த நடிகை!


புதுடில்லி : புதுடில்லியில் இன்று 2006ம் ஆண்டுக்கான 54வது தேசிய விருதுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் படத்தில் முத்தழகாக நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் பருத்திவீரன் படத்துக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக *பசுபதி நடித்த வெயில் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருதை டிராபிக் சிக்னல் எனும் படத்தை இயக்கியதற்காக மதுர்பண்டர்கர் பெறுகிறார். சிறந்த திரைப்படமாக மலையாள திரைப்படமான புலிஜென்மம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய்தத் நடித்த, இந்தி திரைப்படமான லகே ரஹோ முன்னாபாய் 4 விருதுகளை குவித்துள்ளது. இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்ட திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் சிறந்த இசை மற்றும் திரைக்கதைக்கான விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை வங்காள *நடிகர் சவ்மித்ரோ சாட்டர்ஜி பெறுகிறார். சிறந்த துணை நடிகருக்கான விருதை லகே ரஹோ முன்னாபாய் படத்தில் நடித்த அர்ஷத்வர்சியும், சிறந்த துணை நடிகைக்கான விருதை கொன்கொனா சர்மா சென்னும் பெற்றுள்ளனர். தேசியவிருது கிடைத்தது குறித்து நடிகை பிரியாமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தன் வெற்றிக்காக இயக்குநர் அமீருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

அறிஞர்
10-06-2008, 06:41 PM
பெரிய சாதனை தான்...

நல்ல நடிகை ப்ரியாமணி... ஆரம்பத்தில் அவர் சிறப்பாக நடிக்காவிட்டாலும், கால போக்கில் நல்ல நடிகையாக மாறிவிட்டார்..

வாழ்த்துக்கள்.. அவருக்கு...

prady
10-06-2008, 08:15 PM
தேசிய விருது கிடைத்தமைக்கு அவருக்கு பாராட்டுக்கள். ஆனால் அதற்கு காரணமான அமீரின் அடுத்த படத்தில் நடிக்க மறுத்த பிரியாமணியின் செயலை என்னவென்பது?

Narathar
10-06-2008, 08:27 PM
வாழ்த்துக்கள் பிரியா மணிக்கு!!!!
கார்த்திக்கு அல்லது அமீருக்கல்லவா கிடைத்திருக்க வேண்டும்...?

வெயில் படத்தைப்பார்க்கும் போதே தெரிந்தது அவார்ட் நிச்சயமென்று! வாழ்த்துக்கள்

தீபன்
11-06-2008, 02:18 AM
அதற்கு காரணமான அமீரின் அடுத்த படத்தில் நடிக்க மறுத்த பிரியாமணியின் செயலை என்னவென்பது?

அமீர் காரணமென்றாலும் நடித்தது பிரியாமணிதானே... அவரின் திறமைதானெ அதற்கு காரணம்... மேலும், அவருக்கு விருது கிடைக்க காரணமாயிருந்ததற்காக அமீரின் எல்லா ஆணைகளுக்கும் கடுப்படவேண்டிய தேவையில்லையே... உள்ளுக்குள் என்னென்ன உள்குத்துக்கள் இருக்குதிண்டு யாருக்கு தெரியும்...?

சிவா.ஜி
11-06-2008, 04:10 AM
சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ப்ரியா மணிக்கும், வெயில் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.

ராஜா
11-06-2008, 11:29 AM
விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..!

அறியத்தந்த மோகன் காந்தியாருக்கு நன்றிகள்..!