PDA

View Full Version : கிட்ப்லி முத்தரப்பு போட்டிaren
29-05-2008, 07:40 AM
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்தமாதம் பங்களாதேஷில் மோத இருக்கின்றன். நம் இந்திய டீம் எப்படி இருக்கும் என்று யூகிக்கலாமா?

எனக்குத் தெரிந்த இந்திய டீம் இதுவாகத்தான் இருக்கும்:

1. தோனி
2. கோனி
3. ரைனா
4. ரோஹித் சர்மா
5. பிரக்யான் ஓஜா
6. ஷேவாக்
7. காம்பீர்
8. சேகர் திவான்
9. யுவராஜ்சிங்
10. ஸ்ரீசந்த்
11. இர்பாஃன் பத்தான்
12. பியூஷ் சாவ்லா
13. கங்குலி
14. ஆர்.பி.சிங்
15. யூசுப் பத்தான்
16. யிஷாந்த் சர்மா

கங்குலி இந்தத் தொடர் முடிந்தவுடன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.

இது மாதிரி திராவிடிற்கும் சான்ஸ் கொடுத்து அறிவிக்கச் சொல்லலாம் என்றே தெரிகிறது. அப்படியானால் திராவிடும் டீமில் இடம் பெறலாம். அதற்கு பதில் சேகர் திவானை உட்கார வைக்கலாம் அல்லது கோனி அவர்களை தேர்வு செய்யாமல் இருக்கலாம்.

ராபின் உத்தப்பாவிற்கு இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

ராஜா
29-05-2008, 07:47 AM
ஒருநாள் போட்டிகளில் உத்தப்பா இல்லாமலா..?

அறிஞர்
10-06-2008, 02:26 PM
வங்கதேசத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசத்திற்கு முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்காளதேசத்தை வென்றது.

இரண்டாம் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 330/8 ரன்கள் எடுத்துள்ளது..

அறிஞர்
10-06-2008, 02:27 PM
இரண்டாவது பேட் பிடிக்கும் பாகிஸ்தான் 34/3 (7 ஓவர்) எடுத்துள்ளது.

போட்டியை... சாப்காஸ்ட் மூலம் பார்க்கலாம்.
அதற்கான லிங்க்.
http://www.indiantags.com/Cricket/Ki...sopcast-links/ (http://www.indiantags.com/Cricket/Kitply-Cup-India-vs-Pakistan-Live-Streaming-sopcast-links/)

sop://broker.sopcast.com:3912/27677 (http://broker.sopcast.com:3912/27677)

அறிஞர்
10-06-2008, 03:14 PM
150 ரன்னில் வெல்வோம் சவால் விடுகிறார் லாசன்

இந்திய அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக 13வது வெற்றியைப் பதிவு செய்வோம் என்று பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜெப் லாசன் கூறியுள்ளார்.
முத்தரப்பு தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதிய பாகிஸ்தான் 70 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. முதலில் பேட் செய்த அந்த அணி 39.3 ஓவரில் 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 40 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன் மட்டுமே எடுத்து பரிதாபமாகத் தோற்றது. மழை காரணமாக இப்போட்டி 40 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியுடன், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 12 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. இந்தியாவுடன் இன்று நடக்கும் லீக் ஆட்டம் குறித்து பாக். பயிற்சியாளர் லாசன் கூறியதாவது: இந்திய அணியை மிகப் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 13வது வெற்றியை பதிவு செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இது மிகப் பெரிய போட்டி என்றாலும், பாகிஸ்தான் வீரர்கள் பதற்றம் இல்லாமல் இயல்பாக விளையாடினால் வெற்றி நிச்சயம். போட்டிக்கான வியூகம் பற்றி வீரர்களுடன் மட்டுமே ஆலோசிப்பேன். இந்தியாவை 150 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த விரும்புகிறேன். இவ்வாறு லாசன் கூறினார்.
--------
ஆனால் இப்ப இருக்கிற நிலையில 150 ரன்னில் இந்தியா தான் வெல்லப்போகுது..

சிவா.ஜி
10-06-2008, 05:02 PM
அது............!!! அதுதான் இந்தியா. எதுக்கு இவங்களுக்கு இந்த சவடால்?

அறிஞர்
10-06-2008, 07:05 PM
அது............!!! அதுதான் இந்தியா. எதுக்கு இவங்களுக்கு இந்த சவடால்?
வாங்குற பணத்துக்கு இது கூட சொல்லாட்டி எப்படி???
இறுதி போட்டியில் கோட்டை விடாமல் இருக்கவேண்டும்....இந்தியா...

ஷீ-நிசி
11-06-2008, 02:01 AM
வாழ்த்துக்கள் இந்தியா..

இந்தியாவை 150 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த விரும்புகிறேன். இவ்வாறு லாசன் கூறினார்.
பாகிஸ்தான் கோச் கொஞ்சம் மாற்றி சொல்லிட்டார் போல, :)

aren
11-06-2008, 02:58 AM
இந்தியா சிறப்பாக பந்து வீசினார்கள். அதுபோல் பீஃல்டிங்கும் சிறப்பாக இருந்தது.

முதலில் ஆடிய ஷேவாக், காம்பீர் மற்றும் யுவராஜ் நன்றாக விளையாடி ரன் குவித்தார்கள்.

இறுதி ஆட்டத்திலும் இப்படியே ஆடினால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்.

pathman
11-06-2008, 04:01 AM
அருமையான ஆட்டம் இறுதி போட்டியிலும் இது தொடர வேண்டும்

ராஜா
11-06-2008, 04:20 AM
முட்டைகள் அடைகாக்கப்படும்போதே கோழிக்குஞ்சுகளை எண்ண முயலாதீர்கள் நண்பர்களே..!

:)

aren
11-06-2008, 05:52 AM
முட்டைகள் அடைகாக்கப்படும்போதே கோழிக்குஞ்சுகளை எண்ண முயலாதீர்கள் நண்பர்களே..!

:)

என்னமோ சொல்கிறீர்கள் ஆனால் என்னவென்றுதான் தெரியவில்லை.

அறிஞர்
12-06-2008, 02:48 PM
இன்று வங்காளதேசம் 222ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா தற்போது 136/1 (21 ஓவர்) என்ற கணக்கில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த போட்டியில் சுவாரய்சம் குறைவு தான்.

இறுதி போட்டியில் இந்தியா சாதிக்குமா எனப்பார்ப்போம்.

சூரியன்
12-06-2008, 03:44 PM
தற்போதைய நிலவரம்:
இந்தியா: 212-2 (33)

கம்பீர்:98 (92)
யுவராஜ்:26 (31)

aren
12-06-2008, 03:46 PM
சொத்த டீமை வெல்வதில் என்ன இருக்கிறது.

இருந்தாலும் காம்பீர் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

சூரியன்
12-06-2008, 03:51 PM
சொத்த டீமிடம் ஜெயிப்பது பெரிதல்ல அண்ணா.
சில சமயம் சொத்த டீம்களும் பலம் வாய்ந்த அணிகளை கவுத்து விடுகின்றனவே?

அறிஞர்
12-06-2008, 04:07 PM
சொத்தையோ, நத்தையோ.... இந்தியா ஜெயிச்சா போதும்...

இந்தியாவுக்கும் சொத்தையான டீமும், பலமான டீமும் ஒன்றுதான்..
யாரிடம் தோற்பார்கள், யாரை வெற்றிக்கொள்வார்கள் என்பது யாராலும் யூகிக்க இயலாது ஒன்று..

aren
12-06-2008, 04:10 PM
புரியாத புதிர் நம் இந்திய அணி என்கிறீர்களா அறிஞரே!!! அதுவும் சரிதான்.

ராஜா
12-06-2008, 04:29 PM
இந்தியாவுக்கும் சொத்தையான டீமும், பலமான டீமும் ஒன்றுதான்..
யாரிடம் தோற்பார்கள், யாரை வெற்றிக்கொள்வார்கள் என்பது யாராலும் யூகிக்க இயலாது ஒன்று..

அப்படி இருந்தாத்தானே நீங்க மேட்ச் முடியும்வரை டி.வி. பார்ப்பீங்க.. இல்லாட்டி பாதி மேட்சிலேயே முடிவு தெரிஞ்சு ஆஃப் பண்ணிட்டீங்கன்னா அப்புறம் விளம்பரத்தை எல்லாம் யாருக்கு போட்டு காட்டுவதாம்..?